அத்தியாயம் 122
திருமணம் முடிந்து இரவு 7 மணி அளவில் அனைவரும் கிளம்பி மதுரைக்கு வந்து சேர்ந்தார்கள். காலையில் இருந்து அனைவரும் பிஸியாக கல்யாண வேலையில் அலைந்து திரிந்ததால் restaurantல் food order செய்து வாங்கி அனைவரும் சாப்பிட்டு முடித்தார்கள்.
விஷ்வா மேகாவிற்கு செய்ததைப் போலவே கலைச்செல்விக்கும், வெற்றிக்கும்க்கூட அவர்களது தோட்டத்து வீட்டில் தான் first night ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்கனவே அங்கே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்க, விஷ்வாதான் அவர்கள் இருவரையும் தனது காரில் அங்கே அழைத்துச் சென்றான்.
வெற்றியும், கலையும் உள்ளே சென்று கதவை லாக் செய்துவிட; வெளியில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து அப்படியே அதில் படுத்த விஷ்வா வானத்தைப் பார்த்தான். அந்த இடம், சூழல், அதே கட்டில் என அனைத்தும் அவனுக்கு அவனது first nightஐ ஞாபகப்படுத்த, அப்போது அவனது mobile phoneற்க்கு ஏதோ ஒரு notification வந்தது. அதை பார்த்தவுடன் சந்தோஷத்தில் எழுந்து அமர்ந்த விஷ்வா, “டேய் வெற்றி.. என் பொண்டாட்டிய convince பண்ணி நானும் இன்னைக்கே அவக்கூட first night celebrate பண்றேண்டா. நீ First daddy ஆகுறியா இல்ல, நான் First daddy ஆகிறனான்னு பார்த்துடலாம்.” என்று நினைத்தவன், வரிசையாக யார் யாருக்கோ தொடர்ந்து கால் செய்து பேசியபடி காரில் ஏறி மேகாவின் வீட்டிற்கு சென்றான்.
அப்போது கிட்டத்தட்ட மணி பத்தாகி இருக்க, அனைவரும் தூங்கி வீடு சைலன்ட் ஆவதற்காக காத்திருந்தான் விஷ்வா. விசேஷத்திற்கு வந்திருந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் அவரவர் வீட்டை பார்த்து சென்றுவிட, பத்தரை மணிக்கெல்லாம் lightஐ off செய்துவிட்டு அனைவரும் தூங்க சென்று விட்டார்கள். “எல்லாம் ரெடியா இருக்கா..??” என்று விஷ்வா மகேஷுக்கு மெசேஜ் செய்து கேட்க, “எஸ் பாஸ்.. எல்லாமே ரெடி. உங்களுக்காக தான் waiting.” என ரிப்ளை அனுப்பினான் அவன். “இப்பதான் எல்லாரும் படுத்திருக்காங்க. அதுக்குள்ள தூங்கிருக்க மாட்டாங்க. இன்னும் ஒரு 30 minutes wait பண்ணலாம்.” என்ற விஷ்வா மணி 11ஆகும் வரை ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து காத்திருந்தான்.
தன் Watchஐயே பார்த்துக் கொண்டிருந்தவன், நேரம் சரியாக 11ஆனவுடன் எழுந்து பூனை போல மெல்ல மெல்ல நடந்து மேகாவின் ரூமிற்கு சென்றான். சோர்வாக இருந்ததால் நன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் அவள். அவள் முகத்தில் லேசாக மயக்க மருந்தை spray செய்த விஷ்வா அவள் கன்னத்தில் தட்டி “மேகா.. செல்லம்..!! நான் பேசுறது கேக்குதா..??” என்று அவள் காதோரம் குனிந்து கேட்க, அவளிடம் ஒரு அசைவும் தெரியவில்லை.
அதனால் “Plan success..!!” என்று நினைத்து சந்தோஷப்பட்ட விஷ்வா அவளை அலேக்காக தூக்கி தன் தோள்களில் போட்டுக்கொண்டு கொல்லைப்புற கதவை திறந்து வெளியே சென்றான்.
அங்கே ரெடியாக இருந்த அவன் காரின் பின் சீட்டில் மேகாவை படுக்க வைத்து விஷ்வா “I have a big surprise for you.!!”என்று சொல்லிவிட்டு தன் காரை start செய்து அங்கிருந்து கிளம்பினான். சில நிமிட பயணத்திற்கு பின் அவனது கார் ஊர் எல்லையில் சென்று நின்றது. அவர்களுக்காக அங்குமிங்கும் பறந்து திரிந்தபடி காத்திருந்தது ஒரு helicopter. மயக்கத்தில் இருந்த மேகாவுடன் அதில் ஏறிய விஷ்வா அந்த helicopterஐ அங்கிருந்து கிளப்ப சொல்லிவிட்டு, மேகாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினான்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தன்னை இப்போது விஷ்வா எங்கேயோ கூட்டி செல்வதை உணர்ந்து பயந்துப்போன மேகா சட்டென எழுந்து அமர்ந்து “என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க..?? கடத்தல் planஆ..??” என்று கேட்டுவிட்டு சுற்றிமுற்றி பார்த்தாள்.
“என்ன மனுஷன் நீங்கெல்லாம்..?? கட்டின பொண்டாட்டியை இப்படி Hi-Techஆ யாருக்கும் தெரியாம இப்படி helicopterல கடத்திட்டு போறீங்க..?? என் permission இல்லாம நீங்க இப்படி பண்றதெல்லாம் offence தான் தெரியுமா..??” என்று அவள் பேசிக்கொண்டே போக, அவள் வாயை தன் கையை வைத்து மூடிய விஷ்வா “அதெல்லாம் எனக்கு தெரியும். நீ முதல்ல அங்க பாரு.” என்று வெளியில் பார்க்கச் சொல்லி கை காட்டினான்.
அதனால் மேகா லேசாக வெளியில் எட்டிப் பார்க்க, அது இரவு நேரம் என்பதால் அனைத்தும் ஒரே இருட்டாக தெரிந்தது. அதனால் எரிச்சலடைந்த மேகா “ச்ச்ச்.. அங்க என்ன இருக்குன்னு என்னை பார்க்க சொல்றீங்க..??” என்று கோபமாக கேட்க, “நல்லா வெளியே போய் பாரு. அப்பதான் தெரியும்.” என்ற விஷ்வா அவளைப் பிடித்து வெளியில் தள்ளிவிட்டு அவளுடன் சேர்ந்து தானும் அந்த helicopterல் இருந்து கீழே குதித்தான்.
அதனால் பயத்தில் “ஆஆஆஆ… அம்மாமாமாமா..!!” என்று மேகா கத்த, அவள் இடுப்பில் கட்டப்பட்டிருந்த parachuteஐ விரித்துவிட்டு அவசரமாக தன்னுடையதையும் விரித்து விட்டான் விஷ்வா. அதுவரை தரையை நோக்கி சென்று கொண்டிருந்த அவர்கள் இருவரும் இப்போது வானில் பறந்தார்கள். பயத்தில் தன் கண்களை இறுக்கமாக மூடியிருந்த மேகா “நான் கீழ விழுகலையா..??” என்று நினைத்து கண்களைத் திறந்து பார்த்தாள். அவளை விடாமல் தன்னுடன் சேர்ந்து இறுக்கிப்பிடித்து இருந்தான் விஷ்வா.
தனக்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிந்திருந்தாலும் பயத்தில் “அடப்பாவி.. யோவ்.. நான்க்கூட நீ எங்கயோ என்ன கடத்திட்டு போகத்தான் plan பண்ணிருக்கேன்னு நெனச்சேன். ஆனா நீ என்ன கொல்ல பாக்குறியா..??” என்று மேகா கேட்க, “உன்ன கொல்றதுக்கு நானும் எதுக்குடி உன்க்கூட சேர்ந்து குதிக்கணும்..??” கேட்டான் விஷ்வா. “இந்த பாயிண்ட் லாஜிக்கா தான் இருக்கு. இருந்தாலும் நான் உன்னை நம்ப மாட்டேன். உண்மைய சொல்லு உன்னோட original plan என்ன..??” என்று மேகா சந்தேகமாக கேட்க, “கீழ பாரு தெரியும்.” என்றான் அவன்.
“அங்கே என்ன தெரிகிறது..??” என்பதைப்போல அவனுடன் அந்தரத்தில் பறந்து கொண்டிருந்த மேகா அவனை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கீழே பார்த்தாள். அங்கே வயல்வெளிகளில் “Happy Birthday Megha” என்று பலவண்ண lightகளால் top angleல் இருந்து பார்ப்பதற்கு ஏற்ப எழுதப்பட்டிருந்தது.
அதைப் பார்த்து அதிர்ந்த மேகா “என்னது.. happy birthdayவா… எனக்கா..?? இன்னைக்கா..?? இன்னைக்கு என்ன date..??” என்று யோசித்தவள், பின் தேதியை ஞாபகப்படுத்தி பார்த்துவிட்டு “அட ஆமா.. இன்னைக்கு என் birthdayதான். அத நானே மறந்துட்டேன். இவருக்கு எப்படி தெரியும்..?? இதுக்குதான் என்ன surprise பண்ண இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்தாரா இவரு..??” என்று நினைத்தாள்.
அப்போது அவளை மேலும் ஆச்சரியப்படுத்தும் விதமாக அவளுக்கு பட்டாசு சத்தம் கேட்டது. “இந்த நேரத்துல எவண்டா பட்டாசு வெடிக்கிறது..??” என்று நினைத்த மேகா சுற்றிமுற்றி பார்க்க, அவர்கள் இருந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் வானவேடிக்கைகள் பலவண்ண கலரில் வானில் ஜொலித்து கொண்டிருந்தது. அதை அவள் குழந்தையாகவே மாறி enjoy செய்து பார்க்க, அப்போது இதய வடிவிலான வானவேடிக்கைகள் வந்து அவள் கவனத்தை ஈர்த்தது. அதனால் அவள் தொடர்ந்து வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென வானில் “I love you megha” என்ற எழுத்துக்கள் மின்னியது.
அதை அவள் தன் வாயை பிளந்துக்கொண்டு பார்க்க, “I love you டி பொண்டாட்டி.” என்று சத்தமாக கத்தி சொன்னான் விஷ்வா. ஏற்கனவே இப்படி வானில் பறந்தவாறு வான வேடிக்கைகளை கண்டு ரசிப்பது அவளுக்கு ஒருவித புது அனுபவம் என்றால், அவனே அவன் வாயால் இப்படி ஒரு அழகிய தருணத்தில் அவன் காதலை சொன்னது மேலும் அந்த momentஐ special ஆக்கியது. அவர்களுக்குள் இருந்த அனைத்து பிரச்சனையையும் மறந்துவிட்டு, அந்த நொடி அவளது கண்களுக்கு அவன் அவளது கணவனாக மட்டுமே தெரிய, “I love you too Vishwa.” என்ற மேகா, அவன் இதழ்களில் strongஆக பச்சாக் என்று ஒரு முத்தத்தை கொடுத்தாள்.
அதில் கிறங்கி மயங்கிப்போன விஷ்வா தன்னை மறந்து அவள் கண்களையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
இருப்பினும் இப்போது அவர்கள் parachuteன் உதவியுடன் வானில் பறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதால், அவளைவிட்டு ஒரு inchகூட நகராமல் ஏதோ gum போட்டு அவர்கள் இருவரையும் ஒட்டப்பட்டிருப்பதை போல, அவளை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தான். அவர்கள் காற்றில் பறந்து கொண்டிருந்தாலும், அவர்களுக்குள் இப்போது காற்று புகும் அளவிற்குக்கூட gap இல்லை.
தொடரும்..