Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 18

மூர்கனின் காதலி CH 18

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 18 

“நான் என்ன கேட்டா.. இவங்க என்ன கேக்குறாங்க..!! மொத்தத்துல அக்காவும் தம்பியும் ஒரே மாதிரி தான் இருக்காங்க. ரெண்டு பேருமே ரொம்ப உஷாருதான்.” னு நினைச்ச மேகா, “ச்ச்ச்.. உங்க தம்பியும் இப்படித்தான் என்கிட்ட கேட்டாரு. நான் எல்லா உண்மையையும் சொல்லியும் அவர் என்னை நம்பல. இப்போ எங்க வீட்ல அந்த நியூஸப் பாத்துட்டு பெரிய பிரச்சனையாயி எல்லாரும் கிளம்பி இங்க வந்துக்கிட்டு இருக்காங்க. இப்ப என்ன பண்றதுன்னு எனக்குத் தெரியல. இப்போ உங்ககிட்டயும் நான் எல்லாத்தையும் சொல்றேன். அடீஸ்ட் நீங்களாவது என்ன நம்புங்க.” ன்னவள், விஷ்வா கிட்ட சொல்லாம விட்ட தன்னோட கதையையும் சேர்த்துச் சொல்லி லாஸ்ட்டா அவ வசந்திக்கு கால் செஞ்சு பேசினது வரை நடந்த எல்லாத்தையும் மறைக்காம சொன்னா.

விஷ்வாவுக்கு மருந்து போட்டுட்டு மேகா பேசும்போது அவளோட கண்ணு, பாடி லாங்குவேஜ்னு எல்லாத்தையும் உன்னிப்பா கவனிச்ச சௌபர்ணிகா “ஓகே, உன் ஃபோனக் குடு.” னு கேட்டா. “ஓஹோ cross verificationஆ பண்ணுங்க பண்ணுங்க…!!” னு நினைச்ச மேகா எதுவும் சொல்லாம தன் மொபைல் ஃபோன அன்லாக் செஞ்சு அவ கிட்ட கொடுத்தா.

“ஆபீஸ்ல இருந்து தானே இங்க வந்திருப்பீங்க.. லேப்டாப் இருக்கா உங்ககிட்ட..??” னு மகேஷ்கிட்ட சௌபர்ணிகா கேட்க, “இருக்கு அக்கா. இருங்க எடுத்துட்டு வரேன்.” னு சொல்லிட்டுப் போய் தன்னோட ரூம்ல இருந்த லேப்டாப்பக் கொண்டு வந்து அவ கிட்ட கொடுத்தான். மேகாவோட ஃபோன நோண்டிக்கிட்டு இருந்த சௌபர்ணிகா அத லேப்டாப் கூட கனெக்ட் செஞ்சு அவ சொல்றது உண்மையா, இல்ல இவ ஆதித்யாவோட சேர்ந்துக்கிட்டு தன் தம்பிக்கு எதிரா வேலை செய்ய வந்திருக்காளான்னு செக் பண்ணா.

“எவ்வளவு தேடிப் பார்த்தாலும் இதுல தப்பா எதுவும் இல்ல. இவ என்ன சொன்னாளோ அதுதான் இருக்கு. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் இவளும் ஆதித்யாவும் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. அந்த டைம்ல இருந்து இவங்க பேசின எல்லாத்தையும் இவ பத்திரமா வெச்சிருக்கா..!! Family backgroundம் கரெக்ட்டாதான் இருக்கு. இவளப் பார்க்கவும் தப்பானவ மாதிரி தெரியல.” னு நினைச்ச சௌபர்ணிகா, “நீ எக்ஸ்ட்ரா வேற ஏதாவது மொபைல் ஃபோன் வெச்சிருக்கியா..??” னு கேட்க, “நோ மேம்.” ன்னா மேகா.

“Okay Fine. நீ விஷ்வாவக் கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்கியா…??” னு சௌபர்ணிகா கேட்க, “அதான் சொன்னேன் மேம்.. எங்க வீட்ல தெரிஞ்சு பிரச்சனையாயிடுச்சுன்னு.. அப்புறம் எப்படி இப்படிக் கேக்குறீங்க..??” னு தயக்கத்தோட கேட்டா மேகா. 

“நான் கேட்டத நீ சரியா கவனிக்கலன்னு நினைக்கிறேன். நீ விஷ்வாவக் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு நான் கேட்கல. Because யார் தடுத்தாலும் இந்த மேரேஜ் நடக்கும். நீ அதுக்கு ரெடியா இல்லன்னாலும் உன்ன நீயே மெண்டலி prepare பண்ணிக்கோ. என் தம்பி பார்க்கிறதுக்குத்தான் கொஞ்சம் டிஃபரண்டா நீ சொன்ன மாதிரி wierdஆ இருப்பான். But trust me, அவன் உன்ன நல்லாப் பாத்துக்குவான்.” ன்னா சௌபர்ணிகா.

“எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ணிட்டீங்க. அப்புறம் நான் என்ன சொல்றது..?? என் லைஃப்ல ஏதோ பெருசா நடக்கப்போகுதுன்னு மட்டும் எனக்கு நல்லாத் தெரியுது.” னு நினைச்ச மேகா ஒருவித பயத்தோடயே இருக்க, “அப்புறம்.. நீ என் தம்பியப் பத்தி கேட்டல.. இப்ப சொல்றேன். உன்னோட future husbandஐ பத்தி நீ கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.” ன்ன சௌபர்ணிகா மேகாவோட கையப் பிடிச்சு அழைச்சிட்டுப் போய் அவ கூட சோஃபால உட்கார்ந்தா. ஆர்வமான முகத்தோட அவளப் பார்த்தா மேகா.

“எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடுவுல என்ன பிரச்சனைன்னு எங்களுக்குத் தெரியாது. ஆனா அதுல மெண்டலி எங்க அம்மா ரொம்ப affect ஆயிட்டாங்க. நான் கொஞ்சம் பெரிய பொண்ணானதுக்கப்புறம் எங்க அம்மா என்ன நினைச்சாங்கன்னு தெரியல என்ன எங்க பாட்டி வீட்ல கொண்டுபோய் விட்டுட்டாங்க. 

நான் அங்க போனதுக்கு அப்பறம்தான் என் தம்பிங்க விஜயும் விஷ்வாவும் பொறந்தாங்க. அதனால எப்பயாவது அவங்க பாட்டி வீட்டுக்கு வரும்போதுதான் நாங்க எல்லாம் மீட் பண்ணிக்கவே முடியும். அப்படியே டேஸ் போய்க்கிட்டு இருந்துச்சு.

ஒரு டைம்க்கு மேல எங்க அம்மா ரொம்ப mentally sick ஆகிட்டாங்க. எந்த அளவுக்குன்னா.. அவங்க சொந்தப் பசங்கள அவங்களே டெய்லியும் அடிச்சு டார்ச்சர் பண்ணி அவங்களக் கொலை பண்ற அளவுக்குப் போனாங்க. அதனால எங்க அப்பா அவங்கள மெண்டல் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாரு.

எங்க அம்மா மேல இருந்த பயத்துல விஷ்வா பொண்ணுங்களையே வெறுக்க ஆரம்பிச்சான். எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் எங்க அம்மான்னு நினைச்சு ரொம்ப பயப்படுவான். ஆனா விஷ்வா எப்பவும் நம்மகூட இருப்பான் தைரியத்துல விஜய் நார்மலா இருந்தான். அவன் என்கிட்ட க்ளோஸா இருந்தான். பட் விஷ்வா சொந்த அக்கா என்னையே பார்த்துப் பயந்து என்ன அவாய்ட் பண்ண ஆரம்பிச்சுட்டான். 

அதனால அவனுக்காக நானும் அவங்களவிட்டுத் தள்ளி இருக்க டிசைட் பண்ணி எங்க பாட்டிய அவங்ககூடவே இருக்கச் சொல்லிட்டு நான் விலகிட்டேன். ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே எங்க அப்பாவும் அம்மாவும் இறந்துட்டாங்க. அப்புறம் விஜய்..!!” ன்ன சௌபர்ணிகா அதுக்கு மேல பேச முடியாம தன்னோட முகத்த மூடிக்கிட்டு கதறி அழுதா.

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured