Home தீயாய் தித்திக்கிறாய்தீயாய் தித்திக்கிறாய் CH-16

தீயாய் தித்திக்கிறாய் CH-16

by oviyablessy
24 views

த‌ட்டு த‌ள்ளாடி மெத்தைக்கு வ‌ந்த‌ அக‌ன், ம‌ணியை பார்க்க‌ ச‌ரியாக‌ ஒன்ப‌து. உட‌னே லாகின் செய்ய‌ வேண்டும் என்று லேப்டாப்பை திற‌க்க‌, அவ‌ன் க‌ண்க‌ளெல்லாம் இருட்டிக்கொண்டு வ‌ந்த‌து.

அதில் த‌லையை உலுக்கிவிட்டு ஓப்ப‌ன் செய்த‌வ‌ன், த‌ன் க‌ம்ப‌னி வெப்சைட்டில் ஐடியை போட்டு அப்ப‌டியே கீழே லாகின் என்ப‌தை அழுத்த‌ போக‌, அத‌ற்குள் விழிக‌ள் சொருகி பொத்தென்று பின்னால் சாய்ந்தான். அடுத்த‌ நொடி அவ‌னை தாங்கி பிடித்திருந்த‌து பெண்ண‌வ‌ளின் பூ மார்பு.

அவன் முகம் அவள் மார்பு குழிக்குள் புதைய, அப்படியே அவன் தலையை அணைத்து பிடித்தது அவள் விரல்கள். அவ‌னோ முழு ம‌ய‌க்க‌த்திற்கு சென்றிருக்க‌, அவ‌ன் நெற்றியில் விழுந்த‌து அவ‌ளின் க‌ண்ணீர் துளி.

த‌ன்னால்தான் இவ‌னுக்கு இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ம் என்று க‌ண்ணீர்விட்ட‌வ‌ள், திரும்பி அந்த‌ லேப்டாப்பை பார்க்க‌, லாகின் பாதியிலேயே நின்றிருந்த‌து.

அதில் அப்ப‌டியே திரும்பி இவ‌னையும் பார்க்க‌, இவ‌ன் முக‌த்தில் அப்ப‌டியொரு சோர்வு அப்ப‌ட்ட‌மாய் தெரிந்த‌து.

ம‌ருத்துவ‌ர் வ‌ந்த‌ பிற‌கு இவள் உறக்கம் சற்று கலைந்திருக்க, வெளியில் அவ‌ர்க‌ள் பேசிய‌ அனைத்தையும் இங்கிருந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.  அவ‌ன் வொர்க் ஃப்ர‌ம் ஹோம் என்று கூறியது, வ‌லிக்கு ம‌ய‌க்க‌ ஊசிக்கூட‌ வேண்டாம் என்று கூறிய‌து, ம‌ருத்துவ‌ர் ஒரு வார‌ம் க‌ட்டாய‌ம் ஓய்வெடுக்க‌ வேண்டும் கூறிய‌து அனைத்தும் கேட்டிருந்தாள்.

அதில் மெல்ல‌ அவ‌ன் நெற்றி சிகைக‌ளை கோதி ச‌ரி செய்த‌வ‌ள், இப்போது இவ‌னுக்கு ஒய்வுதான் அவ‌சிய‌ம் என்ற‌ப‌டி அவ‌னை அப்ப‌டியே அந்த‌ மெத்தையில் ப‌டுக்க‌ வைத்தாள்.

அத‌ன் பிற‌கு திரும்பி அந்த‌ லேப்டாப்பை மூடி வைத்த‌வ‌ள், அதை அவ‌ன் கால் படாம‌ல் ஓரமாய் வைத்துவிட்டு திரும்பி அவ‌னை பார்த்தாள். அவ‌னோ த‌லைய‌ணையில் சாய்ந்து நிம்ம‌தியாய் உற‌ங்கிக் கொண்டிருக்க‌, அவ‌னின் பேண்டேஜ் சுற்றிய‌ க‌ர‌த்தை மெல்ல‌ தூக்கி மெத்தையில் மென்மையாய் இற‌க்கிய‌வ‌ள், அப்ப‌டியே அவ‌ன் மீது ப‌ட‌ர்ந்தாள்.

அவ‌னோ அதைய‌றியாம‌ல் ஆழ்ந்த‌ ம‌ய‌க்க‌த்தில் இருக்க‌, அப்ப‌டியே அவ‌ன் முக‌முர‌ச‌ நெருங்கி அவ‌ன் நெற்றியில் மென்மையாய் இத‌ழ் ப‌தித்தாள். அதில் அவ‌ன் இத‌மாய் உற‌க்க‌த்தை தொட‌ர‌, அவ‌ளோ அப்ப‌டியே அவ‌ன் மார்பில்   சாய்த்து அவ‌னை அணைத்த‌ப‌டி விழி மூடினாள்.

அடுத்த‌ நொடி ச‌த்த‌மாய் ஒலித்த‌து அவ‌னின் கைப்பேசி. அதில் திடுக்கிட்டு எழுந்த‌வ‌ள் திரும்பி அதை தேட‌, அவ‌ன் பேக்கெட்டிற்குள்தான் இருந்த‌து. ஆஃபிஸ் காலிங் என்று அந்த‌ கைப்பேசி ஒலிக்க‌, வேக‌மாய் திரும்பி அவ‌னை பார்த்தாள். அவ‌னோ எதையும் உண‌ராம‌ல் ஆழ்ந்த‌ ம‌ய‌க்க‌த்தில் இருக்க‌, அவ‌ச‌ர‌மாய் திரும்பி அந்த மொபைலை வெளியில் எடுத்து க‌ட் செய்தாள்.

அப்போதே ச‌ற்று நிம்ம‌தியாய் உண‌ர்ந்த‌வ‌ள், அடுத்த‌ நொடியே மீண்டும் ஒலிக்க‌, திடுக்கிட்டு ப‌ய‌ந்து அதை அழுத்தி பிடித்து சைல‌ண்டில் போட்டிருந்தாள். இப்போதே ம‌ன‌ம் முழு பெருமூச்சை இழுத்துவிட‌ திரும்பி அவ‌னை பார்த்தாள். அவ‌னோ சிறு அசைவின்றி உற‌ங்கி கிட‌க்க‌, மீண்டும் அவ‌ன் மார்பில் சாய்ந்தவ‌ள், மெல்லிய‌தாய் நிமிர்ந்து அவ‌ன் முக‌த்தையே பார்த்தாள்.

அவ‌னின் அமைதியான‌ முக‌ம் மீண்டும் அவ‌ளுள் இன‌ம் புரியா ஒரு உண‌ர்வை க‌ட‌த்த‌, அவ‌ள் விழிக‌ள் இர‌ச‌னையுட‌ன் மெல்ல‌ மூடி திற‌ந்த‌து. ஆண‌ழ‌க‌ன் த‌ன் க‌ண‌வ‌ன். இவ‌னை எப்ப‌டி இத்த‌னை நாட்க‌ள் பார்க்காம‌ல் விட்டோம் என்று சிறு சிணுங்க‌ல் அவ‌ள் உள்ள‌த்திற்குள். அதில் அப்ப‌டியே த‌ன் இரு க‌ர‌ங்க‌ளை கோர்த்து அவ‌ன் நெஞ்சில் வைத்த‌வ‌ள், அத‌ன் மீது த‌ன் தாடையை ப‌தித்து வ‌ச‌தியாய் அவ‌ன் முக‌த்தை இர‌சித்தாள்.

இப்படியே இவ‌ன் முக‌த்தை பார்த்துக்கொண்டே வாழ்நாள் முடிந்துவிட்டால் கூட‌ அத்த‌னை நிம்ம‌தியாய் இருக்கும் என்று தோன்றிய‌து. அப்ப‌டியே அவ‌னை பார்த்துக் கொண்டிருந்த‌வ‌ளின் விழிக‌ள் மெல்ல‌ சொருக‌, அவ‌ளும் உற‌க்க‌த்திற்கு சென்றிருந்தாள்.

அப்ப‌டியே நேர‌ம் ந‌க‌ர்ந்து ம‌ணி ஒன்ப‌தை க‌ட‌ந்து ப‌த்தை தொட்டிருக்க‌, திடுக்கிட்டு விழித்தான் அக‌ன்.

ஒரு நிமிட‌ம் என்ன‌ ந‌ட‌ந்த‌தென்றே புரியாம‌ல் சுற்றி பார்த்த‌வ‌ன், அப்போதே த‌ன் உட‌லில் என்ன‌வோ பார‌மாய் இருக்க‌வும் முக‌த்தை குறுக்கி குனிந்து பார்த்தான்.

அவ‌ளின் ஆசை ம‌னைவி முழுதாய் அவ‌ன் மீது ப‌ட‌ர்ந்து உற‌ங்கிக்கொண்டிருக்க‌, புரியாது புருவ‌த்தை சுருக்கினான். இவ‌ள் எப்பிடி என் மீது.. முத‌லில் நான் எப்ப‌டி இங்கு என்று குழ‌ம்பி க‌டிகார‌த்தை பார்க்க‌, ம‌ணி ப‌த்து.

அதில் அக‌ல‌ விழி விரித்த‌வ‌ன், வேக‌மாய் திரும்பி த‌ன் லேப்டாப்பை தேட‌, அதுவோ மூடி வைத்து ஓர‌மாய் கிட‌ந்த‌து. அதில் த‌லையில் கை வைத்த‌வ‌ன், எப்ப‌டி உறங்கி தொலைத்தோம்? இந்நேர‌ம் அந்த‌ டீம் ஹெட் கால் செய்திருப்பானே என்ற‌ப‌டி த‌ன் மொபைலை தேடினான்.

அதுவோ அருகிலேயே கிட‌க்க‌, வேக‌மாய் எடுத்து ஆன் செய்தான். அதிலோ டீம் ஹெட்டிட‌ம் இருந்து 24 மிஸ்டு கால்க‌ள் வ‌ந்திருக்க‌, வேக‌மாய் எழ‌ முய‌ன்றான்.

அத‌ற்குள் சிணுங்க‌லாய் அவ‌ன் ச‌ட்டை கால‌ரை இறுக்கி பிடித்து உறங்கினாள் மௌனா. அதில் குனிந்து அவ‌ளை பார்த்த‌வ‌ன், மெல்ல அவ‌ளை த‌ட்டிக் கொடுத்து உற‌ங்க‌ வைத்தான். அதில் அவ‌ளும் நிம்ம‌தியாய் அவ‌ன் மார்பில் க‌ன்ன‌த்தை தேய்த்து உற‌ங்க‌ ஆர‌ம்பிக்க‌, மெதுவாய் மிக‌ மெதுவாய் அசைந்து திரும்பிய‌வ‌ன், அப்ப‌டியே அவ‌ளை ஒற்றை க‌ர‌த்தால் அணைத்து வில‌க்கி மெல்ல‌ மெத்தையில் ச‌ரித்தான்.

அதில் பொத்தென்று அவ‌ள் உட‌ல் மெத்தையில் புதைய‌, மெல்லிய‌தாய் உற‌க்க‌ம் க‌ல‌ந்து புருவ‌த்தை சுருக்கினாள். அந்த‌ புருவ‌ங்க‌ளின் ந‌டுவே மென்மையாய் முத்த‌மிட்ட‌வ‌ன், அவ‌ள் த‌லையை மென்மையாய் வ‌ருடி கொடுத்தான்.

அதில் அவ‌ள் சுக‌மாய் உற‌க்க‌த்தை தொட‌ர‌, மெல்ல‌ த‌ன் சட்‌டையிலிருந்த‌ க‌ர‌த்தை விடுவித்த‌வ‌ன் மெதுவாய் வில‌கி எழுந்தான். அப்போதும் அவ‌ள் ஆழ்ந்த‌ உற‌க்க‌த்தில் இருக்க‌, அவ‌ளை மெல்ல‌ த‌ட்டிகொடுத்துவிட்டு திரும்பி த‌ன் மொபைலை எடுத்து அவ‌ருக்கு கால் செய்தான்.

இங்கே அத்த‌னை டென்ஷ‌னில் இருந்த‌ டீம் ஹெட் முகில‌ன் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை பிடித்து க‌த்திக் கொண்டிருந்தார்.

அப்போது அவ‌ரின் கைப்பேசி ஒலிக்க‌, அத்த‌னை கோப‌மாய் அதை எடுத்து பார்த்தார். அதில் அவ‌ரின் கோப‌த்திற்கு கார‌ணமான‌வ‌னே கால் செய்யவும்‌ வேக‌மாய் அட்ட‌ன் செய்து காதில் வைத்தார்.

“சாரி சார் நா..” என்று அவ‌ன் ஆர‌ம்பிக்கும் முன், “ஒரு வ‌ழியா சாருக்கு ஆஃபிஸ் நெனப்பு வ‌ந்திருச்சா?” என்று க‌த்தினார் முகில‌ன்.

“இ..இல்ல‌ சார் இங்க‌ நா.. என் மொபைல்..” என்று இவ‌ன் த‌டுமாற‌, “என‌க்கு எந்த‌ எக்ஸ்ப்ளனேஷ‌னும் தேவ‌ல்ல‌. நீ ல‌ஞ்ச் சாப்புடுறியோ இல்ல‌யோ. லஞ்ச் ப்ரேக் முடியுறதுக்குள்ள வேலைய முடிச்சு என‌க்கு அப்டேட் ப‌ண்ணியாக‌ணும்.” என்று க‌ர்ஜித்தார்.

“ஓகே சார்.” என்று இவ‌ன் கூற‌, அடுத்த‌ நொடியே இணைப்பை துண்டித்தார் முகில‌ன். 

அதில் வேக‌மாய் மொபைலை இற‌க்கிய‌வ‌ன், த‌ன் லேப்டாப்பை எடுத்து வைத்து முத‌லில் லாகின் செய்தான். தூங்கி எழுந்த‌தில் ச‌ற்று தெம்பு கிடைத்திருக்க‌, தீயாய் வேலை செய்ய‌ ஆர‌ம்பித்தான். முடிந்த‌ ம‌ட்டும் த‌ன் காய‌ம்ப‌ட்ட‌ க‌ர‌த்தை அசைக்காம‌ல் வைத்த‌வ‌ன், த‌ன் விர‌ல்க‌ளுக்கு ம‌ட்டும் வேலை‌ கொடுத்து, பெரும்பாலான‌ த‌ட்ட‌ச்சுக‌ளை ஒரு க‌ர‌த்தை வைத்தே செய்ய‌ ஆர‌ம்பித்தான்.

இப்ப‌டியே தீயாய் வேலை செய்ய‌ ஆர‌ம்பித்த‌வ‌ன் ம‌திய‌திற்குள் அவ‌ர் சொன்ன‌ வேலைக‌ளை முக்காவாசி முடித்திருக்க‌, அருகே உற‌ங்கிக்கொண்டிருந்த‌ மௌனாவிற்கோ உட‌லெல்லாம் விய‌ர்த்த‌து.

அவ‌ள் முக‌மெல்லாம் விய‌ர்வை மொட்டுக்க‌ள் பூத்து நின்றிருக்க‌, அந்த‌ முக‌த்தில் ஏதோ ஒரு ஒவ்வாமை முக‌ சுழிவுக‌ளில் இருந்த‌து. அதில் அவ‌ள் வேக‌மாய் திரும்பி ப‌டுக்க‌, அவ‌ளுக்கோ அப்போதும் உட‌ல் என்ன‌வோ செய்ய‌ உட‌லை குறுக்கினாள்.

அவ‌ள் அசைவில் திரும்பி அவ‌ளை பார்த்த‌வ‌ன், “மூனா!” என்று அவ‌ள் க‌ர‌த்தை பிடிக்க‌, அவ‌ளோ த‌ன் அடிவ‌யிற்றை இறுக்கி பிடித்து ஒவ்வாமையாய் முக‌த்தை குறுக்கினாள்.

அதில் வேக‌மாய் அவ‌ளை நெருங்கி அம‌ர்ந்த‌வ‌ன், “ம‌ம்மு!” என்று அவ‌ளை த‌ன் ப‌க்க‌ம் திருப்ப‌ முய‌ல‌, அடுத்த‌ நொடி அவ‌ள் வ‌யிற்றை பிர‌ட்டிக் கொண்டு வ‌ந்து வேக‌மாய் எழுந்த‌வ‌ள், “வ்லாக்” என்று வாந்த‌ போக‌, அவ‌னோ ப‌த‌றி  த‌ன் க‌ர‌ங்க‌ளை அவள் வாயருகே ஏந்தினான்.

அதில் திடுக்கிட்டு த‌ன் வாயில் கை வைத்து அட‌க்கிய‌வ‌ள், அவ‌ன் மீது வாந்த‌ கூடாது என்று அவ‌ச‌ர‌மாய் திரும்ப‌ போக‌, அடுத்த‌ நொடி மொத்த‌மாய் பிர‌ட்டிக் கொண்டு வ‌ர‌வும்  திரும்பிய‌ இட‌த்தில் மொத்த‌மாய் வாந்தியிருந்தாள். அடுத்த‌ நொடி அங்கிருந்த‌ அவ‌னின் லேப்டாப் மொத்த‌மும் வாந்தியால் ந‌னைய‌, அவ‌ன் இவ்வ‌ள‌வு நேர‌ம் செய்த‌ உழைப்பு மொத்த‌மாய் நாச‌மான‌து.

அதில் அவ‌ள் அக‌ல‌ விழி விரிக்க‌, அவ‌னுக்குமே இத‌ய‌மே நொடியில் நின்றிருந்த‌து.

     – காதல் தீ தொட‌ரும்…

You may also like

Leave a Comment

About Me

Featured