அத்தியாயம் 178
தேன்மொழியை தூக்கிக் கொண்டு போய் சோஃபாவில் அமர வைத்த அர்ஜுன் அவளுக்காக அவன் ஏற்பாடு செய்து வைத்திருந்த கேக்கை சர்வண்டுக்கு கால் செய்து அவர்களது ரூமிற்கு கொண்டு வரச் சொன்னான். தன் முன்னே ஹாராட் shape-ல் க்யூட்டாக ரோஸ் டிசைன்களுடன் இருந்த பென்டோ கேக்கை பார்த்தேன் தேன்மொழி ஆச்சரியத்தில் விரிந்த கண்களுடன் “ஓஹோ இது நம்ம பர்சனல் செலிபிரேஷனா? நான் கூட அப்படியே லைனா எல்லாரும் வந்து எனக்கு கும்பலா சேர்ந்து பர்த்டே விஷ் சொல்லுவாங்கன்னு நினைச்சேன்.” என்றாள்.
அவள் அருகில் சென்று அமர்ந்த அர்ஜுன் அவளது தோள்களில் கை போட்டு அவளை தன்னுடன் சேர்த்து அனைத்து கொண்டு “அதுக்கு பேரு பர்த்டே பார்ட்டி மேடம். இது என் பொண்டாட்டிக்கு நான் கொடுக்கிற பர்த்டே ட்ரீட். உனக்கு ஸ்பெஷலா ஏதாவது பண்ணனும்னு தோணுச்சு. பட் இந்த டைம்ல என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல.
சோ எனக்கு தெரிஞ்ச வரை பண்ணிட்டேன். உனக்கு வேற ஏதாவது வேணும்னா சொல்லு. மார்னிங் கண்டிப்பா பண்ணிடலாம்.” என்று சொல்லிவிட்டு அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
அவனது கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்ட தேன்மொழி “எனக்கு எதுவும் தோணல அர்ஜுன். நீ இப்படி என் பக்கத்துல இருக்கறது தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நடுவுல நடுவுல நம்ம நிறைய சண்டை போட்டு பேசாமயே இருந்தோம் இல்ல.. அது எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு தான் கடவுள் உன்னை என் கூடயே இருக்கிற மாதிரி பண்ணிட்டாரு போல இருக்கு.
நான் இப்ப பெட்லயே படுத்து கிடந்தாலும் கூட மனசார சந்தோஷமா இருக்கேன். அதுக்கு ஒரே ரீசன் நீ மட்டும் தான். எனக்கு இது போதும். வேற ஏதாவது கேட்கணும்னு தோணுச்சுன்னா நான் அப்புறமா கேட்கிறேன். இப்போ கேக் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கு கட் பண்ணலாமா இத? Knife எங்க?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் ரெடியாத் தான் இருக்கு.” என்ற அர்ஜூன் ஒரு சிறிய கேண்டிலை அந்த கேக்கிற்க்கு நடுவில் வைத்து பற்ற வைத்து தேன் மொழியிடம் கத்தியை கொடுத்து “now Make a birthday wish And blow a candle!” என்றான். உடனே தன் கண்களை மூடி “இதே மாதிரி நானும் என் அர்ஜுனும் எப்பவும் ஹாப்பியா இருக்கணும். எனக்கு பொறக்க போற குழந்தை ஹெல்த்தியா பொறக்கணும்.
சித்தார்த்தும் ஆருத்ராவும் என்னையும் என் குழந்தையையும் ஏத்துக்கணும். எப்பயுமே நாங்க எல்லாருமே ஒன்னா ஹாப்பி ஃபேமிலியா இருக்கணும்.” என்று நினைத்து கடவுளை வேண்டிக் கொண்ட தேன்மொழி மெழுகுவர்த்தியை ஊதிவிட்டு கேக்கை வெட்ட தொடங்கினாள்.
உடனே உற்சாகமாக கை தட்டிய அர்ஜுன் “happy birthday to you happy birthday to you ஹாப்பி பர்த்டே dear ஹனி பேபி!” என்று பாட, அதைக் கேட்டு சிரித்தவாறு கேக்கை வெட்டி அவன் வாயில் வைத்த தேன்மொழி “thanks for everything my dear husband.” என்று சொல்லிவிட்டு அவன் கன்னத்தை தன் ஒரு கையால் பிடித்து அதில் அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்தாள். அவள் கொடுத்த முத்தத்தில் இருந்த அழுத்தம் அவளுக்கு அவன் மீது இருந்த காதலின் ஆழத்தை சொல்லாமல் சொன்னது.
தானும் ஒரு பீஸ் கேக்கை வெட்டி அவளுக்கு ஊட்டி விட்ட அர்ஜுன் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து அவளை குடிக்க வைத்தான். அப்படியே சோஃபாவில் அவளுடன் அமர்ந்து அரை மணி நேரம் வரை பேசிய அர்ஜூன் “ஓகே மத்ததெல்லாம் காலைல பேசிக்கலாம். அம்மா வீட்ல நாளைக்கு ஏதோ பூஜை அரேஞ்ச் பண்றேன்னு சொன்னாங்க. சோ நீ சீக்கிரம் தூங்கிடு. நான் வேற உன்னை நடுவுல எழுப்பி விட்டு டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.” என்றபடி அவளை தூக்க முயற்சி செய்தான்.
அவன் கைகளைப் பிடித்து தடுத்த தேன்மொழி “ச்ச்.. இந்த மாதிரி மொமென்டெல்லாம் லைஃப்ல மறுபடியும் எனக்கு எப்ப கிடைக்குமோ தெரியல. கிடைக்கிற வரைக்கும் இது எல்லாத்தையும் நான் whole heartedly என்ஜாய் பண்ணனும்னே நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரம் என் கூட உட்கார்ந்து பேசேன்.. இதுவே ஆபீஸ் மீட்டிங்கா இருந்தா லஞ்சுக்கு அப்புறம் ஸ்டார்ட் பண்ணி டின்னர் டைம் வரைக்கும் எல்லார் கூடவும் சேர்ந்து பேசிகிட்டே இருக்கீல நீ.. என் கூட பேச மாட்டியா?” என்று அவனை குறை கூறினாள்.
இப்படியே விட்டால் எவ்வளவு நேரம் ஆனாலும் இவள் தன்னுடன் பேசிக் கொண்டே இருப்பாளே தவிர தூங்க மாட்டாள் என்று நினைத்த அர்ஜுன் “உட்கார்ந்துகிட்டு பேசுறதுக்கு இது ஒன்னும் மீட்டிங் ஹால் இல்ல. நம்ம பெட்ரூம்ல ஜாலியா படுத்துகிட்டே கூட பேசலாம்.” என்று சொல்லிவிட்டு அவளை தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்து விட்டு தானும் அவள் அருகில் படுத்துக் கொண்டான்.
அவன் பக்கம் திரும்பி படுத்த தேன்மொழி “ஆமா நீ ஏதோ ஒர்க் இருக்குன்னு சொன்னியே.. அது முடிஞ்சிருச்சா? இல்ல எனக்காக இவ்ளோ நேரம் முழிச்சிருந்தியா?” என்று கேட்க, ஏசி ஓடிக் கொண்டு இருந்ததால் தங்கள் இருவரின் மீதும் போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டே “வேலை செய்யணும்னு நினைச்சா நான் விடிய விடிய கூட செய்யலாம். அவ்ளோ வேலை இருக்கு. அதையெல்லாம் பார்த்தா பர்சனலா நம்ம ரெண்டு பேரும் டைம் ஸ்பென்ட் பண்ணவே முடியாது.” என்றான் அர்ஜூன்.
“தெரிஞ்சா சரி!” என்ற தேன்மொழி நேராக படுத்துக் கொண்டு விட்டத்தை பார்த்தபடி எதையோ யோசித்தவள் திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாக “அர்ஜுன் எனக்கு ஒரு டவுட்.” என்றாள். தன் கையை தலைக்கு அடியில் வைத்து அவள் பக்கம் திரும்பி படுத்து கொண்ட அர்ஜூன் “இந்த அர்த்த ராத்திரியில உனக்கு அப்படி என்னடி டவுட்டு? உன்ன தூங்க வைக்கிறதுக்குள்ள எனக்கு தூக்கம் வந்து நான் தூங்கிடுவேன் போல இருக்கு.” என்று விட்டு கொட்டாவி விட்டான்.
அவன் பக்கம் உடனே திரும்பி படுத்த தேன்மொழி அவன் வயிற்றில் கை போட்டுக் கொண்டு “இந்த கவர்மெண்ட் ஜாப்ல இருக்கிறவங்களுக்கு எல்லாம் 60 வயசுக்கு மேல ரிட்டயர்மென்ட் குடுப்பாங்க இல்ல.. பிரைவேட் ஜாப்ல இருக்குறவங்களுக்கு கூட ரிட்டயர்மென்ட் ஏஜ் இருக்கு. அந்த மாதிரி பிசினஸ் பண்றவங்களுக்கு எல்லாம் இல்லையா?
உனக்கு அறுவது வயசு ஆகுறதுக்குள்ள சித்தார்த் பெரிய பையன் ஆயிடுவான். இந்த ரெஸ்பான்ஸ்ளீடீஸ் எல்லாத்தையும் நீ அவன் கிட்ட கொடுத்துட்டு ஃப்ரீ ஆகிட்டா அப்பையாவது ஜாலியா நம்ம ரெண்டு பேரும் எங்கேயாவது வெளியே போய் ஓல்டேஜ் மூன் செலிப்ரேட் பண்ணலாமா?” என்று கேட்டாள்.
அவள் தன்னிடம் விளையாடிக் கொண்டிருக்கிறாள் என நினைத்து சிரித்த அர்ஜுன் “எனது ஓல்ட் ஏஜ் மூனா? இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லையாடி? நமக்கே இப்ப தான் கல்யாணம் ஆயிருக்கு. ஹனிமூன் போகணும்னு கேட்டா கூட பரவால்ல. நம்ம ரெண்டு பேரும் வெளிய ட்ரிப் போறதுக்கு அத்தனை வருஷம் வெயிட் பண்ணனுமா?” என்று கேட்டான்.
“ஆமா பின்ன… நீதான் என் கூட எங்கேயுமே வர மாட்டேங்குறியே.. நமக்கு மேரேஜ் ஆகி எத்தனை நாள் ஆகுது.. இப்ப தான் நான் பிரக்னண்டா இருக்கேன் எங்கேயும் நம்மளால போக முடியல. இதுக்கு முன்னாடி எங்கயாவது என்ன கூட்டிட்டு போகணும்னு நினைச்சியா நீ?
கடைசில ரஷ்யாவுல இருந்து நம்ம இங்க இந்தியாவுக்கு வந்தது தான் ஹாலிடே ட்ரிப் மாதிரி ஆயிடுச்சு. அதுவும் அடுத்த மாசம் எல்லாம் சித்தார்த் ஆருத்ரா ரெண்டு பேரும் ஸ்கூல் போகணும். சோ அவங்க ரஷ்யா கிளம்பி போய்டுவாங்க. நீ பிசினஸ் பிசினஸ்னு இருப்ப.
இங்க இந்தியாவுல இருந்தாலாவது நானா கிளம்பி எங்கேயாவது போகணும்னு நினைச்சா டிரைவர் கூட கார்ல போகலாம். அங்க ரஷ்யா போய்ட்டா, கூண்டுக்குள்ள அடைப்பட்ட கிளி மாதிரி தான் நான் கெடக்கணும். எனக்கு தெரிஞ்ச இங்கிலீஷை வச்சு ஏதோ ஒட்டிக்கிட்டு இருக்கேன். அதுவும் தெரியலைன்னா வாய தொறந்து கூட வெளிய போய் யார்கிட்டயும் பேச முடியாது.” என்று சோகமாக சொன்னாள் தேன்மொழி.
“இவ சொல்றதும் உண்மை தான். மிடில் கிளாஸ் ஃபேமிலியா இருந்தா எங்கயாவது ஃபாரின் ட்ரிப் போகணும்னா, காசுக்கு என்ன பண்றதுன்னு யோசிப்பாங்க. நம்ம கிட்ட எல்லாமே இருந்தும் இவளுக்கு நம்ம எதுவுமே செய்யாம போயிட்டோம்.” என்று நினைத்து வருத்தப்பட்ட அர்ஜுன் “சரி விடுடி! நீ கொஞ்சம் நார்மல் ஆனதுக்கு அப்புறமா நம்ம எங்கேயாவது போகலாம். டாக்டர் மட்டும் டிராவல் பண்ண உனக்கு பர்மிஷன் கொடுக்கட்டும். கண்டிப்பா நான் உன்ன பக்கத்துல எங்கயாவது கூட்டிட்டு போறேன்.” என்றான்.
உடனே சந்தோஷப்பட்ட தேன்மொழி “அப்ப நம்ம பேபி மூன் போக போறோமா?” என்று ஆர்வத்துடன் கேட்க, “ஓஹோ பிரக்னண்டா இருக்கும்போது ட்ரிப்புக்கு போனா அதுக்கு பேரு பேபி மூனா? எப்படி டி புதுசு புதுசா இப்படியெல்லாம் கண்டுபிடிக்கிற?” என்று கேட்டான் அர்ஜுன்.
“எனக்கு வேற வேலை இல்லாம இதை எல்லாம் உட்கார்ந்து நான் கண்டுபிடிச்சுட்டு இருக்கிறேனா? இதெல்லாம் ரொம்ப வருஷமா இருக்கு. நீ பூமர் அங்கிள் மாதிரி எப்ப பார்த்தாலும் வேலையையே கட்டிக்கிட்டு அழுதா எப்படி உனக்கு தெரியும்?” என்று சலிப்புடன் கேட்ட தேன்மொழி விளையாட்டாக அவனது கன்னத்தில் இடித்தாள்.
“என்னது பூமர் அங்கிலா? இதெல்லாம் தெரியலனா உடனே நான் அங்கிலா? எனக்கு தெரிஞ்சது எல்லாம் மத்தவங்களுக்கு தெரியுமா? உன் புருஷன் ஸ்மார்ட் ஆன ஜீனியஸ் டி. என் அருமை இன்னும் உனக்கு தெரியல.” என்று அர்ஜுன் சொல்ல, “எல்லா அருமை எருமையும் எனக்கு தெரியும். எனக்கு தூக்கம் வருது. நீ லைட் ஆஃப் பண்ணு நம்ம தூங்கலாம். மறுபடியும் நீ வேலை பார்க்கிறேன்னு போகக்கூடாது. நீ என் பக்கத்துல இல்லனா அப்புறம் எனக்கு தூக்கம் போயிரும்.” என்ற தேன்மொழி அவனை அணைத்துக் கொண்டாள்.
மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)