அத்தியாயம் 20
அர்ஜுன் நார்மல் ஆகிவிட்ட செய்தியை அனைவரிடமும் சொல்லி அவர்களை அவனது அறைக்கு அழைத்துச் சென்றாள் நான்சி.
ஜானகி அர்ஜுனை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதபடி “உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு நான் ரொம்ப பயந்துட்டேன் அர்ஜுன்.
உன்ன இப்படி பாத்ததுக்கு அப்புறம் தான் எனக்கு போன உசுரு மறுபடியும் வந்த மாதிரி இருக்கு.” என்று சொல்ல,
பிளட் பிரஷர் ரைஸ் ஆகி மயங்கி விழுந்து சரியான பாட்டி கூட பாசத்துடன் அவனைக் காண அங்கே வந்து ஜானகியிடம் “நான் என் பேரன் கிட்ட பேசணும்.
நீதான் பேசீட்டீல.. நகரு.. நான் அவன் கிட்ட பேசணும்.
என் பேரன் குரலை கேட்டு எத்தனை நாளாச்சு..!!” என்று சொல்லி அவளை நகர்த்திவிட்டு அர்ஜுனிடம் நலம் விசாரித்தார்.
லிண்டாவின் தோள்களை இறுக்கி பிடித்தவாறு தன் வாயை பொத்திக் கொண்டு எமோஷனலாகி அழுது கொண்டு இருந்த ஆகாஷ் தன் அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அர்ஜுன் நார்மலான விஷயத்தை கேள்விப்பட்டு ஆருத்ராவும், சித்தார்த்தும் தங்களது அப்பாவை காண அங்கே ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டார்கள்.
அர்ஜுன் கோமாவிற்கு செல்வதற்கு முன்பு அவனுடைய உயிர் ஊசலாடிக் கொண்டு இருந்தது.
அந்த நேரத்தில் மீண்டும் சென்று தன்னால் தனது குடும்பத்தை பார்க்க முடியுமா முடியாதா? என்ற நிலையில் இருந்தான் அவன்.
அதனால் இப்போது அவர்கள் அனைவரையும் பார்த்ததில் அவன் இதயம் மகிழ்ச்சியால் நிறைந்தது.
அதனால் அனைவரையும் வாரி அனைத்து அவர்கள் பொழியும் அன்பு மழையில் நினைந்து நிம்மதி பெருமூச்சு விட்டான் அர்ஜுன்.
ஆனால் அவனது இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்ததன் காரணமே அவனுடைய சியா தான்.
அவளை காண வேண்டும் என்ற படபடப்பு அவனை சுற்றி யார் இருந்தாலும் அவளைத்தான் அவனைத் தேட வைத்தது.
அதனால் ஆகாஷை அழைத்து தன் அருகில் அமர வைத்து “என் சியா எங்க?” என்று அர்ஜுன் கேட்க,
“இத்தனை நாள் கோமால இருந்ததுல அண்ணா நடந்தது எல்லாத்தையும் மறந்துட்டாரா?
அண்ணி இறந்து போனது கூட அவருக்கு ஞாபகம் இல்லையா?
இப்ப தான் இவர் நார்மல் ஆகிருக்காரு.
இப்போ நான் அதை சொல்லி, மறுபடியும் இவருக்கு ஏதாவது ஆகிட்டா என்ன பண்றது?” என்று நினைத்து பயந்த ஆகாஷ் அவனிடம் உண்மையை சொல்ல தயங்கினான்.
அதனால் அவன் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்ட அர்ஜுன் “என்ன டா நான் கேட்டுட்டே இருக்கேன்.. நீ அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?
நான் என் சியாவ இப்பவே பாக்கணும்.
நான் கண்ண திறந்த உடனே ஃபர்ஸ்ட் பார்த்தது அவளோட முகத்தை தான்.
எனக்கு அவள பாக்கணும். அவ கிட்ட நான் செஞ்ச தப்புக்கு சாரி கேக்கணும்.
நான் எனக்கு தெரிஞ்சே எதையும் வேணும்னு பண்ணலைன்னு அவகிட்ட சொல்லி புரிய வைக்கணும்.
ப்ளீஸ் டா.. அவ எங்க இருந்தாலும் சரி..
எனக்காக அவளை கூட்டிட்டு வா. நான் அவள இப்பவே பாக்கணும்.” என்று கண்கள் கலங்க சொன்னான்.
அவனது கண்ணீர் துளி ஆகாஷின் கைகளில் விழுந்து தெரித்தது.
அவன் பேசியதை வைத்து “சியா அண்ணிக்கு என்ன ஆச்சுன்னு அண்ணாவுக்கு நல்லா ஞாபகம் இருக்கு.
ஆனாலும் இப்ப தான் கோமாவுல இருந்து அவர் எந்திரிச்சு இருக்கிறதுனால அந்த ஷாக்ல தேன்மொழி அண்ணியை பார்த்த உடனே அவங்கள சியா அண்ணி என்று நினைத்துக்கொண்டார் போல…
அதான் இப்ப அவங்கள உடனே பாக்கணும்னு சொல்றாரு..!!” என்று நினைத்த ஆகாஷ் அப்போதும் தன் அண்ணனை பிரிந்து செல்ல அவனுக்கு மனம் வராததால் அவனது மனைவியை பார்த்து “நீ போய் அண்ணியை கூட்டிட்டு வா லின்.” என்றான்.
சரி என்று தலையாட்டிய லிண்டா “நீயும் என் கூட வா.” என்று சொல்லி கிளாராவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு தேன்மொழியை தேடச் சென்றாள்.
அர்ஜுன் கண் விழித்த செய்தி அறிந்து தனது குழந்தைகள் இருவரையும் தூக்கிக் கொண்டு தன் கணவன் சந்தோஷுடன் “அண்ணா.. அண்ணா..!!” என்று கத்திக் கொண்டு அழுதபடி அங்கே வந்தாள் ஜனனி.
அவள் கையில் குழந்தையுடன் சந்தோஷை அழைத்துக் கொண்டு அங்கே வருவதை பார்த்து அதிர்ந்த அர்ஜுன் “நீ லவ் பண்ண இவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டியா..??
இந்த குழந்தை உன்னோடதா?” என்று அவள் கையில் இருந்த குழந்தையை சுட்டிக் காட்டி கேட்டான்.
அதனால் ஜனனி வேகமாக உள்ளே சென்று தன் கையில் இருந்த குழந்தையை அவனிடம் கொடுக்க,
தன் மற்றொரு குழந்தையுடன் அவள் அருகில் சென்ற சந்தோஷ் “இந்த ரெண்டு குழந்தையுமே எங்களோடது தான் சார். எங்களுக்கு ட்வின்ஸ்!” என்று சிரித்த முகமாக சொன்னான்.
அவனும் தன் கையில் இருந்த குழந்தையை அர்ஜுனிடம் கொடுக்க போக, தன் ஒற்றைக் கையை அவன் முன்னே நீட்டி தடுத்த அர்ஜுன்,
“நான் ரொம்ப வீக்கா இருக்கேன். என்னால ரெண்டு குழந்தையையும் தூக்க முடியாது சந்தோஷ்.” என்றான்.
அவன் அருகில் அமர்ந்திருந்த ஜனனி அர்ஜுனின் மீது சாய்ந்து கொண்டு “நான் உங்களுக்காக ரொம்ப நாள் இவனை மேரேஜ் பண்ணிக்காமலே வெயிட் பண்ணிட்டு இருந்தேன் அண்ணா.
ஒரு நாள் இவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு.
அவங்க சாகறதுக்கு முன்னாடி எங்க கல்யாணத்த பாக்கணும்னு ஆசைப்பட்டாங்க.
அதான் வேற வழி இல்லாம நாங்க மேரேஜ் பண்ணிக்கிட்டோம்.
நீங்க இல்லாம எங்க மேரேஜ் நடந்துருச்சுன்னு என் மேல கோவப்படாதீங்க அண்ணா.
எனக்கு குழந்தை பிறக்குறதுக்குள்ள உங்களுக்கு சரியாகிட்டா பரவாயில்லை என்று நாங்க எல்லாருமே ரொம்ப ஆசைப்பட்டோம்.
ஆனா எங்க அண்ணி வந்ததுக்கப்புறம் தான் நீங்க நார்மல் ஆகணும்னு இருந்திருக்கு போல..
ஜோசியர் சொன்ன மாதிரியே எல்லாமே நடந்துருச்சு.
நிஜமாவே இப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
என் பேபிஸ்க்கு ஃபர்ஸ்ட் பர்த்டே வர்றதுக்கு முன்னாடியே நீங்க சரியாயிட்டீங்க.” என்று சொல்லிவிட்டு கதறி கதறி அழுதாள்.
அவள் அழுவதை கண்டு அவளது குழந்தைகள் இரண்டும் வழக்கம் போல ஹை பிட்ச்சில் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு சத்தமாக அழ தொடங்கியது.
அதனால் ஜனனியின் கண்ணீரை துடைத்துவிட்டு அவள் குழந்தையை அவள் கையில் கொடுத்த அர்ஜுன்,
“நான் கோமாள இருந்திருந்தாலும், என்ன வெச்சு தானே நீங்க செய்ய வேண்டியது எல்லாத்தையும் செஞ்சுருப்பீங்க..
அப்புறம் என்ன? நீ அதை நினைத்து எல்லாம் ஃபீல் பண்ணாத.
இவங்களோட ஃபர்ஸ்ட் பர்த்டேவை நம்ம கிராண்டா செலிப்ரேட் பண்ணலாம்.
அப்புறம்.. பேபிஸை பத்தி நீ எதுவுமே சொல்லலையே..!!
ரெண்டும் பையனா இல்ல பொண்ணா? பேர் வச்சாச்சா?” என்று கேட்க,
“ம்ம்.. பொறந்தவுடனே ஹாஸ்பிடல்லயே நான் இவர்களுக்கு பேர் வெச்சிட்டேன்.
ரெண்டுமே பொண்ணு தான். இவ பேரு வர்ணிகா..
அவ பேரு ஸ்வஸ்திகா..!!
உங்களுக்கு நேம் புடிச்சிருக்கா அண்ணா?
நான் ரொம்ப எல்லாம் யோசிக்கல.
இவங்க ரெண்டு பேரையும் பார்த்தவுடனே எனக்கு இந்த பேர் தான் தோணுச்சு.
உடனே பேர் வச்சுட்டேன். யார் கிட்டயும் டிஸ்கஸ் கூட பண்ணல.” என்றாள் ஜனனி.
அந்த இரு குழந்தைகளின் பிஞ்சு முகத்தையும் பார்த்து தனது காயங்கள் அனைத்தையும் மறந்து லேசாக புன்னகைத்த அர்ஜுன்,
“ம்ம்.. நேம் நல்லா இருக்கு ஜானு.
அண்ட் இந்த ரெண்டு குட்டி ஏஞ்சல்சும் பாக்குறதுக்கு உன்ன மாதிரியே ரொம்ப அழகா இருக்காங்க.” என்று சொல்ல,
அவன் வாயிலிருந்து அந்த வார்த்தைகளை கேட்ட ஜனனிக்கு இந்த வார்த்தையை கேட்க தானே இத்தனை நாட்களாக காத்திருந்தேன்.. என்பதைப் போல இருக்க,
இப்போது சந்தோஷத்தில் அவள் கண்கள் கலங்கி அதை கட்டுப்படுத்த தெரியாமல் தொடர்ந்து குழந்தை போல அழுது கொண்டே இருந்தாள்.
சந்தோஷ் குழந்தைகளும் அழுது கொண்டே இருந்ததால், அவளை குழந்தைகளுடன் வெளியே அழைத்து சென்றான்.
மருத்துவர்களும் மற்றவர்களிடம் “சார் இப்ப தான் கோமாவுல இருந்து ரெக்கவர் ஆகி இருக்காரு.
உடனே அவரை இவ்வளவு நேரம் எமோஷனலாகி பேச விடுறது நல்லது இல்ல.
இவருக்கு உடனே பண்ண வேண்டிய சில டெஸ்ட் எல்லாம் இருக்கு.
அத பண்ணி முடிச்சு, இவரோட பாடி கண்டிஷன் எப்படி இருக்குன்னு பாத்துட்டு அதுக்கு தகுந்த ட்ரீட்மெண்ட் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் சார் நார்மலா இருக்க முடியும்.
இப்போ நாங்க இவர் பாடிய எக்ஸாமின் பண்ணியே ஆகணும்.
சோ ப்ளீஸ் எவ்ரிஒன் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்..
டிரீட்மென்ட் இப்பவே ஸ்டார்ட் பண்ணனும். நீங்க எல்லாரும் வெளிய இருங்க.” என்று சொல்லி அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு அர்ஜுனின் உடல் நிலையை பரிசோதிக்க தொடங்கினார்கள்.
கிளாராவுடன் தேன்மொழியை தேடி சென்ற லிண்டா வழக்கமாக அவள் செல்லும் அனைத்து இடங்களுக்கும் சென்று பார்த்து விட்டாள்.
ஆனால் அவர்களுக்கு தெரிந்த அனைத்து இடங்களிலும் தேடியும் அவர்களால் தேன்மொழியை கண்டுபிடிக்க முடியவில்லை.
தேன்மொழிக்கு இருட்டு என்றாலே பயம் என்று லிண்டாவிற்கு நன்றாக தெரியும்.
அப்படி இருந்தும், இந்த நேரத்தில் தேன்மொழி வீட்டிற்குள் இல்லாமல் எங்கே போனாள் என்று அவளாலும் கண்டு பிடிக்க முடியவில்லை.
அப்போது அவர்களைத் தேடிக் கொண்டு அங்கே வந்த பிரிட்டோ “என்னாச்சு.. மிஸ்ஸஸ் அர்ஜுன் எங்க இருக்காங்கனு கண்டு பிடிச்சிட்டீங்களா?
டாக்டர்ஸ் ட்ரீட்மென்ட் கொடுத்தாலும், அவங்களுக்கு கோஆப்பரேட் பண்ணாம சீஃப் அவங்கள பத்தி தான் கேட்டுகிட்டே இருக்காராம்.
பாஸ் என்னை கூப்பிட்டு அவங்கள உள்ள அனுப்ப சொல்றாரு.” என்று சொல்ல,
“அவங்க எங்க போனாங்கன்னு தெரியாம தான் நாங்களே இவ்ளோ நேரமா அவங்களை தேடிட்டு இருக்கோம்.” என்றாள் கிளாரா.
“அர்ஜுன் அண்ணா சியா சிஸ்டரை ரொம்ப மிஸ் பண்றாரு.
இப்ப அவர் தேன்மொழியை பார்க்கலைனா, மெண்டலி முன்னாடி நடந்தது எல்லாத்தையும் நினைச்சு டிஸ்டர்ப் ஆகி மறுபடியும் அவர் கோமாவுக்கு போய்ட்டா என்ன பண்றது?
இப்படி ரொம்ப நாளா கோமாவுல இருந்து நார்மல் ஆனவங்கள கொஞ்சம் வருஷத்துக்கு நல்லா பாத்துக்கணும்.
இல்லைனா மறுபடியும் அவங்க கோமா ஸ்டேஜுக்கு போயிடுவாங்கன்னு நான் எங்கயோ படிச்சிருக்கேன்.
நம்ம மட்டும் அவங்கள தேடி கண்டுபிடிக்கிறதுக்கு இப்ப டைம் இல்ல.
இங்க இருக்கிற எல்லா பாடி கார்ட்ஸையும் கூப்பிடுங்க.
எல்லா சிசிடிவி கேமராவையும் செக் பண்ணுங்க.
தேன்மொழி எங்க இருக்காங்கன்னு உடனே கண்டுபிடிங்க.” என்று லிண்டா சொல்ல,
கோரசாக பிரிட்டோவும், கிளாராவும் “ஓகே மேம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்கள்.
பிரிட்டோ அவனது ஆட்களை அலர்ட் செய்து தேன் மொழியை தேடத் தொடங்கி இருக்க, சர்வைலன்ஸ் ரூமிற்கு சென்ற கிளாரா அர்ஜுனின் அறைக்கு வெளியே இருக்கும் கேமராவின் ஃபுட்டேஜை பார்க்க தொடங்கினாள்.
– மீண்டும் வருவாள்.. ❤️
(என்னை பிரதிலிப்பியில் ஃபாலோ செய்து சப்போர்ட் செய்யுங்கள்.)