அத்தியாயம் 82
“ஏண்டி, கல்யாணத்துக்குன்னு கூப்பிட்டு வந்துட்டு ஒரு வாய் சோறு கூட போட மாட்டாங்களா இவங்க..??” அப்படின்னு தன் கையில இருந்த நுங்கை அழகா பிய்த்து எடுத்து சௌபர்ணிகாகிட்ட கொடுத்துக்கிட்டே விஷ்வா கேட்டான்.
“இன்னும் காலைல 10 மணி கூட ஆகல விஷ்வா. அவ்வளவுதான், பொங்கல் வச்சுட்டு ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கையெழுத்து போட்டுட்டு கிளம்ப வேண்டியதுதான். மேகா வீட்டுக்கு பக்கத்துல ஏதோ மண்டபம் புக் பண்ணி இருக்காங்களாம். அங்க பாரு, நம்ம வீட்டு ஆளுங்கள தவிர மத்த எல்லாரும் இப்பவே மண்டபத்துக்கு கிளம்பிட்டாங்க…!! அங்கதான் விருந்து,” என்றாள் சௌபர்ணிகா.
“அதெல்லாம் முடிச்சு மண்டபத்துக்கு போக 11 மணிக்கு மேல ஆயிரும். அதுவரைக்கும் பசிக்காதா..??” என்று விஷ்வா பாவமா கேட்க, “அதான் பசிக்காம இருக்குறதுக்கு அப்பப்ப ஃப்ரூட்ஸ், ஸ்நாக்ஸ்னு மாத்தி மாத்தி வாங்கி கொடுத்துட்டே இருக்காங்களே..!! இந்தா, நீயும் சாப்பிடு,” அப்படின்னு சொல்லி சௌபர்ணிகா அவனுக்கு நுங்கை ஊட்டி விட்டாள். இவங்க ரெண்டு பேரும் இப்படி பேசி சிரிச்சுட்டு இருக்குறதை, தன் அண்ணன் கூட உட்கார்ந்து பார்த்த முத்து உள்ளுக்குள்ள வெந்து புழுங்கிட்டு இருந்தான்.
பொங்கலை கரண்டி வச்சு மேகா கை வலிக்க கிண்டிட்டு இருந்தா. அவ கஷ்டப்படுறதை பார்த்த விஷ்வா, “இங்க குடு, நான் பண்றேன்,” அப்படின்னு சொல்லிட்டு கரண்டியை வாங்கினான். ஆனா அவனுக்கு கிண்டத் தெரியாம அப்படியும் இப்படியுமா ஆட்டி பானையை உருட்டிட்டு இருந்தான். அதை பார்த்த மேகா வெடுக்கென அவன் கையில இருந்து கரண்டியை பிடுங்கி, “என்ன இப்படி கிண்றீங்க..?? நீங்க கிண்ற கிண்டுல பானையே உடைஞ்சிரும் போல..!! ஏதாவது ஆயிடுச்சுன்னா அவ்வளவுதான், அபசகுனம்னு சொல்லிடுவாங்க. அப்புறம் நமக்கு தான் மனசு கஷ்டமா இருக்கும்,” என்றாள்.
திரும்பவும் அவ கிட்ட இருந்து கரண்டியை பிடுங்குன விஷ்வா, “நான் எவ்வளவோ விஷயத்தை அசால்ட்டா பண்ணிருக்கேன்..!! ஆஃப்டர் ஆல் ஒரு பொங்கல். எனக்கு இதை கிண்ட தெரியாதுன்னு சொல்லி அசிங்கப்படுத்துறியா..?? இதை நான் தான் கிண்டுவேன். என்ன ஆகுதுன்னு பார்த்துடலாம்,” அப்படின்னு சொல்லிட்டு வேகமா கிண்ட, கொதிச்சுட்டு இருந்த பானையில இருந்து தண்ணி டக்குனு அவன் முகத்துல தெரிச்சது.
“என்ன இது மேல தெறிக்குது..!! சூடா வேற இருக்கு. இதெல்லாம் என் ஃபேஸ்ல பட்டா என்ன ஆகுறது..??” அப்படின்னு பதறின விஷ்வா, சட்டென எழுந்து ரெண்டு அடி பின்னாடி போயிட்டான்.
இதை பார்த்ததும் மேகாவுக்கு சிரிப்பு தாங்கல. “என்னவோ உங்களால முடியாதது எதுவுமே இல்லைன்னு வாய் கிழிய பேசினீங்க..!! இப்போ என்னாச்சு மிஸ்டர் விஷ்வா..?? M.V. டெக்கோட சி.இ.ஓ இந்த உலகத்தையே ஒரு கலக்கு கலக்கப்போறாருன்னு மக்கள் நம்பிட்டு இருக்காங்க. ஆனா பாவம், இங்க விஷ்வா பொங்கலை கிண்டறதுக்கே திணறுறாரு..!!” அப்படின்னு சொல்ல, “வாய மூடுடி குட்டச்சி,” அப்படின்னு சொல்லிட்டு விஷ்வா நங்குன்னு அவ தலையில ஒரு கொட்டு வச்சான்.
மேகா தன் தலையில கை வச்சுக்கிட்டு வேணும்னே சத்தமா “அம்மா..!!” அப்படின்னு கத்த, எல்லாரும் அவங்களை திரும்பி பார்த்தாங்க.
‘அய்யய்யோ, நான் தான் இவளை அடிச்சேன்னு எல்லார்கிட்டயும் போட்டு கொடுத்துருவாளோ..!! உடனே மீசை டென்ஷனாகி சண்டைக்கு வந்துருவாரே.. இப்ப என்ன பண்றது..??’ அப்படின்னு நினைச்ச விஷ்வா திருதிருன்னு முழிச்சான்.
“என்ன ஆத்தா, அம்மான்னு சொல்லி விளையாடிட்டு இருக்க..?? எவ்வளவு நேரம் பொங்கல் வச்சுட்டு இருப்பீங்க ரெண்டு பேரும்..?? முடிச்சீங்களா இல்லையா..??” அப்படின்னு காளீஸ்வரன் அதட்டலா கேட்க, “அவ்ளோதாங்க அண்ணா, அரிசி வெந்துருச்சு. வெல்லத்தை போட்டுட்டு அது கரைஞ்ச உடனே நெய்ய ஊத்தி இறக்க வேண்டியதுதான்,” அப்படின்னு மேகா பயந்த குரல்ல அவசரமா சொன்னாள்.
அப்புறம் அவ வேலையில மும்முரமா இறங்கிட்டா. சேலைக்கு நடுவுல லேசா தெரிஞ்ச அவளோட இடுப்புல விஷ்வா விளையாட்டா கிள்ளினான். “என்னடி, நீ என்னை விட உங்க அண்ணனுக்கு தான் பயந்து நடுங்குவ போல..!!” அப்படின்னு கிண்டலா கேட்டான். “நாலு பேர் இருக்குற இடத்துல இப்படியெல்லாம் பண்ணாதீங்க, உங்களைத்தான் தப்பா பேசுவாங்க. அப்புறம் எனக்கு ஒன்னும் எங்க அண்ணனை பார்த்து பயம் இல்லை. இதை பாசம், மரியாதைன்னு சொல்லுவாங்க. உங்களுக்கு அதெல்லாம் புரியாத சப்ஜெக்ட். சோ அதை விட்ருங்க,” என்றாள் மேகா.
“இப்பதான் பிரெஷ்ஷா உன் கழுத்துல தாலி கட்டி உன்னை மிஸஸ் விஷ்வாவா மாத்தி கூட்டிட்டு வந்துருக்கேன். என் பொண்டாட்டி என் கண்ணுக்கு ஹாட்டா தெரிஞ்சா, நான் இப்படி அப்படி ஏதாவது பண்ணத்தான் செய்வேன். என் பொண்டாட்டி என் உரிமை. என்னை எவன்டி கேள்வி கேப்பான்..?? இப்ப வந்து எவனையாவது பேசச் சொல்லு, உங்க அண்ணன்களை மாதிரி நானும் அருவாளை தூக்கிட்டு சண்டைக்கு போறேன்,” அப்படின்னு விஷ்வா தன் சட்டை காலரை தூக்கி விட, “அய்யோ, ரொம்பத்தான்,” அப்படின்னு சொல்லிட்டு மேகா உதட்டை சுளிச்சா.
கொஞ்ச நேரத்துல பொங்கல் தயார் ஆனதும், அதை அம்மன் முன்னாடி படைச்சுட்டு, விஷ்வாவும் மேகாவும் நல்லா இருக்கணும்னு எல்லாரும் வேண்டிக்கிட்டாங்க. பொங்கலை இலையில வச்சு மேகா எல்லாருக்கும் கொடுத்தா. சாப்பிட்டு முடிச்சுட்டு எல்லாரும் ரிஜிஸ்டர் ஆபீஸ் கிளம்பி போனாங்க. அங்க ஏற்கனவே எல்லாம் தயாரா இருந்ததுனால, கடகடன்னு ஃபார்மாலிட்டிஸ் முடிச்சுட்டு நேரா மண்டபத்துக்கு போனாங்க.
அங்க ஏற்கனவே நாலு அஞ்சு பந்தி முடிஞ்சிருந்தது. எல்லாரும் சேர்ந்து விருந்தை முடிச்சுட்டு, அங்கேயும் ஒரு மினி போட்டோஷூட்ல போஸ் கொடுத்துட்டு, உடம்புல இருக்குற தெம்பு எல்லாம் போயி எல்லாரும் டயர்டாகி வீட்டுக்கு வந்து சேர்ந்தாங்க. அப்போ மணி சாயங்காலம் ஆகி இருந்தது.
விஷ்வாவோட ரூம்ல இருந்த மேகா, தன் மொபைல்ல எதையோ பார்த்து ரசிச்சு சிரிச்சுட்டு இருந்தா.
ரெப்ரெஷ் ஆகிட்டு வந்த விஷ்வா, ‘எதைப் பார்த்து இவ பல்லக் காட்டிட்டு இருக்கா..??’ அப்படின்னு நினைச்சு ஃபோனை எட்டிப் பார்த்தான். மகேஷ் அவளுக்கு அனுப்பி வச்ச அவங்களோட போட்டோஸை தான் அவ பார்த்துட்டு இருந்தா.
அதுல சிரிச்ச முகமா விஷ்வாவும் மேகாவும் சேர்ந்து பொங்கல் வைக்கிற போட்டோவை அவ பார்த்துட்டு இருக்க, ஃபோனை பிடுங்குன விஷ்வா, “இதெல்லாம் யாரு போட்டோ எடுத்தது..??” அப்படின்னு கேட்டுட்டு எல்லா போட்டோவையும் பார்க்க ஆரம்பிச்சான்.
“என்னோட சீக்ரெட் போட்டோகிராபர். நம்மளோட கேண்டிட் போட்டோஸை எல்லாம் அப்பப்போ எடுத்து எனக்கு அனுப்புவாரு,” அப்படின்னு மேகா சிரிக்க,
‘அது யாருடா அவன் சீக்ரெட் போட்டோகிராபர்..??’ அப்படின்னு யோசிச்ச விஷ்வா, மகேஷ் தான் அனுப்பி இருக்கான்னு கண்டுபிடிச்சான். ‘ஓஹோ, இவன் தான் அந்த பிளாக் ஷீப்பா..?? இருக்கட்டும், அந்த ஆட்டை பிடிச்சு காலை ஒடிச்சு சூப் வச்சு குடிக்கிறேன்,’ அப்படின்னு நினைச்சாலும், ‘போட்டோஸ் எல்லாம் நல்லா தான் இருக்கு, இவனுக்குள்ள இப்படி ஒரு திறமை இருக்கா,’ அப்படின்னு நினைச்சுக்கிட்டே அந்த போட்டோஸை தன் நம்பருக்கு வாட்ஸ்அப் பண்ண போயிருக்கான்.
அப்பதான் மேகா தன் நம்பரை “மெட்டல் மண்டையன்” அப்படின்னு சேவ் பண்ணி வச்சிருக்கறதை பார்த்தான். செம காண்டான விஷ்வா, மேகா கழுத்துல கை போட்டு அவளை தன் பக்கம் இழுத்து, ஃபோனை முகத்துக்கு நேரா காட்டி, “என்னடி பண்ணி வச்சிருக்க..??” அப்படின்னு கத்தி கேட்டான்.
“எதுக்கு காதுகிட்ட வந்து இப்படி கத்துறீங்க..?? நாள பின்ன உங்களால எனக்கு காது கேட்காம போயிடுச்சுன்னா, எங்க வீட்ல இருக்குறவங்க உங்களை சும்மா விட மாட்டாங்க பாத்துக்கோங்க..!!” அப்படின்னு அந்த நிலைமையிலயும் மேகா மிரட்டினா.
அவ மொபைலை வச்சு அவ மண்டையிலேயே லேசா தட்டுன விஷ்வா, “என்ன இதுன்னு கேட்டேன்..!! அதுக்கு மட்டும் பதில் சொல்லு,” அப்படின்னு சொல்ல, “இது என்னன்னு தெரியாதா உங்களுக்கு..?? இதுக்கு பேரு மொபைல் ஃபோன். 1940-ல தான் இதை கண்டுபிடிச்சாங்க. அப்போ இது இந்த மாதிரி இருக்காது, மிலிட்டரிக்காரங்க தான் யூஸ் பண்ணுவாங்க. என்னவோ புதுசா ஸ்மார்ட் ஃபோன் லான்ச் பண்ண போறேன்னு சொன்னீங்க, இது கூட தெரியாமையா மேனுஃபேக்சர் பண்ண போறீங்க..??” அப்படின்னு கேட்டுட்டு மேகா பயங்கரமா சிரிச்சா.
கடுப்பான விஷ்வா, “உனக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா என்கிட்டயே இப்படி பேசுவ..?? இன்னைக்கு உன் கொழுப்பை எல்லாம் கரைக்கிறேன் இருடி,” அப்படின்னு சொல்லிட்டு அவளை அப்படியே தூக்கி பெட்ல போட்டான். அவ கைகள் ரெண்டையும் லாக் பண்ணி, அவ அசைய முடியாத அளவுக்கு அவ மேல விழுந்தான். ஆனா மேகா ஜாலியா விளையாடுற மூட்ல இருந்ததுனால அப்பவும் சிரிச்சுக்கிட்டே, “நீங்கதானே இது என்னன்னு கேட்டீங்க, அதான் டீடைலா சொன்னேன். அதுக்கு ஏன் இப்படி பண்றீங்க..??” அப்படின்னு கேட்டா.
அவ நெத்தியில முட்டுன விஷ்வா, தன் காந்தக் குரல்ல அவ கண்ணை உத்து பார்த்துக்கிட்டே, “நான் உனக்கு மெட்டல் மண்டையனாடி..??” அப்படின்னு கேட்டான்.
“ஆமா, நீங்க தான் ரோபோட் வாய்ஸ்ல கட்டக் குரல்ல கணீர் கணீர்னு பேசுறீங்க. ரோபோட்டுக்கும் ஃபீலிங்ஸ் இருக்காது, உங்களுக்கும் ஃபீலிங்ஸ் இல்ல. அப்படியே இருந்தாலும் அதை எக்ஸ்பிரஸ் பண்ண தெரியாது. பாத்தீங்களா, உங்களை எவ்ளோ டீப்பா அனலைஸ் பண்ணி இந்த நிக்நேம் வச்சிருக்கேன்னு..!! அப்படியே மெதுவா ஸ்லோ மோஷன்ல ‘மெட்டல் மண்டை’… ‘டேய் மெட்டல் மண்டையா’ அப்படின்னு கூப்பிட்டு பாருங்க, உங்களுக்கே பிடிக்கும். அப்புறம் நீங்களே இதையே உங்க அபிஷியல் நேமா மாத்திப்பீங்க..!!” அப்படின்னு மேகா குறும்பா சிரிக்க, “இன்னைக்கு உன்னை கொல்லாம விடமாட்டேண்டி,” அப்படின்னு சொல்லி விஷ்வா அவ மேல பாய்ஞ்சான்.
தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)