Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 109

மூர்கனின் காதலி CH 109

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 109

குடித்துக் கொண்டிருக்கும் போது மேகாவை பற்றி யோசித்த விஷ்வா, அவளை காண்பதற்காக மொட்டை மாடியில் இருந்து படியில் இறங்கி அவனது ரூமிற்கு சென்றான். “வீட்ல தானே இருந்தாரு.. அதுக்குள்ள எங்க போனாரு இவரு..?? ச்ச்ச்.. பக்கத்துல இவர் இல்லாம தூக்கமே வர மாட்டேங்குதே..!! என்னை ஒழுங்கா தூங்கவே விடுறதில்ல. அப்புறம் காலைல சீக்கிரமா எந்திரி சீக்கிரமா எந்திரின்னு போட்டு torture பண்றது. வரட்டும் இன்னைக்கு அவருக்கு இருக்கு.” என்று புலம்பிக் கொண்டிருந்த மேகா, உள்ளே தள்ளாடியபடி வந்த விஷ்வாவை குறுகுறுவென பார்த்தாள்.

“ஏய் குருவம்மா.. எதுக்குடி என்ன அப்படி பாக்குற..?? அப்படியே அந்த முட்ட கண்ண நோண்டிடுவேன் பாத்துக்கோ. ஒழுங்கா பாருடி.” என்று அவன் போதையில் உளற, “என்னது குருவம்மாவா..?? அது யாரு..??” என வேகமாக கேட்டாள் அவள்.

தள்ளாடியபடி அவளை நோக்கி சென்ற விஷ்வா, “நீதான்டி குருவம்மா. நீ பட்டிக்காட்டுக்காரி தானேடி.. இனிமே உன்ன நான் அப்படி தான் கூப்பிடுவேன்.” என்று சொல்ல, கீழே விழப்போனவனின் தோள்களைப் பிடித்து நிறுத்திய மேகா, “முதல்ல ஒழுங்கா நில்லுங்க. அப்புறம் என்ன கலாய்க்கலாம். இப்ப எதுக்கு நீங்க இவ்ளோ குடிச்சிருக்கீங்க..??” என்று கேட்டுவிட்டு அவனை கட்டிலில் அமர வைத்தாள்.
அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்த விஷ்வா, அவள் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு “நான் குடிக்கவே இல்லையே.. வேணா ஊதி காட்டவா..??” என்று கேட்க, அவன் வாயை பொத்திய மேகா,

“நீங்க பேசும்போதே கருமம் இந்த அளவுக்கு smell வருது… இதுல நீங்க ஒன்னும் ஊதி காட்டி எதையும் prove பண்ண தேவை இல்லை. வாய மூடிட்டு இருங்க.” என்றுவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள். மீண்டும் அவள் முகத்தை தன் பக்கம் திருப்பிய விஷ்வா, “ரொம்ப smell வருதா..?? Sorry.. நான் liteஆ தான்டி குடிச்சேன். இரு நான் போய் mouth freshener போட்டுட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு எழ, அவன் மடியில் தான் அமர்ந்திருப்பதை விரும்பிய மேகா, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். கம்முனு ஒக்காருங்க.” என்று அதட்டலாக சொன்னாள்.

எங்கே கீழே விழுந்து விடுவாளோ என்ற பயத்தில் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்ட விஷ்வா, “வேண்டாமா..?? அப்போ ஓகே.” என்று சொல்ல, “இப்ப எதுக்கு நீங்க இப்படி போதையில தள்ளாடுற அளவுக்கு இவ்ளோ குடிச்சிருக்கீங்க..??” எனக் கேட்டாள் மேகா. “அதுவா.. நம்ம மகேஷ் ஹர்ஷினி ஹர்ஷினின்னு ஒருத்திய லவ் பண்ணிட்டு இருந்தான்… அவ இவன ஏமாத்திட்டு இன்னைக்கு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா.

அதான் என் மகேஷ் சோகமா இருந்தானா.. அவன cheer up பண்றதுக்காக அவன்க்கூட சேர்ந்து குடிச்சேன். நான் குடிச்சது உனக்கு புடிக்கலையாடி குருவம்மா..??” என்று பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு அவன் கேட்க, “ம்ம்ம்.. புடிக்கல. ரீசன் எதுவா இருந்தாலும் பரவால்ல. இனிமே குடிக்காதீங்க..!!” என்றாள் அவள்.

“ஓகே.. நீ சொல்லிட்டல்ல.. இனிமே நான் குடிக்கவே மாட்டேன். உன் மேல Promise..!!” என்ற விஷ்வா மேகாவின் தலையின் மீது கை வைக்க போக, விலகிக்கொண்ட மேகா, “நீங்க நார்மலா இருக்கும்போது Promise பண்ணுங்க விஷ்வா.

அதுதான் செல்லும். குடிகாரன் பேச்செல்லாம் விடிஞ்சா காணாம போயிடும். நான் உங்களை நம்ப மாட்டேன்.” என்றாள். “சரி நான் காலையில இன்னொரு தடவை சத்தியம் பண்றேன். நீ இங்க வா பயப்படாத. மறுபடியும் சத்தியம் எல்லாம் பண்ண மாட்டேன்.” என்றவன் மீண்டும் அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்தான்.
“என்ன இவரோட ஒரே இம்சையா இருக்கு… Dailyயும் different differentஆ torture பண்றாரு! இன்னைக்கும் நான் தூங்குறதுக்குள்ள விடிஞ்சிடும் போலயே.” என்று நினைத்த மேகா அவனை அணைத்துக் கொண்டு அவன் தோள்களில் சாய்ந்தாள். “அடியேய் இந்தாடி..!!” போதை ஏறிய குரலில் அவன் அவளை அழைக்க, “ம்ம்ம்.. சொல்லுங்க பக்கத்துல தானே இருக்கேன்.. கேக்குது.” என்றாள் மேகா சலிப்பாக.

“உனக்கு என்னை பிடிக்குமாடி..??” என்று விஷ்வா ஆசையாக அவளிடம் கேட்க, “இவர் நார்மலா இருக்கும் போது தான் என் மனசுல இருக்கிறத இவர்கிட்ட சொல்ல முடியல. இப்பயாவது சொல்லிடலாம்.” என்று நினைத்து அவன் முகத்தை தன் கைகளில் ஏந்திய மேகா, அவன் கண்களை பார்த்து “எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் விஷ்வா. இவ்ளோ சீக்கிரமா நான் உங்கள லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிடுவேன்னு நானே கொஞ்சம்க்கூட நினைச்சு பாக்கல. ஆனா இது எல்லாமே தானா magic மாதிரி எனக்கே தெரியாம நடந்துருச்சு.” என்று feel செய்து சொன்னாள்.

அதைக் கேட்டு மகிழ்ந்த விஷ்வா, “எனக்கும்தான் உன்ன ரொம்ப பிடிக்கும். நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன்னு தெரியுமாடி உனக்கு..?? என் lifeல வந்த first பொண்ணு நீதான். Last பொண்ணும் நீயாதான் இருப்ப. நீ மத்த பொண்ணுங்களை மாதிரி இல்ல. Very.. very good girl. அதான் எனக்கே உன்னை இந்த அளவுக்கு புடிச்சிருக்கு. எப்படி டி இவ்ளோ ஈஸியா நீ என்ன கரெக்ட் பண்ண..?? சரியான ஆள் மயக்கி டி நீ..!!” என்று போதையில் உளற, அவன் சொன்னதை எல்லாம் கேட்டு வாய் அடைத்துப்போன மேகா சந்தோஷத்தில் றெக்கையின்றி வானில் சிறகடித்து பறந்தாள். இந்த வார்த்தைகளைத்தானே இத்தனை நாட்களாக அவன் வாயிலிருந்து கேட்க விரும்பினாள் அவள்.

என்னதான் விஷ்வா போதையில் உளறி இருந்தாலும், “குடிகாரன் பொய் சொல்ல மாட்டான்.” என்ற லாஜிக்கில் “அப்போ இவரும் நிஜமாகவே என்னை லவ் பண்றாரா..?? அப்புறம் இத்தனை நாளா ஏன் எதையும் வெளிய காமிச்சுக்காம இருக்காரு..?? இதை இவர் நார்மலா இருக்கும்போது என்கிட்ட சொல்லி இருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்..!!” என்று யோசித்த மேகா அவன் கண்களை பார்த்து, “நீங்கதான் என்ன லவ் பண்றீங்கள்ள.. அப்புறம் ஏன் அதை என்கிட்ட மறைக்கிறீங்க..??” என்று கேட்டாள்.

“அதுவா.. அது வந்து.. அது..!!” என்று போதையில் உளறிய விஷ்வா அப்படியே மட்டையாகி கட்டிலில் சரிய, அவளும் அவன் மீது விழுந்தாள்.
அவன் கன்னத்தில் தட்டிய மேகா, “நீங்க ஏன் என்கிட்ட உங்க லவ்வ சொல்லலைன்னு மட்டும் சொல்லுங்க விஷ்வா ப்ளீஸ்..!!” என்று கெஞ்சி கேட்க, போதையில் கண்களை மூடி அவன் தூங்கியே விட்டான். அதனால் எரிச்சல் அடைந்தவள், “அட போயா.. Metal மண்ட.. ஆளயும் மூஞ்சியையும் பாரு.. ம்ஹூம்ம்..!!” என்று தன் உதட்டை சுழித்தவள் tiredஆக இருந்ததால் அவனை அணைத்துக் கொண்டு படுத்தாள்.

காலை 5:00 மணிக்கு சரியாக அவர்களது ரூமில் alarm clock சத்தமாக ஒலிக்க, அதைக் கேட்டு பதறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்த மேகா, “alarm எல்லாம் செட் பண்ணி வைக்க தெரிஞ்சிருக்குள்ள.. அப்புறம் அது அடிக்கும்போது என்ன பப்பரப்பான்னு நல்லா தூங்கிட்டு இருக்கீங்க..?? ஒழுங்கா எந்திரிங்க விஷ்வா..!!” என்று தூங்கிக் கொண்டிருந்த விஷ்வாவை எழுப்பினாள். இன்னும் முழுதாக அவனுக்கு போதை தெளிந்திருக்காததால் “ச்ச்ச்.. எனக்கு தூக்கம் வருதுடி.

உனக்கு தானே ட்ரெய்னிங்.. நீ போ..!! என்ன டிஸ்டர்ப் பண்ணாத.” என்ற விஷ்வா திரும்பி படுக்க, “எனக்கு இந்த training வேணும்னு நான் கேட்டனா..?? இதெல்லாம் நீங்க பார்த்த வேலை தானே..!! நீங்க வராம நான் போக மாட்டேன். எந்திரிங்க விஷ்வா..!!” என்ற மேகா அவனைப் பிடித்து இழுத்தாள்.

“அட.. இழுத்து தொலையாதடி… கை வலிக்குது. நானே வர்றேன்.” என்று சலித்துக்கொண்ட விஷ்வா refresh ஆகிவிட்டு அவளுடன் கீழே சென்றான். அவனுடன் சேர்ந்து குடித்த மற்ற மூவரும் நேற்று இரவே மட்டையாகி இன்னும் மொட்டை மாடியில் உள்ள mini barல் தான் கிடந்தார்கள். அதனால் மேகா, விஷ்வா, சௌபர்ணிகா, சேரன் நால்வர் மட்டுமே garden areaவிற்கு சென்றார்கள். அவர்களுக்கு முன்பாகவே அங்கே பெண்கள் நால்வரும் தயாராக இருக்க, “2 round jogging போயிட்டு வந்து training start பண்ணிடலாம்.” என்ற சாரா ஓடத் தொடங்கி விட, மற்றவர்கள் அவளை பின் தொடர்ந்து ஓடினார்கள்.
அப்போது ஒரு கருப்பு நிற Mercedes Benz carல் இருந்து காதில் headphones மாட்டிக்கொண்டு ஜாலியாக பாட்டு கேட்டபடி இறங்கிய 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஸ்டைலாக அவனது trolley bagஐ இழுத்துக்கொண்டு விஷ்வாவின் பங்களாவிற்குள் நுழைந்தான். அவனது மற்ற பொருட்களை watchmen தூக்கிக்கொண்டு அவன் பின்னே வர, “we were just kids. When we fall in love..!!” என்று தன் காதுக்குள் ஓடி கொண்டிருந்த English songஐ பாடியபடி சென்று கொண்டிருந்த அந்த ஐந்தரை அடி handsome young man, அவன் எதிரில் ஓடி வந்து கொண்டிருந்த சாராவின் மீது தெரியாமல் மோதி விட்டான்.
அதனால் வந்த வேகத்தில் அவள் கீழே விழப்போக, அவளை தன் கைகளில் ஏந்தியவன் “Darling you look perfect..!!” என்று headphoneல் ஒலித்த பாடல் வரிகளை அப்படியே தன்னை அறியாமல் அவள் முகத்தைப் பார்த்து பாடிவிட்டான்.

“வேணும்னே என்னை இடிச்சு கீழே விழ வச்சுட்டு, என்ன பார்த்து நான் perfectஆ இருக்கேன்னு வேற பாட்டு பாடுறியாடா நீ..?? என நினைத்து கோபப்பட்ட சாரா சட்டென நேராக நின்று அவன் நெஞ்சில் கை வைத்து அவனை தள்ளியவள், “யாருடா நீ..?? வேணும்னே வந்து என் மேல விழுறியா..?? நீ பண்ண வேலைக்கு.. இரு.. இப்பவே நான் போய் விஷ்வா சார் கிட்ட உன்ன complaint பண்றேன்.” என்றுவிட்டு வேகமாக நடந்தாள்.
இரண்டே எட்டில் அவள் அருகில் சென்ற அந்த இளைஞன் அவள் கையைப் பிடிக்க, திருப்பி அவனை எரித்துவிடும் பார்வை பார்த்தாள் சாரா.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured