Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 152

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 152

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 152: நான் நாலு பொண்டாட்டி கூட கட்டுவேன் (பார்ட் 2)

“சை..!!!  இந்த நாய் கிட்ட இருந்து இந்த நாலு வார்த்தைய வாங்குறதுக்கு இவன் போடுற மொக்கை எல்லாம் கேட்க வேண்டியதா இருக்கு.” என்று தனக்குள் நினைத்து புலம்பிய ஆராதனா ஒவ்வொரு ஃபர்ஸ்ட் இயர் கிளாஸ் ரூம் ஆக அங்கே பிரேம் இருக்கிறானா என்று தேடி கொண்டே வந்தாள். அப்போது முதலாம் ஆண்டு பி. பி. ஏ. வகுப்பறைக்குள் அவன் சென்று கொண்டு இருப்பதை கவனித்த பிராத்தனா, அவளும் வேகமாக அந்த வகுப்பறைக்குள் வந்தவள், “மே ஐ கம் இன்..???” என்று கேட்டாள். 

அப்போது கையில் ஒரு நோட் பட் மற்றும் பேனாவுடன் நின்று கொண்டு இருந்த பிரேம் அவளை திரும்பிப் பார்த்து, “எஸ் கம் இன்.” என்றான். தான் அவனுடைய குரலை கேட்ட பிராத்தனா, அப்படியே சிலையாய் சமைந்து நின்று விட்டாள். அவர்கள் இருவருடைய கண்களும் மோதி கொண்டது. 😍 

 உன் விழிகளில்
விழுந்து நான் எழுகிறேன். 😍

எழுந்தும் ஏன் மறுபடி
விழுகிறேன்…???

உன் பாா்வையில்
தோன்றிட அலைகிறேன்.

அலைந்தும்
ஏன் மறுபடி தொலைகிறேன்..?? 🥰

ஓா் நொடியும் உன்னை நான் பிாிந்தால்…

போா்களத்தை உணா்வேன் உயிாில்…. ❤️

என் ஆசை எல்லாம் சோ்த்து ஓா்
கடிதம் வரைகிறேன் அன்பே…. ❤️ 💫 🌟 ✨

தூரத்தில் தோன்றிடும்
மேகத்தை போலவே…

நான்உன்னை பாா்க்கிறேன் அன்பே… 😍 ❤️

சாரலாய் ஓா் முறை நீ என்னை
தீண்டினாய். உனக்கது தொிந்த
அன்பே…???

என் மனம் கானலின் நீரென ஆகுமா கைகளில் சேருமா..?? 

அன்பே நேசிக்கும் காலம் தான்
வீணெண போகுமா..??

நினைவுகள்
சோ்க்கிறேன் இங்கே.

ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே விழுகிறேன் அன்பே… 😍 ❤️ 

தான் அவளை உள்ளே வரும்படி சொல்லியும் அவள் வெளியே நின்று கொண்டு தன்னை பார்த்துக் கொண்டு இருந்ததால், “ஹலோ..!!! நான் தான் உங்களை உள்ள வர சொன்னேன்ல, அப்புறம் ஏன் வெளியிலயே நின்னுகிட்டு என்னையவே பாத்துட்டுு இருக்கீங்க..???” என்று அவள் முன் தன்னுடைய ஒரு கையை அசைத்த படி கேட்டான் பிரேம். அவனுடைய குரலில் சகஜ நிலைக்கு திரும்பிய பிராத்தனா, “ஓ சாரி. நான் எதையோ யோசிச்சிட்டு அப்படி நின்னுட்டேன். ஐ அம் பிராத்தனா. செகண்ட் பி. பி. ஏ. நானும் ஸ்போர்ட்ஸ் கிளப்ல ஜாயின் பண்ணனும். அதான் உங்கள பாத்து நேம்குடுத்துட்டு போலாம்னு வந்தேன்.” என்று தயங்கி தயங்கி சொன்னாள். 

தன் கையில் வைத்து இருந்தால் நோட் பேடில் அவளுடைய பெயரை நோட் செய்து கொண்ட பிரேம், “ஓகே உங்க பேர் ஐ எழுதிட்டேன். நாளைக்கு மார்னிங் 11:00 ஒ கிளாக் நம்ப கிளப் மீட்டிங் இருக்கு. மறக்காம வந்துருங்க.” என்று அவளைப் பார்த்து கேஷுவலாக சொன்னவன், மீண்டும் அந்த வகுப்பில் இருந்தவர்களின் பெயரைக் கேட்டு எழுத தொடங்கி விட்டான். எப்படியோ முதல் முறை தான் வெற்றிகரமாக அவனிடம் பேசிவிட்ட சந்தோஷத்தில் பிராத்தனா, அங்கு இருந்து துள்ளி குதித்து தன்னுடைய வகுப்பறைக்கு சென்றாள். 

