Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 103

மூர்கனின் காதலி CH 103

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 103

தங்களது வீட்டிலேயே நடக்கவிருக்கும் இன்டர்வியூவில் கலந்து கொள்வதற்காக மேகா அவளுக்கும் விஷ்வாவிற்கும் pink colourல் ஆடையை தேர்வு செய்தாள்.

“ஏய் இதெல்லாம் ஒரு கலராடி..?? ஒழுங்கா வேற ஏதாவது எடுத்து வை.” விஷ்வா சொல்ல, “ஏன் இதுக்கு என்ன..?? இந்த shirtஐ நான் உங்க wardrobeல இருந்துதான் எடுத்தேன். நீங்க போட மாட்டீங்கான்னா அப்புறம் எதுக்கு வாங்கி வச்சிருக்கீங்க..?? நான் எடுத்து வச்சிருக்கிற இந்த pink gown எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. நீங்க இத போட்டா தான் அதுக்கு matchingஆ இருக்கும். ப்ளீஸ் விஷ்வா எனக்காக..!!” என்று மேகா கெஞ்சி கேட்டதால் “போய் தொல..!!” என்று நினைத்த விஷ்வா அவளுக்காக அதை அணிந்து கொண்டான்.

தயாராகி அவர்கள் இருவரும் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்திருக்க, cameras and micகளுடன் விஷ்வாவின் பங்களாவிற்கு டிவி சேனல் ஆட்கள் வந்தார்கள். இவர்களை interview எடுப்பதற்காக ஒரு famous male anchor தான் வரப்போகிறார் என்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவனுக்கு பதிலாக அங்கே சஞ்சனா என்ற female anchor வந்திருந்தாள்.

அதனால் ஆரம்பத்திலேயே கடுப்பான விஷ்வா மகேசை பார்த்து முறைக்க, “இன்னும் interviewவே ஸ்டார்ட் ஆகல. அதுக்குள்ள problems start ஆயிடுச்சு.” என்று நினைத்து பெருமூச்சு விட்ட மகேஷ் டைரக்டரை அழைத்து “யார கேட்டு சொல்லாம கொள்ளாம நீங்க anchorஐ மாத்துனீங்க..???” என்று கோபமாக கேட்டான்.

“சார்.. sorry சார். Last minuteல அந்த anchorக்கு உடம்பு சரி இல்லாம போயிடுச்சு. இந்த பொண்ணும் famousஆன anchor தான். நிறைய celebritiesஐ interview பண்ணிருக்கா.” என்று டைரக்டர் சொல்ல, “ச்ச்.. யாரா இருந்தா என்ன? நீங்க இப்படி ஒரு change நடக்கும்போது அத பத்தி எங்களுக்கு inform பண்ணணும் இல்ல..??” கோபமாக கேட்டான் மகேஷ். அப்போதும் director “Sorry சார்.” என்று மீண்டும் அதையே சொல்ல, எரிச்சல் அடைந்த மகேஷ் “இவன்கிட்ட பேசிட்டு tension ஆகுறதுக்கு நம்ம பாஸ்கிட்டயே திட்டு வாங்கிக்கலாம்.” என்று நினைத்து விஷ்வாவிடம் அவன் சொன்னதை சொன்னான்.

“அப்போ interview-ஐ cancel பண்ணுங்க. அவனுங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால interview கொடுக்க முடியாது.” என்று விஷ்வா உறுதியாக சொல்லி விட, “விடுங்க விஷ்வா. யார் நம்மள interview பண்ணா என்ன..?? ஆல்ரெடி வர்றேன்னு சொல்லியிருந்தவரை விட இந்த பொண்ணுதான் famous anchor. இவங்களே நம்மள Interview பண்ணட்டும். இவங்க பொண்ணுங்கறதுக்காக நீங்க இப்போ இதை cancel பண்ணீங்கன்னா, மறுபடியும் உங்கள பத்தி தேவையில்லாம rumours spread ஆகும்.” என்றாள் மேகா.

“இப்பதான் எல்லா problemஐயும் சரி பண்ணி mobile launchக்கு ready பண்ணியிருக்கோம். அதுக்குள்ள இன்னொரு problem எதுக்கு..??” என்று நினைத்த விஷ்வா, “சரி என்னமோ பண்ணி தொலைங்க.” என்று அரை மனதாக சொன்னான்.

“சார் உங்க பங்களா செமையா இருக்கு. இப்ப வரைக்கும் யாரும் இங்கே வந்து ஒரு photo கூட எடுத்ததில்லை. நீங்க permission கொடுத்தீங்கன்னா நாங்க இந்த பங்களாவை சுத்தி ஒரே ஒரு வீடியோ மட்டும் எடுத்துக்குறோமே..!!” என்று director விஷ்வாவிடம் கெஞ்ச, “ம்ம்ம்.. வெளியே இருந்து எடுத்துக்கோங்க. எந்த roomக்குள்ளையும் போகக்கூடாது. என் Guards உங்கக்கூட வருவாங்க.” என்று விஷ்வா சொல்லிவிட, கேமராவுடன் தனது ஆட்களை கூட்டிக்கொண்டு அவன் பங்களாவை படம் பிடிப்பதற்காக director சென்று விட்டார்.

அந்த mini shooting முடிந்தவுடன் lighting camera angle என அனைத்தையும் set செய்தார் director. Anchor சஞ்சனா ஒரு sofaவில் அமர்ந்திருக்க, அவளுக்கு எதிரே இருந்த sofaவில் ஜோடியாக விஷ்வாவும் மேகாவும் அமர்ந்திருந்தார்கள். “hello மக்களே.. welcome to my show.. நீங்க பாத்துட்டு இருக்கிறது celebrities with Sanjana. இன்னைக்கு நம்ம ஷோவுக்கு வழக்கம்போல ஒரு famous celebrity couple வந்திருக்காங்க. Actually அவங்க வந்துருக்காங்கன்னு சொல்றதைவிட, நம்ம அவங்க வீட்டுக்கு வந்திருக்கோம்ன்னு தான் சொல்லணும். Yes backgroundல இப்போ நீங்க பாத்துட்டு இருக்கிறது MV Techஓட owner மிஸ்டர் விஷ்வாவோட பங்களா தான்.” என்று உற்சாகமான குரலில் அந்த ஷோவை ஆரம்பித்த சஞ்சனா விஷ்வா மற்றும் மேகாவை பார்த்து அழகாக புன்னகைத்தாள்.

இதற்கு முன்பு இருந்த விஷ்வாவாக இருந்திருந்தால் இந்நேரம் சஞ்சனா தன் எதிரே அமர்ந்திருப்பதற்கே disturbஆகி எழுந்து சென்று இருப்பான். ஆனால் மேகாவுடனும், அவளுடைய குடும்பத்தினருடனும் சேர்ந்து பயணித்த இத்தனை நாட்களில் மற்ற பெண்களிடம் சகஜமாக பேசி பழகுவதற்கு விஷ்வா ஓரளவிற்கு மனதளவில் தன்னை தயார் படுத்தி இருந்தான்.

அதனால் அவன் நார்மலாகவே இருக்க, “ஹலோ சார் ஹாய் மேம்..!! மேரேஜ்க்கு அப்புறம் இது உங்களோட first interview. நீங்க எப்படி feel பண்றீங்க..??” என்று கேட்டு அவர்களிடம் பேச ஆரம்பித்தாள் சஞ்சனா.

“நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்களோட last interview தான் எங்க life changing momentஆ இருந்துச்சுன்னு கூட சொல்லலாம். அத பாத்ததுக்கு அப்பறம் தான் எங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு நாங்க லவ் பண்ணதே தெரியும்.” மேகா உற்சாகமான குரலில் சொல்ல, “நீங்க எதுவும் சொல்லலையே சார்..!!” என்று விஷ்வாவை பார்த்து கேட்டாள் சஞ்சனா.

“என் wife சொன்ன மாதிரி அந்த ஒரு interview, totally எங்க lifeஐயே மாத்திரச்சு. நான் அந்த Momentஐ எப்பவும் மறக்க மாட்டேன்.” என்றான் விஷ்வா. “Wow.. so sweet of you Sir..!!” என்ற சஞ்சனா தொடர்ந்து அவர்களிடம் MV Tech பற்றியும் இப்போது சந்தைக்கு வந்திருக்கும் அவர்களது புது smart phone பற்றியும் கேள்விகள் கேட்டாள். அதற்கெல்லாம் விஷ்வாவும் மேகாவும் சலிக்காமல் பொறுமையாக பதில் சொன்னார்கள்.

பின் தன் கையில் இருந்த cue cardஐ பார்த்த சஞ்சனா அதில் உள்ள questionsகளை முதலில் அவனிடம் கேட்க தயங்கியவள் பின் “நமக்கென்ன..?? Director சொல்ற மாதிரி செய்றது தான் நம்ம வேலை.” என்று நினைத்து “உங்க மேரேஜ்க்கு முன்னாடி விஷ்வா சார் Gayன்னு ஒரு நியூஸ் trendingலயே இருந்துச்சு.. அத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க..?? அந்த rumours உங்க marriage lifeஐ affect பண்ணுச்சா..???” என்று கேட்டாள்.

இந்தக் கேள்வி விஷ்வாவிற்குப் புதிதல்ல. ஆனால் அவனுக்கு திருமணமாகி அவன் மனைவி மேகா அவன் அருகில் இருக்கும்போது, அவள் இப்படி கேட்பதால் வேண்டுமென்றே அவனை அசிங்கப்படுத்துவதற்காக இது போன்ற கேள்வியை அவள் கேட்கிறாள்.

மற்றும் director அனுப்பியதாக சொல்லி விஷ்வா அவனுக்கு அனுப்பிய questions listல் இந்தக் question இருந்ததாக அவனுக்கு ஞாபகம் இல்லை.
அதனால் கோபமாக அமர்ந்திருந்த விஷ்வா சஞ்சனாவை பார்த்து முறைக்க, “அச்சச்சோ என்ன இவர் உடனே கோபப்படுறாரு..!!” என்ற நினைத்த மேகா சட்டென அவன் கையைப் பிடித்துக் கொண்டு அவனை பேசவிடாமல் செய்வதற்காக வேகமாக, “வேற வேலை இல்லாதவங்க இந்த மாதிரி rumours spread பண்ணிட்டுதான் இருப்பாங்க. அது எதுக்கு எங்க lifeஐ affect பண்ண போகுது..?? அவர பத்தி என்ன விட அதிகமா யாருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. And என்ன தவிர வேற யாருக்கும் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. எங்களுக்குள்ள எல்லாமே கரெக்டா இருக்கு. So everything is going smoothly.” என்றாள்.

“சூப்பர் மேம். உங்களுக்குள்ள இருக்கிற லவ் நீங்க பேசும்போது நல்லா தெரியுது.” என்ற சஞ்சனா மீண்டும் வில்லங்கமாக “இந்த மேரேஜ்ல உங்களுக்கு விருப்பம் இல்லைன்னு இன்னமும் நிறைய பேர் சொல்லிட்டு இருக்காங்க. சில பேர் நீங்க விஷ்வா சார் பணக்காரரா இருக்கறதுனால அவர கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கன்னு சொல்லிட்டு இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் ஒரு answer சொல்லணும்னா நீங்க என்ன சொல்லுவீங்க mam..??” என்று மேகாவை பார்த்து கேட்டாள்.

விஷ்வாவின் பொறுமை அதன் எல்லையை கடந்து கொண்டிருந்தது. அவன் கையை விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த மேகா லேசாக சிரித்தவள், “நான் already சொன்ன மாதிரி மத்தவங்கள பத்தி personalஆ எதுவும் தெரியாம ஈஸியா அவங்கள judge பண்றதுக்கு நிறைய அறிவாளிகள் இருக்காங்க. அவங்க அறிவு அவ்வளவு தான்.

அதுக்கு நாம்ம என்ன பண்ண முடியும்..?? நான் அவங்களுக்கு சொல்ல நினைக்கிறது ஒன்னே ஒன்னு தான். எங்க lifeஐ நாங்க பாத்துக்கிறோம். So better mind your own business.” என்றாள்.
பின், தொடர்ந்து சஞ்சனா விஷ்வாவையும் மேகாவையும் target செய்து விதவிதமான கேள்விகள் கேட்க, வெடிக்க காத்திருக்கும் எரிமலையாய் இருந்த பேசி சூழ்நிலையை மோசமாக்கி விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக சிரமப்பட்டு அமைதியாக இருந்தான்.

அதனால் மேகா அனைத்திற்கும் பொறுமையாகவும், சஞ்சனாவின் தேவையற்ற கேள்விகளுக்கு படபடவென நெத்தியடி பதில்களை கொடுத்தாள். அதனால் அவளைக் கண்டு வியந்த விஷ்வா ஒரு கட்டத்திற்கு மேல் சஞ்சனாவை பார்த்து கோபப்படுவதை விடுத்து, மேகாவையே கண் கொட்டாமல் பார்த்து அவளது problems solving skillsஐ admire செய்ய தொடங்கினான்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured