அத்தியாயம் 125: ரித்திகாவை முத்தமிட்ட வருண் (பார்ட் 2)
நாராயணன் மருத்துவமனையில்…
நாராயணன் குடும்பத்தினர்கள் மட்டும் அனுமதிக்கப்படும் ஸ்பெஷல் வி. ஐ. பி. வார்ட்டில் ICCU இல் தலைமை மருத்துவர்களின் கண்காணிப்பிற்கு கீழே, மூச்சுப் பேச்சின்றி கிடந்தாள் செண்பகம். சில நொடிகளுக்கு செண்பகத்திற்கு மூச்சே இல்லை. பல்ஸ் ரேட்டும் குறைந்து கொண்டே இருந்தது. செண்பகம் உயிருக்கு போராடி கொண்டு இருக்க, மருத்துவர்களின் குழு அவளை காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டு இருந்தனர்.
விஷ்ணு, வருண், ஹரி, பிராத்தனா, என அனைவரும் சிறு பிள்ளைகள் போல மீண்டும் “அம்மா… அம்மா…!!” என்று சொல்லி கதறிய படி அழுது கொண்டே இருந்தனர். 😭 😭 😭 ஜான்வின் இறப்பிற்கு பின் வருண், இன்று தான் அனைவரின் முன்னிலையிலும் அழுகிறான் என்பதால்; அவனே தன்னுடைய அம்மாவிற்கு குணமாகிவிடும் என்ற நம்பிக்கை இன்றி அழும் போது, மற்றவர்களால் தங்களுடைய அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. பிராத்தனா வருணை கட்டிப்பிடித்துக் கொண்டு, “அப்பா போன மாதிரி அம்மாவும் நம்மளை விட்டுட்டு போய்ட மாட்டாங்கள்ல அண்ணா…!!!” என்று மீண்டும் மீண்டும் அதையே கேட்டுக் கொண்டு இருந்தாள்.
அவர்கள் அனைவரையும் விட அதிக வேதனையில் இருந்தது விஷ்ணு தான். இவர்களை விட அதிகம் செண்பகத்துடன் ஒட்டிக்கொண்டு “அம்மா.. அம்மா..” என்று அவன் தான் சின்னப் பிள்ளையை போல சுற்றிக் கொண்டு இருப்பான். அதனால் தன்னுடைய வயது, தன்னுடைய அந்தஸ்த்து, என அனைத்தையும் மறந்து விட்டு, சின்னப் பையனை போல் ஹரியை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி கதறி அழுதான். 😭 😭 😭
தன்னுடன் பிறந்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நிலையில் இருந்த வருனும், ஹரியுமே, அதிக மன வேதனையில் இருந்ததால், அவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு பதிலாக அவர்களோடு இணைந்து கண்ணீரில் தங்களுடைய வேதனையை கரைக்க முயன்று கொண்டு இருந்தனர். 😭 😭 😭 சிவா, தர்ஷன், ஆதித்யா, சோபியா, ஆராதனா மற்றும் சீதாவின் குடும்பத்தினர்கள் அவர்களை தங்களால் முயன்றவரை ஆறுதல் படுத்த முயற்சித்தனர். விஷ்ணு சிவாவிடம் ஷாலினிக்கும் ரித்திகாவிடம் இந்த தகவலை தெரிவித்து விடும் படி சொன்னான்.
சிவாவிடம் இருந்து அந்த தகவலை தெரிந்து கொண்ட அவர்கள் இருவரும் பதறி அடித்து கொண்டு அடுத்த சில நிமிடங்களிலேயே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். தொடர்ந்து மருத்துவர்கள் செண்பகத்திற்கு சிகிச்சை செய்து கொண்டு இருந்தனர். இப்படியே சில மணி நேரங்கள் கடந்து இருந்தும், மருத்துவர்கள் அந்த அறையை விட்டு வெளியே வராததால், அது அங்கு இருந்த அனைவருக்கும் திக் திக் நிமிடங்கள் ஆக இருந்தது. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ரித்திகாவின் பெற்றோர்கள் கூட அங்கு வந்து இருந்தனர். அவர்களும் கூட செண்பகத்தின் குடும்பத்தினரை சமாதானப்படுத்த தங்களால் முடிந்த வரை முயற்சித்தனர். ஆனால் பயன் ஒன்றும் இல்லை.
ஆனால் இந்த நொடி ஷாலினியும், ரித்திகாவும், அவளுடைய குடும்பமும், செண்பகத்தின் மீது அவர்கள் வைத்து இருக்கும் பாசத்தை நன்றாக புரிந்து கொண்டனர். ஆனால் எப்போதும் கம்பீரமாக அனைவரையும் மிரட்டும் தோரணையில் இருக்கும் வருணை கலங்கிய கண்களுடன் அவர்களால் பார்க்க முடியவில்லை. 🥺 ஆனால் அந்த தாய் இல்லாத இடத்தை ஒருவராலும் நிரப்ப முடியவில்லை.
ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்…
அம்மாவ வாங்க முடியுமா…??? 👪
நீயும் அம்மாவ வாங்க முடியுமா…???
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா…???
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா…
நள்ளிரவு ஒன்று முப்பது மணி…..
அந்த ஐ. சி. சி. யு. அறைக்குள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்த நர்சுகளை நிறுத்தி தன்னுடைய அம்மா எப்படி இருக்கிறார் என்று கேட்டு கேட்டு டயர்ட் ஆகி போய் வருனும் அவனுடைய குடும்பத்தினரும் வெயிட்டிங் ஏரியாவில் அமர்ந்து இருந்தனர். ஏற்கனவே பலவீனமாக இருந்த வருனும், இப்போது மிகவும் பலவீனமாக காணப்பட்டான். அதை கவனித்த ரித்திகாவின் பெற்றோர்கள் தங்களுடைய மகளிடம் சென்று தங்களுடைய வருங்கால மருமகனுக்கு ஆறுதல் சொல்லும் படி சொன்னார்கள்.
ஆனால் ரித்திகாவிற்கு அவனிடம் சென்று பேசவே மிகவும் தயக்கமாக இருந்தது. அவள் இதற்கு முன் பேசி பழகாத ஒருவரிடம் இந்நிலையில் தான் எப்படி சென்று போய் பேச வேண்டும் என்று அவளுக்கு புரியவில்லை. அதனால் அவள் தயக்கத்துடன் அங்கு இருந்த ஷாலினியை பார்த்தாள். அவளோ விஷ்ணுவின் அருகே அமர்ந்து அவனை தன்னால் முடிந்த வரை ஆறுதல் படுத்திக் கொண்டு இருந்தாள். இந்த நேரத்திலும் வைஷாலி அவர்களைப் பார்த்து முறைத்த படி இருந்தாள். 😒 🤨 ஹரியின் அருகே ஆராதனா அமர்ந்திருந்தாள். தன்னுடைய அம்மாவின் அருகே நின்று கொண்டு இருந்த தர்ஷினி, அவர்களை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள். தான் இந்நேரத்தில் இதைப்பற்றி ஏதாவது பேசினால் அது சரியாக இருக்காது என்று நினைத்த சீதா, அமைதியாக இருந்தாள். ரித்திகா பின் மீண்டும் திரும்பி வருனை பார்த்தாள். அவன் எங்கோ எழுந்து சென்று கொண்டு இருந்தான். அதை ரித்திகாவின் அம்மாவும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள் அதனால், “நீதான் அவர கல்யாணம் பண்ணிக்க போற. அன்னைக்கு உனக்கு உடம்பு சரி இல்லாதப்ப, அவரு இங்கே இருந்து உன்னை பாத்துக்கிட்டாரு. நீ இப்படி அவர் கிட்ட பேசாம இருந்தா நல்லா இருக்காது. அப்புறம் இங்க நம்ம எதுக்கு வந்தோம்..?? சும்மா நின்னு வேடிக்கை பாக்குறதுக்கா…!!! போய் அவர் கிட்ட பேசு. அவர் தனியா தானே போறாரு… போ… டி.” என்று சொல்லி ரித்திகாவை வற்புறுத்தி வருணின் பின்னே அனுப்பி வைத்தாள்.