பிராத்தனா அந்த வகுப்பறைக்குள் இருந்த சூர்யாவை கவனிக்கவில்லை. ஆனால் பிராத்தனா இங்கு வந்ததில் இருந்து சென்றது வரை அவளையே தான் கவனித்துக் கொண்டு இருந்தான் சூர்யா. சிறுவயதில் இருந்து பிராத்தனாவை பார்த்து பழகிய சூர்யாவிற்கு, அவளுடைய ஒவ்வொரு அசைவுகளும் நன்றாக தெரியும்.

அதனால் பிரமிடம் பேசும்போது அவளுடைய முகத்தில் தோன்றிய வித்தியாசமான பாவனைகளை சரியாக கண்டு கொண்ட சூர்யா, “ஒரு வேளை அவ இவன லவ் பண்றாளோ..??? சேச்சா அப்படிலாம் இருக்காது. நம்ம தான் தேவை இல்லாம யோசிக்கிறோம். எது எப்படியோ அவ இந்த ஸ்போர்ட்ஸ் கிளப்ல சேந்து இருக்கா. அதனால நம்மளும் சேந்துப்போம். அப்ப தான் அடிக்கடி அவளை பாக்குறதுக்கு சான்ஸ் கிடைக்கும்.” என்று நினைத்த சூர்யா தன்னுடைய பெயரையும் பிரேமிடம் சொல்லி ரெஜிஸ்டர் செய்து கொண்டான்.

சூர்யா அந்த கிளப்பில் சேர்ந்ததால் தானும் சேர்ந்து கொண்ட நிவேதா சூர்யாவை ஓரக்கண்ணால் பார்த்தவள், “என்ன நீ அவளுக்காக தானே அந்த கிளப்ல ஜாயின் பண்ண கரெக்டா..???” என்று கேட்டவள், “ஆனா நான் உனக்காக தான் பா சூர்யா ஜாயின் பண்ணேன்.” என்று சிறு புன்னகையுடன் சொன்னாள். 😁 😁 😁 “நம்ப பிராத்தனாவுக்காக அந்த கிளப்ல ஜாயின் பண்ணதுக்கு ஒரு ரீசன் இருக்கு. ஆனா இவ எதுக்கு நமக்காக அந்த கிளப்ல ஜாயின் பண்றேன்னு சொல்றா..??” என்று நினைத்து தனக்குள் குழம்பிய சூர்யா அவளிடம் எதுவும் அதைப்பற்றி கேட்கவில்லை. 🤔 🙄

பிரவீன் வீட்டில்….

தன்னுடைய கம்பெனியை பற்றி தொடர்ந்து வரும்   செய்திகளால் கடுப்பான பிரவீன், ஆபீஸில் இருக்க பிடிக்காமல் தன்னுடைய வீட்டிற்கு வந்து கண்ணுமுன்னு தெரியாமல் குடிக்க தொடங்கினான். அந்த சமயம் சிவாவால் பகிரப்பட்ட விஷ்வா ராகவியின் திருமண செய்தியும், ஹரியின் காதலியின் புகைப்படமும், பகிரப்பட்டதை பார்த்த சங்கர் பிரவீனுக்கு கால் செய்து அதைப்பற்றிி சொல்ல, அதை கேட்ட அவனுக்கு வயிறு வாய் எல்லாம் பற்றி கொண்டு எறிந்தது. 

அதனால் குடிபோதையில், “என்ன அவனுங்க மட்டும் தான் கல்யாணம் பண்ணுவாங்களா..??? எனக்கும் தானே கல்யாணம் நடக்க போகுது. நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டு, புள்ள குட்டி பெத்துக்கிட்டு, விதவிதமா போட்டோ எடுத்து நியூஸ் சேனல் -க்கு அனுப்பி சீன் போடுவேன் டா. டேய் சங்கர் நீயும் நம்ம கம்பெனி ஆபீஸியல் ட்விட்டர் அக்கவுண்ட்ல இருந்து ஒரு ட்வீட் போடுடா. என் லக்ஷு டார்லிங் போட்டோவ போட்டு விஷ்வாவுக்கு நிச்சயம்னு சொன்னான்ல, அதே தேதியில எனக்கு கல்யாணம்னுு போடு டா. அவனுக்கு முன்னாடி பொறந்தவன் நான் தான். ஏற்கனவே அவன் என்ன ஒரு தடவ கல்யாணம் பண்ணி ஓவர் டேக் பண்ணிட்டான். இந்த தடவை நான் தான் அவனுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணுவேன். அவன் ரெண்டு பொண்டாட்டி கட்டினா, நான் நாலு பொண்டாட்டி கட்டுவண்டா. என்ன சுத்தி பல பொண்டாட்டி இருக்கிற மத்தவ எல்லாம் வாப்பாட்டின்னு ஜாலியா வாழுவேன் டா.” என்று போதையில் உளறி தள்ளினான்.

என்ன தான் அவன் போதையில் சொல்லி இருந்தாலும், தன்னுடைய பாஸ் சொல்வதை செய்ய வேண்டிய கடமை தனக்கு இருப்பதால் அதை அப்படியே செய்தான் சங்கர். அந்தச் ட்வீட் ஐ பார்த்த லக்ஷனாவின் தோழிகள் அனைவரும் அவளுக்கு கால் செய்து இந்த திருமணத்தைப் பற்றி கேட்க தொடங்கி விட்டனர். அதனால் கடுப்பான லக்ஷனா தன்னுடைய மொபைல் போனை ஆப் செய்துவிட்டு தன்னுடைய அறையின் கதவை அடித்து சாற்றி தாலிட்டவள், தன்னுடைய பெட்டில் இருந்த பெரிய சைஸ் கரடி பொம்மையை கட்டிப்பிடித்துக் கொண்டு சத்தம் இன்றி அதை தொடங்கினாள். 😭 😭 😭 😭 தனக்கு மட்டும் ஏன் இப்படி அனைத்தும் தவறாக நடக்கிறது என்ற ஒரு எண்ணம் மட்டுமே அவளுடைய மனதில் அப்போது ஓடிக் கொண்டு இருந்தது.

நாராயணன் பேலஸில்…. 

செண்பகத்துடன் விஷ்வாவின் அறைக்கு வந்த சிவா, தர்ஷினியின் உதவியுடன் விஷ்வாவின் அறையில் இருந்த ஜான்வியின் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்து எட்டாவது மாடியில் ஸ்டோர் ரூம் -க்கு அருகே உள்ள ஒரு அறையில் வைத்துவிட்டு விஷ்வா சொன்னது போல அந்த அறையின் ஸ்பேர் கீயை தன்னிடம் பத்திரப்படுத்தி வைத்து கொண்டவன் அதை விஷ்வாவிடம் பின்பு மறக்காமல் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்் கொண்டான். 

ஆராதனாவின் அறையில்…

தர்ஷினி தான் ஹரியின் காதலி என்று இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கும் செய்தியை பார்த்து மனம் உடைந்து போன ஆராதனா, தன்னுடைய மொபைல் போனை தூக்கி சுவரில் அடித்து உடைத்தவள், தரையில் அமர்ந்து தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டு அளத்தொடங்கினாள். இப்போது அவளுடைய உடம்பில் இருக்கும் உயிர் கூட அவளுக்கு மிகவும் பாரமாக தோன்றியது. 😭 😭 😭 💔

இருப்பினும் சென்ற முறை போல தான் இந்த முறை ஏதேனும் செய்து விஷ்வாவிற்கு அவ பெயரையும், ஹரிக்கு மன வேதனையையும், கொடுத்து விடக்கூடாது என்று நினைத்தவள்; எதுவாக இருந்தாலும் அவனை நேரில் பார்த்து பேசி கொள்ளலாம் என்று நினைத்து சற்று அமைதி அடைந்தாள். இதற்கிடையில் அவளுடைய அண்ணனின் திருமணத்தைப் பற்றி வந்த செய்தியை அவள் அறிந்திருக்கவில்லை. 

இதுபோன்ற அறிவிப்பு விஷ்வாவையும், ஹரியையும், மீறி கண்டிப்பாக வந்திருக்க முடியாது என்று அவளுக்கு நன்கு தெரிந்திருந்தாலும், இன்னும் அவர்கள் இருவரின் மீதும் அவளுடைய மனதில் ஒரு சிறு நம்பிக்கை ஒட்டிக் கொண்டு இருந்தது. அதனால் அவர்களுடைய இறுதி முடிவை அவர்களுடைய வாயால் கேட்டு தெரிந்துகொள்ள அவர்களுடைய வருகைக்காக அவள் காத்திருந்தாள்.

– நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured