Home FREE NOVELSபோதையடி நீ எனக்கு CH 16

போதையடி நீ எனக்கு CH 16

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 16 

“இவங்க என் வைஃப்போட சிஸ்டர் நித்திலா. சாப்ட்வேர் கம்பெனியில ஒர்க் பண்றாங்க. 

நைட் ஷிப்ட் முடிஞ்சு ஸ்கூட்டில வீட்டுக்கு வந்துட்டு இருக்கும்போது இவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. 

நான் தான் போய் இவங்களுக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டு ஆக்சிடென்ட் ஆன ஸ்பாட்ல இருந்து கூட்டிட்டு வந்தேன். என் வைஃப்க்கு இன்ஃபார்ம் பண்ணிட்டேன். 

அவங்களும் இங்க தான் வந்துட்டு இருக்காங்க.  ப்ளீஸ் சீக்கிரம் இவங்களுக்கு என்னாச்சுன்னு பாருங்க! 

ஆல்ரெடி ரொம்ப பிளட் லாஸ் ஆயிடுச்சு.‌ பல்ஸ் வேற டவுன் ஆக்கிட்டே இருக்கு!” என்று தத்ரூபமாக திலீப் ஒரு பொய்யை உண்மை போலவே சொல்ல, 

அங்கே இருந்தவர்களும் அவன் சொன்னதை நம்பி ‌ அந்த இளம் பெண்ணை அவசர சிகிச்சை பிரிவில் அட்மின் செய்தார்கள்.‌ ஒரு பெண்ணுடன் ஹாஸ்பிடலில் இருக்கும் போது துணைக்கு தங்களுடன் இன்னொரு பெண் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்த திலீப் உடனே அவனுடைய மனைவி நிரஞ்சனாவிற்கு கால் செய்து அவளை அந்த ஹாஸ்பிடலுக்கு வர சொன்னான்.  

அவளும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அங்கே வருவதாக சொல்லிவிட, காரில் தனியாக அமர்ந்திருந்த ரிஷி அந்த பெண்ணுக்கு என்ன ஆனது? அவள் உயிர் பிழைப்பாளா? தன்னால்தான் அவளுக்கு இப்படி ஒரு நிலைமையா? என அவளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.‌ 

சில நிமிடங்களுக்கு பிறகு அங்கே நிரஞ்சனா வந்துவிட, அவளிடம் நடந்த அனைத்தையும் சொன்ன திலீப் “இப்போதைக்கு மத்தவங்கள பொருத்தவரைக்கும் இங்க இருக்கிற தான் உன் தங்கச்சி நித்திலா. 

இதுவரைக்கும் யாருமே நம்ம நித்திலாவ பார்த்ததே இல்ல. 

அதனால நாளைக்கு இவள கூட்டிட்டு போய் நாங்க இவ‌‌ தான் நித்திலான்னு எல்லார் கிட்டயும் இண்ட்ரடியூஸ் பண்றதுக்கு கூட சான்ஸ் இருக்கு.

சோ நீ எல்லாத்துக்கும் ரெடியா இருந்துக்கோ.‌‌ மத்தவங்க எல்லாரையும் விட நீதான் கரெக்டா பர்பாமன்ஸ் பண்ணனும். 

நீ கொஞ்சம் சொதப்புனாலும், மொத்தமா அந்த இரத்தவெறி புடிச்ச பிசாசுங்க கிட்ட நம்ம எல்லாரும் மாட்டிக்குவோம்.” என்றான். 

“எனக்கு புரியுது திலீப். ரிஷி சார் உனக்கும் எனக்கும் நிறைய ஹெல்ப் பண்ணி இருக்காரு. 

அவர் மட்டும் இல்லனா நமக்கு கல்யாணமே ஆகியிருக்காது. இப்ப நித்திலா அமெரிக்கால இருக்கா. 

நீ சொன்ன மாதிரி இதுவரைக்கும் அவளை யாரும் பார்த்ததும் இல்லை. இவளை பாக்குறதுக்கும் ஒரு சாயில்ல என் தங்கச்சி மாதிரி தான் இருக்கா. 

அதனால யார் கிட்ட இவளை காமிச்சு நம்ம நித்திலான்னு சொன்னாலும் கண்டிப்பா நம்புவாங்க.

ரிஷி சாருக்கு ஹெல்ப் பண்றதுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன். இந்த பொண்ணுக்கு மட்டும் எந்த பிரச்சனையும் இல்லாம இவ சரியாகி வந்துட்டா போதும். 

இவளை வச்சு எப்படியாவது இருக்கிற ப்ராப்ளம் எல்லாத்தையும் சால்வ் பண்ணிடலாம்.” என்று நிரஞ்சனா சொல்ல, இப்படி சூழ்நிலையை புரிந்து கொண்டு தனக்காகவும் தன்னுடைய பாஸுற்க்காகவும் தனது மனைவி இப்படி ஒரு ரிஸ்கை எடுக்க துணிந்ததால் மகிழ்ந்த திலீப் அவளை கட்டிப்பிடித்து “தேங்க்ஸ் பேபி!” என்றான். 

காரில் அமர்ந்திருந்த ரிஷி அவளுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் அங்கே இருப்புக் கொள்ளாமல் திலீப்பிற்கு கால் செய்து “அவ இப்ப எப்படி இருக்கா? 

டாக்டர் ஏதாவது சொன்னாரா? அவளுக்கு ரொம்ப பிளட் லாஸ் ஆகி இருந்துச்சே.. பிளட் வேணும்னா சொல்லு டா.. 

நான் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லி உடனே அரேஞ்ச் பண்றேன்.” என்று அக்கறையுடன் விசாரிக்க, “அந்த பெண்ணோட பிளட் குரூப் ஒ பாசிட்டிவாம் பாஸ்.

அது இந்த‌ ஹாஸ்பிடல் பிளட் பேங்கிலயே இருக்குன்னு அவங்களே அரேஞ்ச் பண்ணிட்டாங்க. 

தலையில அடிபட்டு இருக்கிறதுனால  அவளுக்கு உடனே ஒரு சர்ஜரி பண்ணனுமாம். கவுண்டர்ல பே பண்ணிட்டா சர்ஜரி உடனே பண்ணிடுவாங்கன்னு  சொன்னாங்க. 

நான் இப்ப அந்த பில் அமௌன்ட் செட்டில் பண்ண தான் கீழ வரலாம்னு இருந்தேன். நிரஞ்சனா இப்ப இங்க தான் இருக்கா. 

டாக்டர் கேட்கும் போது அந்த பொண்ணை நிரஞ்சனாவோட சிஸ்டர் நித்திலானு பொய் சொல்லிட்டேன். 

சோ நாங்க ரெண்டு பேரும் இங்க இருந்து அவள பாத்துகிறோம். 

நீங்க அவரை நினைச்சு கவலைப்படாதீங்க. நான் போய் முதல்ல பில்லை செட்டில் பண்றேன். 

அப்ப தான் டாக்டர்ஸ் பிராப்பர ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணுவாங்க.” என்று சொல்லிவிட்டு அவனது அழைப்பை துண்டித்தான் திலீப். 

சில நிமிடங்களுக்கு பிறகு அந்த பெண்ணிற்கு சர்ஜரியை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவர்கள் அந்த ஐசியூ வார்டில் இருந்து வெளியில் வந்து நிரஞ்சனா மற்றும் திலீபிடம், 

“பேஷன்ட் ஓட கண்டிஷன் இப்ப ஸ்டேபிளா இருக்கு. அவங்களோட உயிருக்கு இனிமே எந்த ஆபத்தும் இல்ல. 

பட் இன்னும் அவங்க ரெண்டு மூணு நாள் அப்சர்வேஷன்ல இருக்கணும். 

அவங்களுக்கு கான்ஷியஸ் வந்ததுக்கு அப்புறமா நீங்க அவங்கள போய் பாக்கலாம்.” என்று சொல்லிவிட்டு சென்றார். 

அதை உடனே திலீப் ரிஷிக்கு கால் செய்து சொல்ல, அந்த கணப்பொழுதில் ஏதோ ஒரு திட்டத்தை யோசித்த ரிஷி, 

“அதான் இனிமே அவ உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே.. அப்புறம் எதுக்கு இங்க இருக்கனும்? 

நான் ஆல்ரெடி என் ஃபிரண்டு கௌதம் கிட்ட எல்லாத்தையும் கிளியரா பேசிட்டேன். 

நம்மளோட கெஸ்ட் ஹவுஸில வச்சு ‌ யாருக்கும் தெரியாம அவளுக்கு ட்ரீட்மென்ட் பண்றது தான் safe. 

நான் கௌதம் கேட்ட கெஸ்ட் ஹவுஸில எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு எங்க ஆம்புலன்ஸ் அனுப்ப சொல்றேன். 

நீ அந்த பொண்ண ஹாஸ்பிட்டல்ல இருந்து உடனே ஷூஃப்ட் பண்ணு.” என்று கட்டளையிட்டான். 

“பட் பாஸ்.. அவளுக்கு இன்னும் கான்ஷியசே வரல. 

அதுக்குள்ள எப்படி வேற ஹாஸ்பிடலுக்கு அவளை ஷிஃப்ட் பண்றேன்னு சொன்னா இங்கே டிஸ்டார்ஜ் பண்ணுவாங்க?” என்று திலீப் கேட்க, 

“அது எல்லாம் எனக்கு தெரியாது. நீ என்ன பண்ணுவியோ பண்ணு. 

உன்னால ப்ராப்பரா டிஸ்டாச் பண்ணி அவளை வெளியே கூட்டிட்டு வர முடியலன்னா, யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமா கூட்டிட்டு வா. 

எல்லாத்தையும் என்னால உனக்கு எக்ஸ்பிளைன் பண்ணிட்டு இருக்க முடியாது திலீப். 

இன்னும் உனக்கு ஒரு மணி நேரம் தான் டைம். அதுக்குள்ள அவளை எப்படியாவது அந்த ஹாஸ்பிடல்ல இருந்து  safe-ஆ நம்ம கெஸ்ட் ஹவுஸ்க்கு ஷிஃப்ட் பண்ற.  

நீ எல்லாத்தையும் ரெடி பண்றதுக்குள்ள கௌதமோட ஹாஸ்பிடல் ஆம்புலன்ஸ் ஹாஸ்பிடலுக்கு  வெளியே ரெடியா இருக்கும்.” என்று அவனுக்கு இன்ஸ்ட்ரக்ஷன்களை மட்டும் கொடுத்துவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான் ரிஷி. 

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured