Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 104

மூர்கனின் காதலி CH 104

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 104

Interview செய்கிறேன் என்ற பெயரில் என்னதான் சஞ்சனா தேவையற்ற கேள்விகளை கேட்டு விஷ்வாவை கடுப்பேற்றி விட்டிருந்தாலும், அவளை சாமர்த்தியமாக சமாளித்தாள் மேகா.

விஷ்வா அதை கண்டு வியக்க, ஒரு வழியாக Interview முடிந்தது. Director “Thanks for your valuable time sir.” என்று விஷ்வாவிடம் சொல்ல, “நான் உங்ககிட்டையும், உங்க anchor கிட்டயும் கொஞ்சம் பேசணும். வரீங்களா..??” என்ற விஷ்வா வலுக்கட்டாயமாக Directorன் கையைப் பிடித்துக் கொண்டு அருகிலுள்ள ரூமை நோக்கி சென்றான்.

“இவங்க கிட்ட questions எப்படி change ஆச்சின்னு விசாரிக்கிறாரு போல!” என்று நினைத்த மேகா “நீங்க வாங்க ப்ளீஸ்..!!” என்று சொல்லி சஞ்சனாவை அழைத்துக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்தாள்.‌

அந்த ரூமின் உள்ளே directorம், சஞ்சனாவும் பயத்துடன் நிற்க; “அது எப்படி ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் நல்லா இருந்த உங்க anchor மனோஜ்க்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போகும்?” என்று கேட்டான் விஷ்வா. “இந்த பிரச்சனையை இவர் இன்னும் விடலையா?” என்று நினைத்து பதறிய director, “சார் நெஜமாவே அவனுக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. நான் இங்க கிளம்பி வந்துட்டு இருக்கும்போது அவனுக்கு கால் பண்ணி ரெடியாயிட்டியானு கேட்டேன். அவன் அப்பத் தான் அவனுக்கு உடம்பு சரியில்லைன்னே என்கிட்ட சொன்னான். Lost minuteல shoot cancelஆன மறுபடியும் உங்க appointment கிடைக்கிறது கஷ்டம்னு இந்த பொண்ண வர சொன்னேன்.” என்றார்.

“ஓஹோ.. சரி அதை விடு. இந்த Interviewல எங்ககிட்ட கேட்க வேண்டிய questionsஐ ready பண்ணது யாரு? எப்படி நடுவுல‌ questions மாறுச்சு..??” என்று கோபமாக கேட்ட விஷ்வா சஞ்சனாவை பார்த்து, “இது உன் வேலையா..??” என்று கேட்டான். “ஐயோ சத்தியமா இல்ல சார். நானே cue cardல இருந்த ‌questionsஐ பாத்துட்டு என்ன இப்படி ரெடி பண்ணி வச்சிருக்காங்கன்னு தான் நினைச்சேன். இருந்தாலும் நீங்க already questions check பண்ணிட்டு final பண்ணிட்டீங்கன்னு சொன்னாங்க. அதான் நான் தைரியமா கேட்டேன். என் மேல நம்பிக்கை இல்லனா இதை வேணா செக் பண்ணி பாருங்க.” என்று வேகமாக சொன்ன சஞ்சனா தன்னிடம் இருந்த cue cardஐ விஷ்வாவிடம் கொடுத்தாள்.

“அந்த questionsஐ ready பண்ணது என் assistant தான் சார். But அதுல என்ன இருந்துச்சுன்னு check பண்ண எனக்கு time இல்லாததுனால விட்டுட்டேன். Interview நடக்கும்போது எனக்கே shockingஆ தான் இருந்துச்சு. இருந்தாலும் நீங்க final பண்ணது தானேன்னு நான் எதுவும் சொல்லல.” என்றார் director.

‌ “இது தான் நீங்க send பண்ணதா சொல்லி என் assistant எனக்கு forward பண்ணது. அப்புறம் நடுவுல எப்படி இது மாறுச்சு..??” என்று விஷ்வா தனக்கு வந்த மெசேஜை அவர்களிடம் காட்டி கேட்க, “சார் எங்க தப்பு நடந்துச்சுனு எனக்கு தெரியல சார். ஒரே ஒரு நிமிஷம் இருங்க. நான் அவனுக்கு கால் பண்ணி கேட்கிறேன்.” என்ற director தனது assistantக்கு கால் செய்ய, “speakerல போடு.” என்று அதட்டினான் விஷ்வா.

