அத்தியாயம் 11
“வாவ் மேடம்… கண்டதும் காதலா..??” என்று ஒரு ரிப்போர்ட்டர் கேட்க, “Yes, எங்களது Love at First Sight-தான். அதுக்கப்புறம் நாங்க ஒரு கேமிங் ஆப் லாஞ்ச் ஃபங்ஷன்ல மறுபடியும் மீட் பண்ணோம். அங்கதான் எங்களுக்குப் பேச சான்ஸ் கிடைச்சது. அப்புறம் அப்படியே பேசிப் பேசி ரெண்டு பேரும் லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டோம்.” என்று மேகா சொல்ல, “ஒருவேளை நிஜமாவே இப்படி எல்லாம் நடந்திருக்குமோ… நமக்குதான் அம்னீஷியா மாதிரி ஏதாவது ஆகி எல்லாமே மறந்துருச்சா..!!” என்று ஒரு நொடி யோசிச்சுப் பாத்த விஷ்வா, “எப்படி இவ சொல்றது எல்லாமே எனக்கே நிஜமா நடந்த மாதிரி இருக்கு..!!” என்று நினைச்சு குழம்பித் தவிச்சான்.
இதில் மற்றவங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. டாம் அண்ட் ஜெர்ரி போல அவர்கள் இருவரும் அப்பப்ப சண்டை போட்டுக்கிட்டத பார்த்துக் கொண்டிருந்த மற்றவங்க எல்லாரும் காதல் விளையாட்டுகள்னு நெனச்சு, மொத்தத்துல, “ச்சே… இவரைப் போயி எவனாச்சும் Gay-ன்னு சொன்னது.. மனுஷன் எவ்வளவு ரொமான்டிக்கா இருக்கான்… அதுவும் அந்தப் பொண்ணு அவர் கூட எவ்வளவு ஜாலியா பேசுறா… இவங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி வேற லெவல். விஷ்வா அண்ட் மேகா பெஸ்ட் Pair. சீக்கிரம் இவங்களுக்கு மேரேஜ் நடந்தா நல்லா இருக்கும்.” என்று நினைச்சு இங்கே வந்ததுக்கு லட்டு மாதிரி ஏராளமான செய்திகள் கிடைச்சிருக்குன்னு சந்தோஷமா நடையைக் கட்டினாங்க.
மீடியா ஆளுங்களோட கூட்டம் கலைஞ்சதுக்கு அப்புறம் மேகாவோட கையைப் பிடிச்சு அவளைத் தன்னோட ரூமுக்குள்ள இழுத்துட்டுப் போன விஷ்வா, மகேஷ் உள்ளே போறதுக்குள்ள ரூமோட கதவை அடிச்சு சாத்துனான். அதுவரைக்கும் ஒரு அளவுக்கு நார்மலா இருந்த மேகா, திடீர்னு அவன் அந்நியனா மாறிட்டதால, “சார் ப்ளீஸ் என்ன விட்டுடுங்க..!! நான் அப்படியே ஓடிப் போயிடுறேன். இங்க நடந்ததுக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நீங்க பொய் சொல்லச் சொன்னதுனாலதான் நான் அப்படி எல்லாம் சொன்னேன்.” என்று பயத்துல கலங்கின கண்ணோட சொன்னா.
“என்னடி அங்க அவ்ளோ பேருக்கு முன்னாடி என்ன மரியாதை இல்லாம பேசிட்டு… இப்போ இங்க யாரும் இல்லைன்னு பயந்து நடுங்குற மாதிரி நடிக்கிறியா..?? உண்மையைச் சொல்லு.. உன்னை எவன் பிளான் பண்ணி இங்க அனுப்பி வச்சது..?? அவன்கிட்ட எவ்ளோ காசு வாங்கிட்டு இப்படி எல்லாம் பண்ண..!! சொல்லு.. உங்க பிளான் என்ன..?? என்ன கொல்றதா… இல்ல ஏமாத்தி என்னோட ப்ராப்பர்ட்டிஸ எழுதி வாங்கறதா..?? நீ ஆதித்யா ஆபீஸ்லதானே வேலை செஞ்சதா சொன்ன.. அப்போ நீ அவன் ஆளா..?? உன்னை வச்சு என்னைய கவுக்க உங்க பாஸ் பிளான் போடுறாரா..??” என்று கோபமா கேட்டான் விஷ்வா.
அவன் தன்னை ஏதாச்சும் பண்ணிடுவானோ என்று நினைச்சு பயந்துட்டு இருந்த மேகாவுக்கு, இப்படி அவன் தன் மீது தொடர்ந்து பழி போடுறதால கோபம் வந்துருச்சு. அதனால தன் ஆள்காட்டி விரலை அவன் முன்னாடி நீட்டி அவளோட முட்டை கண்ணை உருட்டி அவனை எச்சரிக்குற மாதிரி பாத்த மேகா, “இங்க பாருங்க மிஸ்டர் விஷ்வா… நடந்தது என்னன்னு முழுசா தெரியாம நீங்க என்ன பிளேம் பண்றது சரியில்ல. அந்த ஆதித்யா நீங்க சொன்னதை எல்லாம் செய்ற அளவுக்கு மோசமான ஆளுதான். ஆனா நான் அப்படி இல்ல. இங்க நடந்தது வேற…!! நீங்க எல்லாத்தையும் அப்படியே கரெக்ட்டா தப்பா புரிஞ்சுக்கிறீங்க..!!” என்றாள்.
“அது எப்படி டி பண்றதெல்லாம் பண்ணிட்டு உன்னால எதுவும் தெரியாத மாதிரி நடிக்க முடியுது..?? அது சரி… பொண்ணுங்கனாலே இப்படித்தானே… இந்த மாதிரி ஆம்பளைங்கள ஏமாத்தி அவங்க லைஃபை கொடுக்குறதுதானே உங்களுடைய ஃபுல் டைம் ஜாப்..!!” என்று விஷ்வா சொல்ல, “Stop it விஷ்வா. It’s just a coincidence. என்ன பேச விடாம உங்க இஷ்டத்துக்கு நீங்க இமேஜின் பண்ணி பேசிக்கிட்டே இருந்தீங்கன்னா இதுக்கு ஒரு end-ஏ வராது. So please என்ன பேச விடுங்க.” என்று சத்தமா கத்தினா மேகா.
அவ முகத்தை ஒரு நொடி உத்துப் பாத்த விஷ்வாவுக்கு, “என்னமோ தெரியல. என் மூளை இவள நம்பாதன்னு சொன்னாலும், என் மனசு இவ மேல தப்பு இருக்காதுன்னு சொல்லுதே..!! இந்த குட்டச்சி எப்படியோ தெரியல… ஆனா நான் நியாயமான ஆளு. ஓகே உனக்கு ஒரு சான்ஸ் தர்றேன். நீ உன்ன நிரூபிச்சுப் பாக்கலாம்.” என்று தோன்ற, “இப்ப என்ன… நீ பேசணும்… அதானே… பேசித் தொல. கேட்டுத் தொலையுறேன்.” என்றான்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)