Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 130

மூர்கனின் காதலி CH 130

by Thenaruvi Tamil Novels
80 views

அத்தியாயம் 130

அரவிந்த் சோகமாக தனியே சொல்வதை கவனித்த நிலா, “எனக்கு வேற ஒருத்தர்க்கூட கல்யாணம் பண்ண போறாங்கன்னு தெரிஞ்ச உடனே உங்களால அதை தாங்க முடியலயா அர்விந்த்..??” என்று யோசித்து வருத்தப்பட்டாள்.

உண்மையில் எவனோ ஊர் பேர் தெரியாதவனுக்கு தன் அப்பா சொல்லும் ஒரே காரணத்திற்காக தான் மனைவியாக வேண்டுமா? என்று நினைத்த வெண்ணிலா “இந்த marriage எனக்கு வேணுமா..?? வேற யாரோ ஒருத்தன கல்யாணம் பண்ணா நான் சந்தோஷமா இருப்பனா..??” என்று யோசித்தபடி தனது அறைக்கு சென்றாள்.

மேகாவுடன் அவளது ரூமிற்கு சென்ற விஷ்வா “இந்த பொண்ணு பாக்குற functionஐ எல்லாம் உங்க அண்ணனை நாளைக்கு afternoonக்குள்ள முடிக்க சொல்லு. நம்ம சீக்கிரமா கிளம்பினா தான் nightக்குள்ள வீட்டுக்கு போக முடியும். late பண்ணிட்டு இருக்காத. நான் day after tomorrow கண்டிப்பா office போயே ஆகணும்.” என்று சொல்ல, “அதெல்லாம் பாத்துக்கலாம். எனக்கு இந்த கல்யாணத்தை நெனச்சாலே கவலையா இருக்கு விஷ்வா. நான் இந்த விஷயம் தெரிஞ்ச உடனே அவ இதை பத்தி நம்மகிட்ட ஏதாவது பேசுவான்னு expect பண்ணேன். பட் அவள பாரு.. காளி அண்ணன் சொன்னதுக்கு எதுவுமே சொல்லாம அவ பாட்டுக்கு அவ ரூமுக்கு போய்ட்டா. நான் அவளை நல்லா note பண்ணேன். அவ மூஞ்சியே சரியில்ல. எனக்கு தெரிஞ்சு அவளுக்கும் இந்த கல்யாணத்துல பெருசா interest இல்லைன்னு தான் நினைக்கிறேன்.” என்றாள் மேகா.

“அப்படி பார்த்தா இப்ப வரைக்கும் அரவிந்த்க்கூட தான் எதுவும் சொல்லாம இருக்கான். அவங்க ரெண்டு பேரும் இப்படி சைலண்டா இருக்கும்போது நம்மளா போய் volunteerஆ எதுவும் பண்ண முடியாதுடி. சோ இப்போதைக்கு freeஆ விடு. அவங்க ஏதாவது strongஆ decide பண்ணிட்டு வந்து நம்மகிட்ட சொன்னா பாத்துக்கலாம்.” என்ற விஷ்வா தான் அணிந்திருந்த சட்டையை கழட்டி bedல் தூக்கி போட்டான்.‌ “ச்ச்ச்.. இப்படி சட்டை இல்லாம show காட்டிகிட்டு model மாதிரி சுத்திட்டு இருக்க கூடாதுன்னு உன்கிட்ட எத்தன தடவ சொல்றது..?? நம்ம ரூமா இருந்தா கூட பரவால்ல. அங்க யாரும் வர மாட்டாங்க. இங்க எப்ப யார் வருவாங்கன்னே தெரியாது. இந்தா… முதல்ல சட்டையை போடு.” என்ற மேகா அவன் சட்டையை எடுத்து அவன் முன்னே நீட்டினாள்.

‌bedல் அமர்ந்த விஷ்வா அவள் கையில் இருந்த தனது சட்டையை பிடுங்கி ஒரு ஓரமாக தூக்கி எறிந்துவிட்டு அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்தவன், “நான் இப்ப dress போடுற மூடுல இல்லடி. எல்லாத்தையும் கழட்டி எறியுற மூடுல இருக்கேன். ஒவ்வொன்னா நம்ம சேர்ந்து கழட்டலாமா…?? ” என்று ஹஸ்கி வாய்ஸில் அவள் காதோரம் சொன்னவன், அவள் கழுத்து வளைவில் தனது இதழ்களால் கோலம் போடத் தொடங்கினான். அவன் உதட்டின் மீது கை வைத்து அவன் தலையை பின்னே தள்ளிய மேகா “ஓய்.. போதும் போதும்.. நேத்து நைட்ல இருந்து நீ பண்ணதெல்லாம் போதும். நம்ம இங்க இருந்து கிளம்புற வரைக்கும் கொஞ்சம் சும்மா இரு தெய்வமே ப்ளீஸ்… இதுவே குட்டி ரூம். நம்ம கொஞ்சம் சத்தமா பேசினாக்கூட வெளிய அப்படியே கேட்கும். நீ ஒரு forceஓட இப்ப start பண்ணினா நான் அப்புறம் DTS sound effectல சத்தமா கத்த வேண்டியது இருக்கும். வெளியே இருக்கிறவங்களுக்கு கேட்டுச்சுனா என் மானமே போயிடும்.” என்று சொல்ல, “அதான் ஆல்ரெடி உன் மானம் போயிடுச்சே.. இன்னும் போக என்ன இருக்கு..??” என்று அவள் கையை எடுத்துவிட்டு சொன்ன விஷ்வா அவளது இதழ்களில் முத்தம் கொடுக்க போக, அவர்களது அறைக்கதவு தட்டப்பட்டது.

எரிச்சல் அடைந்த விஷ்வா “யாரது.. இந்த நேரத்துல கரடி மாதிரி..!!” என்று முணுமுணுக்க, “நான்தான் வசந்தி வந்திருக்கேன். கதவை திறங்க. மேகா.. விஷ்வா தம்பி.. கதவை திறங்க…!!” என்று கதவை தட்டியபடி வெளியில் இருந்து சொன்னாள் வசந்தி. “சப்பா.. இவங்கதான் அந்த கரடியா..?? போய் doorஐ open பண்ணு. விட்டா அப்படியே கதவை தட்டி உடைச்சிட்டு உள்ள வந்துருவாங்க போல உன் அண்ணி..!!” என்று சலிப்புடன் சொன்ன விஷ்வா கீழே கிடந்த தனது சட்டையை எடுத்து அணிந்து கொண்டான். சென்று கதவை திறந்த மேகா “என்னங்க அண்ணி.. ஏதாவது முக்கியமான விஷயமா..??” என்று கேட்க, “ஆமா மாப்பிள்ளை குடும்பத்தை பத்தியும், மாப்பிள்ளையை பத்தியும் உங்க அண்ணன் விஷ்வா தம்பிகிட்ட பேசணுமாம்.” என்றாள் வசந்தி.

அவர்களது conversationஐ கவனித்துக் கொண்டிருந்த விஷ்வா “ஆமா.. இப்ப இதுதான் ரொம்ப முக்கியம்..!!” என்று நினைத்து “வாங்க போலாம்.” என்று வசந்தியிடம் வேண்டா வெறுப்பாக சொல்லிவிட்டு அவளுடன் வெளியே சென்றான். தனது அறையில் சோகமாக தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்த நிலா “இப்போ நான் எதுக்கு தேவையில்லாம அழுகிறேன்..?? நான் ஒரு டாக்டர். நானே இப்படி எல்லாம் லூசுத்தனமா behave பண்ணக்கூடாது.” என்று நினைத்து தன்னைத்தானே தேற்றிக்கொண்டு தன் கண்ணீரைத் துடைத்தாள்.

இருப்பினும் தொடர்ந்து அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருக்க, “அடச்சே.. நான் ஏன் இப்படி இருக்கேன்னு எனக்கே ஒன்னும் புரியல‌. ஒருவேளை நான் எனக்கே தெரியாம அரவிந்த லவ் பண்ண start பண்ணிட்டேனா..?? அதான் வேற ஒருத்தர்க் கூட எனக்கு marriage நடக்க போறத என்னால accept பண்ண முடியலையா..??” என்று யோசித்த நிலாவிற்கு உடனே அரவிந்தை பார்த்து அவனிடம் பேச வேண்டும் போல இருந்தது.
அதனால் தனது அறையைவிட்டு வெளியேறியவள், அவனை தன் வீடு முழுவதும் தேடி பார்த்துவிட்டு அரண்மனைக்கும் சென்று தேடினாள்.

அவன் எங்கேயும் இருக்கவில்லை. அதனால் சோகமானவள், “இப்ப என்ன செய்றது..?? இது எல்லாம் உங்களாலதான் அரவிந்த். நீங்க தேவையில்லாம என் பின்னாடியே சுத்திட்டு இருந்து, இப்போ எனக்கு உங்க மேல feelings வந்துருச்சு. இப்போ நீங்க ஜாலியா எங்கயோ போயிட்டீங்க.. நான் தான் உங்களை நினைச்சு இப்படி தனியா feel பண்ணிட்டு இருக்கேன்.” என்று தனக்குள் புலம்பிய நிலா எங்கே செல்வது.. என்ன செய்வது? என்று புரியாமல் நேராக மொட்டை மாடிக்கு சென்றாள்.
அவள் ஒரு ஓரமாக நின்று மேலே தெரிந்த வானத்தை வெறித்து பார்க்க, மீண்டும் அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது. தயாளனுடன் எங்கேயோ சென்றுவிட்டு மேகாவின் வீட்டை நோக்கி வந்த அரவிந்த் மாடியில் தனியாக நின்று நிலா அழுது கொண்டிருப்பதை கவனித்துவிட்டு “இவளுக்கும் நம்ம மேல லவ் வந்துருச்சா..?? அதான் இப்ப வீட்ல இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறார்களேன்னு நினைச்சு feel பண்ணிட்டு இருக்காளா இவ..??” என்று நினைத்து வேகமாக படிகளில் ஏறி மூச்சு வாங்க அவள் அருகில் சென்று நின்றான். அவன் வந்ததைக்கூட கவனிக்காமல் நிலா தொடர்ந்து அழுது கொண்டு இருக்க, “இப்போ எதுக்கு இங்க வந்து தனியா நின்னு நீ feel பண்ணி அழுதுட்டு இருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..??” என்று கேட்டான் அரவிந்த்.

அவன் குரல் கேட்டு அவன் பக்கமாக திரும்பிய நிலா, “ஓஹோ நீங்களா.. நான் அழுதா உங்களுக்கு என்ன.??? இல்ல.. இப்படியே இந்த மாடியில இருந்து கீழே குதிச்சு நான் செத்தாத்தான் உங்களுக்கு என்ன..?? நீங்க எதுக்கு ரொம்ப என் மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிக்கிறீங்க..??” என்று கோபமாக கேட்க, “இப்ப சம்பந்தமே இல்லாம இவ எதுக்கு நம்ம மேல கோவப்படுறா..??” என்று நினைத்து குழம்பிய அரவிந்த் “என்னங்க problem உங்களுக்கு..?? நீங்க சொன்னாதானே எனக்கு தெரியும்..!! ஏன் இப்படி எல்லாம் புதுசா ஒரு மாதிரி என்னை எடுத்து எறிஞ்சு பேசுறீங்க..??” என்று சோகமாக கேட்டான்.

“என்ன லவ் பண்ண மட்டும் தெரியுது. ஆனா அதை தைரியமா என்கிட்ட சொல்ல தெரியாதா இவருக்கு..?? இப்ப வந்து என்ன பிரச்சனை.. அது இதுன்னு கேட்டுட்டு இருக்காரு stupid fellow.” என்று நினைத்த வெண்ணிலா, “நான் எதுக்குங்க உங்ககிட்ட எனக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லணும்..?? எதுவா இருந்தாலும் அதை நானே பாத்துக்கிறேன். உங்க கிட்ட நான் சொன்னா மட்டும் நீங்க உடனே ஏதாவது பண்ணி எல்லாத்தையும் solve பண்ணவா போறீங்க..??” என்று கோபமாக கேட்க, “இவ நம்ம மேல இந்த டைம்ல கரெக்டா கோவப்படுறான்னா.. அதுக்கு ஒரே ஒரு ரீசன் மட்டும்தான் இருக்க முடியும். Sureஆ இவ நம்மள லவ் பண்றா..!!” என்று யோசித்த அரவிந்த்,

“இவ என்ன லவ் பண்ணாலும் சரி பண்ணலேன்னாலும் சரி. என் மனசுல இருக்கிறத நான் இவகிட்ட சொல்லிடுறேன். அதுக்கப்புறம் என்ன முடிவா இருந்தாலும் அத இவகிட்டயே விட்டுருவோம்.” என்று நினைத்து “நீ எதுக்காக என் மேல கோபப்படுறேன்னு எனக்கு புரியல நிலா. ஆமா இத்தனை நாளா என் மனசுக்குள்ள வச்சிருந்ததை நான் உங்க கிட்ட இப்ப சொல்லிடறேன். இத கேட்டுட்டு நீ எப்படி react பண்ணுவன்னு எனக்கு தெரியல. ஆனா இதுக்கு மேலயும் இத சொல்லாம இருந்தா தப்பாயிடும்ன்னு எனக்கு தோணுது. நான் சொல்றத சொல்லிடறேன். நீயும் உனக்கு தோன்றுத frankஆ என் கிட்ட சொல்லு. But in case உனக்கு இதுல விருப்பம் இலலைனா, directஆ என்கிட்டயே சொல்லிடு. வீட்ல சொல்லி தேவையில்லாம problem create பண்ணிடத. அப்புறம் என்னால எல்லாருக்கும் தேவையில்லாம கஷ்டம் ஆயிடும்.” என்று பெருசாக பீடிகை போட்டான்.
“இப்ப என்ன சொல்ல போறாரு இவரு..??” என்று யோசித்து குழம்பிய நிலா, அவனை குறுகுறுவென பார்த்தாள்.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured