Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 112

மூர்கனின் காதலி CH 112

by Thenaruvi Tamil Novels
41 views

அத்தியாயம் 112

சௌபர்ணிகாவை அதட்டி அவளிடம் இருந்து phoneஐ வாங்கி அதிலிருந்த WhatsApp chatஐ பார்த்த சேரனின் முகம் அப்படியே கொடூரமாக மாறியது. நொடிக்கு நொடி மாறும் அவனது facial expressionsகளை நம்ப முடியாமல் வாயடைத்து போய் பார்த்துக் கொண்டிருந்தாள் சௌபர்ணிகா. அவளுக்கு தெரிந்த சேரன் இத்தனை வருடங்களில் ஒருநாளும் இப்படி இருந்து அவள் கண்டதில்லை.

“என்னடி ஒரு ஆம்பள பையன்.. அதுவும் கல்யாணமானவன்… உன்ன பத்தி இப்படி எல்லாம் groupல பேசிட்டு இருக்கான்.. அதுக்கு நீயும் இளிச்ச மாதிரி emoji போட்டு இருக்க.. இதுல அவன் பொண்டாட்டியும் வேற வெட்கமே இல்லாம அவன்க்கூட சேர்ந்து மாறி மாறி ‌ இப்படி அசிங்கமா groupல பேசிட்டு இருக்கா.. இதெல்லாம் ஒரு பொழப்பா..??” என்று சேரன் கோபமாக கேட்க, “friends தானே அவங்க ஏதோ சும்மா விளையாட்டா என்ன கலாய்க்கிறதுக்காக groupல அப்படி பேசிட்டு இருக்காங்க!‌ க்ரிஷ் ஒன்னும் எனக்கு personalஆ message பண்ணி இப்படி எல்லாம் பேசலையே.. சுவாதியும் தானே குரூப்ல இருக்கா.. அவன் பேசுறது அவளுக்கு தப்புன்னு தோன்றியிருந்தா அவளே கேட்டிருப்பாள்ல..!!” என்றாள் சௌபர்ணிகா.

“ஓஹோ அவளுக்கு தப்பா தோணலைன்னா.. அப்போ நான் தான் தேவையில்லாம எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுக்கிறேன்னு சொல்ல வரியா..?? என்ன.. மத்தவங்கக் கூட என்னை compare பன்றியாடி நீ..??” என்று சேரன் கோபமாக கேட்க, “என்னாச்சு சேரன் உனக்கு…?? திடீர்னு ஏன் இப்படி எல்லாம் weirdஆ behave பண்ற..?? நீ இவ்ளோ பேசுற அளவுக்கு இதுல ஒன்னும் இல்ல. இது நம்மளோட special day. இத நம்மளே Spoil பண்ணிக்க வேண்டாம்.” என்ற சௌபர்ணிகா எழுந்து அவனை அணைத்துக் கொள்ளப் போனாள்.

அவள் தோள்களில் கை வைத்து அவளைப் பிடித்து தள்ளிய சேரன் அவளது mobile phoneஐ தூக்கி சுவற்றில் அடித்து உடைத்து “என்னடி.. நான் ஒருத்தன் பேசிட்டு இருக்கேன்.. நீ பாட்டுக்கு அப்படியே மேல வந்து விழுற..!! என்ன அப்படியே நீ ஒட்டி உறவாடினா.. உடனே நடந்ததை எல்லாம் மறந்துட்டு நான் உன் முந்தானைய புடிச்சிட்டு வந்துருவேன்னு நினைச்சியா..?? சொல்லு வாயை திறந்து சொல்லுடி… என்ன பாத்தா எப்படி தெரியுது உனக்கு..??” என்று கேட்க, கலங்கிய கண்களுடன் வாயடைத்து போய்  அமைதியாக நின்று கொண்டிருந்தாள் அவள்.

அதனால் இன்னும் அவனது கோபம் தூண்டப்பட்டுவிட, “என்னடி நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்… ஏதோ எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி அப்படியே நிக்கிற.. வாயை திறந்து பேசுடி.” என்ற சேரன் பளார் என்று அவள் கன்னத்தில் ஒன்று வைத்தான். அதை எதிர்பார்த்து இருக்காத சௌபர்ணிகா கட்டிலில் போய் விழ, அவள் மீது விழுந்த சேரன் அவள் தாடையை இறுக்கிப்பிடித்து “இங்க பாரு.. நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ.. நீ என் பொண்டாட்டி. நான் சொல்றத கேட்டு நீ ஒழுக்கமா இல்லாம மட்டும் இரு, நானே உன்ன யாருக்கும் தெரியாம கொன்னு போட்டுட்டு போயிடுவேன். இனிமே நீ என்கிட்ட கேட்காம ஏதாவது செஞ்ச.. நான் மனுஷனா இருக்க மாட்டேன். Mind it.”‌ என்றான்.

இன்னும் நடப்பதை எல்லாம் நம்ப முடியாமல் சௌபர்ணிகா அவனை கண்ணீருடன் பார்க்க, பசியில் இருக்கும் நாய் பிரியாணி பொட்டலத்தை பார்த்தவுடன் அதை கடித்து கொதறுவதைப் போல அவள் புடவையை அவள்மீது  இருந்து இழுத்து அதை அவனுக்கு இருந்த வெறியில் நார்னராக கிழித்த சேரன் அவளை கடித்துக் கொதறினான்.‌

காதலித்து ஆசை ஆசையாக திருமணம் செய்து கொண்டவனுடன் அழகாக, மன நிறைவுடன் நடக்க வேண்டிய தாம்பத்தியம் அவளுக்கு அவளால் தாங்க முடியாத ரண வேதனையை கொடுத்து உடலளவிலும், மனதளவிலும் பெரும் tortureஆக இருந்தது.
சில நிமிடங்களிலேயே ஆடைகள் இன்றி ‌ அந்த பஞ்சு மெத்தையில் ‌வாடிய மலராய் ‌ பரிதாபமான நிலையில் கிடந்தாள் சௌபரணிகா. அவள் உடல் முழுவதும் பல் தடங்கள், நகக்கிரல்கள், கன்னி சிவந்து போன காயங்கள் என்று ஏராளமாக இருந்தது. தன் கையைக்கூட அசைக்க முடியாத நிலையில் இருந்த சௌபர்ணிக்கா அதுவரை மூடி இருந்த தன் கண்களை திறக்க, அதிலிருந்து சாரை சாரையாக வடிந்தது கண்ணீர். அவளைவிட்டு பிரிந்த சேரன் நேராக பாத்ரூமிற்க்கு சென்று குளித்துவிட்டு வந்து அவள் அருகில் படுத்தான்.

தன் வேலை முடிந்தவுடன் தெரியாமல்க் கூட அவன் திரும்பி அவள் பக்கம் பார்க்கவில்லை. கண்ணீருடன் அவன் முதுகு புறத்தை வெறித்த சௌபர்ணிகா, “ஏண்டா.. ஏன் இப்படி எல்லாம் பண்ற..?? இத்தனை வருஷமா நல்லா தானே இருந்த.. உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும்னு நினைச்சிட்டு இருந்தனே.. உன்ன தவிர வேற யாராலயும் என்னை புரிஞ்சுக்க முடியாதுன்னு நம்பிட்டு இருந்தனே.. திடீர்னு ஏன் நீ இப்படி மாறிட்ட..?? இது உன்னோட sudden changeஆ..?? இல்ல இதுதான் உன்னோட real faceஆ..?? உன்ன கல்யாணம் பண்றதுக்கா இத்தனை வருஷம் நான் wait பண்ணேன்னு என்ன இப்படி ஒரே நைட்ல யோசிக்க வச்சுட்டியேடா.. இதுவரைக்கும் நீ சும்மாக்கூட என்கிட்ட கோபப்பட்டது இல்ல. இப்போ நீ இவ்ளோ harshஆ என்கிட்ட behave பண்ற அளவுக்கு நான் அப்படி என்ன தப்பு பண்ணேன்..??” என்று மீண்டும் மீண்டும் யோசித்து உள்ளுக்குள் வருந்தியவள், ஒரு கட்டத்திற்கு மேல் tiredஆக இருந்ததால் தன்னை அறியாமல் உறங்கிப் போனாள்.

மறுநாள் காலையில் ‌ 10 மணியளவில் சௌபர்ணிகா கண்விழித்துப் பார்க்க, அவள் அருகில் சேரன் இல்லை. ஆனால் அவள் மீது போர்வை போர்த்தப்பட்டிருந்தது. இரவு அது அவள்மீது இல்லை என்று அவளுக்கு ஞாபகம் வர, அவன்தான் போர்த்திவிட்டு சென்றிருப்பான் என்று நினைத்து “ஓஓ.. ரொம்பத்தான் அக்கறை. நேத்து பண்றத எல்லாம் பண்ணிட்டு நான் தூங்கி எந்திரிக்கிறதுக்கு முன்னாடியே இங்கிருந்து ஓடி போய்டியா..?? என் lifeஐ ஒரே நாள்ல இப்படி totalஆ மாத்தினதுக்கு எனக்கு நீ பதில் சொல்லித்தான் ஆகணும் சேரன். நீ நேத்து நடந்துக்கிட்டத வச்சு பார்த்தா, உன் மனசுக்குள்ள வேற எதையோ வச்சுக்கிட்டு கிடச்ச சப்பை ரீசன வச்சு உனக்குள்ள இருந்த வன்மத்தை என் மேல கக்குன மாதிரி இருந்துச்சு. நீ ஏன் இப்படி பண்ணேன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்.” என்று முணுமுணுத்துவிட்டு எழுந்து அமர்ந்தாள்.
அவள் உடம்பு முழுவதும் பரவி கிடந்த ஒருவித கூர்மையான வலியை ‌ அவளால் உணர முடிந்தது. சிரமப்பட்டு எழுந்து பாத்ரூமிற்க்கு சென்றாள்.