ஏனென்று தெரியவில்லை ரித்திகா விற்கும் வருனை இந்த நிலையில் பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக தான் இருந்தது. 😟 அதனால் பதட்டத்துடன் அவனை பின் தொடர்ந்து சென்றாள். அவளுடைய இதயம் வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது. ❤️ வருணிற்கு அந்த மருத்துவமனைக்குள் இருப்பதே வெறுப்பாகவும், மூச்சு முட்டுவதைப் போலவும், இருந்தது. அவனுடைய ஆழ்மனதில் இருந்த பாரம் அவன் உயிர் வரை சென்று அவனை அழுத்திக் கொள்வதைப் போல் உணர்ந்த வருண், லிப்டில் மொட்டை மாடிக்கு சென்றான். ரித்திகாவும் அந்த லிப்டில் ஏறுவதற்குள், அது மூடிவிட்டது. ஆனால், அவன் எந்த பட்டனை அழுத்தினான் என்று அவள் நன்கு கவனித்து இருந்தாள். அதனால் அந்த லிப்ட்டின் கதவு மீண்டும் திறக்கப்பட்டவுடன், அதே பட்டனை அவளும் அழுத்தினாள். அந்த லிஃப்ட் அவளை மொட்டை மாடிக்கு கூட்டி சென்றது.
அந்த விசாலமான மொட்டை மாடியில் ஆங்காங்கே சில டியூப் லைட்டுகள் இருந்தாலும், சில இடங்கள் இருட்டாகவே இருந்தது. “இவ்ளோ இருட்டா இருக்கு இவர் வேற எங்க போனாருன்னு தெரியலயே…!!!” என்று நினைத்த படியே வருணை ரித்திகா தேடிக் கொண்டு இருந்தாள். அவளுடைய கண்கள் அங்கும் இங்கும் அலைபாயுந்தன. 👀 அந்த நள்ளிரவு வேலையில்… சில்லென்று வீசும் தென்றல் காற்றும், இரவின் சொந்தங்களான இருளும், நிசப்தமும், அவளை பயமுறுத்தியது. இப்போது “வருண்” என்று அவனுடைய பெயரைச் சொல்லி அவளால் அவனை அழைக்க முடியாது. அவனை வேறு என்ன சொல்லி அழைப்பது என்றும் அவளுக்கு தெரியவில்லை. அதனால் திக்கத்தவர்களுக்கு தெய்வம் தான் துணை என்று நினைத்த ரித்திகா“முருகா.. முருகா.. முருகா…” என்று மனதிற்குள், சொல்லி கொண்டே தன்னுடைய கண்களால் வருணை தேடிக் கொண்டு இருந்தாள்.
அப்போது தூரத்தில் ஏதோ ஒரு கருப்பு உருவம் நிற்பது போல் அவளுடைய கண்களுக்கு தெரிந்தது. அங்கு இருந்த இருட்டில் முதலில் அது யாரோ என்று நினைத்து பயந்த ரித்திகாவிற்கு , பின்பு தான் வருண் இன்று கருப்பு கோர்ட் சூட் அணிந்து இருந்தது ஞாபகத்திற்கு வந்தது. இந்த உருவம் கண்டிப்பாக வருணாக தான் இருக்க கூடும் என்று நினைத்த ரித்திகா; சிறு பயத்துடனும் பதட்டத்துடனும் மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அங்கே சென்றாள். அருகில் வர வர அது வருண் தான் என்று அவளால் உறுதி செய்ய முடிந்தது. ஆனால் அது அவளுக்கு நிம்மதியை தருவதற்கு பதிலாக, இன்னும் அவளுடைய பதட்டத்தை அதிகரித்தது. 😐 😟 “ஐயையோ…!!! ஏதோ ஒரு வேகத்துல இவ்ளோ தூரம் வந்துட்டேன். ஆனா இவர பாத்தாலே பயமா இருக்கே… இதுல இவர் கிட்ட போய் எப்படி பேசுறது….?? இவர் கோவக்காரர்ன்னு நிறைய பேர் சொல்லி இருக்காங்களே…!!! இப்ப நம்ம போய் இவரை கூப்பிட்டா நானும் இங்க தனியா இருக்கலாம்ன்னு வந்தேன். நீ என்ன டிஸ்டர்ப் பண்றதுக்கு இங்க வந்தியான்னு கேட்டு பட்டுன்னு அடிச்சுட்ட என்ன பண்றது…???” என்று பலவாறு யோசித்து கொண்டு இருந்தாள் ரித்திகா. அப்போது காற்று பலமாக அடிக்க தொடங்கியது. ஒரு பெரிய ஆளையே பிடித்து தள்ளிவிடும் அளவிற்கு அசுரத்தனமாக காற்று வீசியது. அந்த காற்றில் ரித்திகா சற்று பயந்து விட்டாள்.
வருண் சுவற்றின் கை பிடியை பிடித்த படி அதில் சாய்ந்து கொண்டு, அந்த ஆளுமை நிறைந்த இருளுக்குள்ளும், காற்றுக்குள்ளும், தன்னுடைய வேதனையை தொலைத்து விட நினைத்து சத்தம் இன்றி கண்ணீர் சிந்தி கொண்டு இருந்தான். 😭 😭 இப்போது செண்பகத்தின் உடல் நிலை மோசமாக இருப்பது மட்டுமல்லாமல், அவனுடைய வாழ்வில் நடந்த அனைத்து துக்கம் நிறைந்த சம்பவங்களும் அவனுடைய நினைவிற்கு வந்து அவனை மனதளவில் பெருமளவில் பாதித்தது. 💔 😥 😥 அதனால் உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக மீண்டும் அவனுக்கு மயக்கம் வருவதைப் போல் இருந்தது. அவனுக்கு தன்னுடைய தலை பூமியை விட வேகமாக சுழலுவதைப் போல் இருக்க, அவன் இருக்கும் இடத்தை பற்றி உணர்ந்தவன்; தனக்கு நினைவு தப்புவதற்குள் தான் ஒரு பத்திரமான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவனுடைய உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை.
அங்கு அடித்துக் கொண்டு இருந்த பலமான காற்றினால் ரித்திகா அணிந்து இருந்த சுடிதாரின் துப்பட்டா, காற்றில் அங்கும் இங்கும் பறந்து கொண்டு இருந்தது. அதை ஒரு வழியாக இழுத்து பிடித்த ரித்திகா அப்போது தான் தன் முன் இருந்த வருணை கவனித்தாள். அவன் தலைச்சுற்றலில் அங்கும் இங்கும் ஆடி கொண்டு இருப்பது, அவன் ஏதோ போதையில் ஆடுவதைப் போல் ரித்திகாவிற்கு முதலில் தோன்றியது. பின் ஒருவேளை அங்கு அடிக்கும் காற்றின் காரணமாகத்தான் இவன் தள்ளாடுகிறானோ என்று நினைத்த ரித்திகா, “இவர் என்ன நம்மள விடவா வெயிட் கம்மியா இருக்காரு…?? சேச்சா இருக்காதே…!!! நம்மளே இவ்ளோ காத்துலயும் ஸ்ட்ராங்கா நிக்கும் போது, இவரு ஏன் இப்படி ஆடிட்டு இருக்காரு..??? ஐய்யையோ…!! எட்ஜுல வேற போய் நிக்கிறாரே… கீழ விழுந்துட்டா என்ன பண்றது…???” என்று நினைத்த பதறிய ரித்திகா, வேகமாக வருணின் அருகே சென்றாள். அப்போது வருணிற்கு தலை சுற்றல் மிகவும் அதிகமாக இருந்ததால், கீழே போவதை போல் முன் பக்கம் சாய்ந்தான். அதை சரியாக கவனித்த ரித்திகா, அவனை தன் பக்கம் இழுத்தாள்.
அப்போது ரித்திகாவின் கழுத்தில் இருந்த அவளுடைய துப்பட்டா, காற்றில் பறந்து வருணின் முகத்தில் சென்று விழுந்தது. அது அவனுடைய முகத்தை மறைத்து விட, தடுமாறிய வருண் ரித்திகாவின் மீது விழ, ரித்திகாவோ தரையில் விழப்போனாள். அவனுக்கு இருந்த அரைகுறை சுய நினைவிழும் தன்னை யாரோ ஒரு பெண் காப்பாற்றியதையும்; இப்போது தான் அவள் மேல் விழுவதால் அவள் தரையில் விழப்போவதையும், சுதாரித்துக் கொண்ட வருண், ஒரு கையால் ரித்திகாவை இறுக்கமாக பிடித்துக் கொண்டவன், தன்னுடைய மற்றொரு கையை அவளுடைய தலைக்கு அடியில் பாதுகாப்பாக வைத்த படி அவள் மீது விழுந்தான். இவை அனைத்தும் ஒரு நொடியில் நடந்து முடிந்திருக்க, ரித்திகாவின் மீது படர்ந்திருந்த வருணின் உதடுகள் அவளுடைய உதட்டை சந்தித்தது. 😍 😘 ஆனால் அவர்களுடைய அந்த முதல் இதழ் முத்தத்தை முழுமை அடைய விடாமல், ரித்திகாவின் துப்பட்டா அவர்களின் இடையே திரையாக இருந்து சதி செய்து விட்டது. 😘 👩❤️💋👨 வருணிக்கு அந்தப் பெண் யார் என்று தெரியவில்லை என்றாலும் ரித்திகாவிற்கு அவன் யாரென்று தெரியுமே….!! அதனால், ரித்திகா உறைந்து போய்விட்டாள். அவள் அந்த ஒரு நொடியில் இருந்து வெளியே வர முடியாமல் அதிலேயே சிறை பட்டு கிடக்க, அங்கு பரவி கிடந்த குளிர் அவளுடைய தசைகள் வழியாக, அவளுடைய எலும்புகளுக்குள் கூட ஊடுருவி விட்டதைப் போல்; இதுவரை தான் உணர்ந்திடாத பல ரசாயன மாற்றங்களை🥶 தன்னுள் உணர்ந்தாள் ரித்திகா. 💗 வருனும் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் இருந்தான். ரித்திகாவின் அருகாமை அவனுடைய வேதனைகள் அனைத்தையும் தீர்க்கும் அருமருந்தாக அவனுக்கு தோன்றியது. அவனுடைய கண்களுக்கு தன் முன்னே இருப்பவள், யார் என்று தெரியவில்லை. ஆனால் அவனுடைய மனதிற்கு அவள் மிகவும் பரிச்சயமானவளாக, நெருக்கமானவளாக தோன்றியது.
நமக்கு வேண்டும் என்றால் நமக்கானவர்கள் யார் என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய இதயம் அதற்கான இணையை தானே சுலபமாக கண்டுபிடித்து விடுகிறது. ❤️ சீறிப்பாயும் காற்றைக் கூட எதற்குள்ளாவது சிறிது நேரம் அடைத்து விடலாம். ஆனால் பயணித்து இரு நெஞ்சங்களை இணைக்கும் நம் இதயங்களின் அலை வரிசையை அணை போட்டா தடுக்க முடியும்..?? அது யார் தடுத்தாலும், தனக்கான பாதையில்… தடை இன்றி பயணித்துக் கொண்டே இருக்கும்…. ❤️ இக்கணத்தில் இருந்து வருண் மற்றும் ரித்திகா காதல் பயணம் தொடர்கிறது….. ❤️💫🌟✨
வாருங்கள் நாமும் சேர்ந்து அவர்களுடன் பயணிப்போம்….!!!
❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
நேசம் தொடரும்
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)