ஹாய் டியர்ஸ்..
என்னோட பிரீமியம் நாவல்ஸ் எல்லாத்துக்குமே நம்ம “தேனருவி தமிழ் நாவல்ஸ்” வெப்சைட்ல அப்லோட் பண்ணிட்டேன். அத நீங்க ஒரு நாளைக்கு வெறும் ஒரு ரூபா மட்டும் கட்டி படிக்கலாம். இப்ப ஒன் டே பிளான் 5 ரூபாய்க்கு இருக்கு. அதில் நான்கு ரூபாய் டிஸ்கவுன்ட் பெற பிளானை வாங்கும்போது B8K2ZRCJ இந்த கூப்பன் கோடை யூஸ் பண்ணுங்க.
நிறைய நாவல்களை நான் அதுல ஃப்ரீ கொடுத்திருக்கேன். இன்னும் அப்லோட் பண்ண வேண்டியது ஸ்பெல்லிங் இருக்கு. அடிக்கடி வெப்சைட் பக்கம் போய் பாத்தீங்கன்னா ஆஃபர்ஸ் மற்றும் புது நாவல்கள் பத்தி நீங்க தெரிஞ்சுக்கலாம்.
அத்தியாயம் 175
சுனிலுக்கு மீண்டும் ஒரு தெரியாத எண்ணில் இருந்து “என்ன ப்ரோ என் மேல கோவமா இருக்கியா? நான் உனக்கு ஹெல்ப் பண்ணனும்னு தான் நினைச்சேன். உங்க அம்மா நடுவுல வந்ததுக்கு நாங்க என்ன பண்ண முடியும்? சுச்சுவேஷனை புரிஞ்சுகிட்டு ரிலாக்ஸ் பண்ணு ப்ரோ..!!
என்னோட டார்கெட் அந்த அர்ஜுனும் அவனோட குடும்பமும் தான். கண்டிப்பா உன்னோட டார்கெட்டும் அதுவா தான் இருக்கும்னு நம்புறேன். அதனால தான் உன் கூட சேர்ந்து ஒர்க் பண்ணனும்னு நினைக்கிறேன். இப்படி தேவை இல்லாம கோபப்படுறத விட்டுட்டு கொஞ்சம் பிராக்டிகலா யோசிச்சா நம்ம எளிமையை நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பந்தாடலாம். என்ன சொல்ற?” என்று கேட்டு மெசேஜ் வந்தது.
அதை படித்து பார்த்துவிட்டு தனது மொபைல் ஃபோனை இறுக்கி பிடித்த சுனில் தனது பர்சனல் அசிஸ்டன்ட்டிடம் அந்த நம்பர் யாருடையது என்று கண்டுபிடிக்க சொல்லிவிட்டு “நான் உன்கிட்ட பேசணும். இப்பவே எனக்கு கால் பண்ணு. நீ யாருன்னு எனக்கு தெரியணும். உன்ன பத்தி எதுவும் தெரியாமல் உன் கூட சேர்ந்து நான் ஒர்க் பண்ணுவேன்னு நீ எப்படி நினைக்கிற? என்னால மறுபடியும் ரிஸ்க் எடுக்க முடியாது.” என்று அந்த மெசேஜ்க்கு ரிப்ளை அனுப்பினான் சுனில்.
“ஹாஹா, அப்படியெல்லாம் அவ்ளோ சீக்கிரம் நான் முன்னாடி வந்துரமாட்டேன். பட் அதுக்கான டைம் வரும்போது கண்டிப்பா நீ என்னை பாப்ப. இப்ப நமக்கு முக்கியமான விஷயம் நீயும் நானும் மீட் பண்றது இல்ல.
அந்த அர்ஜுனோட நிம்மதியை கெடுக்கிறது. ஆல்ரெடி நான் போட்ட பிளான் சொதப்புனதுனால அதுக்கு காம்பவுண்ட் ஷேட் பண்ற மாதிரி நீ கேக்குற ஏதாவது ஒரு விஷயத்தை நான் செஞ்சு கொடுக்கிறேன்னு நான் சொல்லி இருந்தேன். உனக்கு என்ன வேணும்னு நீ இப்ப சொல்லு.
இந்த தடவை நீ என்ன சொன்னாலும் அது கண்டிப்பா அப்படியே நடக்கும். என் சைடுல இருந்து எந்த தப்பும் நடக்காம நான் பாத்துக்குறேன்.” என்று அந்த மர்ம நபர் அவனுக்கு மெசேஜ் அனுப்ப,
அதை பார்த்த சுனில் “நீ எங்க அம்மாவுக்கு பண்ணத என்ன ஆனாலும் நான் மறக்க மாட்டேன். நல்ல வேலையா அவங்க உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரு. அதனால உன்ன போனா போகுதுன்னு மன்னிச்சு விடுறேன். எனக்கு என்ன வேணும்னு யோசிக்கிறதுக்கு டைம் குடு. நான் டிசைட் பண்ணிட்டு உன் கிட்ட சொல்றேன்.” என்று அவனுக்கு ரிப்ளை அனுப்பினான்.
கிளாரா அவ்வப்போது ஓரமாக சென்று யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டே இருந்ததால் சித்தார்த் சொல்வதைப்போல இங்கு ஏதோ ஒன்று தங்களுக்கு தெரியாமல் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்று தானும் உறுதி செய்த ஆருத்ரா மீராவின் அருகில் சென்று “எல்லாரும் எப்ப வீட்டுக்கு வருவாங்கன்னு உங்களுக்கு தெரியுமா ஆன்ட்டி?” என்று பாவமாக கேட்க, “எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டு உன் கிட்ட எதையும் சொல்ல கூடாதுன்னு எனக்கு என்ன ஆசையா பாப்பா? நீ என்ன கேக்குற மாதிரி நான் இதையெல்லாம் போய் யார் கிட்ட கேட்கிறது? நான் கேட்டாலும் யாரும் சொல்ல மாட்டாங்க.” என்று நினைத்து வருத்தப்பட்ட மீரா ஆருத்ராவின் கையைப் பிடித்து “பிராமிசா எனக்கு தெரியாது. உங்களுக்கு ஏதாவது டவுட் இருந்துச்சுன்னா, கரெக்டா நீங்க யாருக்காவது கால் பண்ணி கேளுங்க.” என்றாள்.
அவர்கள் அருகில் வந்து அமர்ந்த சித்தார்த் “இந்த கிளாரோ ஆண்டி மட்டும் யார் கிட்டயோ அடிக்கடி ஃபோன்ல பேசிக்கிட்டே இருக்காங்க. பட் நான் கால் பண்ணா மட்டும் யாரும் எடுக்க மாட்டேங்கறாங்க. அவங்களாவே வீட்டுக்கு வந்து சொன்னா தான் என்ன நடந்துச்சுன்னு நமக்கு தெரியும்.” என்றான்.
“பேசாம நம்ம தேன்மொழி மம்மிக்கு கால் பண்ணி பாக்கலாமா? அவங்க இதுவரைக்கும் நான் கால் பண்ணி எடுக்காம இருந்ததே இல்ல. பட் நான் தான் அவங்க கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டேனே! அப்புறம் எப்படி அவங்களுக்கு கால் பண்றது? உதயா மாமாவும் வீட்ல இல்ல. யாருமே இல்ல. நான் இப்ப யார் கிட்ட தான் பேசுறது?” என்று யோசித்து தனக்குள் புலம்பிய ஆருத்ரா அந்த வீட்டில் ஜனனி மட்டும்தான் இருக்கிறாள் என்பதால் அவளை தொந்தரவு செய்வதை தவிர வேறு வழியில்லை என நினைத்து எழுந்து சென்று ஜனனியின் ரூம் கதவியின் காலிங் பெல்லை அழுத்தினாள்.
இரவு முழுவதும் தனது குழந்தைகளோடு போராடியதால் தூக்கம் இன்றி தவித்த ஜனனி காலையில் தான் குழந்தைகளை பாலூட்டி தூங்க வைத்துவிட்டு அவளும் நிம்மதியாக படுத்து உறங்கிக் கொண்டு இருந்தாள். ஹாஸ்பிடலுக்கு கிளம்பி சென்ற மற்றவர்கள் தேன்மொழிக்கும், சோனியாவிற்கும் ஏதேனும் தவறாக நடந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் இருந்ததால் அவளுக்கு கால் செய்து விஷயத்தை சொல்ல வேண்டும் என யாருக்கும் தோன்றவில்லை.
காலிங் பெல் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து கண் விழித்த ஜனனி சென்று கதவைத் திறந்தாள். அவளை கண்டவுடன் எமோஷனல் ஆகி அவளை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்ட ஆருத்ரா “எனக்கு ரொம்ப பயமா இருக்கு அத்தை. வீட்ல யாருமே இல்ல. எங்க போனாங்கன்னு தெரியல. நாங்க கால் பண்ணா யாரும் எடுக்க மாட்டேங்கறாங்க. நீங்களாவது டாடிக்கு கால் பண்ணி என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா?
ஜானகி பாட்டி கூட கால அட்டென்ட் பண்ணல. எல்லாருமே எங்க கிட்ட எதுவும் சொல்லாம எங்கேயோ கிளம்பி போயிட்டாங்க. கிளாரா ஆன்ட்டி ப்ரொடக்ஷன்காக எங்க கூட இருக்காங்க. இருந்தாலும் எனக்கு என்னமோ ரொம்ப பயமா இருக்கு.” என்றாள்.
“அச்சச்சோ ருத்ரா பேபி..!! இப்ப எதுக்குடா அழுகுற? அவங்களுக்கு ஏதாவது இம்பார்டன்ட் ஒர்க் வந்திருக்கும். அதான் கிளம்பி போயிருப்பாங்க. என் கிட்டயும் யாரும் எதுவும் சொல்லல.
அத்தை இங்க தானே இருக்கேன்.. நீ ஃபீல் பண்ணாத.. நான் தேன்மொழி அண்ணிக்கு கால் பண்ணி எல்லாரும் எங்க போயிருக்காங்கன்னு கேட்டு சொல்றேன். அண்ணி காலைல நாங்க சாப்பிடும்போது கூட கோவிலுக்கு போனா நல்லா இருக்கும்னு சொல்லிட்டு இருந்தாங்க. ஒருவேளை அங்க கூட போயிருப்பாங்க.” என்று சொல்லி அவளை சமாதானப்படுத்திய ஜனனி தனது மொபைல் ஃபோனில் இருந்து தேன்மொழியின் நம்பருக்கு கால் செய்தாள்.
அவளும் எத்தனை முறை கால் செய்தாள் முழுவதாக ரிங் போன பிறகும் யாரும் அவள் காலை அட்டென்ட் செய்யவில்லை. அதனால் “என்ன ஆச்சு அண்ணிக்கு? இப்படி எல்லாம் கால அட்டென்ட் பண்ணாம இருக்க மாட்டாங்களே! ஒருவேளை கோவில்ல கூட்டமா இருக்கறதுனால ஃபோன் அடிக்கிற சத்தம் கேட்கவில்லையா? எதுக்கும் மம்மிக்கு பண்ணி பார்ப்போம்.” என்று நினைத்து ஜானகிக்கு கால் செய்து பார்த்தாள் ஜனனி. அவள் எத்தனை முயற்சி செய்தும் யாரும் அவளது அழைப்பை ஏற்கவில்லை.
அதனால் இப்போது ஆருத்ராவிடம் இருந்த பதட்டம் ஜனியையும் தொற்றிக் கொண்டது. உடனே கிளாராவிற்கு கால் செய்து அவளை தனது ரூமிற்கு வர சொன்னாள். ஆருத்ரா ஜனனியின் ரூம் பக்கம் சென்றதை கவனித்து இருந்த கிளாரா “நீங்க எதுக்காக என்ன அங்க வர சொல்றீங்கன்னு எனக்கு தெரியும் மேடம். நான் எல்லாத்தையும் உங்க கிட்ட ஃபோன்லயே சொல்றேன். சீஃப் குழந்தைங்க கிட்ட இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம்னு ஆர்டர் பண்ணி இருக்காரு.” என்று சொல்லிவிட்டு நடந்து அனைத்தையும் ஜனனியிடம் சொன்னாள்.
டாக்டரின் கேபினுக்கு தனியாக மீண்டும் ஒருமுறை சென்ற அர்ஜுன் “நான் வீட்டிலயே டாக்டர்ஸ் டீம் அரேஞ்ச் பண்ணி என் வைஃபை பார்த்துகிறேன். நீங்க அவளை இங்க இருந்து டிஸ்டார்ஜ் பண்ணுங்க. அவளுக்கு இங்க ஹாஸ்பிடல்ல ஸ்டே பண்றது சுத்தமா பிடிக்கல.” என்று சொல்ல,
“அவங்க வீக்கா இருக்குறதுனால அவங்களுக்கு டிரிப்ஸ் போட சொல்லி இருக்கேன். அது முடிஞ்ச உடனே நீங்க தாராளமா அவங்கள டிஸ்டார்ஜ் பண்ணி கூட்டிட்டு போகலாம் மிஸ்டர் அர்ஜுன்.
உங்களுக்கு வீட்ல அசிஸ்ட் பண்றதுக்கு டாக்டர்ஸ் அண்டு நர்ஸ் தேவைப்பட்டா கூட கேளுங்க. எங்க ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் சார்பா நாங்களே உங்களுக்கு அரேஞ்ச் பண்ணி கொடுக்கிறோம்.” என்று டாக்டர் சொல்ல சரி என்றான் அர்ஜுன்.
அனைத்தும் தயாரான பிறகு தேன் மொழியை கைத் தாங்களாக தூக்கிக் கொண்டு அர்ஜுன் படிகளில் இறங்கி போர்டிகோ வரை நடந்து சென்றான். இப்போது வரைக்கும் தெளிவாக அர்ஜுன் அவளிடம் எதுவும் சொல்லி இருக்காதால், “நான் நடந்து வர்றனே அர்ஜூன்.. எல்லாரும் நம்மளை தான் பார்க்கிறாங்க. எனக்கு என்ன கால்லயா அடிபட்டு இருக்கு? எதுக்கு இப்படி என்ன ஹாஸ்பிடலுக்குள்ள தூக்கிட்டு சுத்திட்டு இருக்க?” என்று குழப்பமாக அவனிடம் கேட்டாள் தேன்மொழி.
“நான் தான் இனிமே உன் கூட இருந்து உன்ன பத்திரமா பாத்துக்க போறேன்னு சொன்னேன்ல.. இனிமே உன் கால் கூட தரையில படாத அளவுக்கு நான் உன்ன இப்படி தூக்கிக்கிட்டே தான் இருக்க போறேன். நீ 24/7 என் கூட தான் இருக்க போற..!!” என்று சொல்லிவிட்டு அவளை காரில் அமர வைத்த அர்ஜூன் மெதுவாக காரை ஓட்டிக் கொண்டு தனது வீட்டை நோக்கி செல்ல தொடங்கினான்.
மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)