Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 86

மூர்கனின் காதலி CH 86

by Thenaruvi Tamil Novels
119 views

அத்தியாயம் 86

தனக்கு இடுப்பு வலிப்பதாக சொன்ன மேகா, அந்த வீட்டின் கொல்லைப்புறத்துக்கு போய் அங்கிருந்த திண்ணையில உட்கார்ந்துக்கிட்டா. “விடியறதுக்குள்ள எப்படியாவது இந்த கட்டில சரி பண்ணிடனும். வெளிய அந்த தடிமாடுங்க வெட்டியா தானே இருப்பானுங்க.. அவனுங்கள வச்சு ரெடி பண்ணிக்கலாம்”ன்னு நினைச்ச விஷ்வா, கதவை திறந்து வெளிய போய் அவங்ககிட்ட, “டேய் உள்ள வாங்கடா”ன்னான்.

“பாஸ், இந்த முக்கியமான நேரத்துல நாங்க எதுக்கு உள்ள வந்துகிட்டு? நாங்க ஏதாவது பண்ணி உங்களை டிஸ்டர்ப் பண்ணோம்னு மட்டும் காளி அண்ணனுக்கு தெரிஞ்சுதுன்னா, அப்புறம் நாங்க எல்லாம் கைமா தான்”ன்னு வேகமா தயாளன் சொல்ல, “இங்க நடந்தது அவருக்கு தெரியக்கூடாதுன்னு தாண்டா உங்களை உள்ள வர சொல்றேன். உள்ள எங்க ரூம்ல இருந்த கட்டில் ரொம்ப பழசு போல, உடைஞ்சிடுச்சு. விடியறதுக்குள்ள எப்படியாவது அதை சரி பண்ணிடுங்க” என்றான் விஷ்வா.

“என்ன பாஸ், உங்களுக்கெல்லாம் ஒன்னும் தெரியாதுன்னு நாங்க நம்பிட்டு இருக்கோம். நீங்க என்னன்னா இவ்வளவு ஸ்பீடுல கட்டிலையே உடைச்சிருக்கீங்க!”ன்னு மகேஷ் ஆச்சரியமா கேட்க, “அம்புட்டு வெறி மாப்பிள்ளைக்கு!”ன்னு மகேஷ் கிண்டலா சொன்னான். அதனால அவன் கையை பிடிச்சு பின்னாடி திருப்பி முறுக்கி, அவனை தன் பக்கம் இழுத்து மண்டையில நங் நங்குன்னு கொட்டுன விஷ்வா, “வாயை மூடிக்கிட்டு சொன்ன வேலையை மட்டும் செய்யணும் சரியா? நீங்க என்ன பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாது. மார்னிங் நான் வந்து பார்க்கும்போது அந்த கட்டில் அப்படியே புதுசு மாதிரி இருக்கணும்”ன்னான்.

வலி தாங்க முடியாம, “ஆஆ… ஓகே பாஸ்.. ஓகே பாஸ்… கட்டிலை தானே சரி பண்ணனும்? அதெல்லாம் பண்ணிடலாம். கொஞ்சம் கையை விடுறீங்களா ப்ளீஸ்.. உடைஞ்சிட போகுது!”ன்னு மகேஷ் சொல்ல, அவன் கையை விட்ட விஷ்வா வெளிய கிடந்த கயித்துக் கட்டிலை பார்த்துட்டு, “மேகா பின்னாடி கொல்லைப்புறத்துல இருக்கா. இந்த கட்டிலை தூக்கிட்டு போய் அங்க போடுங்க. இன்னைக்கு நாங்க அங்கயே தூங்குறோம். ஒருத்தனும் அந்த பக்கம் வரக்கூடாது. ஓகேவா?”ன்னு கேட்டான்.

வலிச்ச கையை உதறிக்கிட்டே மகேஷ், “நீங்களே ஏதாவது வேணும்னு கூப்பிட்டாலும் சத்தியமா நாங்க அந்த பக்கமே வரமாட்டோம் பாஸ்”ன்னான்.

“குட் பாய்”ன்னு சொல்லிட்டு விஷ்வா உள்ள போனான். அவன் சொன்ன மாதிரியே மகேஷ் அந்த கட்டிலை கொண்டு போய் கொல்லைப்புறத்துல போட, ஒரு தலையணையையும் போர்வையையும் எடுத்துக்கிட்டு விஷ்வா வெளிய போனான். இன்னும் சுவத்துல சாய்ஞ்சு இடுப்பை பிடிச்சுக்கிட்டு மேகா திண்ணையில உட்கார்ந்திருக்க, அவளை விஷ்வா தூக்குனான்.

“என்ன பண்றீங்க? விடுங்க என்ன! கீழே போட்டுடாதீங்க”ன்னு மேகா பேச, “ஷூ.. வாயை மூடு”ன்னு சொன்ன விஷ்வா அவளை கட்டில்ல படுக்க வச்சு அவ பக்கத்துல உட்கார்ந்தான்.
“என்ன… இங்கயே தூங்க போறோமா நம்ம? நேரம் ஆக ஆக பனி ரொம்ப பெய்யும்ங்க.. இங்க படுத்தா உடம்புக்கு ஒத்துக்காது”ன்னு மேகா சொல்ல, “இப்ப உள்ள போய் படுக்க முடியாதுடி. உடைஞ்ச கட்டிலை சரி பண்ண சொல்லிருக்கேன். சோ அவனுங்க எல்லாம் வந்து போயிட்டு இருப்பாங்க. நீ எப்படி அங்க போய் படுப்ப?”ன்னு விஷ்வா கேட்கவும் மேகா வாயை மூடிக்கிட்டா.

“திரும்பி படு”ன்னு சொல்லி அவளை மெதுவா திருப்பி படுக்க வச்சு, புடவை பின்னை கழட்டிவிட்டு, இடுப்பு வலியைக் குறைக்க மசாஜ் செய்ய ஆரம்பிச்சான்.
அவனோட விரல்கள் தீண்டுறப்போ மேகா கூச்சத்துல தலையணையை இறுக்கமா பிடிச்சுக்கிட்டு கண்ணை மூடிக்கிட்டா. அவன் ஒவ்வொரு முறை அழுத்தம் கொடுக்கும்போதும் அவ உடம்பு முழுக்க மின்சாரம் பாயுற மாதிரி உணர்ந்தா. அந்த இதமான வலியில நேரம் போனதே அவளுக்கு தெரியல.
பத்து நிமிஷத்துக்கு அப்புறம், “இப்ப ஓகேவா?”ன்னு விஷ்வா கேட்க, அவளால பதில் சொல்ல முடியல.

அவன் மறுபடியும், “இன்னும் வலி இருக்கா? வலிச்சதுன்னா சொல்லு, யாரையாவது அனுப்பி பெயின் கில்லர் ஸ்ப்ரே வாங்கிட்டு வர சொல்றேன்”னு சொன்ன அப்புறம்தான் மேகாவுக்கு நிதானமே வந்துச்சு.

“என்ன இவரு கை பட்ட உடனே வலி சரியாயிடுச்சு! பரவாயில்ல, இந்த மனுஷனுக்கு பல வித்தை தெரிஞ்சிருக்கு. நமக்கு வாய்த்த அடிமை ரொம்ப திறமைசாலி”ன்னு நினைச்சுக்கிட்டு, “ம்ம்ம்.. சரியாயிடுச்சு. தேங்க்ஸ்”ன்னா.

அப்புறம் புடவையை சரி பண்ணிட்டு நேரா படுக்க, அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டு விஷ்வாவும் பக்கத்துல படுத்துக்கிட்டான். மேகா சொன்ன மாதிரியே பனி அதிகமா பெய்ய, குளிருல மேகா விஷ்வாவை இறுக்கமா அணைச்சுக்கிட்டா. விஷ்வாவுக்கும் குளிர் அடிச்சதால அவளை தன்னோட சேர்த்து அணைச்சுக்கிட்டான். புது இடம்ங்கறதால ரெண்டு பேருக்குமே சீக்கிரம் தூக்கம் வரல.

நிலவை பார்த்துக்கிட்டு இருந்த விஷ்வா, “இப்படி இவகூட க்ளோஸா பழகிட்டு அப்புறமா நீ எனக்கு ஸ்ட்ரேஞ்சர் மாதிரின்னு சொன்னா அவளுக்கு கஷ்டமா தானே இருக்கும்! அவ சொன்னது கரெக்ட் தான்”னு யோசிச்சுட்டு இருந்தான். அப்போ மேகா தலையை தூக்கி அவன் முகத்தை பார்த்து, “ஸ்லீப்பிங் பில்ஸ் போடாம உங்களுக்கு தூக்கம் வரலையா?”ன்னு கேட்டா.

“இப்பல்லாம் அதை போட்டாலும் எனக்கு சில நேரம் தூக்கம் வரமாட்டேங்குதுடி”ன்னு சோர்வா சொன்னான் விஷ்வா.

“நீங்க மைண்ட்ல குப்பை மாதிரி தேவையில்லாத விஷயங்களை நிறைய வச்சிருக்கீங்க. அதான் தூக்கம் வரல. அதெல்லாம் தூக்கி வெளிய போடுங்க. லைஃப் ரொம்ப சிம்பிள் விஷ்வா. நாம தான் அதை காம்ப்ளிகேட் பண்றோம். ஜஸ்ட் லெட் இட் பி”ன்னு மேகா மெதுவா சொன்னா.

அதை கேட்டு விஷ்வா லேசா சிரிச்சான். விளையாட்டா அவன் கன்னத்துல கிள்ளுன மேகா, “ஏன் சிரிக்கிறீங்க?”ன்னு கேட்க, “இல்ல, இதே டயலாக்கை வேற வேற மாதிரி என் தெரபிஸ்ட் நிறைய தடவை சொல்லிருக்காரு. அப்போலாம் ‘உனக்கு என்னப்பா சொல்றது ஈஸி, செய்றதுதானே கஷ்டம்’னு மனசுக்குள்ள திட்டுவேன். ஆனா நீ சொல்லும்போது இது ரொம்ப ஈஸியா தெரியுது. ஒரு மாதிரி நல்லா இருக்கு”ன்னான்.

மேகா வெட்கத்தோட சிரிச்சுக்கிட்டே, “இவனுக்கும் என் மேல பீலிங்ஸ் இருக்கு, ஆனா இந்த மரமண்டைக்கு அது புரியல. மெதுவா கத்துக்கிறவனுக்கு நாம டைம் கொடுத்துதானே ஆகணும்”னு நினைச்சுக்கிட்டா. “ஓய்!”னு விஷ்வா கூப்பிட, “ம்ம் சொல்லுங்க”ன்னா.

“நமக்குள்ள என்ன ரிலேஷன்ஷிப் இருக்குன்னு கண்டுபிடிச்சிட்டேன்”னு உற்சாகமா அவன் சொல்ல, “இவனை டியூப்லைட்ன்னு நினைச்சோமே, அதுக்குள்ள புரிஞ்சுக்கிட்டானே!”ன்னு சந்தோஷப்பட்ட மேகா, “என்ன கண்டுபிடிச்சீங்க?”ன்னு கேட்டா. “எனக்கு உன்கூட இருக்கும்போது ரொம்ப கம்ஃபர்டபிளா இருக்கு. ஏதோ பிரண்ட்ஸ் கூட இருக்கிற மாதிரி பீல் ஆகுது. சோ நாம பிரண்ட்ஸா இருக்கலாமா?”ன்னு கேட்டான்.

அதை கேட்டு அவளுக்கு அப்செட் ஆயிடுச்சு. “அட போய்யா மெட்டல் மண்டை! இவனுக்கு அறிவு வந்துருச்சுன்னு நினைச்சேன் பாரு. உங்க ஊர்ல பிரண்ட்ஸ்ன்னா இப்படித்தான் நடுராத்திரியில கட்டிப்பிடிச்சுக்கிட்டு படுத்துருப்பாங்களா? அது சரி, இப்பத்தான் பிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ்னு புதுசு புதுசா வருதே, இவன் அந்த மாதிரி நினைச்சுக்கிட்டான் போல”ன்னு நினைச்சுக்கிட்டு, “ஓகே, எனக்கு தூக்கம் வருது. குட் நைட்”னு கண்ணை மூடிக்கிட்டா.

“வாழ்க்கையில முதல் முறையா எனக்கு ஒரு பொண்ணு பிரண்டா கிடைச்சிருக்கா!”ன்னு சந்தோஷப்பட்ட விஷ்வா, மேகா பக்கத்துல இருக்கிற அந்த சுகத்துல அப்படியே தூங்கிட்டான். ஒரு கட்டத்துல மேகாவும் தூங்கிட்டா. திடீர்னு விஷ்வா தூக்கத்துல, “விஜய்.. விஜய்.. ஏண்டா என்னைத் தவிக்க விட்டுட்டு போன? ப்ளீஸ் விஜய் போகாத!”ன்னு உளற ஆரம்பிச்சான்.

தூக்கம் கலைஞ்சு மேகா பார்க்கும்போது, “பாவம், தூங்கும் போது கூட இவரால நிம்மதியா இருக்க முடியல. அந்த விஜய் ஏன்தான் இப்படி பண்ணானோ! அவன் போயிட்டான், இவரு கஷ்டப்படுறாரு”ன்னு நினைச்சுக்கிட்டு விஷ்வாவோட தலையை கோதிவிட்டு மனசுக்குள்ள பேச ஆரம்பிச்சா…
என் அழகே…!!!
இருள் பூசிய இரவிலே… சோகம் உன்னை சுடுகிறதா?
உன் நிம்மதியை தொலைத்துவிட்டு தேடுகிறாயா?
உன் கண்களை மூடிக்கொள், நான் உன் அருகில் இருக்கிறேன்.
என் அருகாமையை உன்னால் உணர முடிகிறதா?

“நான் இருக்கேன் உனக்கு”ன்னு நான் சொல்றது கேக்குதா?
உன்னை இதமா அணைச்சு, எப்பவும் உன்கூடவே இருப்பேன்.
சில நேரம் தோழியா, சில நேரம் தாயா, சில நேரம் உன் குழந்தையா!!
மேகாவின் அன்பு விஷ்வாவின் இரும்பு இதயத்தை அவளுக்காக துடிக்க வைக்குமா?

தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured