அத்தியாயம் 165: உனக்கு கொஞ்சம் எனக்கு கொஞ்சம் ஓகேவா? (பார்ட் 2)
மகேஷ்: நெஜமா தான் சொல்றேன். உன்கிட்ட பொய் சொல்லி எனக்கு என்ன ஆகப் போகுது சொல்லு..!!!
வைஷாலி: “ம்ம்ம்.. அதுவும் கரெக்ட் தான்.” என்று சலிப்பான குரலில் சொன்னவள், “நீ உன்னோட லவ்வ அந்த பொண்ணு கிட்ட சொல்லி, அவ உன்னை ரிஜெக்ட் பண்ணிட்டா நீ என்ன பண்ணுவ..???” என்று அவனிடம் கேட்டாள்.
மகேஷ்: “அவ என்ன அக்சப்ட் பண்ணிக்கிறதுக்காக வெயிட் பண்ணுவேன். இன்கேஸ் அவளுக்கு வேற யாரையாவது பிடிச்சு இருந்தா, நான் அவளை டிஸ்டர்ப் பண்ணாம அவளை விட்டு விலகி வந்துருவேன்.” என்று வைஷாலியை பார்த்து பீல் செய்து சொன்னான்.
வைஷாலி: “ஓ அப்படியா..???” என்று அவனிடம் கேட்டவள், “நீ வேணா அப்படி இருக்கலாம் மகேஷ். என்னால என் விஷ்ணுவை வேற யாருக்கும் விட்டு தர முடியாது. அவன் எனக்கு மட்டும் தான்.” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
மகேஷ்: “நான் வேணா உன்ன டிராப் பண்ணட்டா..???” என்று காதல் நிறைந்த கண்களுடன் அவளை பார்த்து கேட்டான்.
வைஷாலி: இட்ஸ் ஓகே. நான் கேப் புடிச்சு போய்கிறேன்.
மகேஷ்: “உனக்கு என்ன மா… நீ பெரிய ஆளு. அதனால நீ கார்ல வருவ. உன் கூட என்னை எல்லாம் கம்பேர் பண்ணா, நான் உனக்கு ரொம்ப சின்ன ஆளா தான் தெரியுவேன். கார்ல போற நீ.. என் கூட பைக்லல வருவியா…?? இட்ஸ் ஓகே வைஷு.” என்று சோகமான குரலில் சொன்னான்.
வைஷாலி: “ஐய்ய.. இப்ப எதுக்கு டா இப்படி எல்லாம் பேசுற..??? நான் உன் கூடவே வரேன். ஓகேவா…?? நான் அப்புறமா யாரையாவது விட்டு கார் ஐ எடுத்துக்கிறேன்.” என்று சொன்னவள், அவனுடன் செல்வதற்காக எழுந்து நின்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்த மகேஷ், வேகமாக பார்க்கிங்கில் அவன் விட்டுவிட்டு வந்திருந்த பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு வந்து அவள் முன்னே நிறுத்தியவன், அவளை தன்னுடைய பைக்கில் ஏற்றி கொண்டு மகிழ்ச்சியாக அவனுடைய காதல் வாகனத்தில் பறக்கத் தொடங்கினான். 😍 🥰 ❤️
விஷ்ணுவுடன் பைக்கில் சென்று கொண்டு இருந்த ஷாலினி, “ஓய்…!!! அதான் நீ யாருன்னு எனக்கு தெரிஞ்சுரிச்சில்ல, அப்புறம் ஏன் டா நீ டெய்லியும் இந்த பைக்லையே வந்துட்டு இருக்க..??? இப்படி நீ டீச்சர் வேலை பார்த்து கஷ்டப்படுறதுக்கு சேர்மன் ஆ கெத்தா இங்கே வரலாம் இல்ல…???” என்று அவனிடம் கேட்டாள்.
விஷ்ணு: “ஏன் இந்த சாதாரண டீச்சர் விஷ்ணுவ உனக்கு புடிக்கலையா..??? சேர்மன் விஷ்ணு தான் உனக்கு வேணுமா..???” என்று பைக்கை ஓட்டி கொண்டே சைடு மிரரில் தெரிந்த அவளுடைய முகத்தை அவ்வப்போது பார்த்த படி அவளிடம் கேட்டான். 😍
ஷாலினி: “நான் லவ் பண்ணது டீச்சர் விஷ்ணுவையும் இல்ல. சேர்மன் விஷ்ணுவையும் இல்ல. வெறும் விஷ்ணுவ தான். உன்னோட கேரக்டர், பிஹேவியர், ஆட்டிட்யூட்னு, எனக்கு எல்லாமே ரொம்ப பிடிக்கும் விஷ்ணு. அத பாத்து மட்டும் தான் நான் உன்ன லவ் பண்ணினேன்.” என்று தன் முன்னே இருந்தவனை இடுப்போடு சேர்த்து கட்டி அணைத்தவள், அவனுடைய முதுகில் சாய்ந்து கொண்டு சொன்னாள். 😍 ❤️
அவளுடைய அனைப்பில் சிலிர்த்துப் போன விஷ்ணு, “ஓய் கூசுது டி.” என்று சொல்லிவிட்டு, தன்னுடைய உடலை லேசாக ஆட்டினான். ☺️ 🥰
ஷாலினி: “ஓ..!! அப்படியா விஷ்ணு மாமா, அப்போ நான் கைய எடுத்துடறேன்.” என்றவள், தன்னுடைய கையை அவன் மீது இருந்து விளக்க முயன்றாள்.
விஷ்ணு: தன்னுடைய ஒரு கையால் அவளுடைய இரு கைகளையும் இறுக்கி பிடித்தவன், “பரவால்ல இருக்கட்டும். கூச்சமா தான் இருக்கு. ஆனா, இதுவும் ஒரு மாதிரி குஜால்சா நல்லா தான் டி இருக்கு.” என்று வெட்கத்துடன் சொன்னான். ☺️ 🥰
“இருக்கும்.. இருக்கும்.. என்று சொன்ன ஷாலினி, மீண்டும் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். 🤗 ☺️ அப்போது அவளுடைய கண்களில் ஒரு இளநீர் கடை பட, “ஓய்…!! ஸ்டாப்… ஸ்டாப்.. ஸ்டாப்….” என்று கத்தினாள்.
விஷ்ணு: “என்ன டி பஸ் ஸ்டாப்ல நின்னுகிட்டு கிராஸ் பண்ணி போற டவுன் பஸ் ஐ கைகாட்டி ஸ்டாப் ஸ்டாப் ன்னு சொல்ற மாதிரி நிறுத்துற..!!!” என்று சொன்னபடியே தன்னுடைய பைக்கை ஒரு ஓரமாக சென்று நிறுத்தினான்.
ஷாலினி: “ஆமா, டிரைவர் கிட்ட தானே ஸ்டாப் பண்ண சொல்ல முடியும்…!!!” என்று சொன்னவள், பைக்கில் இருந்து கீழே இறங்கினாள்.
விஷ்ணு: “அடிப்பாவி அப்போ நீ என்னை டிரைவர்னு முடிவே பண்ணிட்டியா..???” என்று ஆச்சரியமான குரலில் கேட்டான்.
ஷாலினி: “ஆமா நீ தான் என்னோட பைக் டிரைவர்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். 😂 😂 😂
விஷ்ணு: “சரிங்க மேடம். நான் டிரைவராவே இருந்துட்டு போறேன். ஓனர் மேடம் எதுக்கு வண்டிய நிறுத்த சொன்னீங்க..???” என்று பவ்யமான குரலில் கேட்டான்.
ஷாலினி: அவனுடைய தோள்களில் தன்னுடைய ஒரு கையை போட்டவள், “அது ஒன்னும் இல்ல டா… சன்னு ரொம்ப டூ மச்சா இருக்குல்ல..!! சோ, அடிக்கடி வெயில்ல நம்ப பாடிய கூல் பண்ணிக்கிட்டே இருக்கணும். அதோ தெரியுது பாரு இளநீர் கடை அங்க போயி ஒரு இளநீர் வாங்கிட்டு வா போ.” என்று தூரத்தில் தெரிந்த ஒரு இளநீர் கடையை கைகாட்டி சொன்னாள்.
“ஓகே மேடம்.” என்ற விஷ்ணு, பைக்கில் இருந்து கீழே இறங்கி போய், கையில் இரண்டு இளநீர் உடன் மீண்டும் திரும்பி வந்தான். அந்த இரண்டு இளநீர்களிலும் தனி தனியாக ஸ்ட்ரா இருந்தது. அதைப் பார்த்து தன் தலையில் அடித்துக் கொண்டே ஷாலினி, “நான் உன்கிட்ட ஒன்னு தானே டா கேட்டேன் எதுக்கு ரெண்டு வாங்கிட்டு வந்த..???” என்று கடுப்பான குரலில் கேட்டாள். 😒
விஷ்ணு: “என்ன நீ இவ்ளோ செல்ஃபிஸா இருக்க…??? உனக்கு என் மேல பாசமே இல்லையா டி..??? என் பாடி மட்டும் அடிக்கிற வெயில்ல ஹீட்டான பரவாயில்லையா உனக்கு..???” என்று தன்னுடைய உதட்டை பிதுக்கி கொண்டு குழந்தை போல் அவளிடம் சிறு கோவத்துடன் கேட்டான். 😒
ஷாலினி: மீண்டும் தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டவள், “சரியான டியூப் லைட் டா நீ. அவன் அவன் இத்துனூண்டு கேப் கிடைச்சாலும் எப்படி எல்லாம் கெடா வெட்டுறான்..??? இப்படி நானே ஒரு ரொமான்டிக் சீன கிரியேட் பண்ணி குடுத்தாலும், உனக்கு ஒழுங்கா ஒரு ரொமான்ஸ் பண்ண தெரியுதா..??? இதுக்கு தான் 90ஸ் கிட்ஸ் ஐ எல்லாம் லவ் பண்ண கூடாது.” என்று எரிச்சலான குரலில் சொன்னாள். 😒
விஷ்ணு: “என்னது இந்த இளநீரை வச்சு ரொமான்ஸா..??? அத எப்படி பண்றது.?? இந்த மூவிஸ்ல எல்லாம் வருமே ஒரு இளநீர் வச்சுட்டு ரெண்டு ஸ்ட்ரா போட்டு லவ்வர்ஸ் மாறி மாறி குடிப்பாங்களே அந்த மாதிரி குடிக்கலாம்னு சொல்றியா..???” என்று அப்பாவியாக அவளிடம் கேட்டான்.
ஷாலினி: “நீ ஒரு பக்கா 90s கிட்டுன்னு ப்ரூ பண்ற பாத்தியா.??? ரொமான்ஸ கூட சொந்தமா யோசிச்சு உனக்கு பண்ண தெரியாதா..??? சினிமா சீரிஸ்ன்னு ரெஃபரன்ஸ் எடுத்து தான் ரொமான்ஸ் பண்ணுவியா..???” என்று தன்னுடைய இடுப்பில் கைகளை வைத்து கொண்டு அவனைப் பார்த்து முறைத்த படி கேட்டாள். 🤨 😒
விஷ்ணு: “இது என்ன டா 90’ஸ் கிட்சுக்கு வந்த சோதனை…????” என்று நினைத்தவன், “அம்மா தாயே அதான் இந்த பச்சை மண்ணுக்கு ஒன்னும் தெரியலன்னு உனக்கே தெரியுதுல்ல…!!! அப்புறம் என்ன பாவம் பார்த்து அத எப்படி பண்றதுன்னு நீயே சொல்லிக் குடுத்துட்டினா.. நான் அத கத்துக்கிட்டு நெக்ஸ்ட் டைம் பெஸ்ட்டா பண்ணிடுவேன்.” என்று வெட்கமின்றி சிரித்து கொண்டே அவளிடம் கேட்டான்.
ஷாலினி: “கருமம் டா. நான் உனக்கு எதையெல்லாம் சொல்லித் தர வேண்டியதா இருக்கு..!!!” என்று சொல்லி சிலிர்த்து 😒 கொண்டவள், அவன் கையில் இருந்த ஒரு இளநீரை வாங்கி அதில் இருந்த ஸ்ட்ராவை தூக்கி கீழே போட்டவள், “இந்தா…!! இத இப்ப உன் வாயை வச்சு குடி.” என்றாள்.
விஷ்ணு: “இதுல என்ன டி ரொமான்ஸ்சு..” என்றவன் அவன் பாட்டிற்கு அந்த இளநீரை குடிக்க தொடங்கினான்.
அவனுடைய தலையில் நங்கென்று கொட்டியிய ஷாலினி, “எரும எரும இப்படி தான் மாடு கழனி தண்ணிய நீஞ்சிற மாதிரி குடிப்பியா..???” என்றவள், அவனிடமிருந்து அந்த இளநீரை பிடுங்கினாள்.
விஷ்ணு: “நீ தானே டி.. என்ன குடிக்க சொன்ன.. இப்ப என்ன ஒரு வயசு பையன்னு கூட பாக்காம இப்படி என்னை பப்ளிக் பிளேஸ் -ல வச்சு கொட்டுற..??? அப்படி உனக்கு என்ன அடிக்கணும்னு ஆசையா இருந்தா, யாரும் இல்லாதப்ப அடி. நான் உன்னை ஏன்னு கேட்க மாட்டனே…!! ஆனா நீ இப்படி பண்ணா, என்னோட சோசியல் இமேஜ் என்ன ஆகிறது..??? நான் பாவம் இல்லையா..???” என்று தன்னுடைய முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு அப்பாவியாக அவளிடம் கேட்டான். 😔 😟
ஷாலினி: “சப்பா… முடியல டா. உன்கிட்ட குடின்னு குடுத்தா, அப்படியே நீ எல்லாத்தையும் குடிச்சுருவியா..??? நீ கொஞ்சம் குடிச்சிட்டு குடுத்தா, நான் குடிக்கணும். அப்புறம் நான் குடிச்சத நீ குடிக்கணும். இப்படியே மாத்தி மாத்தி கொஞ்சம் கொஞ்சமா குடிக்கணும். புரிஞ்சுதா..???” என்று சலிப்பான குரலில் கேட்டாள்.
விஷ்ணு: “நீ கொஞ்சம் நான் கொஞ்சம் அவ்ளோ தானே..!!! எனக்கு இப்போ நல்லா புரிஞ்சிருச்சு. இனிமே கரெக்டா பண்றேன் பாரு.” என்றவன், தன் கையில் மீதம் இருந்த ஒரு இளநீரில் கொஞ்சத்தை குடித்துவிட்டு அதை ஷாலினிடம் கொடுத்தான்.
அதை காதலுடன் பெற்று கொண்ட ஷாலினி, அதில் இருந்த கொஞ்சத்தை குடித்துவிட்டு அவனிடம் கொடுத்தாள். விஷ்ணு அதை வாங்கி குடிக்க இப்படியே அவர்கள் இருவரும் தங்களுடைய காதலை அந்த இளநீருடன் சேர்ந்து குளு..குளுவென்று.. பரிமாறிக் கொண்டனர். 😍 🥰 👩❤️👨
இப்படி தான் காதலிக்க வேண்டும் என்று யாரும் எழுதி வைக்கவில்லை என் காதலா. ❤️
நமக்கு எப்படி எல்லாம் காதலிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்படி எல்லாம் காதலிப்போம் வா. 😍 ❤️
காதலையும் காமத்தையும் குழப்பிக் கொண்டு வாழ்பவர்களின் மத்தியில், காமத்தை துறந்த காதலில் திளைப்போம் வா… 😍 ❤️
நீ, நான், இந்த உலகம், அனைத்தையும் மறந்து விட்டு காதல் செய்து காதல் செய்து களைத்து போகும் வா…. ❤️
காதலின் உச்சகட்டம் தான் காமம் என்று உணர்ந்து, காமம் தீரும் பொழுதிலும் காதல் தீராதாமல்… நரை முடி பருவத்திலும், நம் நடை தளர்ந்து போனாலும், குறைவின்றி காதல் செய்வோம் வா..!!! 👩❤️👨 🥰 ❤️
- நர்மதா சண்முகம். 🖤💫🌟✨
நாராயணன் பேலஸில்…
செண்பகம் ஷார்ட் லிஸ்ட் செய்து வைத்து இருந்த ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டிற்கான ரெஃபரன்ஸ்களை ரித்திகாவிடம் காட்டி கொண்டு இருந்தாள் சோபியா. அவை அனைத்தையும் ஆச்சரியத்தில் விரிந்த கண்களுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் ரித்திகா. 😍
அதில் வேறு வேறு மாதிரியான நிறைய தீம்கள் இருந்தன. அவை அனைத்துமே நன்றாக இருந்ததால், அதில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுக்க அவளுக்கு சிரமமாக இருந்தது. அதனால் சில நிமிடங்கள் அந்த போட்டோ சூட்டை பற்றி யோசித்துப் பார்த்த ரித்திகா, “இதுல இருக்கிற எல்லாமே எனக்கு பிடிச்சிருக்கு சோபி. ஆனா எனக்கு சின்ன வயசுல இருந்தே ஒரு ஆசை இருக்கு. இந்த சிண்டரெல்லா படத்துல அந்த ஹீரோயின் ஒரு ப்ளூ கலர் லாங் கவுன் போட்டு இருப்பாங்கல்ல… அந்த மாதிரி டிரஸ் வாங்கி போட்டு பிரின்சஸ் மாதிரி ரெடி ஆகி எனக்கு போட்டோ எடுக்கணும்னு ரொம்ப நாளா ஆசை.
அப்புறம் கிறிஸ்டியன் மேரேஜ்ல ஒரு ஒயிட் கவுன் போடுவாங்கல்ல அந்த கவுனும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தென் இப்போ பொன்னியின் செல்வன் படத்தில, பாகுபலி படத்துல எல்லாம் ஹீரோயின்ஸ் ராணி மாதிரி அழகா டிரஸ் பண்ணி இருப்பாங்கல்ல… அந்த மாதிரி டிரஸ் பண்ணி போட்டோ எடுக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. எனக்கு அந்த மாதிரி பண்ணி பாக்கலாம்ன்னு தோணுது. நீ அம்மாவுக்கு இது ஓகேவான்னு கேளு. அவங்களுக்கு ஓகேன்னா, நம்ம அந்த மாதிரி பண்ணலாம். இல்லனா, அவங்க எப்படி சொல்றாங்களோ அப்படியே பண்ணிக்கலாம்.” என்றாள் ரித்திகா.
அவள் சொன்னதைக் கேட்டு லேசாக புன்னகைத்த சோபியா, “நீங்க சொன்ன எல்லா காஸ்டியுமுமே உங்களுக்கு போட்டா ரொம்ப நல்லா இருக்கும் மேடம். செண்பகம் மேடமும் உங்களுக்கு புடிச்ச மாதிரி தான் எல்லாமே பண்ணனும்னு ஆசைப்படுறாங்க. சோ கண்டிப்பா அவங்க இதுக்கு நோ சொல்ல மாட்டாங்க. நீங்க உங்களோட டெய்லி வேர் அண்ட் ஃபங்ஷன் வேர் டிரஸ் எல்லாத்தையும் செலக்ட் பண்ணுங்க. நான் நீங்க சொன்னதெல்லாம் ஓகேவானு செண்பகம் மேடம் கிட்ட கேட்டுட்டு வரேன்.” என்றவள் அங்கு இருந்து சென்றாள்.
செண்பகத்தின் அறைக்கு வந்த சோபியா ரித்திகா தன்னிடம் சொன்னது அனைத்தையும் அவளிடம் சொல்ல அதைக் கேட்டு சிரித்த செண்பகம், “என் மருமக இவ்ளோ வளர்ந்தாலும், இன்னும் குழந்தை மாதிரி தான்் இருக்கா. அவளோட எல்லா ஆசையையும் நம்ப நிறைவேற்றி வெச்சிடலாம். அவ சொன்ன எல்லா டிரஸ்ஸும் அதுக்கு போடுறதுக்கு ஆக்சிசஸரீஸ்சும் நாளைக்கே வேணும்னு நம்ம காஸ்டியூம் டிசைனர் கிட்ட சொல்லிரு.
அண்ட் அப்படியே அவ டிரஸ்ஸுக்கு மேட்ச் ஆகிற மாதிரி வருணுக்கும் காஸ்ட்யூம்ஸ் அரேஞ்ச் பண்ணிருங்க. நாளைக்கு நம்ம ஃப்ரீ வெட்டிங் போட்டோ சூட் கல கட்டணும்.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள். 😁 😁 😁
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)