Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 51

மூர்கனின் காதலி CH 51

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 51

ஏற்கனவே விஷ்வாவோட ஆளுமை மேகாவோட ஈர உதடுகளை கடிச்சி சுவைக்கத் துடிச்சிகிட்டு இருக்க, சுடிதார் ஷால் கழுத்துல சுருண்டு கிடந்ததால, அவளோட அழகு அரைகுறையா அவனுக்குத் தெரிஞ்சி மேலும் மேலும் அவனைத் தூண்டி விட்டுச்சு.

அதனால பெருமூச்சு விட்ட விஷ்வா, “இதுக்கு மேல என்னால முடியாது…!!”ன்னு நினைச்சி முத்தம் குடுக்கறதுக்காக அவளோட உதடுகளை நோக்கி குனிஞ்சான். அத எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருந்த மேகா, அவனுக்கு தன் கண்ண மூடி தலைய சாய்ச்சு சம்மதம் குடுக்க, உதடுகள் ரெண்டும் இதோ தொட்டுடப் போகுதுங்கற நேரத்துல சட்டென தனக்கு பக்கத்துல இருந்த விஷ்வாவோட முகத்தப் பார்த்து, ஆஆஆஅஅச்ச்ச்..!! ‌ன்னு தும்புனா மேகா.

அதுல அவனுக்கு மொத்தமா புஸ்ஸுன்னு போச்சு. “போடி சதிகாரி.. எனக்கு ரொமான்ஸ் எல்லாம் தெரியாத சப்ஜெக்ட் டி. நானே இப்பதான் ஏதோ ட்ரை பண்ணுனேன். அதையும் அச்சு.. லொச்சின்னு கெடுத்து விட்டுட்டா. பாவி.. பாவி..!!”ன்னு தனக்குள்ள புலம்புன விஷ்வா, அவள தண்ணிக்குள்ள தள்ளிவிட்டுட்டு தன் தலைமுடி ஈரத்தை தட்டிக்கிட்டே படிகள்ல ஏறி காருக்கு போய்ட்டான்.

தண்ணிக் குளத்துல இருந்து வெளிய வந்த மேகா, தன் முகத்துல விழுந்து கிடந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு “இப்ப இவரு எதுக்கு என் மேல கோவப்படுறாரு..?? நான் இவரு முகத்துக்கிட்டயே தும்முனதுக்கா.. இல்ல.. அவரு கிஸ் பண்ண வரும்போது நானே அதைக் கெடுத்து விட்டதுக்கா..?? வெயிட்.. வெயிட்.. முதல்ல இவரு என்னைக் கிஸ் பண்ணவா வந்தாரு..?? வாய்ப்பே இல்லையே.. இவரு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாரே..!!”ன்னு நினைச்சவ, தன் நெத்திப்பொட்டுல கை வெச்சி நடந்தத கண்ண மூடி ‘ரிவைண்ட்’ பண்ணிப் பாத்தா.

“அட ஆமா… ரோபோர்ட்டுக்கு உயிர் வந்திருச்சு. இல்ல…இல்ல.. ஃபீலிங்ஸ் வந்திருச்சுடோய்..!!”ன்னு தனக்குள்ளேயே சொல்லிக் கிட்ட மேகா, வெட்கத்தோட சிரிச்ச முகமா ‌“இரும்பிலே ஒரு இருதயம் மூளைக்குதா..??”ன்னு பாடிக்கிட்டே படியேறி மேல போனவ, பாட்டோட அடுத்த வரிய பாட தைரியம் இல்லாம “எதுக்கு என்னைத் தண்ணிக்குள்ள தள்ளிவிட்டு வந்தீங்க…??”ன்னு மார்புக்கு குறுக்க தன் கைகள கட்டிக்கிட்டு கேட்டா.‌ 

“ம்ம்ம்.. நீ நல்லா தின்னு தின்னு எருமை மாடு மாதிரி வெயிட்டா இருக்க. என்னால உன்ன பேலன்ஸ் பண்ணி புடிக்க முடியல.”ன்னு நக்கலா சொன்ன விஷ்வா, காருக்குப் போய் டிரைவர் சீட்ல உக்காந்தான்.

வேகமாப் போய் அவனுக்குப் பக்கத்துல இருந்த சீட்ல உக்காந்த மேகா, காரோட கதவ வேகமா அடிச்சிச் சாத்த துடிச்ச தன் கைய “வேணாம்! இந்தக் காருக்கு ஏதாவது ஆச்சுன்னா இவரு உடனே ஃபீல் ஆயிடுவாரு…!!”ன்னு நினைச்சி கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டு, சாதாரணமாக டோரை லாக் செஞ்சவ, அவன முறைச்சிப் பாத்துட்டு தன்னைத்தானே கண்ணால மேலும் கீழும் ஸ்கேன் செஞ்சா.

“இப்படி எல்லாம் என்னப் பாத்து முறைக்கிற வேலைய வெச்சுக்காத. கண்ண நோண்டிடுவேன்.”ன்னு தன்னோட ரெண்டு விரல்களால ஆக்‌ஷனோட செஞ்சுக் காட்டிச் சொன்ன விஷ்வா, காரை யு-டர்ன் போட்டு ‌அரண்மனைய நோக்கிப் போனான். 

“என்ன மிரட்டுறீங்களா..?? நான் உங்களுக்கு வெயிட்டா இருக்கனா..?? நீங்க ஜிம் பாடிதானே..‌ நான் ஜஸ்ட் 52 கிலோதான் இருக்கேன். என்னைத் தூக்க முடியாதா உங்களால..?? அதுவும் இத்தனை நாளா என்னமோ நீங்க சோறு போட்டு என்ன வளர்த்த மாதிரி.. அப்படியே நக்கலா தின்னு தின்னு நான் வெயிட்டா இருக்கேன்னு சொல்றீங்க..?? உங்களுக்கு அவ்ளோ கஷ்டமா இருந்தா, எலும்புக் கூடு மேல தோல போத்தின மாதிரி ‌ சிக்கென இருக்கிறவளாப் போய் எவளையாவது பிடிங்க.”ன்னு சொல்லிட்டு தன் உதட்ட சுழிச்சா மேகா. ‌‌

கார் ஓட்டிக்கிட்டு இருந்த விஷ்வா கூலா “வேணாம் வேணாம். வெயிட்டா இருந்தாலும், நீ கரெக்ட்டா தான் இருக்க. நான் தான் எல்லாத்தையும் பாத்துட்டனே.. எவ்ரிதிங் இஸ் பெர்ஃபெக்ட்.”ன்னு சொல்ல, அவன் எதை மனசுல வெச்சி இப்படி சொல்றான்ன்னு புரிஞ்சிகிட்டு மேகா, “அட வெக்கங்கெட்ட வெங்காயமே.. எல்லாத்தையும் இப்படியாடா ஃபிரேங்கா சொல்லுவ..??”ன்னு நினைக்க, அவளுக்குத் தான் ஒரே பப்பி ஷேமாக இருந்துச்சு. 

அதனால அவ வெட்கத்தோட தன் முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக்க, “இவ வாய மூட வைக்கிறது கொஞ்சம் ஈஸியான வேலைதான் போலையே..!!”ன்னு நினைச்சி தனக்குள்ள சிரிச்சிக்கிட்டான் விஷ்வா.

மேகாவோட வீட்டுல..

பஞ்சாயத்துக்குப் போயிருந்த எல்லாரும் வீட்டுக்கு வந்துட்டாங்க. விஷ்வாவும் மேகாவும் மட்டும் இன்னும் வராததால “எங்க தம்பி அவங்க ரெண்டு பேரையும் மட்டும் காணோம்..??”ன்னு மகேஷ்கிட்ட கேட்டாரு காளீஸ்வரன்.

“சார்.. மேகா தான் பாஸ எங்கேயோ தனியா கூட்டிட்டுப் போனாங்க. அவரு எங்கள பின்னாடி வரக்கூடாதுன்னு சொல்லிட்டாரு. அதான் நாங்களும் அவங்க தனியா இருக்கட்டுமேனு விட்டுட்டோம்.”ன்னா மகேஷ்.

அப்போ வாசல்ல வந்து நின்னுச்சுக் கார். அதைப் பார்த்துட்டு அவங்க வீட்டுக்குள்ள குடுகுடுன்னு ஓடுன வெண்ணிலா “அத்தையும் மாமாவும் வந்துட்டாங்க..!! அரண்மனைக்கு முன்னாடி அவங்க கார் நிக்குது.”ன்னு சொன்னவுடனே, காளீஸ்வரனோட தயாளனும், அரவிந்தும் வெளிய போய் பாத்தாங்க. தொப்பலா நனைஞ்சிருந்த அவங்க ரெண்டு பேரும் யார் கண்ணுலயும் படக்கூடாதுன்னு நினைச்சி அரண்மனைக்குள்ள போக, “நில்லுங்க..!!”ன்னாரு காளீஸ்வரன்.

அதனால நின்னு திரும்பின விஷ்வாவும் மேகாவும், கையும் களவுமா மாட்டுன திருடனப் போல ஸ்லோ மோஷன்ல திரும்பி அவங்களப் பார்க்க, மேல அண்ணாந்து பாத்த வெண்ணிலா “இங்க வெயில் பல்ல காட்டிகிட்டு அடிக்குது. உங்களுக்கு மட்டும் தனியா மழை பெஞ்சுதா..?? நீங்க மட்டும் எப்படி நனைஞ்சீங்க..??‌‌ அதுவும் கார்ல தானே வந்தீங்க..!!”ன்னு கேட்டா.

“அவங்க அப்பாவே சும்மா இருந்தாலும் இவ சும்மா இருக்க மாட்டா போல. வாயாடி..!!”ன்னு நினைச்ச அரவிந்த் அவங்கள வேடிக்கை பார்க்க, “அதானே! எப்படி நனைஞ்சீங்க நீங்க..??”ன்னு கேட்டாரு காளீஸ்வரன்.

தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured