Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 117

மூர்கனின் காதலி CH 117

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 117

விஷ்வாவின் ரூமில் தன் கண்களால் கண்ட காட்சிகளை ரிஷியிடம் சொல்லிவிட்டு அழுதாள் மேகா. ‌ அவள் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த ரிஷி “விஷ்வா அண்ணாவ பத்தி எனக்கு நல்லா தெரியும் அண்ணி. அவருக்கு பொதுவாவே பெண்களை எல்லாம் சுத்தமா பிடிக்காது. அதெல்லாம் உங்களுக்கே தெரியுமே.. அப்புறம் அவர் போய் எப்படி இப்படி எல்லாம் பண்ணுவாரு..?? இங்க ஏதோ தப்பு நடந்திருக்கு. யாரோ உங்களையும் அண்ணாவையும் பிரிக்கணும்னு வேணும்னே இப்படி எல்லாம் பண்றாங்க. நீங்க அவரை தப்பா புரிஞ்சுகிட்டா, அவங்க நினைச்சது நடந்திரும் அண்ணி. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. என்ன நடந்துச்சுன்னு நான் உங்களுக்கு கண்டுபிடிச்சு சொல்றேன்.” என்றான்.

வேகமாக எழுந்து நின்ற மேகா “போதும் ரிஷி‌. நீ எதுவும் சொல்ல வேண்டாம். உனக்கு அவர்தானே important.. சோ என்ன நடந்தாலும் நீ அவருக்கு தான் support பண்ணி பேசுவ. நான் நடந்ததை உன் கிட்ட சொல்லி இருக்கவே கூடாது. என்ன சொன்ன நீ.. யாரோ எங்களை பிரிக்க சதி பண்றாங்களா…?? So funny. நீ சொல்ற அந்த யாரோ வேற யாரும் இல்ல. உன் விஷ்வா அண்ணா தான். அவர்தான் என்க்கூட வாழ பிடிக்காம இன்னொருத்திய set up பண்ணி வச்சிருக்காரு. நான் கூட ஏன் Switzerlandக்கு போகலாம்னு சொல்றீங்கன்னு முன்னாடியே கேட்டேன்.
அதுக்கு office related works நிறைய pending இருக்கு அத எல்லாம் முடிக்கணும்னு சொல்லி இங்க கூட்டிட்டு வந்தாரு. ஏன் இந்த ஹோட்டலுக்கு கிளம்பி வரும்போதுக்கூட அதைத்தானே சொல்லிட்டு வந்தாரு அவரு.. இங்க வந்து பார்த்த தானே தெரியுது.. அவர் என்ன வேலை பார்த்துட்டு இருக்காருன்னு..!! எனக்கு இத பத்தி பேசக்கூட பிடிக்கல ரிஷி. Please leave me alone.” என்று சொல்லிவிட்டு மீண்டும் அழுதாள்.

“இப்போ இவங்க ரொம்ப emotionalலா இருக்காங்க. நான் என்ன சொன்னாலும் நம்ப மாட்டாங்க. முதல்ல என்ன நடந்துச்சுன்னு கண்டுபிடிக்கணும். விஷ்வா அண்ணா எப்படி இருக்காருன்னு தெரியலையே.. அவர் அந்த பொண்ணுக்கூட இருந்தத எவனாவது photo எடுத்திருந்தா என்ன பண்றது..??” என்று நினைத்து பயந்த ரிஷி, “ப்ளீஸ் அண்ணி.. நீங்க அண்ணாவை இந்த விஷயத்துல நம்பிதான் ஆகணும். கண்டிப்பா அவர் தப்பு பண்ணிருக்க மாட்டாரு. அத சீக்கிரமே நான் உங்களுக்கு prove பண்றேன். இத பத்தி வேற யார்கிட்டயும் சொல்லாதீங்க.” என்று சொல்லிவிட்டு மகேஷுக்கு கால் செய்தபடி விஷ்வாவின் ரூமை நோக்கி விரைந்தான்.

அங்கே அந்த அறையின் கதவு திறந்து கிடக்க, பதறி அடித்துக் கொண்டு வேகமாக ரிஷியும் மகேஷும் உள்ளே சென்றார்கள். அவர்கள் பார்க்கும்போது விஷ்வா மயங்கி தரையில் கிடந்தான். மேகா அவனுக்காக பார்த்து பார்த்து செய்த decorationகள், red velvet 3 tyre cake என அனைத்தும் அனைத்தும் அப்படியே அவர்களுக்காக கேட்பாரற்று காத்துக் கிடந்தது.‌ ரிஷி விஷ்வாவின் முகத்தில் தண்ணீர் தெளிக்க, அவன் கன்னத்தில் தட்டிய மகேஷ் “பாஸ்.. என்னாச்சு உங்களுக்கு..?? கண்ணைத் திறந்து பாருங்க பாஸ்..!! நான் மகேஷ் வந்திருக்கேன்.” என்றான். விஷ்வாவிடம் ஒரு அசைவும் இல்லை.

“இவர் பார்ட்டில குடிச்சாரா..??” என்று ரிஷி கேட்க, “இல்லையேடா.. நான்தான் ஒரு full beer குடிச்சேன். நானே studyஆ தான் இருக்கேன்..‌‌ இவர் மேகாவுக்கு குடிச்சா பிடிக்காதுன்னு soft drinksதான் குடிச்சாரு. மேகா இங்க wait பண்ணிட்டு இருப்பாளேன்னு நான்தான் இவரை மேல போக சொல்லி அனுப்பி வச்சேன். இவங்கள disturb பண்ண கூடாதுன்னு நான் பார்ட்டிலேயே இருந்துட்டேன். நடுவுல என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியல. பார்ட்டில இருக்கிற வரைக்கும் இவர் நார்மலா தான் இருந்தாரு.” என்று மகேஷ் சொல்ல, “சரி விடுங்க, என்ன நடந்துச்சுன்னு அப்புறமா யோசிச்சுக்கலாம். முதல்ல இவரை தூக்குங்க. இவரை ஹாஸ்பிடல்ல admit பண்றது தான் சரின்னு எனக்கு தோணுது.” என்றான் ரிஷி.

அதனால் உடனே தனது ஆட்களுக்கு தகவல் சொல்லி அவர்களை வரவழைத்த மகேஷ் ரிசியோடு சேர்ந்து விஷ்வாவை தூக்கிக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைந்தான்.
சேரனை பார்த்து பயந்து அந்த ‌ resortல் இருந்து கிளம்பிய சௌபர்ணிகா யாரிடமும் எதுவும் சொல்லாமல் ‌நேராக தங்களது farmhouseற்க்கு சென்று சேர்ந்தாள். இன்னும் கூட அவள் கையில் ஒரு கடுமையான வலியை அவளால் உணர முடிந்தது.

அதனால் சுவரில் சாய்ந்து “என்னாச்சு இவனுக்கு..?? ஏன் திடீர் திடீர்னு ஒவ்வொரு மாதிரி differentஆ weirdஆ behave பறான்..?? ஒருவேளை இவன் Psychoஆ இருப்பானோ.. இல்லனா எல்லாத்தையும் வேணுமே பண்றானா..?? ஐயோ.. எனக்கு ஒன்னும் புரியலையே..!!” என்று அழுது புலம்பி கொண்டு இருந்தாள். அவள் நிலைமையை நினைத்து அவளுக்கே பரிதாபமாக இருந்தது.

‌ “நான் அவர்கிட்ட propose பண்றதுக்காக தானே..‌ காலையில இருந்து இங்க வந்து உட்கார்ந்து சாப்பிடாம கூட எல்லாத்தையும் plan பண்ணி பண்ணேன்.. ஆனா அவரால என்ன முடியுமோ அதை சிறப்பா பண்ணி என்ன இப்படி அழ வெச்சிட்டாரு. ஆம்பளைங்க எல்லாருமே மோசமானவங்க தான். எவனையும் நம்பக்கூடாது. மத்த ஆம்பளைங்க மாதிரி இவர் இல்லைன்னு நினைச்சேன். ஆனா எல்லாரும் ஒன்னு தான்னு இன்னைக்கு எனக்கு prove பண்ணிட்டீங்க விஷ்வா. இதுக்கு மேல லூசு மாதிரி உங்களுக்காக நான் எதுக்கு இங்க wait பண்ணிட்டு இருக்கணும்..??
நீங்க ஆல்ரெடி சொன்ன மாதிரி இனிமே நீங்களும் நானும் ஜஸ்ட் X or y. There is nothing between us. இனிமே உங்கக்கூட என்னால Friendஆ கூட இருக்க முடியாது.” என்று நினைத்த மேகா வந்த கோபத்தில் அவள் அணிந்து இருந்த விலை உயர்ந்த black gownஐ கிழித்து எரிந்துவிட்டு அவள் அங்கே வரும்போது அணிந்திருந்த சாதாரண ஆடையை எடுத்து அணிந்து கொண்டு அங்கே இருந்து கிளம்பி taxi பிடித்து farmhouseற்க்கு சென்றாள்.

அவள் தங்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி இருந்தாலும் அவளையே கண்காணித்துக் கொண்டிருந்த சாராவும், அனுவும் அவளுக்கே தெரியாமல் அவளை பின்தொடர்ந்து farmhouseற்க்கு வந்து சேர்ந்தார்கள். சோகமே உருவாக ஹாலில் அமர்ந்திருந்த சௌபர்ணிகாவை பார்த்தாள் மேகா.

அவள் ஏன் சோகமாக இருக்கிறாள் என்று இவளுக்கு புரியவில்லை. இவளே சோகத்தில் இருப்பதால் அதை பற்றி அவளிடம் கேட்க வேண்டும் என்றும் இவளுக்கும் தோன்றவில்லை. அதனால் மேகா அமைதியாக அவளது ரூமிற்கு சென்று விட, “போன காரியம் என்ன ஆச்சு…?? விஷ்வாகிட்ட propose பண்ணிட்டியா..?? அவன் என்ன சொன்னான்.‌..??” என்று சௌபர்ணிகாவும் அவள் இருந்த மோசமான மனநிலையில் மேகாவிடம் கேட்கவில்லை.
ஆக மொத்தம் இந்த honeymoon trip total சொதப்பல். அவர்கள் என்ன நினைத்து வந்தார்களோ அதற்கு எதிராகவே அனைத்தும் நடந்தது.

இரவு முழுவதும் சாப்பிடாமல், தூங்காமல் மேகாவும் சௌபர்ணிகாவும் அவரவர் அறையில் அழுது கரைந்தார்கள். அந்த விசாலமான farmhouseல் இப்போது பெண்கள் மட்டுமே இருந்தார்கள். சௌபர்ணிகாவை தேடிக்கொண்டு சேரனும் அங்கே வரவில்லை. மேகாவை சமாதானப்படுத்த விஷ்வாவும் வரவில்லை. தங்களது கணவன்மார்களுக்கு என்ன ஆனது என்று யோசிக்கும் மன நிலையிலும் அந்த இரு பெண்களும் இருக்காதால், அவர்களும் அதைக் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் வேதனை அவர்களுக்கு.

காலைப்பொழுது அவர்களுக்கு சோகமாக விடிந்தது. விடியற்காலைக்கு மேல் தங்களை அறியாமல் உறங்கி இருந்த சௌபர்ணிகா, மேகா இருவருமே காலையில் கண் விழிக்கவில்லை. அவர்கள் ரெஸ்ட் எடுக்கட்டும் என்று நினைத்து மற்ற பெண்களும் அவர்களை எழுப்பவில்லை. மதிய வேளையில் farmhouseக்கு வந்த மகேஷ் சாரவை அழைத்து “மேகா எப்படி இருக்கா..??” என்று கேட்க, “அவங்க இன்னும் அப்படியே தான் இருக்காங்க சார். தூங்கிட்டு இருக்காங்க. எப்படியும் நைட் லேட்டா தான் தூங்கி இருப்பாங்க. அதான் நாங்க அவங்கள எழுப்பல.” என்றாள் சாரா.

“ம்ம்ம்.. அவளை அப்படியே freeஆ விடுங்க. அவளே தானா சரி ஆயிடுவா.‌ நீங்க என்ன ஏதுன்னு அவ கிட்ட எதுவும் கேட்க வேண்டாம்.” என்ற மகேஷ் அவனுக்கு தேவையான சில பொருட்களை அங்கிருந்து எடுத்துக்கொண்டு கிளம்பினான். ஒரு மணி நேரத்திற்கு பின் அங்கே வந்த சேரன் அவனது ரூமிற்கு சென்றான். அங்கே சௌபர்ணிகா நேற்று அணிந்திருந்த ஆடையைக்கூட மாற்றாமல் அப்படியே கட்டிலில் படுத்து அயர்ந்து உறங்கி கொண்டு இருந்தாள்.

“என்ன சௌபர்ணிகா.. நிம்மதியா தூங்கிட்டு இருக்கியா..?? நான் இருக்கும்போது.. நீ அப்படி தூங்க கூடாதே..!!” என்று நினைத்த சேரன் நேராக restroomக்கு சென்று ஒரு பெரிய bucket நிறைய tapல் ஜிலுஜிலுவென வந்த தண்ணீரை பிடித்துக் கொண்டு வந்து அவள் மீது ஊற்றினான்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️ இந்த நாவலை இலவசமாக நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் வெப்சைட்டில் படிக்கலாம் ✅)

You may also like

Leave a Comment

About Me

Featured