அத்தியாயம் 154: தூக்குங்கடா என் தங்கத்தை (பார்ட் 2)
நாராயணன் குரூப்ஸ் அலுவலகத்தில்…
ஹரியை சமாதானப்படுத்திவிட்டு தனியாக தன்னுடைய அறைக்கு வந்த தர்ஷன், சோபாவில் சோகமாக அமர்ந்தான். 😔 😖 ஹரி ஆராதனாவை காதலிப்பதாலும், விஷ்வாவின் துணை அவர்களுக்கு இருப்பதாலும், இந்த கல்யாணம் எப்படியும் நடக்காது என்ற நம்பிக்கையில் தான் அவன் தர்ஷினியின் மீது ஆசையை வளர்த்துக் கொண்டான். ஆனால் இப்போது நடப்பவை அனைத்தையும் பார்க்கும்போது ஹரிக்கும் தர்ஷினிக்கும் தான் திருமணம் நடக்கும் என்று அவனுக்கு தோன்ற, அந்த நினைப்பு கூட அவனுக்கு பெரிய மன அழுத்தத்தை கொடுத்தது. 💔 🥀
தன்னுடைய மொபைல் போனை எடுத்து தர்ஷினியும் அவனும் whatsapp -ல் பேசிய சேட் ஐ எடுத்து பார்த்த தர்ஷன், கலங்கிய கண்களுடன் டிபியில் இருந்த தர்ஷினியின் முகத்தைை பார்த்தான். “என்ன இருந்தாலும், உன்ன கல்யாணம் பண்ணிக்கிற தகுதி எனக்கு இருக்கா தர்ஷினி..??? ராகவி மேடமையே வேலைக்காரின்னு சொல்லி அவங்கள விஷ்வா சாருக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டாம்னு உங்க அம்மா சொன்னாங்க. இதுல அவங்க எப்படி உன்னை எனக்கு கட்டித்ருவாங்க..???
உங்க அம்மா கிட்ட போய் பொண்ணு கேட்கிறதெல்லாம் இரண்டாவது விஷயம். குறைந்தபட்சம் என்னோட காதலயாவது நான் உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சா, அதுக்கு கூட எனக்கு தகுதிி இருக்கான்னு தெரியலையே…!!!! முதல்ல இதுக்கு மேல நான் எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு உன்கிட்ட பேசுவேன்..??? எது எப்படி இருந்தாலும் என்ன விட ஹரி சார் எல்லா விதத்திலும் உனக்கு பெட்டர் சாய்ஸ் தான். ஒரு வேளை இந்த கல்யாணம் நடந்தா, நீயும் அவரும் சந்தோஷமா வாழனும்னு வேண்டிக்கிறத தவிர என்னால வேற எதையும் செய்ய முடியாது.” என்று மொபைல் ஸ்க்ரீனில் தெரிந்த தர்ஷினியின் முகத்தை பார்த்து மெதுவான குரலில் சொன்ன தர்ஷன் தன்னுடைய மொபைல் போனை அவன் மார்போடு அணைத்து கொண்டு சத்தம் இன்றி அழுதான். 😭 😭 😭
சில மணி நேரத்திற்கு பின்…
நாராயணன் பேலஸுல்…
ஆராதனாவிடமும் தர்ஷினி இடமும் பேச வேண்டும் என்று நினைத்த ஹரி, இன்று சீக்கிரமாகவே தன்னுடைய வீட்டிற்கு வந்து விட்டான். முதலில் தர்ஷினி இடம் பேசி விட்டால் அவளிடம் இருந்து தனக்கு ஏதேனும் ஒரு சாதகமான பதில் கிடைத்தால், அதை வைத்து ஆராதனாவை சமாதானப்படுத்தி விடலாம் என்று நினைத்த ஹரி தர்ஷனையின் அறைக்கு சென்றான்.
தர்ஷினியின் அறையில்…
இந்த ஊர் உலகமே நாராயணன் குடும்பத்தினர் வெளியிட்ட செய்தியை பார்த்து இப்போது அவளை ஹரியின் உண்மையான காதலி என்று நினைத்துக் கொண்டு இருக்கலாம். ஆனால் அனைத்து உண்மைகளையும் அறிந்து இருந்த தர்ஷினியால் இந்த செய்தியை நினைத்து சந்தோஷப்பட முடியவில்லை. ஒரு புறம் ஆராதனாவின் வாழ்க்கையை அவளிடம் இருந்து தான் தட்டி பறித்துக் கொள்கிறோமோ என்ற குற்ற உணர்ச்சி அவளுள் எழும்ப, இன்னொரு பக்கம் தன் மீது விருப்பம் இல்லாதவரை திருமணம் செய்து கொண்டால் தன்னுடைய வாழ்க்கை எப்படி நன்றாக இருக்கும் என்ற பயம் வேறு அவளை அதிகம் யோசிக்க வைக்க, தர்ஷனின் சிரித்த முகம் வேறு அவளுடைய கண்களின் முன்னே வந்து அவளை மிகவும் தொந்தரவு செய்து கொண்டு இருந்தது. 😒💔
இது போன்ற கலவையான உணர்ச்சிகளின் தாக்குதலால் குழப்பத்தில் இருந்தாள் தர்ஷினி. 🙄 அவளுடைய அறையின் கதவு லேசாக திறந்து தான் இருந்தது. இருப்பினும் அதை தட்டி விட்டு உள்ளே வந்த ஹரி, “நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் தர்ஷினி.” என்று தயங்கி தயங்கி சொன்னான்.
தர்ஷினி: மன விரக்தியுடன் அவனைப் பார்த்தவள், “என்ன மாமா உங்களுக்கு என்ன பிடிக்கல. அதனால உங்களுக்கு இந்த கல்யாணம் வேண்டாம்ன்னு என்கிட்ட சொல்ல வந்தீங்களா…???” என்று சலிப்பான குரலில் கேட்டாள். 😒
ஹரி: அவள் தன்னிடம் இதைப் பற்றி பட்டென்று கேட்டு விடுவாள் என்று எதிர்பார்த்து இருக்காதவன், “சேச்சே…!! அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல மா. நான் சும்மா பொதுவா தான் உன்கிட்ட பேச வந்தேன்.” என்று சொல்லி சமாளித்தான்.
தர்ஷினி: “பொய் சொல்லாதீங்க மாமா. உண்மை என்னான்னு எனக்கு மட்டும் தெரியாதா என்ன…??? பரவால்ல நீங்க சொல்ல வந்தத தைரியமா சொல்லுங்க. நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். புதுசா நீங்க மட்டும் என்ன சொல்லிட போறீங்க…!!!
ஜான்வி அக்காவ விஷ்வா மாமா கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி என்கிட்ட என்ன சொன்னாரோ அத தானே இப்ப நீங்களும் சொல்ல போறீங்க..??? என்ன கொஞ்சம் வேணா அத வேற மாதிரி சொல்லுவீங்க… அவ்ளோ தானே…!!! இது எனக்கு ஒன்னும் புதுசு இல்லைங்க மாமா. இதெல்லாம் எனக்கு பழகிருச்சு. ஆமா நான் படிக்காத தற்குறி தான். எனக்கு படிச்சவங்கள மாதிரி ஸ்டைலா பேசவும் தெரியாது, டிரஸ் பண்ணிக்கவும், தெரியாது.
இப்படி இருந்தா இந்த பைத்தியக்காரிய யாருக்கு தான் பிடிக்கும்…??? உங்களுக்கு மட்டும் என்ன பிடிக்கும்ன்னு எல்லாம் நான் ஆசைப்படல. ஏன்னா உண்மை என்னான்னு எனக்கே தெரியும். என்னை யாருக்குமே பிடிக்காது. யாரும் என்னோட மனச பத்தி கொஞ்சம் கூட யோசிச்சு பாக்கவே மாட்டாங்க. எல்லார் சொல்றதையும் நான் கேட்கணும்னு எதிர்பாக்கிறாங்க. ஆனா என் மனசுல நான் என்ன நினைக்கிறேன், எனக்கு என்ன வேணும்னு என்கிட்ட ஒக்காந்து பேசி அதை கேக்குறதுக்கு தான் யாருமே இல்ல.” என்று விரத்தியிலும் மனவேதனையிலும் கலங்கிய கண்களுடன் தன் மனதில் இருந்தவற்றை அனைத்தையும் படபடவென்று அவனிடம் கொட்டி தீர்த்து விட்டாள். இப்போது தான் அவள் தன்னுடைய மனம் சற்று லேசானதை போல் உணர்ந்தாள். 😭 💔 🥀
ஹரி: ஏற்கனவே கனத்த இதயத்துடன் இங்கே வந்தவனுக்கு, தர்ஷினி பேசியதை கேட்டவுடன் அவனுடைய மனதின் பாரம் கூடிவிட்டது. அவனால் தர்ஷினியின் மன வேதனையை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது அதனால் தன்னுடைய மனதில் இருப்பதை அவளிடம் எப்படி சொல்வது என்ற தயக்கம் அவனுக்கு இருந்தாலும், அதை சொல்லியே தீர வேண்டிய கட்டாயத்தில் அவன் இருந்ததால் அவளிடம் பேசத் தொடங்கினான்.
“எனக்கு உன்னோட மைண்ட் செட் புரியுது தர்ஷினி. நான் உன்னை கம்மியாவும், ஆராதனா உன்ன விட பெட்டர்ன்னு நெனச்சு எல்லாம் அவள லவ் பண்ணல. உன்கிட்ட எந்த குறையும் இல்ல. என்கிட்ட தான் நிறைய குறை இருக்கு. சில சமயம் எனக்கு யாருடைய அன்புக்கும் தகுதி இல்லைன்னு எனக்கே தோணும்.
ஒரு வேளை ஆராதனா மாதிரி நீயும் இந்த ஊரிலேயே இருந்து இருந்தா, நான் உன் கூட லவ் பண்ண ஒரு சான்ஸ் இருந்திருக்கும். நீ ரொம்ப நல்ல பொண்ணு தர்ஷினி. ஆல்ரெடி நான் ஆராதனாவ ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். இப்பவும் அவளை கஷ்டப்படுத்திகிட்டு தான் இருக்கேன். இப்ப பாரு உன்னையும் கஷ்டப்படுத்த ஆரம்பிச்சுட்டேன்.
எனக்காக இல்லைன்னாலும், உனக்காகவாவது இது வேணாம் தர்ஷினி. நான் எப்பயுமே செல்பிஸ் ஆ தான் யோசிச்சி இருக்கேன். என்னால யாருக்கும் எந்த சந்தோஷமும் கிடைத்ததில்லை. உன்ன கல்யாணம் பண்ணாலும், என்னால உன் கூட சேர்ந்து வாழ முடியாது. ஆராதனாவுக்கு துரோகம் பண்ணிட்டேன்ற குற்ற உணர்ச்சியிலயே நான் செத்துருவேன். இந்த கல்யாணத்தால நீ, நான், ஆராதனா, நம்ப மூணு பேரோட லைஃபுமே நாசமா போய்டும். நானும் விஷ்வாவும் அம்மா கிட்ட இத பத்தி பேச முடியாத சூழ்நிலையில இருக்கோம்.
ஆனா நீ நெனச்சா, அம்மாகிட்ட பேசி இந்த கல்யாணத்தை நிறுத்த முடியும். நீ சொன்னா எங்க அம்மாவும் சரி, உங்க அம்மாவும் சரி, கண்டிப்பா கேட்பாங்க. ப்ளீஸ் தர்ஷினி அவங்க கிட்ட பேசி இந்த கல்யாணத்தை நிறுத்து அதான் எல்லாருக்குமே நல்லது.” என்று கலங்கிய கண்களுடன் கெஞ்சும் தோரணையில் அவளிடம் சொன்னான். 🥺
தர்ஷினி: அவன் சொன்னதைக் கேட்டு விரக்தி புன்னகை ஒன்றை சிந்தியவள், “இந்த கல்யாணத்துல எனக்கு சம்மதமான்னு கேட்டா எல்லாத்தையும் முடிவு பண்றாங்க இங்க..??? அப்போ இது வேண்டாம்னு மட்டும் நான் ஏன் போய் சொல்லணும்..??? ஒரு வேளை நான் சொன்னா மட்டும் அத கேப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்களா மாமா…??? சத்தியமா அப்படி எல்லாம் நடக்காது. நானே போய் இந்த கல்யாணம் எனக்கு வேணாம்னு சொன்னாலும், என்கிட்ட எதையாவது சொல்லி என்னை சமாதானப்படுத்த தான் நினைப்பாங்களே தவிர என்னோட பீலிங்ஸ் என்னான்னு கேட்டு அதை யாரும் மதிக்கப்போறதில்ல.
அப்புறம் நான் எதுக்கு பேசணும்…??? நீங்க அத்தை கிட்ட பேசி சண்டை போட்டா அவங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போயிடும்ன்னு பயப்படுறீங்க. நான் போய் அவங்க கிட்ட பேசினாலும், அதே தானே நடக்கும்…??? நான் உங்களுக்காக பேச போய், அவங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்னால என்னையே மன்னிக்க முடியாது. ப்ளீஸ் என்ன விட்ருங்க மாமா. ஏற்கனவே நான் ரொம்ப நொந்து போய் இருக்கேன். ஒரு வேளை நீங்க சொன்ன மாதிரி இந்த கல்யாணம் நடந்தா, என்னோட லைஃப் நாசமா போயிரும்னா போனா போகட்டும். என்னால அதுக்கு எதுவும் பண்ண முடியாது. உங்களால் முடிஞ்சா, ஏதாவது பண்ணுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும். ப்ளீஸ் இங்க இருந்து கிளம்புங்க. நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்னு நினைக்கிறேன்.” என்றவள், கண்ணீர் நிறைந்த கண்களுடன் கையெடுத்து கும்பிட்டு அவனிடம் சொன்னாள். 🥺 😢 🙏
தர்ஷினி இவ்வளவு பேசுவாள் என்று சத்தியமாக ஹரி எதிர்பார்த்து இருக்கவில்லை. அதனால் வாயடைத்து போய் நின்றவன் கனத்த இதயத்துடன், அவளுடைய அறையில் இருந்து வெளியே வந்தான். 😐 💔 🥀
சிவாவின் வீட்டில்…
விஷ்வாவிடம் தனக்கு ஒரு முக்கியமான வேலை இருப்பதாகவும், அதை முடிக்க தனக்கு ஒரு நாள் லீவ் வேண்டும் என்று சொல்லிவிட்டு தன்னுடைய வீட்டிற்கு வந்த சிவா, தனக்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு அவனுடைய காரை ஸ்டார்ட் செய்து திவ்யாவின் ஊரை நோக்கி பயணித்தான். ஆராதனா அவனிடம் திவ்யாவின் வீட்டின் அட்ரஸை கொடுத்திருந்தாலும் அந்த இடத்தில் திவ்யா கண்டிப்பாக இருப்பாளா என்ற சந்தேகம் அவனுள் இருந்து கொண்டே இருக்க, “கடவுளே அவ அங்க தான் இருக்கணும். நான் அங்க போற வரைக்கும் நீ அவளை பத்திரமா பாத்துக்கோ.” என்று நினைத்து வேண்டிக் கொண்டவன் வேகமாக தன்னுடைய காரில் சீறிப்பாய்ந்தான்.
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)