Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 160

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 160

by Thenaruvi Tamil Novels

.

அத்தியாயம் 160: என்னால அவளை அசிங்க படுத்த முடியாது (பார்ட் 1)


நாராயணன் குரூப்ஸ் அலுவலகத்தில்…

கம்ப்யூட்டர் எக்ஸ்பர்ட்டாக நாராயணன் குரூப்ஸ் இன் அலுவலகத்தில் புதிதாக ஜாயிண் செய்த சந்தோஷ், சிவாவின் கேபினிற்கு சென்று அவனிடம் நன்றி சொல்லிவிட்டு, சி. இ. ஓ. ஆபீஸின் அட்மின் அவனை வருணை சென்று பார்த்துவிட்டு வர சொன்னதால் வருணின் கேபினுக்கு சென்றான். சந்தோஷ் வருணின் கேபினின் உள்ளே வரும்போது வருண் யாருடனோ சீரியஸ் ஆக மொபைல் போனில் பேசிக் கொண்டு இருந்தான்.

சந்தோஷ்: “மே ஐ கம் இன் சார்..??” என்று கேட்ட படியே வருணின் கேபின்க்குள்ளே நுழைந்தான்.

வருண்: “எஸ்.. கம் இன்.” என்று போனில் பேசிய படியே சந்தோஷை பார்த்து சொன்னவன், “யூ ஆர் சந்தோஷ் ரைட்..???” என்று கேட்டான்.
சந்தோஷ்: “எஸ் சார். டெக்னிகல் டீம்ல ஜாயின் பண்ணி இருக்கேன். அண்ட் தேங்க்யூ ஃபார் கிவ்விங் மீ திஸ் ஆப்பர்சூனிட்டி.” என்று பவ்யமான குரலில் சொன்னான்.

வருண்: “ஐ வில் கால் யு லேட்டர்.” என்று சொல்லிவிட்டு தான் பேசிக் கொண்டு இருந்த கால் ஐ கட் செய்தவன், சந்தோஷை பார்த்து.. “இட்ஸ் ஓகே சந்தோஷ். ஐ டிரஸ்ட் யூ. தட்ஸ் வொய் யூ ஆர் ஹியர். எனக்கு நீங்க தேங்க் பண்ண தேவை இல்லை. நான் உங்க மேல வச்சிருக்கற டிரஸ்ட் ஐ நீங்க லாஸ்ட் வரைக்கும் பிரேக் பண்ணாம இருந்தாலே போதும். உங்க டீமுக்குன்னு தனியா ஒரு ஆபீஸ் போடலாம்னு இருக்கேன். 9th ஃப்ளோர் ஃப்ரீயா தான் இருக்கு. உங்க டீமுக்கு ஹெட்டா க்ரிஷா இருப்பாங்க.

தி சைனிங் ஸ்டார் கம்பெனியோட வொர்க் எல்லாத்தையுமே அவங்க தான் பாத்துக்கிட்டாங்க. இன்னைக்கு அவங்களும் பிரண்டு பிராங்க்ளினும், அமெரிக்கால இருந்து இந்தியாவுக்கு வராங்க. இன்னும் ஒன் ஹார் -ல இங்க ரீச் ஆயிடுவாங்க. நீங்களும், சிவாவும், அவங்கள ரிசீவ் பண்ணிட்டுங்க.

அவங்க இங்க வந்ததுக்கு அப்புறமா, அவங்களுக்கு ஆபீஸ் செட் பண்றதுக்கு நீங்க ஹெல்ப் பண்ணுங்க. புதுசா எவ்ளோ ஆள் வேணும்னாலும், ஹெச். ஆர். டீம் கூட சேந்து ரெக்கிரூட் பண்ணுங்க. மெய்னா க்ரிஷாவுக்கு அசிஸ்ட் பண்றது தான் உங்க ஜாப். சி இஸ் வெரி ப்ரொபஷனல். ஆஸ் எ ப்ரசர், யூ கேன் learn many things ஃப்ரம் ஹெர். சோ.. கெட் ரெடி. இதுக்கு மேல நீங்க சிவாவையும், க்ரிஷாவையும், ஃபாலோ பண்ணிக்கோங்க.” என்றான்.


சந்தோஷ்: “ஓகே சார்.” என்றவன், மீண்டும் சிவாவின் கேபினுக்கு சென்று க்ரிஷாவையும், பிராங்க்ளினையும், வரவேற்பதற்காக அவனுடன் இணைந்து தயாரானான்.

பிரசாத் குரூப்ஸுன் அலுவலகத்தில்…


பிரவீனின் கேபினில் அவனுக்கு எதிரே அமர்ந்து இருந்த கௌத்தம், “நோ சார். என்னால இத பண்ண முடியாது. நான் இப்டி பண்ணினா, ரித்திகாவ எல்லாரும் தப்பா பேசுவாங்க. நான் அவளை லவ் பண்றேன்னு சொல்றேன்.. உங்களுக்கு அது புரியுதா இல்லையா..??? நான் போய் அவளுக்கு எதிரா எப்படி இப்படி ஒரு விஷயத்தை பண்ணுவேன்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க…??? ஐ அம் சாரி சார். என்னால அவ பேர கெடுக்கிற மாதிரி எதையும் பண்ண முடியாது.” என்று எரிச்சலான குரலில் பிரவீனை பார்த்து சிறு கோபத்துடன் சொல்லி கொண்டு இருந்தான்.

பிரவீன்: அவனை ஏளனமாக பார்த்தவன், “நீ தானே டா அவளை லவ் பண்ற.. அவ ஒன்னும் உன்ன லவ் பண்ணலயே…!!! அப்புறம் அவளுக்கு என்ன ஆனா உனக்கு என்ன..??? நீ நான் சொல்ற மாதிரி செஞ்சா, இந்த கல்யாணம் நின்னுரும். அவ பேரு கெட்டு போனாலும், நீ தான் அவளுக்கு வாழ்க்கை தரத்துக்கு ரெடியா இருக்கீல்ல… அப்புறம் என்ன..?? நீ எதுவும் தெரியாத மாதிரி நல்லவனாட்டம் அவ அப்பா அம்மா கிட்ட போய் சீன் போட்டு ரித்திகாவ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு. அவங்களும் வேற வழி இல்லாம ரித்திகாவ உனக்கு கல்யாணம் பண்ணி வச்சுருவாங்க.

இதுல நீ சம்பந்தப்பட்டு இருக்கேன்னு யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க. உன்கிட்ட இத பத்தி யாராவது கேட்டா, எனக்கு தெரியாதுன்னு சொல்லு. வெளியில இருந்து வேற ஏதாவது பிரச்சனை வந்தா, நான் பாத்துக்கிறேன். எனக்கு கோ ஆபரேட் பண்றத தவிர உனக்கு வேற ஆப்ஷன் இல்ல கௌத்தம். அந்த ரித்திகா உனக்கு வேணும்னா, நீ இத செஞ்சு தான் ஆகணும்.” என்று உறுதியான குரலில் சொன்னான்.

கௌத்தம்: அவன் அமைதியாக பிரவீன் தன்னிடம் சொன்னதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருந்தான். “நீ இத செஞ்சா தான் உனக்கு ரித்திகா கிடைப்பா.” என்று பிரவீன் சொன்னது மட்டும் தான் அவனுடைய மனதில் மீண்டும் மீண்டும் ஓடி கொண்டே இருந்தது.

பிரவீன்: அவனுடைய மௌனத்தை சம்மதத்திற்கு அறிகுறியாக எடுத்துக் கொண்டவன் அவன் முன்னே ஒரு கோடிக்காண ஒரு செக்கை நீட்டி, “இந்த ஒன் குரோரை வச்சு உன்னோட லைஃப நீ எப்படியாவது செட்டில் பண்ணிக்கோ. இதுக்கு மேலயும் உனக்கு எது வேணுனாலும், எவ்ளோ வேணும்னாலும் நீ என்கிட்ட கேளு. இன்கேஷ் உன் மேல சந்தேகம் வந்து வருண் உன்னை அந்த வேலையை விட்டு போக சொன்னா கூட, உன்னோட லைப்ப செட்டில் பண்ண வேண்டியது என்னோட பொறுப்பு. நானே உனக்கும், ரித்திகாவுக்கும், கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.
உனக்கு ஓகேன்னா சொல்லு. நானே வீஸா அப்ளை பண்ணி உங்க ரெண்டு பேரையும் கல்யாணத்துக்கு அப்புறம் உங்க பேமிலியோட அமெரிக்கா அனுப்பி வைக்கிறேன். அப்புறம் வருணாலயும் எந்த பிரச்சினையும் இருக்காது. எனக்கு அந்த வருண் தான் எனிமி.. ரித்திகா இல்ல. ஆனா ஒரு வேளை இந்த கல்யாணம் நடந்துட்டா, என்னோட எனிமி லிஸ்ட்ல அவளும் ஆட் ஆயிடுவா. நான் சொல்ல வேண்டியது எல்லாத்தையும்ல சொல்லிட்டேன். இட்ஸ் அப் டூ யூ நவ். திங்க் அண்ட் டிசைட். நீ இப்ப உடனே உன்னோட டெசிஷனை சொல்லணும்னு கூட அவசியமில்லை. இன்னைக்கு டே ஃபுல்லா டைம் எடுத்துக்கோ. உனக்கு ஓகேன்னா நாளைக்கு இதே டைம்க்கு என்னோட ஆஃபீஸ்க்கு வா.” என்று ஒரு மர்மமான புன்னகையுடன் சொன்னான்.

கௌத்தம் -க்கும் இதை பற்றி நன்றாக யோசித்து தான் முடிவெடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் அங்கு இருந்து கிளம்பி இன்று பள்ளியில் லீவ் சொல்லிவிட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்று விட்டான்.
நாராயணன் பேலஸில்….
ரித்திகாவின் பெற்றோர்களும், ரித்திகாவும், செண்பகத்தை சந்திப்பதற்காக நாராயணன் பேலசிற்கு வந்திருந்தனர். இன்று ரித்திகாவின் திருமணம்திற்கு தேவையான அனைத்து ஆடைகள் மற்றும் ஆபரணங்களையும் வாங்கிவிட வேண்டும் என்று நினைத்த செண்பகம், தங்கள் நகை கடைகளில் டிசைன் செய்து கொடுப்பவர்களையும், பொன்னுருக்கி நகை செய்யும் ஆசாரிகளையும், அவர்களுடைய பிரத்தியேகமான டிசைன்களையும் அங்கே கொண்டு வர சொல்லிி இருந்தாள்.

அது மட்டும் இன்றி அவர்களுடைய ஜவுளி கடைகளில் வேலை பார்க்கும் தலை சிறந்த காஸ்டியூம் டிசைனர்களையும், நெசவாளர்களையும், பட்டு சேலை செய்வதில் நிறைய ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களையும், அவர்களுடைய விலை உயர்ந்த திருமணப்பட்டு கலெக்ஷன்களான பிராத்தனா திருமண வைபோக சேலைகளையும், கொண்டு வரச் சொல்லி இருந்தாள்.

கூடுதலாக நாராயணன் குடும்பத்தினரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட்கள், காஸ்டியூம் டிசைனர்கள், மேக்கப் ஆர்டிஸ்ட், அசிஸ்டன்ஸ் என அனைவரும் செண்பகத்தின் ஆணையின் பெயரில் அங்கே வந்து குவிந்து இருந்தனர்.
அவர்கள் அனைவரும் தங்களுடைய பிக் பாஸின் திருமணத்திற்காக வேலை செய்வதற்கு மிகவும் ஆர்வமாகாக இருந்தனர். ரித்திகா அங்கே வந்த பின் இவளை தான் வருண் திருமணம் செய்த கொள்ள போகிறான் என்று தெரிந்தவுடன், அங்கு இருந்த பெண்கள் அனைவரும் அவளைப் பார்த்து பொறாமை பட்டனர். ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்ணிற்கு இப்படி ஒரு வாழ்வா என்பது மட்டும் தான் அவர்கள் மனதில் தோன்றிய ஒரே எண்ணமாக இருந்தது.
தன்னுடைய மகனின் திருமணத்தில் அனைத்தும் இந்த உலகிலேயே சிறந்ததாகவும், தனித்துவமிக்கதாகவும், இருக்க வேண்டும் என்ற ஆசை செண்பகத்திற்கு இருந்தது. ஏனென்றால் இதற்கு முன் வருண், ஜான்வியை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துகொண்டு இங்கே வந்து விட்டான். செண்பகத்திற்கு அந்த திருமணத்தில் பெரிதாக விருப்பம் இல்லை என்பதால், அவன் ரிசப்ஷனை கூட பிரம்மாண்டமாக நடத்தவில்லை. தன்னை பொறுத்தவரை இது தான் தன்னுடைய மகனுக்கு தான் பார்த்து செய்யும் முதல் திருமணம் என்று நினைத்து மகிழ்ந்த செண்பகம், தன் வீட்டிற்கு மருமகளாக வரப்போகிறவளுக்கு இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து சிறந்தவைகளையும் கொடுக்க வேண்டும் என்று விரும்பினாள்.

முதலில் ரித்திகாவிற்கான ஆடைகளை தைப்பதற்கு அவளுடைய அளவுகள் தேவைப்படும் என்பதால், ஒரு பெண் ஸ்டைலிஸ்ட்டை அழைத்த செண்பகம் ரித்திகாவை அழைத்து கொண்டு போய் அவளுடைய அளவுகளை நோட் செய்து வருமாறு அனுப்பினாள். அங்கு இருந்த அனைவரையும் ஆச்சரியமான கண்களுடன் பார்த்த ரித்திகா, சிறு கூச்சத்துடன் அந்த ஸ்டைலிஷ்ட் உடன் சென்றாள். ரித்திகாவின் பெற்றோர்களும் அங்கு இருந்தவர்களை வியப்புடன் தான் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அவர்கள் செண்பகத்துடன் சோபாவில் அமர்ந்து இருக்க, அவர்களின் முன்னே பெட்டி பெட்டியாக விலை உயர்ந்த நகைகள், சேலைகள், மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்திற்கு தேவையான ஒரே மாதிரியான தீம் இல் செய்யப்பட்ட குடும்பத்தினருக்கான பிரத்தியோகோக ஆடைகள், இதுவரை சந்தைக்கு வராத வராத டிசைன்கள் அடங்கிய கேட்லாக்குகள் என அனைத்தும் குவிந்த கிடந்தன.

தன்னுடைய அசிஸ்டன்டுகளை அழைத்த செண்பகம், ரித்திகாவின் பெற்றோர்களிடம் சில டிசைன்களை காட்டி அவர்களுக்கு பிடித்தவற்றை தனியாக எடுத்து வைக்குமாறு சொல்லிக் கொண்டு இருந்தாள். அப்போது ஒரு சாதாரண புடவையில் லிப்டில் கீழே வந்து இறங்கிய ஆராதனா, அவர்களை கடந்து சென்றாள். அவளால் அங்கு இருந்த செண்பகத்தையும், வந்து இருப்பவர்களையும், ரித்திகாவின் பெற்றோர்களையும் கவனிக்காமல் அங்கு இருந்து செல்ல முடியவில்லை.

அவளை கவனித்த செண்பகத்திற்கு இன்று ஆராதனாவின் பிறந்த நாள் என்று ஞாபகம் வர எப்படியும் இப்போது அவள் கோயிலுக்கு தான் சென்று கொண்டு இருப்பாள் என்று கணக்கு போட்டவள், “சோபி நீ அவளை பாலோ பண்ணிட்டு போ. எப்படியும் இன்னைக்கு அவ அவளோட ஃபேமிலிய மீட் பண்ணுவான்னு எனக்கு தோணுது. ஒரு வேளை அவ அப்படி மீட் பண்ணினான்ன, அத போட்டோ இல்லன்னா நீ வீடியோ ரெக்கார்ட் பண்ணிட்டு வா. அப்ப தான் வருண் அத நம்புவான்.” என்று அவளுடைய காதுகளில் சொல்ல, “ஓகே மேடம். நான் பாத்துக்குறேன்.” என்று சொன்ன சோபியா, செண்பகம் தனக்கு கொடுத்த வேலையை செய்வதற்காக கிளம்பினாள்.

நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️ இந்த நாவலை இலவசமாக நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் வெப்சைட்டில் படிக்கலாம் ✅)

You may also like

Leave a Comment

About Me

Featured