Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 159

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 159

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 159: இது நல்லதுக்கா இல்ல கெட்டதுக்கா? (பார்ட் 2)

சங்கர்: ஆர்வமாக பிரவீனின் அருகே வந்தவன், “நான் வனிதாவ விட ஒரு சூப்பரான மேட்டர் உங்களுக்காக வச்சிருக்கேன். அது என்னான்னு  உங்களுக்கு தெரிஞ்சா, நீங்க இந்த வனிதாவ எல்லாம் மறந்திடுவீங்க சார்.” என்று உற்சாகமான குரலில் சொன்னான். 😁 😁 😁

 பிரவீன்: சங்கர் சொன்னதை கேட்டு ஆர்வமானவன், “என்ன டா சொல்ற வனிதாவ விட சூப்பரான மேட்டரா..??? யாரு டா அவ.??? ஃப்ரெஷ் பீஸா..?? அப்ராட்ல இருந்து ஏதாவது புதுசா வந்திருக்கா என்ன..???” என்று சந்தோஷமாக கேட்டான். 😍 😁 😁

சங்கர்: அட பாஸ் இது பொண்ண பத்தி எல்லாம் இல்ல. இது வேற விஷயம். ஆனா இது என்னன்னு உங்களுக்கு தெரிஞ்சா, நீங்க மேட்டர் பண்றத விட இத நினைச்சு தான் ரொம்ப சந்தோஷப்படுவீங்க. 

பிரவீன்: இது அதைப் பற்றிய விஷயம் இல்லை என்பதால் சற்று வருத்தம் அடைந்தவன், “அது என்ன கருமம்னு சொல்லி தான் தொலையேன் டா. எப்ப பாத்தாலும் உனக்கு தலையை சுத்தி மூக்கை தொடுறதே பொழப்பா போயிடுச்சு.” என்று சலித்துக் கொண்டே சொன்னான். 😒 

தன்னுடைய பேக் இல் இருந்த ஒரு போட்டோ கவரை எடுத்து பிரவீனின் முன் நீட்டியவன், “இந்த போட்டோவ பாருங்க பாஸ்.” என்றான். அந்த போட்டோவை வாங்கி பார்த்தவுடன் மகிழ்ந்த பிரவீன், “இது யாரு டா புது பீசா..?? இப்ப தானே நான் கேட்டதுக்கு அதெல்லாம் இல்லைன்னு சொன்ன.. அப்ப இவ யாரு..?? சும்மா நச்சுன்னு இருக்கா..?? எங்க இருந்து புடிச்ச இவளை..?? எனக்கு இவள ரொம்ப புடிச்சிருக்கு டா. ப்பா… செம பிகரு டா இவ. இவள போட்டோல பார்க்கும்போதே டெம்ட் ஆகுது. எவ்ளோ செலவானாலும் சரி எனக்கு இவ வேணும்.” என்று அவன் பாட்டிற்கு தன் வாய்க்கு வந்ததை எல்லாம் அந்த போட்டோவில் இருக்கும் பெண்ணை பார்த்து சொல்லிக் கொண்டு இருந்தான்.

சங்கர்: “ஐயோ பாஸ் கொஞ்ச நேரம் சும்மா இருங்க. நீங்க இப்படி சொன்னது மட்டும் விஷ்வாவுக்கு தெரிஞ்சதுன்னு வைங்க.. நம்ப ரெண்டு பேரையும்  கொன்னு போட்டுட்டு தான் அவன் அடுத்த வேலையவே பாப்பான்.” என்று பதட்டமான குரலில் சொன்னவன், இப்போதே விஷ்வா தன்னையும் பிரவீனையும் அவர்களுடைய கண்களையும், கைகளையும், கருப்புத் துணியால் கட்டி மண்டியிட்டு தரையில் அமர  வைத்து சுட்டுக் கொள்வதைப் போல் கற்பனை செய்து பார்த்தான். அந்த கற்பனையில் கூட அவனுக்கு துப்பாக்கி சுடும் சத்தம் தெளிவாக கேட்க, அதனால் உண்மையாகவே அவன் பயந்துவிட்டான். 😟

 பிரவீன்: “நான் எவளையோ பாத்தா, அவனுக்கு ஏன் டா எரியப் போது..?? அவன் என்ன இந்த உலகத்தில இருக்கிற எல்லா பொண்ணுங்களுக்கும் பாடி கார்ட் வேலையா பாக்குறான்..???” என்று நக்கலாக சிரித்துக் கொண்டே கேட்டான். 😂 😂 😂

சங்கர்: “மத்த பொண்ணுங்களுக்கு எப்படின்னு எல்லாம் தெரியல சார். ஆனா இந்த பொண்ணுக்கு கண்டிப்பா அவர் பாடி கார்ட் வேலை பாத்தாலும் கூட பாப்பாரு.” என்று ஒரு உள் அர்த்தத்துடன் சொன்னான். 

பிரவீன்: ஓ..!! அப்படி என்ன இவ அவனுக்கு அவ்ளோ ஸ்பெசல்..??

 சங்கர்: “கண்டிப்பா ஸ்பெஷல் தான் சார். இந்த பொண்ண தான் அவர் கல்யாணம் முடிக்க போறாராம். மானசா சொல்லிக்கிட்டே இருப்பாள்ல்ல ஸ்கூல்ல ஒருத்தி எனக்கு இடைஞ்சலா இருக்கான்னு. அவ தான் இவ. பேருு ராகவி. சித்தார்த்துக்காக இவள விஷ்வா கல்யாணம் பண்ணிக்க போறான். இதுல இன்னொரு இம்பார்டெண்ட் ஆன விஷயம் இருக்கு சார்.” என்று சொல்லி புதிர் போட்டான். 

பிரவீன்: “அப்படி என்னடா இம்பார்ட்டண்டான விஷயம்..??? என்ன இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்களா..???” என்று எரிச்சலான குரலில் கேட்டான்.

சங்கர்: “நோ சார். அந்த ராகவிய தான் அவ கூட வேலை பாக்கிற ஒரு டான்ஸ்சர் பையன் லவ் பண்றானாம். அந்த பொண்ணுக்கு இந்த பையன புடிக்கல போல. அதனால நேரா அவன் விஷ்வா ஓட ஆஃபீஸ்க்கு போய் எனக்கு அவளை விட்டுக் குடுத்துருங்கன்னு கேட்டு இருக்கான். விஷ்வா அவன அதெல்லாம் முடியாதுன்னு சொல்லி தலையில தட்டி அனுப்பிட்டான் போல.. அவன் கிளம்பும்போது சோகமா போனான்னு நம்ம ரிசப்ஷன்ல இருக்குற ஆளு சொன்னா. 

நம்ப அந்த பையன் கௌத்தம கரெக்டா யூஸ் பண்ணிக்கிட்டா, அவனை விஷ்வாவுக்கும் ராகவிக்கும் எதிரா நம்ம திருப்பி விடலாம். முடிஞ்சா அவன வெச்சே இந்த கல்யாணத்தையும் நிறுத்திடலாம் சார்.” என்று தான் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை கண்டுபிடித்து விட்டதை போல உற்சாகமான குரலில் வாயெல்லாம் பல்லாக சிரித்த முகத்துடன் அவனிடம் விவரித்தான். 😁 😁 😁

பிரவீன்: அவன் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்தவன், “சூப்பர் டா. இப்பவே அவனுக்கு கால் பண்ணி.. நான் அவன மீட் பண்ண வர சொன்னேன்னு சொல்லு. அவன எப்படி கரெக்டா நமக்கு தகுந்த மாதிரி யூஸ் பண்ணிக்கிறதுன்னு எனக்கு தெரியும்.” என்றவன் தன் கையில் இருந்த ராகவியின் புகைப்படத்தை பாத்து, “ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள் இவ கூட எப்படியாச்சும் ஒரு நைட்டாவது ஸ்பென்ட் பண்ணனும் டா. இவள மாதிரி ஹோம்லி கேர்ள்ஸ் எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். பாப்போம் நான் ஃபர்ஸ்டா.. இல்ல அந்த விஷ்வா ஃபர்ஸ்ட்டான்னு.” என்று வில்லத்தனமாக சத்தமாக சிரித்தபடி சொன்னான். 😂 😂 😂

பிரவீனை உற்சாகப்படுத்த நினைத்த சங்கர், “எனக்கு என்னமோ நீங்க தான் ஃபர்ஸ்டா இருப்பீங்கன்னு தோணுது பாஸ். அந்த விஷ்வா அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர  மாட்டான். அந்த பொண்ணு ஒரு தடவ உங்கள பாத்தா போதும், அதுக்கப்புறம் அவன விட்டுட்டு உங்க கிட்ட ஓடி வந்துடுவா.” என்று இரட்டை அர்த்தத்தில் சொல்லி, அவனும் பிரவீன் உடன் சேர்ந்து சிரித்தான். 😂 😂😂 😂

பிரவீன்: அவன் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்தவன், “அதில் நான் சக்கரவர்த்தியடா..!!!” என்று நக்கலாக பாடி கொண்டே சிரித்தான். 😂 😂 😂

சில நிமிடங்களுக்கு பின்…

கௌத்தமின் வீட்டில்…

ஷங்கரிடம் இருந்து தனக்கு வந்த காலை பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தான் கௌத்தம். பிரவீனை பற்றி அவன் நன்றாக அறிந்து வைத்து இருந்ததால், கண்டிப்பாக எந்த ஒரு நல்ல காரியத்திற்காகவும் அவன் தன்னை அழைத்து இருக்க மாட்டான் என்று அவனுக்கு நன்றாகாக தெரியும். இருப்பினும், அவன் ராகவியை பேச வேண்டும் என்று சொல்லி தன்னை அழைத்ததால்; போகலாமா வேண்டாமா என்று மாற்றி மாற்றி யோசித்துக் கொண்டு இருந்தான் கௌத்தம். 

இறுதியில், “என்ன ஆனாலும் சரி. இது நல்லதுக்கா, இல்ல கெட்டதுக்கான்னு தெரியல. இருந்தாலும், அவன் என்ன தான் சொல்றான்னு போய் கேட்டுட்டு வந்துருவோம். அவன் ராகவிய பத்தி என்கிட்ட பேசணும்னு சொல்றானா, கண்டிப்பா விஷ்வா சார் ராகவிய தான் கல்யாணம் பண்ணிக்க போறாருன்னு அவனுக்கு தெரிஞ்சு இருக்கும். சோ, பிரவினால ராகவிக்கு ஆபத்து இருக்கு. அவளுக்காகவாவது நம்ம இவனை போய் பார்த்து தான் ஆகணும்.” என்று நினைத்த கௌத்தம் பிரவீனை பார்ப்பதற்காக அவன் சொன்ன இடத்திற்கு கிளம்பி சென்றான். 

நாராயணன் குரூப்ஸ் அலுவலக கட்டிடத்தில்…. 

விடிவதற்குள் மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்த சிவா, சீக்கிரமாக கிளம்பி இன்று ஆபீஸிற்கும் வந்து விட்டான். அவனுடைய மனம் சுக்குநூறாக உடைந்து இருந்தாலும், வெளியில் அவன் தன்னை நார்மலாக காட்டிக் கொள்ள முயன்று கொண்டு இருந்தான். அப்போது அவனுடைய கேபினின் கதவை   தட்டி விட்டு உள்ளே வந்த சந்தோஷ், “தேங்க்யூ சார். இன்னிக்கி உங்களால தான் எனக்கு நான் ஆசைப்பட்ட மாதிரியே ஒரு நல்ல வேலை கிடைச்சிருக்கு.” என்று அவனுக்கு மனதார நன்றி சொன்னான். 

சிவா: “நீங்க எனக்கு தேங்க்ஸ் சொல்ல தேவை இல்லை சந்தோஷ்.  உங்களுக்கு திறமை இருக்கு. அதனால தான் உங்களுக்கு இந்த வேலை கிடைச்சு இருக்கு. நீங்க யாருக்காவது தேங்க்ஸ் சொல்லணும்னு நினைச்சா, விஷ்ணு சாருக்கு சொல்லுங்க. அவர் தான் உங்களை ரெக்கமென்ட் பண்ணாரு. நீங்க இப்போல இருந்தே உங்க வொர்க் ஐ ஸ்டார்ட் பண்ணுங்க. ஆல் தி பெஸ்ட்.” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்.

– நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured