அத்தியாயம் 148: திருமண தேதி (பார்ட் 1)
பிராத்தனாவின் கல்லூரி வளாகத்தில்…..
இப்போது தான் செமஸ்டர் தேர்வுகள் முடிந்து இருந்ததால், மாணவர்கள் அனைவரும் தங்களுடைய அடுத்த ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றனர். தன்னுடைய அம்மாவுடன் கல்லூரிக்கு வந்த சூர்யா, அட்மிஷன் ப்ரோசீஜர்கள் அனைத்தையும் முடித்துவிட்டு தான் செல்ல வேண்டிய வகுப்பறை எங்கே இருக்கிறது என்று ஆபீஸில் கேட்டுவிட்டு அந்த அறைக்குு வந்தான். அவன் ஆசைப்பட்டது போலவே அவனுக்கு பி. பி. ஏ. படிப்பதற்கான சீட் கிடைத்து விட்டது. அவனுடைய கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை, அவன் அந்த வகுப்பறைக்குள் செல்லும்போது அங்கே யாரும் இல்லை.
அதனால் அவன் குழப்பத்துடன் அந்த அறையில் இருந்து வெளியே வர அப்போது அந்த அறையை நோக்கி வந்த ஒரு இளம் பெண், “ஹாய்..!!! ஐ அம் நிவேதா. இஸ் திஸ் எ கிளாஸ் ரூம் ஃபார் பி. பி. ஏ. பர்ஸ்ட் இயர் ஸ்டுடென்ட்ஸ்…??” என்று சூர்யாவிடம் கேட்டாள். சூர்யாவிற்கு அவள் பேசியது முழுமையாக புரியவில்லை என்றாலும் அவள் ஆங்காங்கே பயன்படுத்திய சில ஆங்கில வார்த்தைகளை வைத்து அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்டவன், “சாரி உங்க அளவுக்கு எனக்கு இங்கிலீஷ் பேச தெரியாதுங்க. நானும் பி. பி. ஏ. ஃபர்ஸ்ட் இயர் தான். எனக்கும் இது தான் கிளாஸ் ரூம்னு சொன்னாங்க. ஆனா, இங்க வந்து பாத்தா.. யாரும் இல்ல.” என்று அமைதியான குரலில் சொன்னான்.
நிவேதா: தலை முதல் கால் வரை சூர்யாவை ஒரு முறை ஆராய்ச்சி பார்வை பார்த்தாள். அவனுடைய சாதாரணமான உடையும், அவன் எளிமையாக பேசும் விதமும், அவனுடைய முகத்தில் இருந்த இன்னசென்ஸ் -ம், அவனுடைய கட்டுடலும் ஒரே பார்வையில் அவளை ஈர்த்துவிட்டது. 😍 அதனால் அவனைப் பார்த்து நட்பாக புன்னகைத்தவள், “இட்ஸ் ஓகே பிரண்ட். இங்கிலீஷ் ஒரு லாங்குவேஜ் மட்டும் தான். இன்னொரு தடவ உனக்கு இங்கிலீஷ் பேச தெரியலைன்றதுக்காக யார்கிட்டயும் சாரி சொல்லாத. நம்ம பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் தான் படிக்க போறோம். பி. ஏ. இங்க்லீஷ் இல்ல. சோ சில். நம்ப வேற யார்கிட்டயாவது இங்க இருந்தவங்க எல்லாம் எங்க போனாங்கன்னு கேட்டு பாப்போம்.” என்று அவள் ஒரு சிறு புன்னகையுடன் சொன்னாள். 😁 😁 😁
சூர்யா: பிராத்தனாவை போல் இவள் தன்னுடைய குறைபாடுகளை சுட்டிக்காட்டி தன்னை கேலி செய்யாததால், முதல் பார்வையிலேயே நிவேதாவின் மீது அவனுக்கு ஒரு நல்ல எண்ணம் வந்துவிட்டது. அதனால் அவனும் அவளை பார்த்து நட்பாக புன்னகைத்தவன், அவளுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினான். 😁 😁 😁
அவர்கள் செல்லும் வழியில் குறுக்கே சென்று கொண்டு இருந்த ஒரு சீனியர் பையனை தடுத்து நிறுத்திய நிவேதா, “எக்ஸ்கியூஸ் மீ சீனியர்…!!! ஃபர்ஸ்ட் இயர் பி. பி. ஏ. ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் எங்க இருக்காங்க..?? கிளாஸ் ரூம்ல யாரையும் காணோமே..!!!” என்று சரளமான ஆங்கிலத்தில் கேட்டாள். முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரையும் வரவேற்பதற்காக ஆடிட்டோரியம்மில் ஒரு ஸ்பெஷல் பங்க்ஷன் ஐ கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்து இருப்பதாகவும், அனைத்து மாணவர்களும் அங்கே தான் இருக்கிறார்கள் என்றும் சொன்னவன், ஆடிட்டோரியத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்ற வழியையும் அவளிடம் சொன்னான்.
நிவேதா: அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்தவள் “தேங்க்ஸ் சீனியர்.” என்றாள். 😁😁 😁
அந்த சீனியர் மாணவன்: “தேங்க்ஸ் எல்லாம் ஒன்னும் வேணாங்க ஜூனியர் மேடம். நானும் உங்க டிபார்ட்மெண்ட் தான். ஆப்டர் லன்ச், பி பிளாக் பக்கத்துல இருக்க மினி ஆடிட்டோரியம்ல நம்ம டிபார்ட்மென்ட் சார்பா ஒரு பிரெஷஸ் பார்ட்டி இருக்கு. மறக்காம வந்துருங்க.” என்று சொல்ல, தாங்கள் கண்டிப்பாக வந்து விடுவதாக சூர்யாவும், நிவேதாவும், அவனிடம் சொல்லிவிட்டு மீண்டும் ஆடிட்டோரியத்தை நோக்கி நடக்க தொடங்கினர்.
தன்னருகே நடந்து வந்து கொண்டு இருந்த நிவேதாவை ஓர கண்ணால் பார்த்த படியே நடந்து வந்தான் சூர்யா. அவள் ஒரு ஜீன்ஸ் பேண்டும், மஞ்சள் நிற குத்தாகும் அணிந்து இருந்தாள். அவளுடைய குட்டியான தலை முடியை தூக்கி கை போனிடைலில் போட்டு இருந்தாள். இருப்பினும் அந்த ரப்பர் பேண்ட் சிறைக்குள் இருந்து சில முடிகள் தப்பித்து வெளியே காற்றில் பறந்து கொண்டு இருந்தன. அவள் தன்னுடைய முதுகில் ஒரு பேக் பாக் அணிந்து இருந்தாள்.
அவளுடைய முகத்தில் எப்போதுமே ஒரு விரிந்த புன்னகை இருந்தது. 😁 மாநிறத்தில் இருந்தாலும், தமிழ்நாட்டு பெண்களுக்கே உரித்தான அழகு அத்தனையும் அவளிடம் கொட்டி கிடந்தது. மொத்தத்தில் அவள் நேர்த்தியாகவும், அழகாகவும் அவனுடைய கண்களுக்கு தெரிந்தாள். 😍 நிவேதா எப்போதும் தன்னுடைய வாயை திறந்தால், அதை எளிதில் மூடும் பழக்கம் அவளுக்கு இல்லை. அதனால் தொண.. தொண.. என்று சூர்யாவிடம் பேசி கொண்டே வந்தாள். இந்தக் கல்லூரியில் தன்னுடைய முதல் நாள் எப்படி இருக்க போகிறதோ என்று பயந்து கொண்டே வந்த சூர்யாவிற்கு, உள்ளே வந்த சில நிமிடங்களிலேயே கிடைத்த நிவேதாவின் நட்பு அவனுடைய மனதை சற்று நிம்மதி அடையவைத்தது.
அவன் அதிகமாக எந்த பெண்களிடமும் பேசிய பழகியதில்லை. அவனுடைய சகோதரிகளுடனும் பிரார்த்தனாவிடம் மட்டுமே பேசி பழகி இருந்த சூர்யாவிற்கு, நிவேதாவின் நட்பு பெண்களின் மீதான அவனுடைய பார்வையை இன்னும் மரியாதைடனும், அழகாகவும், மாற்றியது. நன்றாக படிக்கும் பெண்கள் அனைவரும் பிராத்தனாவை போல தான் இருப்பார்கள் என்று நினைத்து இருந்த சூர்யா, நிவேதாவை பார்த்தவுடன், தன்னுடைய மனதை மாற்றிக் கொண்டான். இப்படியே நிவேதாவும், சூர்யாவும், பேசி கொண்டே ஆடிட்டோரியம்மை வந்தடைந்தனர்.
சூர்யா அந்த ஆடிட்டோரியத்தை ஆச்சரியமான கண்களுடன் பார்த்துக் கொண்டு இருந்தான். சென்ட்ரலைஸ்ட் ஏசி பொருத்தப்பட்டு இரண்டு ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் அமரும் அளவிற்கு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு இருந்தது அந்த ஆடிட்டோரியம். அவர்கள் வருவதற்கு முன்பே பங்க்ஷன் தொடங்கி இருந்ததால், அவர்களுக்கு கடைசியாக உள்ள சீட்டுகளில் அமர்வதற்கே வாய்ப்பு கிடைத்தது. ஸ்டேஜ் -ல் நடந்து கொண்டு இருக்கும் காட்சிகள் அனைத்தும் இறுதி சீட்டில் அமர்பவர்கள் வரைக்கும் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே பெரிய எல்.இ.டி. ஸ்கிரீன்களை வைத்து நேரலையில் அதை டெலிகாஸ்ட் செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது எதர்ச்சியாக சூர்யா அந்த ஸ்கிரீனை பார்க்க, அதில் பிராத்தனாவின் முகம் தெரிந்தது. இப்போது தான் அந்த கல்லூரியின் தாளாளர் தன்னுடைய உரையை பேசி முடித்துவிட்டு சென்றிருக்க அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நோட் ஆப் தேங்க்ஸ் உரையை சரளமான ஆங்கிலத்தில் சிறிதும் தயக்கம் இன்றி மைக்கில் அனைவரையும் பார்த்து வாசித்துக் கொண்டு இருந்தாள் பிராத்தனா.
ஸ்கிரீனில் தெரியும் அவளுடைய முகத்தையே தன்னுடைய வாயை பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தான் சூர்யா. அப்போது அவனுடைய மனதில், “நம்ப ஆள் சொன்ன மாதிரியே.. அவ இந்த காலேஜ்ல பெரிய ஆளு தான் போல..!!!” என்று நினைத்துக் கொண்டான். அவன் பிராத்தனாவை பார்த்து வழிவதை கவனித்த நிவேதா, “அடேய்…!! என்ன டா ஃபர்ஸ்ட் டேவே இப்படி சீனியரா சைட் அடிக்கிற..???? நான் கூட உன்னை கொஞ்சம் பலம்ன்னு தப்பா நினைச்சிட்டேன். ஆனா நீ பெரிய ஆளா இருப்ப போலவே…!!!” என்று கிண்டலாக சிரித்து கொண்டே சொன்னாள். 🤪 😂😂😂
சூர்யா: நான் ஒன்னும் என்ன விட பெரிய பொண்ண பாக்கல. நான் பிளஸ் டூல ரெண்டு தடவை கோட்ட அடிச்சுட்டேன். அதனால இப்போ லேட்டா தான் காலேஜுக்கு வந்து இருக்கேன். நான் மட்டும் அப்பவே ஒழுங்கா படிச்சு பாஸ் ஆகி இருந்தா, இந்நேரம் செகண்ட் இயர் போய் இருப்பேன் நிவேதா.” என்று அவசரமான குரலில் சொன்னான்.
நிவேதா: “ஓகே ஓகே நீ நல்லா தெளிவ தான் டா இருக்க.” என்றவள் மீண்டும் அவளை பார்த்து சிரித்தாள்.
அந்த ஃபங்ஷன் முடியும் வரை சூர்யாவின் கண்கள் பிராத்தனாவையே தேடி தேடி பார்த்துக் கொண்டு இருந்தன. 😍 இவன் அவளைப் பார்க்க நிவேதா அதை கண்டு இவர்கள் இருவரையும் ஜோடி சேர்த்து வைத்து பேசி சூர்யாவை ஓட்டிக் கொண்டு இருக்க என, இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும், இருந்தனர். ஒரு பக்கம் பிராத்தனா, இன்னொரு பக்கம் நிவேதா, என சூர்யா மிகவும் சந்தோஷமாக உணர்ந்தான். 🥰 என்ன தான் அவனுக்கு நிவேதாவை பிடித்து இருந்தாலும், அவளிடம் நட்பை தாண்டிய எந்த ஒரு விதமான உணர்வும் அவனுக்கு வரவில்லை. தூரத்தில் இருந்து இப்படி பிராத்தனாவை பார்த்து ரசிப்பது கூட அவனுக்கு போதுமானதாகவும், மகிழ்ச்சி தர கூடியதாகவும், இருந்தது. 😍 ☺️
ஆனாலும் இந்த மயக்கம்
ஆகாது நெஞ்சே உனக்கு… 💘
போனாலும் நின்னு சிரிக்கும்
போகாது இந்த கிறுக்கு… 💘 😂
எனக்கு புடிச்ச அது மாறி
உலகம் கெடக்கு அழகேறி
முன்னால.. ஒ… 😍 🥰 💘
சிரிக்கும் போதே முறைப்ப… 😁 😒
மழைக்குள் வெயில் அடிப்ப.. 😂
நான் போனாலும் போகாத சொல்லிட்டேன்.. 😍
முடியும் என நெனச்சா தொடரும் என முடிப்பேன். 😒 🤪 😁
நீ மாறாத நான் மாறிட்டேன். 😁
நாராயணன் குரூப்ஸ் அலுவலகம்…
விஷ்வாவிற்கு வெளியே ஒரு கிளையண்ட் மீட்டிங் இருந்ததால், அதை முடித்துவிட்டு இப்போது தான் சிவா உடன் தன்னுடைய ஆபீஸ் -க்கு வந்தான். அவன் பன்னிரண்டாவது மாடியில் இருக்கும் தன்னுடைய ஆபீஸிற்கு செல்வதற்காக அவன் மட்டும் பயன்படுத்தும் சேர்மன் ஆபீஸ் -க்கு செல்லும் லிப்டில் இருக்கும் பட்டனை அமுத்தி விட்டு அது வருவதற்காக காத்திருந்தான்.
வழக்கமாக ரிசெப்ஷனில் இருப்பவர்களில் இருந்து, தரைத்தளத்தில் வேலை செய்பவர்கள் வரை, விஷ்வா லிப்டில் ஏறி அவனுடைய அலுவலகத்திற்கு செல்லும் வரை மரியாதை நிமித்தமாக நின்று கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் இன்று வழக்கத்தை விட அவர்கள் விஷ்வாவை பார்த்தவுடன் அவர்களுக்குள் அதிக சலசலப்பு இருந்தது. இந்தியாவே விஷ்வாவின் மனைவி யார் என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது, அவனுடன் அவனுடைய ஆபீசில் வேலை பார்ப்பவர்கள் அதைப்பற்றி யோசிக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம்.
விஷ்வா லிப்டில் ஏறிய உடனே அவனைப் பற்றிய பேச்சுக்கள் தான் அந்த வளாகம் முழுவதும் வளம் வந்தன. “ஹேய் நீ அந்த போட்டோவ பாத்தியா..??? அந்த போட்டோவோட பேக்ரவுண்ட பாத்தா ஏதோ ஒரு மிடில் கிளாஸ் வீடு மாதிரி இருந்துச்சு. அப்ப யாரோ ஒரு அழகான கல்யாணம் ஆகாத மிடில் கிளாஸ் பொண்ணா பாத்து இவரு கல்யாணம் பண்ணிக்க போறாரு போல.” என்று ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் சொல்ல, “ஆமா நானும் அதை நோட்டீஸ் பண்ணினேன். அந்தப் பொண்ணு பாக்குறதுக்கு ரொம்ப ஹோம்லியா இருந்தா. அவ ஒரு மாடல் மாதிரியோ, இல்லை ஆக்ட்ரஸ் மாதிரியோ எல்லாம் தெரியல.” என்று சொல்லிக் கொண்டு இருக்க அவர்களுடைய பேச்சில் குறுக்கிட்ட இன்னொரு பெண், “என்ன தான் இவரு ஆளு கொஞ்சம் டெரர் பீசா இருந்தாலும், நான் கேள்விப்பட்ட வரைக்கும் அவருக்கு ஃபேமிலி சென்டிமென்ட் ரொம்ப அதிகம். சோ எப்படிப் பாத்தாலும் அந்த பொண்ணு லக்கி தான். சேர்மன் ஆபீஸ்ல வேலை செய்றவளுகளே எத்தனை பேர் அவரை கரெக்ட் பண்ண ட்ரை பண்ணி இருக்காங்க. அவங்க எவ்ளோ அழகா இருந்தாலும் இவர் கண்டுக்கவே மாட்டாரு. ஆனா இப்போ இந்த பொண்ண மட்டும் எப்படி மேரேஜ் பண்றதுக்கு ஓகே சொன்னார் என்று தான் தெரியல. நமக்கெல்லாம் நேர்ல அவர்கிட்ட சும்மா பேசுறதுக்கே எவ்ளோ பயமா இருக்கு. அவள பாரேன் கேஷுவலா அவர் பக்கத்துல உட்கார்ந்து இருக்கா.” என்று அந்த போட்டோவை தங்களுடைய மொபைல் போனில் பார்த்தபடி மிஸ்பாவின் திருமணத்தைப் பற்றி அங்கு இருந்த பெண்கள் ஒரு புறம் பேசிக் கொண்டு இருக்க,
“பார்ரா இவர்லாம் குடுத்து வச்ச மனுஷன். இவரோட செத்துப்போன வைஃப் நல்லா பாலிவுட் ஆக்ட்ரஸ் மாதிரி அழகா இருப்பாங்க. இப்போ தமிழ் ஆக்ட்ரஸ் மாதிரி இருக்கிற யாரோ ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறாரு. அந்த பொண்ணு பேஸ் தெரியலனாலும் பாக்குறதுக்கே ஆள் நல்லா அழகா ஹோம்லியா இருக்கா.” என்று ஒருவன் சொல்ல, “ஆமா டா பொறந்தா அதுக்கு தான் பணக்காரனா பொறக்கணும். இதே மிடில் கிளாஸ்ல இருக்கிறவங்களுக்கு எல்லாம் அவரோட வயசுல ஃபர்ஸ்ட் மேரேஜ் பண்றதே கஷ்டம். இவர் பாரு அதுக்குள்ள செகண்ட் மேரேஜ் -க்கு ரெடி ஆயிட்டாரு. அதுக்கெல்லாம் ஒரு முக ராசியும், பணமும், வேணும் டா. நமக்கு அது ரெண்டுமே இல்ல. நம்மளால இப்படி வயிற்றெரிச்சல்ல புலம்பு மட்டும் தான் முடியும்.” என்று திருமணம் ஆகாத 90ஸ் கிட்ஸ் அனைவரும் தங்களுக்குள் அவர்களுடைய வயிற்றெரிச்சலை பகிர்ந்து கொண்டு இருந்தனர்.
விஷ்வாவின் அலுவலக அறையில்…
க்ரிஷாவுடன் zoom மீட்டிங்கில் இருந்த விஷ்வா, அனைத்தும் தயாராக இருக்கிறதா என்று அவளிடம் கேட்டுக் கொண்டு இருந்தான். “எஸ் ப்ரோ. பிரசாத் குரூப்ஸ் ஓட டோட்டல் ஷேர்ஸ்ல, நம்ம கிட்டத்தட்ட 40% வாங்கியாச்சு. நீங்க சொன்ன மாதிரி அந்த ஜுவல்லரி ஷாப்பையும் வாங்கிட்டேன். ஆல்ரெடி அவனோட கம்பெனி லாஸ்ல போயிட்டு இருக்கிறதுனால, அவனே சில சேர்ஷ சேல் பண்ற ஐடியால தான் இருந்து இருக்கான். நான் மார்க்கெட் வேல்யூவ விட த்ரீ டைம்ஸ் அவனுக்கு மணி அதிகமாக குடுக்கிறேன்னு ஆசை காட்டுனதுனால… பையன் வழிய வந்து என்கிட்ட எல்லாத்தையும் வித்துட்டான்.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள். 😁 😁 😁
விஷ்வா: “அப்ப நீ தான் இந்த கம்பெனியோட ஓனர் -ன்னு அவனுக்கு தெரியுமா..???” என்று அவசரமான குரலில் கேட்டான்.
க்ரிஷா: நோ நோ ப்ரோ. என்னோட பிரண்டா தான் நான் நம்ப கம்பெனிக்கு சி. இ. ஓ. வா அப்பாயின் பண்ணிருக்கேன். அவன் தான் என்னோட சைடுல இருந்து எல்லாத்தையுமே பாத்துகிட்டான். நான் ஆல்ரெடி உங்ககிட்ட பிராங்க்ளின பத்தி சொல்லி இருக்கேன்ல்ல…!!!! அவன மட்டும் தான் பிரவீன் பாத்திருக்கான். அவனுக்கு பின்னாடி நான் தான் இருக்கேன்னு பிரவீனுக்கு தெரியாது.
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)