அவன் செய்த வேலையில் அவளால் ஒழுங்காக நடக்கக்கூட முடியவில்லை. குளித்துவிட்டு ஒரு சுடிதாரை எடுத்து அணிந்து கொண்ட சௌபர்ணிகா dressing table கண்ணாடியின் முன்னே சென்று தன் உருவத்தை பார்த்தாள். அவன் அவளது கன்னத்தில் அறைந்ததால் லேசாக அவன் விரல்கள் பதிந்திருந்ததே தவிர, மற்றபடி வெளியில் வேறு எந்த அடையாளமும் தெரியவில்லை.

“கன்னத்துல இருக்கிற markஐ  makeup போட்டு ‌hide பண்ணிடலாம்.” என்று யோசித்தவள், மற்ற காயங்கள் வெளியில் தெரியாததால்,

கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை பார்த்து வலி நிறைந்த புன்னகை சிந்தியவள், “ஒருவேளை வேணும்னே வெளிய தெரியாத மாதிரி பண்ணனும்னு நெனச்சு கரெக்டா பண்ணியிருப்பான் போல..!!” என்று நினைத்து தயாராகி கீழே சென்றாள்‌. இன்னும் சாப்பிடாமல் அவளுக்காக ஹாலில் காத்திருந்த மேகாவும் விஷ்வாவும் அவளைப் பார்த்தவுடன் லேசாக சிரிக்க,

“நம்மதான் சந்தோஷமா இல்ல. இவங்க சந்தோஷத்தையும் கெடுக்க வேணாம்.” என்று நினைத்த சௌபர்ணிகா பதிலுக்கு தானும் சிரித்து வைத்தாள்.
“வாங்க அக்கா சாப்பிடலாம்.” என்ற மேகா சௌபர்ணிகாவின் கையைப் பிடித்து இழுக்க, அவளுக்கு வலி உயிர் போனது.

இருப்பினும் சிரமப்பட்டு வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் மறைத்தவள், “நானே வரேன்.” என்று சொல்லி அவள் கையை எடுத்துவிட்டு நடந்து சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தாள். விஷ்வாவும், மேகாவும் அவளுடன் இணைந்துக்கொள்ள, servants அவர்களுக்கு உணவுகளை பரிமாறினார்கள்.

தன் கண்களால் சேரனை தேடியபடி சிரமப்பட்டு உணவை தன் வாயில் வைத்த சௌபர்ணிகா, “உங்க மாமா எங்க..??” என்று கேட்க, “அவரா.. நேத்து மேரேஜ்க்கு வர முடியலன்னு அவரோட friends 2, 3 பேர் இங்க வந்திருந்தாங்க. அவங்கக்கூட வெளியே போயிட்டாரு. நீங்க தூங்கி எந்துருச்சதுக்கு அப்புறம் உங்களை அவருக்கு கால் பண்ண சொன்னாரு.” என்றான் விஷ்வா.

“இதெல்லாம் அவர் எப்ப சொன்னாரு..?? எனக்கே தெரியல.. நானே எங்க அவர ஆள காணோமேன்னு நினைச்சேன்.” என்று மேகா சொல்ல, “விடிஞ்சும் நீ நல்லா எருமை மாடு மாதிரி தூங்கிட்டு இருந்தா வீட்ல நடக்கிறது எல்லாம் உனக்கு எப்படி டி தெரியும்..??” என்று கிண்டலாக கேட்டான் விஷ்வா.

“ஏதோ வெறி புடிச்சவன் மாதிரி நேத்து என் phoneஐ தூக்கிப்போட்டு உடைச்சுட்டு, இப்போ என்னை கால் பண்ண சொல்லிட்டு போயிருக்கானா அவன்.. வரட்டும் பாத்துக்குறேன்.” என்று நினைத்த சௌபரணிக்கா வேண்டா வெறுப்பாக சாப்பிட்டாள்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️ இந்த நாவலை நீங்கள் இலவசமாக நமது வெப்சைட்டில் படிக்கலாம் ✅)

You may also like

Leave a Comment

About Me

Featured