அத்தியாயம் 24
ஆர்வமாக அவள் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்த ரிஷிக்கு அவள் சொன்ன பதிலைக் கேட்டவுடன் புஷ் என்று போய்விட்டது. “நான் உன் கிட்ட உன் பேரு என்னனு கேட்டா நீ பதிலுக்கு அதே கொஸ்டினை என் கிட்ட கேக்குறியா?
உன் பேரு என்னன்னு தெரிஞ்சா நான் எதுக்கு டி அத உன் கிட்ட கேட்க போறேன்?” என்று அவன் பொறுமையின்றி கேட்க,
அதுவரை ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்த நித்திலா “ம்ம்.. ஞாபகம் வந்திருச்சு!” என்று சத்தமாக சொன்னாள்.
அதுவரை நடக்கும் அனைத்தையும் ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த திலிப் வேகமாக அவள் அருகில் சென்று, “ஞாபகம் வந்திருச்சா? உனக்கு என்ன ஞாபகம் வந்துச்சுன்னு சொல்லு.” என்று அவளிடம் ஆர்வமாக கேட்க,
“என் பேரு அம்முன்னு நினைக்கிறேன். எங்க அம்மா என்னை சின்ன வயசுல அப்படித்தான் கூப்பிடுவாங்க.” என்றாள் நித்திலா.
“என்னது அம்முவா?” என்று ரிஷி அவளிடம் கேட்க, “மோஸ்ட்லி யாரும் ஒரிஜினல் நேம் அம்முனு வைக்க மாட்டாங்க பாஸ்.
எனக்கு தெரிஞ்சு இந்த பொண்ணு அவங்க அம்மா இவளை செல்லமா கூப்பிடுறத ஞாபகப்படுத்தி சொல்றா.” என்றான் திலீப்.
“அப்ப நாளைக்குள்ள இவளை பத்தி நம்ம எப்படி டா தெரிஞ்சுக்கிறது?” என்று ரிஷி சோர்வான குரலில் கேட்க,
“நீங்க கவலையை விடுங்க பாஸ். இந்த பொண்ணோட ஃபோட்டோ என் கிட்ட நிறைய இருக்கு.
அதை வச்சு இவ யாருன்னு நாளைக்குள்ள நான் கண்டுபிடிக்க முடியுமான்னு பார்க்கிறேன்.
நீங்க கௌதம் சார் கிட்ட பேசணும்னு சொன்னீங்க இல்ல.. முதல்ல அவரை வரச் சொல்லி இந்த பொண்ணு ஏன் இப்படி இருக்கான்னு விசாரிங்க.
எனக்கு என்னமோ இவ நெஜமாவே இப்படி எல்லாம் பிஹேவ் பண்றாளா, இல்ல நம்ம கிட்ட இன்னசெண்ட் மாதிரி நடிக்கிறாளானு டவுட்டாவே இருக்கு.” என்றான் திலீப்.
நித்திலாவின் முகத்தை உற்றுப் பார்த்த ரிஷி “எனக்கு அப்படி தோணல. நீ உன் சைட்ல இவளை பத்தி என்ன என்ன இன்பர்மேஷன் கலெக்ட் பண்ண முடியுதுன்னு பாரு.
நான் கௌதம் கிட்ட பேசுறேன்.” என்று சொல்ல, “ஓகே பாஸ்!” என்ற திலீப் அந்த ரூமில் இருந்து வெளியேறினான்.
சில நிமிடங்களில் அங்கே நிரஞ்சனா கையில் டாக்டர் சொன்ன உணவுகளை எல்லாம் தயாரித்து எடுத்துக் கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தாள். அப்போதும் நித்திலா ரிஷிகிடம் லூசுத்தனமாக ஏதோ பேசிக் கொண்டிருக்க,
அதைக் கேட்டு அவன் சிரித்துக் கொண்டிருந்தான். சாப்பாடு வந்தவுடன் அதைக் கண்டு குஷியான நித்திலா,
“ஐயா ஜாலி! சாப்பாடு வந்துருச்சு. டிம்பிள் உனக்கும் பசிக்கும்ல.. நீயும் வா நம்ம சேர்ந்து சாப்பிடலாம்.” என்றாள்.
அவளை சாப்பிட வைப்பதற்காக அதற்கு சரி என்று தலையாட்டிய ரிஷி அவளுக்கு ஊட்டி விட்டபடி தானும் அவளுடன் சேர்ந்து அதே பத்திய உணவை சாப்பிட்டான்.
அங்கே வந்த டாக்டர் கௌதம் நித்திலாவை சோதித்து பார்த்துவிட்டு பின் ஏற்கனவே அவளை அட்மிட் செய்திருந்த ஹாஸ்பிடலில் அவளுக்கு எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டை செக் செய்து பார்த்தான்.
அனைத்தும் முடிந்தவுடன் ரிசியை தனியாக அழைத்துச் சென்று, “அந்த பொண்ணு நடிக்கல டா.
நெஜமாவே அவங்க தலையில அடிபட்டதுல மெண்டலி டிஸ்டர்ப் ஆகி இருக்காங்க.
அதான் இப்படி wired-ஆ பிஹேவ் பண்ணிட்டு இருக்காங்க. அவங்களோட ரிப்போர்ட்ஸை செக் பண்ணி பார்த்ததுல ரீசண்டா ஆன ஆக்சிடென்ட்ல அவங்களுக்கு காயப்பட்டதை விட இதுக்கு முன்னாடி நடந்த ஏதோ ஒரு பெரிய ஆக்சிடென்ட்ல காயப்பட்டதுனால தான் அவங்களுக்கு இப்படி ஆயிருக்குன்னு தெரியுது.
ஆனா அந்த ஆக்சிடன்ட்டும் நடந்து ரொம்ப நாள் எல்லாம் இருக்காது. அவங்க அதுல இருந்து ரெக்கவர் ஆகி மேக்ஸிமம் டூ மன்த்ஸ் இருக்கலாம்.
அதுக்குள்ள இப்ப இன்னொரு ஆக்சிடென்ட் ஆனதுனால, அவங்களோட பிகேவியர் இந்த அளவுக்கு சேஞ்ச் ஆயிருக்கு.
நீ அவங்கள ரொம்ப நாளா தெரியும்னு சொல்ற. அப்ப அவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆனது உனக்கு தெரியாதா?
அந்த ஆக்சிடென்ட் எப்ப நடந்துச்சு? அவங்களோட பழைய ரிப்போர்ட் இருக்கா உன் கிட்ட?
அது இருந்துச்சுன்னா, ஈஸியா அவங்களுக்கு என்ன பிராப்ளம் என்னால கண்டுபிடிச்சு உன் கிட்ட சொல்ல முடியும்.” என்றான் கெளதம்.
“ஒரு பொய்யை சமாளிக்கிறதுக்கு அடுத்தடுத்து எத்தனை பொய் சொல்ல வேண்டியதா இருக்கே!” என்று நினைத்து பெருமூச்சு விட ரிசி,
“நான் அவ கிட்ட ரெகுலரா எல்லாம் பேசிக்கிட்டே இருக்க மாட்டேன் கௌதம்.
நடுவுல அவ ரெண்டு மூணு மாசம் என் கிட்ட பேசவே இல்ல. அந்த சைலன்ஸ்ல தான் நான் அவளைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் நானே நிரஞ்சனாவை காண்டாக்ட் பண்ணி இவளை கூட்டிட்டு வாங்க இவ கிட்ட நான் பேசணும்னு சொன்னேன்.
அதுக்குள்ள இவளுக்கு இப்படி ஆயிடுச்சு. இதுக்கு முன்னாடி இவ வேற ஏதோ ஊர்ல வொர்க் பண்ணிட்டு இருந்திருக்கா.
சோ நிரஞ்சனாவுக்கே கூட நித்திலாவுக்கு முன்னாடி இப்படி ஆனதெல்லாம் தெரியாதுன்னு தான் நினைக்கிறேன்.
பிகாஸ் அப்படி நிரஞ்சனாவுக்கு தெரிஞ்சிருந்தா எனக்கு கண்டிப்பா நித்திலா என்று மற்றவர்களால் பெயர் சூட்டப்பட்ட அந்த மர்ம பெண் இதுவரையிலும் அவளைப் பற்றி எதையும் சொல்லாததால் இப்போது தங்களை கண்டு அவள் பயப்படவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட ரிஷி மெல்ல அவளிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.
“இப்ப நீ எங்க கூட ஃபிரண்ட் ஆயிட்டியா? நீ சொல்ற அந்த குண்டு ஆன்ட்டி இங்க வர மாட்டாங்க.
நாங்க அவங்க கிட்ட இருந்து உன்னை பத்திரமா கூட்டிட்டு வந்துட்டோம். இனிமே நீ எங்க கூடவே இருப்பியா?” என்று அவன் கேட்க,
அவன் கையை பிடித்துக் கொண்டிருந்த நித்திலா “நான் இங்க இருந்தா நீ என்ன நல்லா பாத்துகுவியா டிம்பிள்?” என்று அன்புடன் அவன் கண்களை பார்த்து கேட்டாள்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)