அத்தியாயம் 169: உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே பார்ட் 2
அவன் சொன்னதைக் கேட்டு விட்டு ஒரு முறை தன் அருகே அமர்ந்து இருந்த ரித்திகாவை திரும்பி பார்த்த வருண், அவன் தன்னுடைய மனதில் என்ன நினைத்தானோ அது கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் உடனே எதுவும் சொல்லாமல், தன்னுடைய வேலையை மீண்டும் அமைதியாக பார்க்க தொடங்கி விட்டான். என்ன தான் அந்த பிளேயரின் வரும் பாடல்களை கேட்டு கொண்டு வருணின் அருகே பயணம் செய்வது அவளுக்கு பிடித்து இருந்தாலும், “நம்ம கம்முனு செண்பகம் அம்மா கூடயே வந்து இருக்கலாம். அவங்களாவது நாலு வார்த்தை நல்லா சிரிச்சு பேசுவாங்க. இவரு எப்ப பாத்தாலும் உற்றுன்னே இருக்காரு…!!! இவருக்கு எல்லாம் சிரிக்கவாவது தெரியுமா..?? இல்ல தெரியாதா..??? சித்தார்த் இவரோட கேரக்டருக்கு அப்படியே ஆப்போசிட்டா இருக்கான். அவன் ஸ்வீட்டா இருந்தா, இவர் ஸ்பைசியா இருக்காரு. ஒரு வேளை சித்தார்த் அவனோட அம்மா மாதிரி தான் இருப்பான் போல.” என்று நினைத்துக் கொண்டாள் ரித்திகா.
வருணின் கார் முதலில் செல்ல, அந்த காரின் முன்னே சில பாடிகார்ட்ஸ் செல்லும் கார்களும்; அவனுடைய காரின் பின்னே.. செண்பகம் அமர்ந்து இருந்த காரை சிவா ஒட்டி கொண்டு வர, அவர்களின் பின்னே சோபியா மற்றும் பிற பாடி கார்ட்ஸ் வந்து கொண்டு இருந்த கார் ஐ ஆதித்யா டிரைவ் செய்து கொண்டு இருந்தான். மியூசிக் பிளேயரை ஆன் செய்த ஆதித்யா அதில், “மேரி மீ மேரி மீ அழகியே..!!!” பாடலை ப்ளே செய்து அவனும் ரியர் வியூ மிரரில் சோபியாவை பார்த்து பாடிய படியே வந்தான். 😍 ஓர கண்ணால் அவனுடைய க்யூட்டான எக்ஸ்பிரஷன்களை பார்த்து ரசித்த சோபியா வெளியில் அவனை கண்டு கொள்ளாததை போல் நடித்தாள். 😍 🥰 இப்படியே இவர்களுடைய பயணம் அழகாக தொடர்ந்தது.
நேரம் காலை 9 மணி…
பிரவீன் வருணின் நிச்சய தேதி அன்றே தன்னுடைய திருமணத்தை நடத்த வேண்டும் என்று நினைத்ததால் அவசர அவசரமாக அவனுடைய திருமண வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தான். இதற்கு இடையில் அவன் வருண் இன்று போட்டோ ஷூட் நடத்துவதற்காக சென்றிருப்பதாக கேள்விப்பட்டவன், இதில் கூட அவனை முந்த வேண்டும் என்று நினைத்து, “அவன் ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் நடத்தினா, நான் இன்னைக்கு என்னோட என்கேஜ்மென்ட் ஐயையே நடத்தவேன் டா.” என்று ஆத்திரத்துடன் தன்னுடைய மேனேஜர் சங்கரிடம் சொன்ன பிரவீன், இன்று சாயங்காலமே தன்னுடைய நிச்சயதார்த்தம் கிராண்டாக நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டான்.
நாள் கிழமை எதுவும் பார்க்காமல் திடீரென்று தன்னுடைய மகன் வீம்பிற்காக இப்படி ஒரு நல்ல காரியத்தை கேலி கூத்தாக்க ஆக்க நினைப்பது தேவிக்கு பிடிக்கவில்லை தான். இருப்பினும் தான் என்ன சொன்னாலும் தன்னுடைய மகன் அதை கேட்கப் போவதில்லை என்று நினைத்தவள், எது எப்படி நடந்தாலும் இறுதியில் தன்னுடைய மகனின் வாழ்க்கை நன்றாக அமைந்தால் போதும் என்று நினைத்து தன்னுடைய மனதை தேற்றிக்கொண்டு லக்ஷனாவின் பெற்றோர்களுக்கு கால் செய்து இந்த திடீர் நிச்சயத்தை பற்றி அறிவித்தாள். ஏற்கனவே எப்படியும் தன்னுடைய மகளை பிரவீனுக்கு திருமணம் செய்து கொடுக்க தான் போகிறோம் என்ற முடிவில் இருந்த லக்ஷனாவின் அம்மா மங்கை அதை ஒரு பெரிய விஷயமாக கண்டு கொள்ளவில்லை.
