அத்தியாயம் 95
விஷ்வா கலர் கம்மியானால் பரவாயில்லை என்ற மேகா தொடர்ந்து அவனுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்க, அவளை சட்டென தன் பக்கம் இழுத்த விஷ்வா, “உனக்கு என்ன நீ ரொம்ப புத்திசாலித்தனமா யோசிக்கிறதா நினைப்பா..?? நான் இங்க வெயில்ல தீஞ்சு போய் கருத்துப் போகிற மாதிரி தானடி நீயும் கருத்து போவ..!! அப்ப உன்னோட skin tone இன்னும் dull ஆகாதா லூசு..?? அப்பயும் நீ என்னவிட கலர் கம்மியா தான்டி இருப்ப. அதுக்கு என்ன பண்ண போற ம்ம்ம்…?? Plastic surgeryஆ..??” என்று நக்கலாக கேட்டுவிட்டு சிரித்தான்.
அதனால் சட்டென அவனைவிட்டு பிரிந்த மேகா “அட ஆமால்ல.. என்னதான் sunscreen போட்டாலும் beachல இருக்கிறதுனால skin நல்லா tan ஆயிடும். நல்லவேளை நீங்க சொன்னீங்க..!! Photo எடுத்தது எல்லாம் போதும். வாங்க போலாம்.” என்று விஷ்வாவின் கையை பிடித்து இழுத்தாள். வேண்டுமென்றே “இல்ல இல்ல லாஸ்ட்டா அவன் ஏதோ boat பக்கத்துல நின்னு photo எடுக்கணும்னு சொன்னானே..!! நீ கேட்ட உடனே இந்த photoshootக்கு அவன hire பண்றதுக்கு எத்தனை டாலர் spend பண்ணி இருக்கேன் தெரியுமா..?? செலவு பண்ண காசுக்காவது நான் அதை எடுக்காம வரமாட்டேன். ஒழுங்கா நின்னு pose குடு.” என்ற விஷ்வா வலுக்கட்டாயமாக அவளை இழுத்துக் கொண்டு boatஇன் அருகே சென்றான்.
அவர்கள் இருவரையும், அரவிந்த் வெண்ணிலாவையும் பார்த்தபடி ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த கலைச்செல்வி, “நம்மளும் ஒரு photo எடுத்துக்கலாமே..!! அங்க பாரு வெற்றி.. அந்த நிலா புள்ளக்கூட bodyguard அண்ணாக் கூட சேர்ந்து photo எடுத்துக்குறா. அவரும் அந்தப் புள்ளைய நிக்க வச்சு மாறி மாறி ஃபோட்டோ எடுக்குறாரு. உனக்கு ஏன் அதெல்லாம் தோண மாட்டேங்குது…?? நான் அழகா இல்லாததுனாலயா..??” என்று சோகமாக கேட்டாள்.
“அட.. ச்சி.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. ஏண்டி எப்ப பாத்தாலும் இப்படியே யோசிக்கிற..??” வெற்றி கேட்க, “பின்ன என்ன இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கு கல்யாணமே ஆகப்போகுது. இந்த மாதிரி எல்லாரும் ஜோடியா வெளிய வந்தா, எவ்வளவு சந்தோஷமா இருப்பாங்க. நீ மட்டும் என்னமோ உன் அத்தை மகளுக்கு காவக்காரன் வேலை பார்க்க வந்த மாதிரி இப்படி ஓரமா கை கட்டிட்டு நிக்கிற. நானும் வந்ததுல இருந்து உன் பக்கத்துல கம்முனு நிக்கிறேன். நீ என் கிட்ட ஒரு வார்த்தை பேசக்கூட இல்ல. அப்புறம் நான் வேற என்ன நினைக்கிறது…??” என்ற கலைச்செல்வி தன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.
“ஏய் எனக்கும் இப்படி எல்லாம் பண்ணனும்னு ஆசையா தாண்டி இருக்கு. ஆனா என்ன பண்றது..?? கூச்சமா இருக்கே..!! நீதான் பாத்தில.. இவங்க பண்றதுக்கு எல்லாம் பெரிய மாமா கோவிச்சுக்கிறாரு. நம்மளும் அந்த மாதிரி ஏதாவது பண்ணி அவர் பார்த்து திட்டிட்டாருன்னா, உங்க அப்பா அம்மாவும் வந்திருக்காங்க. அவங்களுக்கு சங்கடமா போயிடும்ல்ல..!! அதான் நான் அடக்கி வசிக்கிறேன். வேற ஒன்னும் இல்ல. இப்ப என்ன..?? உனக்கு ஃபோட்டோ எடுக்கணும்.. அவ்வளவுதானே..!! வா யாராவது பார்க்கிறதுக்குள்ள எடுத்துக்கலாம்.” என்ற வெற்றி சாதாரணமாக அவள் தோளில் கை போட்டு அவளை அழைத்துக் கொண்டு கடற்கரையை நோக்கி செல்ல, வெட்கத்துடன் சிரித்த முகமாக அவனை பார்த்தபடி சென்றாள் கலை.
சில மணி நேரங்களுக்கு பிறகு அனைவரும் Maldivesல் உள்ள விஷ்வா குடும்பத்திற்கு சொந்தமான private Islandக்கு சென்றார்கள்.
அந்த தீவு சிறியதாக இருந்தாலும் அழகாக இருக்க, அதை பார்த்து ரசித்தபடி அங்கே இருந்த பெரிய வில்லாவிற்குள் அனைவரும் நுழைந்தார்கள். அந்த வில்லாவைசுற்றி ஒரு சிறிய காடு மட்டுமே இருக்க, அதை தாண்டி கண்ணுக்கு எட்டிய வரை நீலக்கடல் சுற்றி பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. காலையில் இருந்து பிரகாசமான முகத்துடன் இருந்த விஷ்வா அந்த வில்லாவிற்குள் கால் வைத்த உடனேயே fuse போன bulb மாதிரி மாறிவிட்டான்.
அதை கவனித்த மேகா அவன் கையைப் பிடித்து “என்னாச்சு உங்களுக்கு திடீர்னு ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க…?? மறுபடியும் ஏதாவது உடம்பு சரியில்லையா..??” என்று அக்கறையுடன் கேட்க, அவள் கையை எடுத்து விட்ட விஷ்வா “Nothing. I’m fine. Just triedஆ இருக்கு. Please Leave me alone for sometime. நான் கொஞ்சம் Rest எடுக்கணும்.” என்றவன் அவளது பதிலுக்குக்கூட காத்திருக்காமல் நேராக அங்கே எப்போதும் அவனுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ரூமிற்கு சென்று விட்டான்.
“இவர் கிட்ட என்னமோ சரி இல்லையே..!! போய் என்னன்னு கேட்டு பார்க்கலாம்.” என்று நினைத்த மேகா அவனது ரூமையை நோக்கி செல்ல போக, “வேண்டாம் மா. அவர இப்போதைக்கு disturb பண்ணாத. இங்க வந்தும் அவர் காலையில இருந்து நார்மலா இருந்ததே பெரிய விஷயம். உன்னால தான் அவர் கொஞ்சம் ஓகேவா இருக்காரு. மறுபடியும் நீயே போய் அவர்கிட்ட ஏதாவது பேசி அவரை டென்ஷன் பண்ணி விட்டுடாத. அவர் தனியா இருக்கட்டும்.” என்றான் மகேஷ்.
“ஏன் அப்படி சொல்றீங்க? நல்லாதானே இருந்தாரு! இப்பல்லாம் அவர் தூங்குறதுக்காக கூட மாத்திரை போடறது இல்ல. திடீர்னு இவருக்கு என்ன ஆச்சு..?? நீங்களாவது சொல்லுங்க அண்ணா.” மேகா கேட்க, “என்க்கூட வா.” என்ற மகேஷ் அவள் கையை பிடித்து அழைத்துக் கொண்டு அந்த பெரிய வில்லா வீட்டின் பின்புறத்திற்கு சென்றான்.
அங்கே ஒரு சிறிய தோட்டம் போன்ற அமைப்பு இருக்க; அதற்குள் இருந்த அழகிய கல்லறையில் அமைதியாக உறங்கிக் கொண்டு இருந்தான் விஜய்.
அந்த கல்லறையின் அருகே இருந்த சுவற்றில் பதித்து வைக்கப்பட்டிருந்த விஜயின் ஆளுயர போட்டோவை பார்த்து அதிர்ந்த மேகா கல்லறையில் இருந்த விஜய் வாசுதேவன் என்ற பெயரை பார்த்துவிட்டு, “விஜயோட கல்லறை இங்க தான் இருக்கா..??” என்று நம்ப முடியாமல் கேட்டாள்.
“ஆமா. விஜய் சார் அவரோட girlfriend லயா கூட அடிக்கடி இங்குதான் வருவாரு. சோ அவங்க இவரை விட்டுட்டு போனத தாங்க முடியாம இங்க வந்து suicide பண்ணி இறந்துட்டாரு. அவர் சாகறதுக்கு முன்னாடி விஷ்வா சாருக்கு இனி பொண்ணுங்களயே நம்பாத. நான் நம்பி ஏமாந்துட்டேன்.
அப்படி இப்படின்னு சொல்லி வீடியோ எடுத்து அனுப்புனாரு. அந்த வீடியோவை இப்பயும் அடிக்கடி பார்த்து அவரு feel பண்ணிட்டு இருப்பாரு. விஜய் சார் இறந்ததுக்கு அப்புறமா நாங்க யாருமே பிசினஸ் விஷயமா கூட Maldives வரல.
இத்தனை வருஷம் கழிச்சு நீங்க கேட்டதுனால விஷ்வா சார் இங்க உங்களுக்காக வந்திருக்காரு. மார்னிங்ல இருந்து உங்கக் கூட இருந்ததுனால அவர் ஓரளவுக்கு நார்மலா இருந்திருக்கிறாரு. இப்போ இங்க வந்த உடனே நடந்ததெல்லாம் மறுபடியும் அவருக்கு ஞாபகம் வந்திருக்கும். அதான் disturbedஆ இருக்காரு.” என்றான் மகேஷ்.
“என்ன அண்ணா சொல்றீங்க.. எனக்காக வந்தாரா..?? எனக்கு நடந்ததெல்லாம் தெரியாதே! நான்தான் லூசு தனமா இங்க போகணும்னு சொல்லிட்டேன். ஆனா அவர் வேணாம்னு சொல்லி இருக்கலாமே.. அதுவும் இங்கயே வந்து எதுக்கு தங்கனும்..?? வேற இடமா இல்ல..?? எங்கேயாவது ஹோட்டல்ல கூட stay பண்ணி இருக்கலாமே..!!” என்று மேகா புரியாமல் கேட்க, “பண்ணியிருக்கலாம் தான். But Who knows.. Maybe அவர் விஜய் சார மிஸ் பண்ணிருக்கலாம். சோ இங்க வந்து அவரோட சமாதியை பாக்கணும்னுக் கூட நினைச்சிருக்கலாம். ஆனா நடக்கிறத வச்சு ஒன்னு மட்டும் என்னால Sureஆ சொல்ல முடியும். விஷ்வா சார் உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாரு மா. அதான் உனக்காக இவ்ளோ தூரம் எல்லாமே பண்றாரு. ஆனா இத அவர் தெரிஞ்சு பண்றாரா இல்ல தெரியாமயே பண்றாரா என்று தான் எனக்கு தெரியல.” என்றான் மகேஷ்.
“என்க்கும் அதான் தெரியல. But நான் அவரை மனசார லவ் பண்றேன் அண்ணா.” என்ற மேகா விஜயின் கல்லறையை ஒரு முறை பார்த்துவிட்டு விஷ்வாவை நினைத்து கண்கலங்கி நின்றாள். “தெரியும். நீயாவது உன் லவ்வ சீக்கிரமா அவர்கிட்ட போய் சொல்லுமா. அப்பையாவது அவருக்கு உன் மேல இருக்கிற feelings என்னன்னு புரியுதானு பாக்கலாம்.” மகேஷ் சொல்ல, “Try பண்றேன்.” என்ற மேகா அவனுடன் மீண்டும் அந்த பெரிய வில்லா வீட்டிற்குள் சென்றாள்.
“இப்பவே அவர பாக்கணும் போல இருக்கே..!! இருந்தாலும் மகேஷ் அண்ணா சொன்ன மாதிரி நான் இப்ப அவரை கொஞ்சம் தனியா விடுறது தான் நல்லது. அன்னைக்கு அரண்மனையில நடந்த மாதிரி இன்னைக்கும் இங்க ஒரு சீன் கிரியேட் ஆக வேண்டாம்.” என்று நினைத்த மேகா சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நிலாவுடன் ஒரு ரூமில் தங்கிக் கொண்டாள்.
தனது அறையில் உள்ள சிறிய பால்கனியில் நின்று கையில் ஒரு full bottle beerஐ வைத்து குடித்து கொணடிருந்த விஷ்வா கீழே இருந்த விஜயின் கல்லறையை பார்த்து “நீ செத்துப் போனதுக்கப்புறம் உன்னோட voice மட்டும் எனக்குள்ள திரும்பத் திரும்ப கேட்டுகிட்டே இருந்தப்போ, முதல்ல கஷ்டமா இருந்துச்சு. என் lifeல மேகா வந்ததுக்கப்புறமா நீ மறுபடியும் மறுபடியும் என்கிட்ட பேசி அவளை வேண்டாம் விட்டுடுன்னு சொல்லும்போது, உன்னால நான் psycho ஆயிடுவனோன்னு நினைச்சு எனக்கு உன் மேல கோவமா வந்துச்சு. ஆனா இப்போ நீ சொன்னத கேட்காம நான் அவளை மேரேஜ் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறமா நீ என் முன்னாடி வரவே இல்ல. நீ பேசுறதும் எனக்கு கேட்கவே இல்லை. இதுக்கு மேல என்கூட இருக்க வேண்டாம்னு நினைச்சு மறுபடியும் என்ன விட்டுட்டு போயிட்டியாடா..??” என்று வாய்விட்டு கேட்ட விஷ்வா கைப்பிடி சுவரைப் பிடித்துக்கொண்டு கீழே குனிந்து பார்த்து கதறி அழுதான். அவன் கண்ணீர் துளி காற்றில் பறந்து சென்று விஜயின் கல்லறையின் மீது விழுந்தது.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)