அத்தியாயம் 107
நிச்சயமாக, நீங்கள் கொடுத்த கதையில் விக்ரம் என்ற பெயரை விஷ்வா என்று மாற்றி கீழே கொடுத்துள்ளேன்.
விஷ்வாவின் கனவும், பாட்டியின் வருகையும்
மேகா தனக்கு tiredஆக இருப்பதாக சொன்னதால் “Morning training cancel. எல்லாருக்கும் Inform பண்ணிடு.” என்று மகேஷுக்கு மெசேஜ் அனுப்பிய விஷ்வா மேகாவை அணைத்துக் கொண்டு தன் கண்களை மூடினான். அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவனுக்கு ஒரு குட்டி கனவு வந்தது.
அதில்..
மேகாவின் கிராமத்தில் அவர்களுக்கு சொந்தமான வயல்வெளியில் மற்ற பெண்களோடு சேர்ந்து சாதாரண புடவை அணிந்திருந்த மேகா அங்கே நாத்து நட்டுக்கொண்டு இருந்தாள். மற்றொரு விவசாய நிலத்தில் விஷ்வா tractor ஓட்டிக்கொண்டு இருக்க, “அம்மா.. அப்பா.. நான் சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். சீக்கிரம் வாங்க எல்லாரும் சாப்பிடலாம்.” என்று கத்திக்கொண்டு பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தி கையில் பெரிய கூடையுடன் அங்கே ஓடி வந்தாள்.
அவளைப் பார்த்தவுடன் சிரித்த முகமாக எழுந்து நின்ற மேகா “அம்மு.. அதுக்குள்ள நீ வந்துட்டியாடா..??” என்று கை கழுவியபடி கேட்க, “ம்ம்ம்.. ஆமா. எனக்கு இன்னைக்கு school half dayதான். அப்பா எங்கம்மா..?? சீக்கிரம் அவரையும் வர சொல்லு. நான் எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம். எனக்கு பசிக்குது.” என்றாள் அந்த சிறுமி.
அதனால் தான் இருந்த இடத்தில் இருந்து tractor ஓட்டிக் கொண்டிருந்த விஷ்வாவைப் பார்த்து, “ஏங்க.. மாமோய்ய்ய்.. சாப்பிட வாங்க.” என்று மேகா குரல் கொடுக்க, “இரு புள்ள வரேன்.” என்ற விஷ்வா tractorஐ ஓரமாக நிறுத்திவிட்டு தனது கைலியை தூக்கி மடித்து கட்டிக்கொண்டு அவர்களை நோக்கி சென்றான். பின் அவர்கள் மூவரும் குடும்பமாக சேர்ந்து மரத்தடியில் அமர்ந்து உணவு உண்டார்கள்.
அப்போது சாப்பிட்டுக் கொண்டு இருந்த விஷ்வாவிற்குப் பொறை ஏற, “பார்த்து சாப்பிடுங்கப்பா.. இந்தாங்க தண்ணி.” என்ற அம்மு சொம்பில் இருந்த தண்ணீரை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு அவன் தலையில் தன் குட்டி கையால் தட்டினாள். நிஜத்திலும் சத்தமாக விஷ்வா லொக் லொக் என்று இரும்பியபடி, கனவு கலைந்து எழுந்து அமர்ந்தான். ஏசி ஓடியும் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மேகாவை பார்த்தவுடன் அவனுக்கு அவள் அவனிடம் “நீங்க ஏழை ஆனாலும்க்கூட பரவால்ல. நம்ம ஊருக்கு போய் விவசாயம் பண்ணி பொழைச்சுக்கலாம்.” என்று சொன்னது ஞாபகம் வர, “என்ன இவ சொன்னது அப்படியே கனவுல வருது…?? இதுல எங்களுக்கு அதுக்குள்ள அவ்ளோ பெரிய பொண்ணா..?? ஐயையோ.. கனவுல பாக்கும்போதே பயங்கரமா இருக்கே..!! இல்ல… இதெல்லாம் நடக்கவே நடக்காது.” என்று நினைத்து தன் தலையை இடவலமாக ஆட்டியவன், எழுந்து refresh ஆவதற்காக சென்றான்.
அப்போது அவனது mobile ஃபோன் சினுங்க, எடுத்துப் பார்த்தான் விஷ்வா. பாட்டி அட்மிட் செய்யப்பட்டிருக்கும் ஹாஸ்பிடலில் இருந்து டாக்டர் தான் கால் செய்திருந்தார். காலை அட்டென்ட் செய்து, “என்ன டாக்டர் morningஏ call பண்ணிருக்கீங்க.. ஏதாவது emergencyஆ..??” என்று அவன் பதட்டமாக கேட்க,
“No.. no.. Mr. Vishwa please come down. एक्चुअली மீனாள் madamஓட health condition இப்ப ரொம்ப stableஆ இருக்கு. நீங்க விருப்பப்பட்டா இன்னைக்கேக்கூட அவங்கள discharge பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போய் ஒரு நர்ஸ் வச்சு அவங்கள take care பண்ணிக்கலாம். அவங்களோட diet plansல மட்டும் எந்த changesம் ஆகாம பாத்துக்கிட்டாலே போதும். She will be perfectly alright soon. இன்னும் கொஞ்ச நேரம் ஆகிட்டா நீங்க ஆபீஸ் கிளம்பிடுவீங்க. அதான் இப்பவே கால் பண்ணிட்டேன்.” என்றார் டாக்டர்.
“நிஜமா தான் சொல்றீங்களா டாக்டர்…?? பாட்டிக்கு சரியாயிடுச்சா? நான் அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாமா..??” என்று டாக்டர் சொன்னதை நம்ப முடியாமல் ஆனந்த கண்ணீருடன் விஷ்வா கேட்க, “Yes, Mr. Vishwa. நீங்க இத்தனை வருஷமா வெயிட் பண்ணிட்டு இருந்த அந்த நாள் Finally இன்னைக்கு வந்துருச்சு.” என்றார் டாக்டர்.
சந்தோஷத்தில் துள்ளி குதித்த விஷ்வா, “Thank you so much doctor. நான் இப்பவே கிளம்பி ஹாஸ்பிடல் வரேன். Bye..!!” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தவன் நேராக தூங்கிக் கொண்டிருந்த மேகாவின் அருகே சென்று அவள் கைகளை அப்படியே பிடித்து இழுக்க, தூக்கத்தில் இருந்த மேகா கால் தடுக்கி அவன் மீது விழுந்தாள்.
சுதாரித்துக் கொண்ட விஷ்வா தரையில் விழ வேண்டாம் என்று நினைத்து லாவகமாக அவளுடன் சேர்ந்து கட்டிலில் விழ, “நானா எந்திரிக்கிற வரைக்கும் என்னை எழுப்பி disturb பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு, தூங்கிட்டு இருக்கிறவள அப்படியே பிடிச்சு இழுக்கறீங்க.. அறிவில்லையா உங்களுக்கு..?? நான் கீழ விழுந்திருந்தா என்ன ஆகுறது..??” உர்ரென முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள் மேகா. கலங்கிய கண்களுடன் அவளை அப்படியே அணைத்துக் கொண்ட விஷ்வா, “டாக்டர் கால் பண்ணாருடி. பாட்டிக்கு சரியாயிடுச்சாம். இன்னைக்கே பாட்டிய discharge பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு சொல்லிட்டாரு.” என்று உற்சாகமான குரலில் சொன்னான்.
அதைக் கேட்டு தானும் சந்தோஷப்பட்ட மேகா, “வாவ் சூப்பர்… பாட்டி வீட்டுக்கு வர போறாங்க..!!” என்று கத்தி சொல்லிவிட்டு தானும் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். தனக்குள் இருந்த அளவு கடந்த சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் சத்தமாக சிரித்து ஆஆஆ ஊஊஊ என்று கத்தி அவளுடன் சேர்ந்து கட்டிலில் உருண்டு பிரண்ட விஷ்வா “நான் போய் கிளம்புறேன்.” என்று சொல்லிவிட்டு bedல் இருந்து கீழே தாவி குதித்து ஓடி சென்றான்.
“பாத்துப்போங்க” என்று சொல்லிவிட்டு சத்தமாக தானும் சிரித்த மேகா, “பாட்டிக்கு சரியானது தெரிஞ்ச உடனே இவர் என்ன இப்படி ஒரேடியா குழந்தை மாதிரி மாறிட்டாரு! இனிமேல் இந்த வீட்ல எல்லாரும் happyதான்.” என்று நினைத்தாள்.
சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்பதால் தனது ஆடைகளை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள ரூமிற்கு சென்று குளித்துவிட்டு வந்தாள். பின் அவளும், மற்றவர்களும் சேர்ந்து ஹாஸ்பிடலுக்கு சென்று பாட்டியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்கள். ஏற்கனவே அங்கே ஹாஸ்பிடலில் பாட்டியை கவனித்துக் கொண்ட நர்சுகளில் ஒருத்தியை பாட்டியையே select செய்ய சொல்லி அவளையும் கையுடன் அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள்.
Ground floorல் உள்ள தனது ரூமில் வந்து செட்டில் ஆன பாட்டி, கட்டிலில் படுத்துக் கொண்டு “எனக்கு இப்பதான் மனசு ரொம்ப நிறைஞ்சிருக்கு. என் பேரனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இன்னும் கொஞ்ச நாள்ல என் பேத்திக்கும் கல்யாணம் ஆகப்போகுது. நீங்க ரெண்டு பேரும் எனக்கு கொள்ளு பேரணையும் பேத்தியையும் பெத்து குடுத்தீங்கன்னா நான் அவங்க கூட எல்லாம் சந்தோஷமா விளையாடிகிட்டு timepass பண்ணி ஜாலியா இருப்பேன்.” என்று சொல்ல, “உங்க ஆசைய சௌபர்ணிகா அக்காவால மட்டும்தான் நிறைவேத்த முடியும் பாட்டி.” என்று ஒரு சேர நினைத்த விஷ்வாவும், மேகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“ஆமா பாட்டி, என் கல்யாணத்துக்கு நீங்க என் கூடயே இருந்து நடக்கப் போற ஒவ்வொரு functionஐயும் பாக்க போறீங்கன்னு நினைச்சாலே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நீங்க முன்னாடி மாதிரி எந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சிட்டீங்கன்னா எனக்கு இன்னும் நிம்மதியா இருக்கும்.” என்ற சௌபர்ணிகா பாட்டியை கட்டிப்பிடித்துக் கொள்ள, “அக்கா நீங்க இன்னைக்கு ஒரு நாள் இங்க பாட்டி கூடவே இருந்து அவங்கள பாத்துக்கோங்க. எங்களுக்கு ஆபீஸ்ல ஒரு important work இருக்கு.” என்றான் விஷ்வா.
“ம்ம்.. தெரியும் தெரியும். மேகா சொன்னா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து Adல நடிக்கப் போறீங்கன்னு. நீங்க போயிட்டு வாங்க நான் பாட்டிய பாத்துக்குறேன்.” என்று சௌபர்ணிகா சொல்லிவிட, மேகாவை அழைத்துக் கொண்டு ஆபீஸிற்கு கிளம்பினான் விஷ்வா.
வழக்கம்போல அவளுடன் விஷ்வா தனது காரில் செல்ல, அவர்களுக்கு முன்னே மற்ற பாடிகார்டுகள் அவர்களுக்கான காரில் செல்ல, லாஸ்ட்டாக வந்து கொண்டிருந்த காரில் தயாளன் மற்றும் அரவிந்துடன் புதிதாக வந்த நான்கு பெண்களும் இருந்தார்கள்.
“ஏங்க.. நீங்க 4 பேரும் எப்ப பாத்தாலும் சைலண்டாவே இருக்கீங்களே..!! ஏன் எங்க கிட்ட எல்லாம் பேச மாட்டீங்களா..??” அரவிந்த் கேட்க, “தேவையில்லாம யார்கிட்டயும் நாங்க எதுவும் பேசக்கூடாதுன்னு எங்க rules bookல இருக்கு. முக்கியமா உங்ககிட்ட எல்லாம் பேசவே கூடாதுன்னு அதுல mention பண்ணிருக்காங்க.” என்றாள் சாரா.
“ஓஹோ.. இது வேறயா..!! எவன் அவன் இப்படி எல்லாம் மட்டமான ரூல்ஸ் போடறது..?? அவன் மட்டும் என் கையில கிடைச்சான்னா.. அப்படியே அவனை அடிச்சு துவைத்து காய போட்டுருவேன்.” என்று தயாளன் ஆக்சன் உடன் செய்து காட்டி சொல்ல, “விஷ்வா சார்தான் எங்களுக்கு ரூல்ஸ் போட்டுருக்காரு. உங்களுக்கு இது convincingஆ இல்லனா சொல்லுங்க. நாங்க இத பத்தி அவர்கிட்ட பேசி பார்க்கிறோம்.” என்றாள் அனு.
“அம்மா தாயே… உன் கால்ல வேணாலும் விழுகிறேன். தயவுசெஞ்சு அந்த மாதிரி எதையும் பண்ணிடாத.” என்று தயாளன் கையெடுத்து அவர்களை பார்த்து கும்பிட, “இல்லல்ல பரவால்ல நீங்க சொல்லுங்க..!! எங்க தயா விஷ்வா சாருக்கு ரொம்ப செல்லம். எங்க எல்லாரையும் விட அவருக்கு இவன தான் ரொம்ப பிடிக்கும்.
அவருக்கு யார் மேல கோபம் வந்தாலும் எங்க இருந்தாலும் இவனை தான் தேடி வருவாருன்னா பாத்துக்கோங்களேன்… அந்த அளவுக்கு இவன் அவருக்கு special. என் மச்சான் சொன்னா அப்படியே சார் கேப்பாரு.” என்று சொல்லிவிட்டு சிரித்தான் அரவிந்த்.
“டேய் வாய மூடி தொலைடா. இங்க பாருமா.. இவன் ஏதோ உலர்றான்னு அதையெல்லாம் நம்பிட்டு போய் அவர் கிட்ட கண்டதை சொல்லி ஏதாவது ஒரு சம்பவம் பண்ணி விட்றாத. அவர் மத்தவங்க மேல கோவப்பட்டாலே என்னதான் தேடி வந்து அடிச்சு தொங்க விட்டுருவாரு.
அந்த அளவுக்கு அவருக்கு என் மேல பாசம் இருக்கு. இதுல அவருக்கு என் மேலேயே கோபம் வந்துருச்சுன்னா, இந்த தயாளன் அவ்ளோ தான்னு அர்த்தம். என் சாவுக்கு நீங்களே காரணமாயிடாதீங்க. அப்புறம் பேயா வந்து உங்களையும் கூட்டிட்டு போவேன்.” என்று தயாளன் சொல்ல, பெண்கள் நால்வரும் சிரித்தார்கள்.
“போதும்டா ஓவரா நடிக்காத. புதுசா வந்த பொண்ணுங்ககிட்ட நம்ம பாஸ் என்னவோ ரொம்ப terror piece மாதிரி over build up குடுக்காத.” என்ற அரவிந்த் அந்த பெண்களை பார்த்து “இவன் ஒரு சாயல் விஷ்வா சாரோட தம்பி விஜய் சார் மாதிரியே இருக்கிறதுனால அவருக்கு இவனை ரொம்ப பிடிக்கும். அதான் அப்பப்ப சும்மா இவன அடிச்சு விளையாடிட்டு இருப்பாரு. இவன் சொல்ற அளவுக்கு எல்லாம் எங்க யாருக்கும் நாங்க தப்பே பண்ணாலும்க்கூட இதுவரைக்கும் பாஸ் harshஆ punishment குடுத்ததில்ல.” என்றான்.
“ஆமாமா நான் சும்மாதான் சொன்னேன். எங்க பாஸ் 24 carat gold. அவரை மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க.” என்று பெருமையாக சொன்னான் தயாளன்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)