Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 3

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 3

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 3: சித்தார்த்தின் ரித்திகா (பார்ட் 2)

ஈரோட்டை வந்தடைந்த ரித்திகா, தான் புதிதாக ஆசிரியராக சேரப்போகும் பள்ளியின் அட்ரஸை ஆட்டோகாரரிடம் கொடுத்து விட்டு ஆட்டோவில் அங்கே சென்றாள். அந்த பள்ளி நிர்வாகம் அவளை வெரிஃபிகேஷன் செய்துவிட்டு உள்ளே அனுப்ப, 

ஆபீஸ் அட்மின் மானசா வின் உதவியால், ஜாயினிங் புரோசைஜர் அனைத்தையும் சீக்கிரமாக முடித்துவிட்டு; அவர்கள் ஈரோட்டில் தங்க போகும் வீட்டின் அட்ரஸை நோட் பண்ணிட்டு அதை தன் தாய்க்கு தொலைபேசியில் அழைத்து சொல்வதற்காக தன்னுடைய மொபைலை கையில் எடுத்து கொண்டு வெளியே வந்தாள் ரித்திகா.

அப்போது ரித்திகாவை இரு சிறு கைகள் அணைத்து கொண்டன. தன்னை அனைத்து இருப்பது யார் என்று கீழே குனிந்து பார்த்த ரித்திகாவுக்கு ஒரு அழகான சிறுவனின் முகம் தெரிந்தது. அந்த சிறுவனை பார்த்த ரித்திகா, தன்னுடைய இடுப்பில் அவனை தூக்கி வைத்துக் கொண்டு “உன்னுடைய பெயர் என்ன?” என்று கேட்க, 

அவன் “சித்தார்த்” என்று சொல்ல; “என்னுடைய பெயர் ரித்திகா” என்றாள்.

மழலை குரலில் அந்த ஐந்து வயதேயான சிறுவன், ரித்திகாவின் பெயரை முழுவதாக சொல்ல தெரியாமல், ” ரித்தி  என்று அழைத்தான். அதை கேட்ட ரித்திகா சந்தோஷப்பட்டாள். அவளுக்கு சித்தார்த் தன்னை “ரித்தி என்று அழைத்தது பிடித்திருந்தது. 

சித்தார்த்தின் கன்னத்தை செல்லமாக பிடித்து கிள்ளியபடி விளையாடிக் கொண்டிருந்தாள் ரித்திகா. அவளுடைய கண்களுக்கு சித்தார்த் மிகவும் க்யூட்டாக தெரிந்தான்.

ரித்திகா சித்தார்த்துடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, “சித்தார்த் தம்பி” என்று அழைத்தபடி ஒரு வயதான பெண்மணி அவனை தேடிக் கொண்டு அங்கே வந்தாள். 

அந்த சத்தத்தை கேட்டவுடன் தன் இடுப்பில் அமர்ந்து இருந்த சித்தார்த்தை பார்த்தாள் ரித்திகா. சித்தார்த் அந்த ஸ்கூல் இன் யூனிஃபார்மை அணிந்து இருந்தான். அந்த யூனிஃபார்ம் சட்டையில் ஜே.வி என்ற அந்த பள்ளியின் லோகோ பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது.

அவை அனைத்தையும் நோட் செய்த ரித்திகா; அவன் இந்த பள்ளியை சேர்ந்த சிறுவன் எனவும், அவனை யாரோ தேடிக்கொண்டு இருக்கிறார்கள் எனவும் புரிந்து கொண்டாள். எனவே சத்தம் வந்த திசையை நோக்கி அவனை தூக்கியபடி நடந்து சென்றாள்.

அங்கே சுகந்தி சித்தார்த்தை கூப்பிட்ட படியே அவனை தேடி கொண்டிருந்தாள். சித்தார்த்தை காணாமல் பதட்டம் வெளிப்படையாக அவருடைய முகத்தில் தெரிந்தது. ரித்திகா சித்தார்த்தை தூக்கிக் கொண்டு வருவதை பார்த்த சுகந்தி, பயந்து விட்டார். இருப்பினும் ரித்திகாவை பார்ப்பதற்கு தவறாக தெரியாததால் அவளருகே வந்து “நீங்க யாரு?” என்று கேட்டாள்.

ரித்திகா: “என் பேரு ரித்திகா, நான் இப்ப

தான் இந்த ஸ்கூல்ல ஜாயின் பண்ணி இருக்கேன். நீங்க?” 

என் பேரு சுகந்தி. நானும் இங்குதான் ஆயம்மாவா வேலை பார்க்கிறேன். சித்தார்த் தம்பிய நீங்க எங்க பாத்தீங்க?”

ரித்திகா: “நான் எங்க இவனை பார்த்தேன், இவன் தான் என்ன பார்த்து இருக்கான். நான் இவனை கவனிக்கவே இல்ல. நான் பாட்டுக்கு படியில இறங்கி வந்துட்டு இருந்தேன். அப்போனு திடீர்னு எங்க இருந்தோ ஓடிவந்து இவன் தான் என்ன கட்டி புடிச்சி கிட்டான் அக்கா. அதான் இவனை தூக்கி வைச்சி கிட்டு, பேசிக்கிட்டு இருந்தேன். அப்ப தான் நீங்க இவனை கூப்பிட்டு இருக்கிற சத்தம் கேட்டுச்சு. அதான் இவனை தூக்கிட்டு இங்க வந்தேன்.” என சிரித்து கொண்டே சொன்னாள்.

சுகந்தி: “நீங்க என்ன டீச்சரா ஜாயின் பண்ணி இருக்கீங்க?”

ரித்திகா: “நான் இங்கிலீஷ் அண்ட் டான்ஸ் டீச்சர் அக்கா.”

சுகந்தி: “அப்படியா.. சரி..!! மா. சித்தார்த் தம்பிக்கு டீச்சரைப் பத்தாலே பயம். யாரை பார்த்தாலும் பயந்து ஓடிருவாரு. இல்லனா பேசவே மாட்டாரு. உங்ககிட்ட எப்படி இப்படி ஒட்டிக்கிட்டாருன்னு தெரியல. அதான் எனக்கு பாக்க ஆச்சரியமா இருக்கு.”

ரித்திகா: “இதுல ஆச்சரிய படுறதுக்கெல்லாம் ஒன்னும் இல்ல அக்கா. டீச்சர்ஸ் எல்லாம் யூனிஃபார்ம் போட்டு இருப்பாங்க. நான் யூனிஃபார்ம் போடல. அதான் என்ன பார்த்தா அவனுக்கு டீச்சர் மாதிரி தெரிச்சு இருக்காது.”

சுகந்தி: “அதுவும் சரி தான் மா. உங்கள பார்த்தா டீச்சர் மாதிரி தெரியவே இல்லை.”

ரித்திகா: “அது சரி..!! அக்கா. இவன் எதுக்கு பயந்து ஓடி வந்தான்?”

சுகந்தி: “அதை ஏன் மா கேக்குற, லஞ்ச் பீரியட் ஸ்டார்ட் ஆகி ரொம்ப நேரம் ஆகுது. இப்ப முடியவே போகுது. சித்தார்த் தம்பி மட்டும் சாப்பிடவே இல்ல. நானும் என்னென்னமோ பண்ணி பார்த்துட்டேன். ஆனா ஒரு வாய் கூட சாப்பிடல மா. அவரோட கிளாஸ் டீச்சரும் பேசி பார்த்தாங்க, மிரட்டி கூட பார்த்தாங்க… அப்போவும் சாப்பிடல. நாங்க சாப்பிட சொல்லுவோம்னு தான் பயந்து ஓடி வந்துவிட்டாரு.”

ரித்திகா சித்தார்த்தை பார்த்து; “அச்சோ…!!! அப்படி எல்லாமா பண்றயா நீ? அப்ப சித்தார்த் பேட் பாய் ஆ?” என்று செல்லமாக முறைத்து கொண்டே கேட்டாள்.

சித்தார்த் ரித்திகாவை தன்னுடைய பிரண்டாகத்தான் நினைத்தான். தன்னுடைய “ரித்திகா” தன்னை பார்த்து “நீ பேட் பாய்” என்று சொல்லியதால், அவனுடைய முகம் சுருங்கி விட்டது. நான் எப்போது வேண்டுமானாலும் அழுது விடுவேன் என்ற நிலைக்கு சென்று விட்டான் சித்தார்த்.

அவனை பார்த்த ரித்திகா அவனை தேற்றும் பொருட்டு, “எனக்கு தெரியும் என்னோட சித்து குட்டி குட் பாய் தான். நீ இந்த ஆண்டி கூட போய் அவங்க குடுக்குற சாப்பாட்ட வேணான்னு சொல்லாம சாப்பிடணும் சரியா?” என்றாள்.

அதை கேட்ட சித்தார்த் “வேண்டாம்” என்று தன் தலையை ஆட்டினான்.

ரித்திகா: “ஓய்..!! சித்து.. இப்பதானே நான் உன்ன குட் பாய் ன்னு சொன்னேன். அதுக்குள்ள நீ பேட் பாய் மாதிரி பண்ற பாத்தியா? அப்ப நீ பேட் பாய் ஆ?” என்று தன்னுடைய முகத்தை சுருக்கி வைத்துக் கொண்டு கேட்டாள்.

அதை கேட்ட சித்தார்த் தன்னுடைய ரித்திகா தன்னை அப்படி எல்லாம் பேட் பாய் என்று நினைத்து விடக்கூடாது என்பதற்காக; அவசரமாக “நான் பேட் பாய் இல்ல ரித்தி, குட் பாய் தான்” என்றான்.

ரித்திகா: “அப்ப போ அந்த ஆண்ட்டி கூட போயி சாப்பிடு. இப்படியெல்லாம் சாப்பிட மாட்டேன்னு அடம் புடிக்க கூடாது சரியா?”

சித்தார்த்: “சரி…!!! இனிமே நான் சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்க மாட்டேன். ஒழுங்கா சாப்பிடுவேன். ஆனா நீ என்ன பேட் பாய்ன்னு சொல்ல கூடாது சரியா? அப்புறம்… நீ எனக்கு பிரண்டா இருக்கணும் ஓகேவா?” என்று தன் மழலை குரலில் கண்களை உருட்டி உருட்டி ரித்திகாவிடம் பேசினான்.

ரித்திகா: “ஓகே..!! சித்து குட்டி குட் பாய் இங்க இருக்கிற வரைக்கும் நான் உனக்கு பிரண்டா இருப்பேன்.”

சித்தார்த்: “ப்ராமிஸ்?” என்று தன்னுடைய குட்டி கையை அவளை நோக்கி நீட்டி கேட்டான்.

ரித்திகா: “ப்ராமிஸ்” என்று மிருதுவான தன்னுடைய கையை அவனுடைய கையின் மேல் வைத்து சத்தியம் செய்தாள்.

ரித்திகாவுக்கும், சித்தார்த்திற்கும் இடையில் இருக்கும் நெருக்கத்தை பார்ப்பதற்கு வியப்பாகவும், நம்ப முடியாமல் இருந்தது சுகந்திக்கு. அவள் சித்தார்த் பிறந்ததிலிருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இப்படி யாருடனும் எளிதில் பழக கூடியவன் அல்ல அவன்.

அவன் தன்னுடைய அப்பாவிடம் கூட இப்படி எல்லாம் பேசியது இல்லை. தன்னுடைய பாட்டியை தவிர வேறு யாரிடமும் முகம் கொடுத்து கூட பேசாத சித்தார்த், இப்போது ரித்திகாவிடம் நட்பாக பேசுவது, சுகந்திக்கு மகிழ்ச்சி ஆக இருந்தது. இப்போது நடந்து கொண்டிருப்பவை அனைத்தையும் சித்தார்த்தின் பாட்டிக்கு கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

சித்தார்த்துடன் ஜாலியாக பேசிக் கொண்டிருந்த ரித்திகாவுக்கு திடீரென்று தான் செய்ய வேண்டிய வேலை ஞாபகம் வந்தது. அவள் இன்னும் தன்னுடைய அம்மாவிற்கு கால் செய்து தங்கள் தங்கப்போகும் வீட்டின் அட்ரஸை சொல்லவில்லை. அதையெல்லாம் நினைத்தவள்.. சித்தார்த்தை பார்த்து,

“ஓகே..!! சித்து. எனக்கு டைம் ஆயிடுச்சு. நான் சீக்கிரமா கிளம்பனும். நீ ஆண்ட்டி கூட போய் சாப்பிடு. நான் நாளைக்கு வந்து உன்னை பார்க்கிறேன்.” என்றாள்.

ரித்திகா அங்கிருந்து தான் கிளம்ப வேண்டும். என்று சொன்னதைக் கேட்டவுடன், சித்தார்த்தின் முகம் வாடி விட்டது. ரித்திகா கிளம்புவதாக சொன்னதால், சுகந்தி சித்தார்த்தை தூக்கிக் கொள்ள ரித்திகாவின் அருகே சென்றாள். ரித்திகாவிடம் இருந்து பிரிய விரும்பாத சித்தார்த்; “என்ன விடுங்க நான் வரமாட்டேன் ரித்தி… ரித்தி” என்று அழ தொடங்கினான்.

சித்தார்த் தன்னை பிரிய மனமின்றி அழுவதைப் பார்த்த ரித்திகாவுக்கும் அங்கிருந்து செல்ல மனமில்லைதான். இருந்தும், அவளுக்கு செய்து முடிக்க வேண்டிய முக்கியமான வேலைகள் நிறைய இருப்பதால், அவள் அங்கிருந்து சென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். எனவே சித்தார்த்தை தன் இடுப்பில் இருந்து இறக்கி கீழே நிற்க வைத்து, அவனுடைய உயரத்திற்கு மண்டியிட்டு தரையில் அமர்ந்த ரித்திகா..

“இப்பதானே நான் ஒழுங்கா இருப்பேன்னு சொன்ன.. அதுக்குள்ள இப்படி எல்லாம் பண்ணலாமா? நீ குட் பாய் ஆ இப்போ சாப்பிட்டுட்டு உன் கிளாசுக்கு போ. நான் நாளைக்கு உன்னை வந்து கிளாஸ்ல பார்க்கிறேன். ஓகே யா?” என்றாள்.

சித்தார்த்திற்கு ரித்திகாவை பிரிவதற்கு மனமே இல்லை தான். ஆனால் எங்கே தான் அடம்பிடித்தால், தன்னுடைய ரித்திகாவுக்கு தன்னை பிடிக்காமல் போய்விடும் என்று நினைத்தவன், சரி என்று தலையாட்டினான். பின்.. “நாளைக்கு கண்டிப்பா நீ வந்து என்னைய பாப்பியா?” என்று ரித்திகாவை பார்த்து பாவமாக தன் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் சித்தார்த்.

ரித்திகா: “கண்டிப்பா நாளைக்கு உன்னை வந்து பார்ப்பேன். நாமதான் இப்போ பிரண்ட்ஸ் ஆகிட்டோம்ல சோ இனிமே நாம அடிக்கடி மீட் பண்ணலாம்.” என்று சித்தார்த்தை பார்த்து சிரித்து கொண்டே அன்பாக சொன்னாள்.

சித்தார்த்தும் சிரித்து கொண்டே “பாய் ரித்தி” என்றான். பொதுவாகவே ரித்திகாவுக்கு குழந்தைகள் என்றாலே பிடிக்கும். இன்று சந்தித்த சித்தார்த்தை அவளுக்குப் பிடித்தது மட்டுமில்லாமல், அவளுடைய மனதிற்கு அவன் மிகவும் நெருக்கமாகி விட்டதாக உணர்ந்தாள் ரித்திகா. சிரித்த முகத்துடன் அவளும் சித்தார்த்திற்கு பாய் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி தன் அம்மாவிற்கு கால் செய்து அவர்கள் தங்கப் போகும் அட்ரஸை சொன்னாள்.

ரித்திகா அங்கிருந்து கிளம்பியதும் சித்தார்த்தை அழைத்து கொண்டு, சாப்பிட வைத்து விட்டு அவனுடைய வகுப்பில் கூட்டி சென்று விட்டு தன்னுடைய வேலையை பார்க்க சென்றுவிட்டாள் சுகந்தி.

நேசம் தொடரும்…

You may also like

Leave a Comment

About Me

Featured