ஆனால் தன்னுடைய திருமணம் இப்படி நடக்க வேண்டும், கணவன் இப்படி இருக்க வேண்டும், என்று ஆயிரம் கனவுகளுடன் வளம் வந்து கொண்டு இருந்த லக்ஷனாவிற்கு அதை ஏற்று கொள்ள மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் இப்போதும் கூட எப்படியாவது தன்னுடைய அம்மாவை பேசி சமாதானப்படுத்தி இந்த திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று நினைத்த லக்ஷனா, தன்னுடைய அம்மாவிடம் பேசி பார்த்தாள். ஆனால் தன்னுடைய குடும்ப கவுரவத்தையும், பொருளாதார சூழ்நிலையையும் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்ட மங்கையால் தன்னுடைய மகளின் மன நிலையை பற்றி யோசிக்க முடியவில்லை. அதனால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.
ஒருபுறம் பிரவீன் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் வெகு விமர்சையாக நடந்து கொண்டு இருக்க, இன்னொரு புறம் காசை அள்ளி மங்கையிடம் விட்டெறிந்த பிரவீன்… நிச்சயதார்த்தத்திற்கு தேவையான அனைத்தையும் அதில் வாங்கிக் கொள்ளும்படி சொன்னான். லக்ஷனாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால் அவள் எது நடந்தாலும் நடந்து விட்டு போகட்டும் என்று நினைத்தவள், முழு மனதுடன் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அதனால், தன்னுடைய மகளின் ஆடை முதல் அணிகலன்கள் வரை அனைத்தையும் மங்கையே தேர்வு செய்தாள். வருண் எதை செய்தாலும் அவனோடு போட்டி போட்டு அதையே செய்ய நினைக்கும் பிரவீன் எப்படியும் தானும் பிரி வெட்டிங் போட்டோ சூட் செய்ய வேண்டும் என்று நினைத்தவன் சாயங்கால வேளையில் தானே நிச்சயம் தொடங்குகிறது என்பதால், காலையில் லக்ஷனா ரெடி ஆனவுடன் அவளை மண்டபத்திற்கு வரச் சொல்லி விட்டான் பிரவீன்.
பின் அங்கு இருந்த, கார்டன் ஏரியாவில் சிறிய சிறிய செட்டுகளை அமைத்த பிரவீன்; அதில் லக்ஷனாவை தன்னுடன் இருக்க வைத்து பலவிதமான போட்டோக்களை எடுத்து குவித்தான். லக்ஷனாவிற்கு அவன் அருகே நிற்பது கூட மிகவும் அருவருப்பாக இருந்தது. இருப்பினும் தன்னுடைய வெறுப்பையோ மறுப்பையோ அவனிடம் காட்டும் நிலையில் அவள் இல்லாததால், அவன் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் வளைந்து கொடுத்து கொண்டு இருந்தாள்.
அதை தனக்கு சாதகமாக எடுத்து கொண்ட பிரவீன்; அவளை அனைப்பது, அவளை தூக்குவது, முத்தமிடுவது, தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப வேறு வேறு கோணங்களில் அவளை நிற்க வைத்து வளைத்தும் ரஎன இல்லாத குரங்கு சேட்டைகள் அனைத்தையும் அவளை தன் கையில் இருந்த பொம்மையாக பயன்படுத்தி செய்து கொண்டு இருந்தான். ஊமையான பொம்மையாய் அவனுடைய கைகளில் கிடந்தாள் லக்ஷனா.
வெகு விரைவாக ஏற்காட்டிற்கு வந்து சேர வேண்டும் என்று நினைத்து அவர்கள் விடிய காலையிலேயே கிளம்பி இருந்தாலும், டிராபிக்கில் மாட்டி காலை மணி பத்து ஆகும்போது தான் அவர்கள் வந்தடைந்தனர். சேலம் மாவட்டத்தை கடந்து ஏற்காட்டில் தங்களுடைய ரெசார்ட்டை நோக்கி காரை ஓட்டி கொண்டு இருந்தான்் விஷ்ணு. அவர்களுடைய ரிசார்ட் மலைக்கு மேலே இருந்தது. அதனால் மிதமான வேகத்தில் சென்று கொண்டு இருந்தான் விஷ்ணு. அப்போது அவன் எதர்ச்சியாக கண்ணாடி வழியாக வருனும், ரித்திகாவும், கவனித்தான்.
அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்து இருந்தாலும், எங்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியாது என்பது போல ஒட்டாமல் அமர்ந்து இருந்தனர். அதை கவனித்த விஷ்ணுவின் மூளைக்கு இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று தோன்ற, ஒரு விபரீத யோசனை அவனுக்குள் தோன்றியது. இது காட்டு மலைப்பாதை என்பதால் ரோடு கரடு முரடாக தான் இருந்தது. அதுமட்டுமின்றி பல வளைவுகளில் அவன் காரை திருப்பி செல்ல வேண்டியது இருந்தது. அதனால் வேண்டுமென்றே காரை அங்கும் இங்கும் அசைத்துக் கொண்டு இருந்தான் விஷ்ணு. அதனால் அவர்கள் சென்று கொண்டு இருந்த கார் குலுங்க, பின் சீட்டில் அமர்ந்து இருந்த வருனும், ரித்திகாவும் அடிக்கடி ஒருவர் மீது ஒருவர் மோதி கொண்டனர்.
மீண்டும் மீண்டும் வந்து தன் மீது மோதிக்கொண்டே இருக்கும் ரித்திகாவை பார்த்து கடுப்பான வருண் அவளை எரித்துவிடும் பார்வை பார்த்தான். அதைக் கண்டு பயந்து போனா ரித்திகா, “நானா எதுவும் வேணும்னு பண்ணலைங்க. கார் தான் இப்படி போகுது. அதுக்கு நான் என்ன பண்றது..???” என்று அவசரமான குரலில் சிறிது பயத்துடன் சொன்னாள். அவள் சொன்னதை கேட்டுவிட்டு விஷ்ணுவை கோபமாக பார்த்த வருண், “இதுக்கு முன்னாடி ஹில் ஸ்டேஷன்ல நீ டிரைவ் பண்ணதே இல்லையா டா..??? எதுக்கு இப்போ இவ்ளோ மோசமா டிரைவ் பண்ற..??” என்று உச்சரிதியில் கத்தினான்.
இன்று விஷ்ணு ஒரு முடிவில் தான் இருந்தான். அதனால் வருண் பேசியதை பெரிதாக கண்டு கொள்ளாதவன், “ரோடு மோசமா இருந்தா, நான் என்ன அண்ணா பண்றது.??? நான் ஒரு ரேசர் என்று உங்களுக்கே தெரியும்ல.. என்னோட டிரைவிங் ஸ்கில்ஸ நீங்க டவுட் பண்றீங்களங்கள அண்ணா..???” என்று அப்பாவி போல கேட்டான். விஷ்ணு என்ன தான்நடிப்பை போட்டு தள்ளினாலும் வருண் அவனுக்கே அண்ணன் ஆயிற்றே…!!! அதனால் அவனுடைய மனதில் இருப்பதை சரியாக கவனித்தவன், “நீ டிரைவ் பண்ணி கிழிச்சது எல்லாம் போதும். கார் ஐ ஸ்டாப் பண்ணு.” என்றான்.
விஷ்ணு: “இல்ல அண்ணா. நானே சூப்பரா டிரைவ் பண்ணுவேன் ப்ளீஸ்..!!’ என்றான்.
விஷ்ணு தன்னிடம் என்ன சொன்னாலும் அதை தான் கேட்க போவதில்லை என்று உறுதியாக இருந்த வருண், “இப்ப நீ கார் ஐ ஸ்டாப் பண்ண போறியா இல்லையா டா..???” என்று பயமுறுத்தும் குரலில் ஆக்ரோஷமாக கத்தினான். அவன் கத்தியதில் விஷ்ணு மட்டுமல்ல ரித்திகாவும் கூட பயந்து விட்டாள். இதற்கு மேலும் தன்னுடைய அண்ணனின் பொறுமையுடன் போராடி தான் வாங்கி கட்டிக் கொள்ள விரும்பாத விஷ்ணு, வருண் சொன்னதைப் போல் காரை நிறுத்தினான்.
பின் கதவை திறந்து கீழே இறங்கி வந்த வருண் விஷ்ணுவை இறக்கிவிட்டு அவன் டிரைவர் சீட்டில் அமர்ந்தவன், “பின்னாடி வர்ற கார்ல தானே அம்மா வராங்க..!!! நீ அவங்க கூடயே வந்து சேரு.” என்று சொன்ன வருண், அவனை கண்டுகொள்ளாமல் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான். “அண்ணா கார் ஐ நிறுத்துங்க.” என்று கட்டியப்படியே அந்த காரின் பின்னே சில தூரம் ஓடி வந்தான் விஷ்ணு. அப்போதும் மனம் இறங்காத வருண், தன்னுடைய காரை நிறுத்தவில்லை. அதனால் சோர்ந்து போன விஷ்ணு, பின்னே வந்து கொண்டு இருக்கும் தன்னுடைய அம்மாவின் கார் வருவதற்காக ஓரமாக நின்று வெயிட் செய்ய தொடங்கினான்.
“யாரு சாமி இவன்..??” என்பது போல, பீதியில் வருணை பார்த்துக் கொண்டு இருந்தாள் ரித்திகா. எந்த அண்ணனும் தன்னுடைய தம்பி இடம் இப்படி நடந்து கொள்வதை அவள் பார்த்ததில்லை. அதனால், “இவரு கூட பொறந்த தம்பியவே இப்படி ட்ரீட் பண்றாரு. நாளைக்கு நம்மளை எல்லாம் எப்படி ட்ரீட் பண்ணுவாரோ…!!!” என்று தனக்குள் நினைத்த ரித்திகா பயந்தாள். 😖 🙁
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)