அதனால் பயத்துடன் director அவனுக்கு கால் செய்து ஸ்பீக்கரில் போட்டு, “டேய் என்னடா பண்ணி வச்சிருக்க…?? விஷ்வா சார் ‌Interviewல கேட்க வேண்டிய question cue cardல‌ எப்படி மாறுச்சு..?? நீதானே அதை print பண்ண..!!” என்று கேட்க, “சார் நான் எதையும் மாத்தல. விஷ்வா சார் கேட்டாருன்னு அவரோட assistant ரெடி பண்ண கொஸ்டின முன்னாடியே அனுப்ப சொன்னாரு. அதனால மகேஷுக்கு அனுப்பும்போது அதே கொஸ்டின உங்களுக்கும் கூட send பண்ணனே! Last minuteல மனோஜுக்கு பதிலா சஞ்சனா interview பண்ண போறதா நீங்க சொன்னதுனால அவங்களுக்கும் questions send பண்ணேன். அதையேதான் printம் போட்டேன். நடுவுல நான் எந்த changesம் பண்ணல.” என்றான் அவரது assistant.

அதனால் “இப்ப நான் என்ன சார் பண்றது..??” என்பதைப்போல Director விஷ்வாவை பார்க்க, “callஐ cut பண்ணு.” என்று சைகையில் சொன்னான் விஷ்வா. அதனால் Director-ம் அந்த அழைப்பை துண்டித்துவிட, அவர்கள் இருவரின் mobile phoneஐயும் வாங்கி அதில் அந்த assistant சொன்னதைப் போலவே message வந்திருக்கிறதா ‌ என்று check செய்த விஷ்வா, “உங்க ரெண்டு பேருக்குமே அவன் இன்டர்வியூ ஸ்டார்ட் ஆகுறதுக்கு முன்னாடியே மெசேஜ் பண்ணிருக்கான். அப்புறம் கரெக்டா எப்படி நீங்க ரெண்டு பேருமே அத பாக்காம இருந்தீங்க..??” என்று சந்தேகமாக கேட்டான். “சார் திடீர்னு director கிட்ட இருந்து உங்களை interview பண்ணனும்னு சொல்லி கால் வந்ததுனால எனக்கு கிளம்பி இங்க வர்றதுக்கே டைம் சரியா இருந்துச்சு. என்னால இதை open பண்ணி பாக்க முடியல.” என்று சஞ்சனா சொல்ல,

“சார் கிட்டத்தட்ட நீங்க interview timeஐ finalize பண்ணி சொல்லி இப்ப நாலு மணி நேரம் தான் ஆகுது.‌ அதுக்குள்ள நான் ‌ எல்லாத்தையும் arrange பண்ணி whole interviewஐயும் shoot பண்ணியே முடிச்சிட்டேன். எல்லாம் சரியா போகணுமேன்ற tensionல‌ இதையெல்லாம் பாக்குறதுக்கு எனக்கு டைமே இல்ல சார். And நீங்க questions check பண்ணி final பண்ணிட்டீங்கன்னு மகேஷ் சொன்னாரு. சோ அப்படியே அசால்டா விட்டுட்டேன். சாரி சார்.” என்றார் director.

“என்ன சுத்தி எங்கயோ தப்பு நடக்குது. எவனோ என்க்கூடயே இருந்துகிட்டு என்னோட ஒவ்வொரு movesஐயும் closeஆ watch பண்ணிட்டே இருந்து எனக்கு கட்டம் கட்டுறான். யார் அவன்..??” என்று யோசித்த விஷ்வா, அவர்கள் இருவரையும் கிளம்பச் சொல்லி அனுப்பிவிட்டான். தன்னுடன் வந்தவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு director சென்றுவிட, யோசனையில் ஆழ்ந்தான் விஷ்வா.

“ஒருவேளை இதெல்லாம் சைலண்டா இருந்து ஆதித்யா தான் பண்றானோ..??” என்று மேகா கேட்க, “24/7 நான் அவன watch பண்ணிட்டே தான் இருக்கேன். கண்டிப்பா இத அவன் பண்ணல. நீ மயக்கத்துல இருந்தப்போ நான் உனக்கு தாலி கட்டிட்டேன்னு உடனே எப்படி அன்னைக்கு மகளிர் ஆணையத்தில இருந்து அத்தனை பேர் மண்டபத்துக்கு வந்தாங்க? உடனே Court case, hearing இதெல்லாம் எப்படி அவ்ளோ fastஆ தானா நடக்கும்? நமக்கு கல்யாணம் நடந்த டைம்ல ஆதித்யா முழுசா recover கூட ஆகல.‌ சோ நமக்கு தெரியாத, நமக்கு சந்தேகம்க்கூட வராத அளவுக்கு இருக்கிற எவனோ ஒருத்தன் என்ன கொஞ்ச கொஞ்சமா destroy பண்ண ‌try பண்றான்.” என்று உறுதியாக சொன்னான் விஷ்வா.

“சீக்கிரம் அவன் யாருன்னு கண்டுபிடிங்க விஷ்வா. எனக்கு பயமா இருக்கு.” என்று மேகா சொல்ல, “You don’t worry. நான் பாத்துக்குறேன்.” என்ற விஷ்வா “நீ உடனே கிளம்பி இந்தியாவுக்கு வா. நீ முடிக்க வேண்டிய ஒரு Important work இருக்கு.” என்று யாருக்கோ மெசேஜ் செய்தபடி அந்த அறையைவிட்டு வெளியேறினான்.

“நான் என்ன தான் இவரை நல்லா பாத்துக்கணும்னு நினைச்சாலும், ஏதாவது நடந்து இவர் மறுபடியும் restless ஆயிடுறாரு.” என்று நினைத்து பெருமூச்சுவிட்ட மேகா தங்களது அறைக்கு சென்றாள்.

மறுநாள் காலையில் மேகா அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்‌.‌ “ஓய் எவ்ளோ நேரம் டி தூங்குவ..?? சீக்கிரம் எந்திரி.” என்று விஷ்வா அவள் அருகில் சென்று எழுப்ப, அரை தூக்கத்தில் அவளுக்கு எதிரே சுவரில் மாற்றப்பட்டிருந்த கடிகாரத்தில் நேரத்தை கவனித்த மேகா, “முதல்ல டைம பாருங்க விஷ்வா. மணி 5 தான் ஆகுது. அதுக்குள்ள நான் எந்திரிச்சு என்ன பண்ண போறேன்..?? என்ன disturb பண்ணாதீங்க எனக்கு தூக்கம் வருது.” என்றவள், மீண்டும் இழுத்து போர்த்திக் கொண்டு படுத்தாள். Tracksuit அணிந்து ஏற்கனவே ரெடியாக இருந்த விஷ்வா அவளது போர்வையை பிடுங்கி தூக்கிப்போட்டுவிட்டு “அதான் விடிஞ்சிடுச்சில்ல.. இன்னும் உனக்கு என்ன தூக்கம் வேண்டி கிடக்குது..?? எந்திரிடி. எந்திரிச்சு இதை போட்டுட்டு வா.” என்றவன், வலுக்கட்டாயமாக அவள் கைகளைப் பிடித்து இழுத்து அவளை எழுப்பி அவளிடம் ஒரு கவரை கொடுத்தான்.

தூக்கத்திற்காக ஏங்கிய தன் கண்களை கசக்கியபடி பாவமாக அவனைப் பார்த்த மேகா “ஏங்க தூங்கக்கூட விடாம என்ன இப்படி கொடுமை படுத்துறீங்க..??” என்று கேட்டுவிட்டு சினுங்க, “இனிமே நீ டெய்லியும் 5 o’clock sharpஆ தூங்கி எந்திரிக்கிற.” என்று strictஆக சொன்னான் அவன்.

அதைக் கேட்டு ஷாக் ஆனதில் அவளது தூக்கம் தூரமாக போய்விட, “நான் நைட்டு தூங்குறதுக்குள்ளயே மணி 12க்கு மேல ஆயிடுது. அப்புறம் எப்படி 5 மணிக்கு எந்திரிக்க முடியும்..?? இதெல்லாம் உங்களுக்கே அநியாயமா தெரியலையா.??” என்று கோபமாக கேட்டாள் மேகா.

“தெரியல” என்று கூலாக பதில் சொன்ன விஷ்வா, “உனக்கு உன்னோட sleeping time மேல அவ்ளோ அக்கறை இருந்தா நைட் சீக்கிரமா தூங்கு.” என்று சொல்லிவிட்டு நகர, “ஆஆ..‌‌ என்ன திடீர்னு ஹிட்லரா மாறிட்டீங்களா நீங்க..?? எனக்கு 5 மணி எல்லாம் midnight மாதிரி.‌ நீங்க என்னோட husband என்பதற்காக என்னை நீங்க இப்படி எல்லாம் கொடுமைப்படுத்த நான் allow பண்ண மாட்டேன். எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன். நீங்க என்னமோ பண்ணுங்க.” என்ற மேகா வீம்பிற்காகவே மீண்டும் படித்து கொண்டாள். கட்டிலில் ஓரமாக கிடந்த கவரை எடுத்து அவள் முகத்தில் முன்னே வைத்த விஷ்வா “உனக்கு 5 minutes தான் டைம்.‌ அதுக்குள்ள இந்த dressஐ change பண்ணிட்டு வர்ற.‌.. இல்லனா, நானே உனக்கு இதை போட்டுவிட்டு உன்ன force பண்ணி இங்க இருந்து இழுத்துட்டு போவேன்.” என்று சொல்லிவிட்டு நேராக சென்று sofaல் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured