Home FREE NOVELSஅன்புள்ள அரக்கனே CH-43

அன்புள்ள அரக்கனே CH-43

by oviyablessy
அன்புள்ள அரக்கனே CH-53

த‌ன் த‌ந்தையை ப‌ற்றிய‌ நினைவுக‌ளில் அம‌ர்ந்திருந்த‌ அமீரா, “ஓய்!” என்ற அவ‌னின் குர‌லில்தான் மீண்டும் ந‌ட‌ப்புக்கு வ‌ந்தாள்.

“நா கேட்ட‌துக்கு இன்னும் ப‌தில் வ‌ர‌லையே.” என்று அவ‌ன் கூற‌, “அ..அத் நா..” என்று த‌டுமாறிய‌வ‌ளின் க‌ர‌ங்க‌ள் ந‌டுங்க‌, த‌ன் முக‌த்திலிருந்த‌ விய‌ர்வையை தடுமாற்றமாய் துடைத்தாள்.

“ச‌ரி அத‌ விடு. இப்ப எனக்கு வேற ஒரு பதில்தா அவசரமா வேணும்.” என்றான்.

அதில் பதற்றமாய் புருவத்தை நெளித்து, “எ..என்ன பதில்?” என்று இவ‌ள் கேட்க, அவனோ மொபைலை தன் இதழருகே கொண்டு வ‌ந்து மெல்லிய‌ குர‌லில், “உன் க்ரேப் ப‌க்க‌த்துல‌ ஒரு குட்டி ம‌ச்ச‌ம் இருக்குதான‌?” என்று கேட்டான்.

அடுத்த நொடி அவள் மொத்த உடலும் அதிர்வை உணர, அக‌ல‌ விழி விரித்தாள் அமீரா. ஒவ்வொரு முறையும் அவ‌ன் எல்லை மீறும் முன்பே அவ‌ள் த‌டுத்திருந்தாலே, இதை எவ்வாறு என்று நினைக்கும்போதே அவ‌ள்  இத‌ய‌ம் அத்த‌னை ப‌ல‌மாய் துடித்த‌து.

அதை இங்கிருந்தே உண‌ர்ந்த‌வ‌னின் இத‌ழ் மேலும் வ‌ளைய‌, பிற‌கு வேண்டுமென்றே புருவ‌த்தை குறுக்கி, “உன‌க்கு இன்னும் புரிய‌ல‌ன்னு நெனைக்குறேன்.” என்ற‌ப‌டி த‌ன் இதழை மேலும் நெருக்க‌மாய் ந‌க‌ர்த்தி ஸ்பீக்க‌ரில் உர‌சிய‌வ‌ன், “ஐ மீன் டு சே.. உன்னோட‌..” என்று கூற‌ வ‌ர‌, “இல்ல‌ இல்ல‌ புரிஞ்ச‌து.” என்றாள் வேக‌மாக‌.

அதில் மொத்த‌மாய் இத‌ழை விரித்தவ‌ன், அப்ப‌டியே இருக்கையில் சாய்ந்து மொபைலை காதில் வைத்து, “அப்போ ஆன்ச‌ர் மீ” என்றான் அத்த‌னை மென்மையாக‌.

அதில் அவ‌ளுக்கோ மொத்த‌ உட‌லும் த‌டுமாற‌ ஆர‌ம்பிக்க‌, “அத்.. அ..து வ‌ந்..து உங்..க‌ளுக்கு எப்..பிடி..” என்று திண‌றிய‌வ‌ளின் தொண்டை அடைத்த‌து.

அதில் மெல்லிய‌தாய் சிரித்த‌வ‌ன் மேலும் இருக்கையில் சாய்ந்தம‌ர்ந்து, “டூ யூ நோ ஒன் திங்?” என்று கேட்க‌, இவ‌ளுக்கோ ப‌த‌ற்ற‌ம் அதிக‌ரித்து முக‌மெல்லாம் விய‌ர்க்க‌ ஆர‌ம்பிக்க‌, “இப்ப‌ உன் த‌டுமாற்ற‌த்துலக்கூட உன் ஒவ்வொரு அசைவையும் என்னால‌ ஃபீல் ப‌ண்ண‌ முடியுது.” என்றான்.

அதில் ச‌ட்டென்று இவ‌ள் புருவ‌ங்க‌ள் விரிய‌, இவ‌னோ மெதுவாய் இத‌ழை  மொபைலின் பக்கம் திருப்பி, “எஸ்பெஷ‌லி யுவ‌ர் லிப்ஸ்.” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் ப‌ட்டென்று அவ‌ள் இத‌ழ்க‌ளை உள்ளே ம‌ட‌க்கிக்கொள்ள‌, “ஹேய்.. அது ஏற்க‌ன‌வே காய‌மா இருக்கு. எச்சி ப‌ட்டா எரியும்னு தெரியாதா?” என்றான் அத்த‌னை மென்மையாக‌.

அதில் ச‌ட்டென்று த‌ன் இத‌ழை விடுவித்த‌வ‌ள், அதிர்வாய் இமையை விரிக்க‌, “இப்ப‌ ம‌ட்டும் நா அங்க‌ இருந்திருந்த‌ன்னா, அந்த‌ விரிஞ்ச‌ Flytrap குள்ள‌ மொத்த‌மா விழுந்திருப்பேன்.” என்றான்.

அதில் திகைப்பாய் இமையை அழுத்தி மூடி திற‌ந்த‌வ‌ள், கேம‌ரா எதுவும் உள்ள‌தா என்று அவ‌ச‌ர‌மாய் சுற்றியும் பார்க்க‌, “இது இந்த‌ ருத‌னோட‌ சென்ஸ். நாட் அ ச‌ர்வே லென்ஸ்.” என்றான் ருத‌ன்.

அதில் ப‌ட்டென்று தேட‌லை நிறுத்திய‌வ‌ள், “இ..இத்..தெல்லா  எப்..பிடி இவ்..ளோ..” என்று கேட்க‌ வ‌ர‌, “ம்ம்ம்ம்ம்….” என்று யோசனையாய் விழியை குறுக்கி அந்த ஜிமிக்கியில் பார்வையை குவித்தவன், “ஆக்ச்சுவலி.. என‌க்கு எதையும் எக்ஸ்ப்ளைன் ப‌ண்ணி ப‌ழ‌க்க‌ம் கெடையாது. சோ வ‌ந்து ப்ரேக்டிக்கலாவே சொல்றேன்.” என்று கூற‌, அதில் ச‌ட்டென்று  விரிந்த‌ அவ‌ளின் புருவ‌ங்க‌ள், அப்ப‌டியே மெல்ல‌ குழ‌ப்ப‌மாய் சுழிந்த‌து. ஏனென்றால் பால்க‌னியில் வைத்து, தான் கேட்ட‌ ஒற்றை கேள்விக்கு அத்த‌னை விள‌க்க‌ங்க‌ளை அள்ளி கொடுத்த‌வ‌ன், இறுதியாய் ம‌ஞ்ச‌த்தில்தான் ப்ரேக்ட்டிக்க‌ல் என்று இற‌ங்கினான். அதில் அவ‌ள் குழ‌ப்ப‌மாய் யோசிக்க‌, இவ‌னோ குறும்பாய் இத‌ழ் வ‌ளைத்து, “என‌க்கு லாப‌ம் இருக்குற‌ எட‌த்துல‌ ம‌ட்டுந்தா நா எக்ஸ்ப்ளைன் ப‌ண்ணுவேன்.” என்றான்.

அதில் ச‌ட்டென்று இவ‌ள் புருவ‌ங்க‌ள் விரிய‌, அந்த‌ லாப‌ம் என்ன‌வென்று அவ‌ள் மூளை தெளிவாகவே க‌ண்முன்  நிறுத்திய‌து. அந்நேர‌ம் பால்க‌னியில் வைத்து விள‌க்க‌ம் ம‌ட்டுமா கொடுத்தான், மொத்த‌ தேக‌த்தையும் விர‌லால் உர‌சி, நாசியால் நுழைந்து, இத‌ழால் அள‌ந்து, ப‌ற்க‌ளால் க‌டித்து, மீசையால் துடைத்து, என்ன‌வெல்லாம் செய்ய‌ முடியுமோ அத்த‌னையும் அல்ல‌வா செய்ய‌ துணிந்தான். அதையெல்லாம் நினைத்தால் இன்னுமே அவ‌ள் உட‌லெங்கும் கூச‌ ஆர‌ம்பிக்க‌, மார்பை குறுக்கி கால் விர‌லை சுருட்டி கூச்ச‌த்தை அட‌க்க முய‌ன்ற‌வ‌ளின் சுவாச‌ வேகம் ச‌ற்று  அதிக‌ரித்த‌து.

“யுவ‌ர் ப்ரீத் ச‌வுண்ட்.. இவ்ளோ தூர‌த்துல‌ இருந்தும் என் ஒட‌ம்ப‌ சூடாக்குது தெரியுமா?” என்ற‌வ‌னின் குர‌லில் மெல்லிய‌ கிற‌க்க‌ம் க‌ல‌க்க‌, இவ‌ளோ ப‌த‌றி விழியை விரிக்க‌, அவ‌ள் இத‌ய‌ம் அத்த‌னை ப‌ல‌மாய் துடித்த‌து.

“இவ்ளோ ஃபாஸ்ட்டா அடிக்குற‌ உன் ஹார்ட் பீட். அதுல‌ இப்ப‌க்கூட‌ என் ஹார்ட் ஸ்லிப் ஆகுதுடி” என்றப‌டி த‌ன் கையிலிருந்த‌ ஜிமிக்கியை இர‌ச‌னையாய் வ‌ருடினான்.

அதில் இவ‌ளோ புரியா விய‌ப்பாய் பொட‌பொட‌வென்று விழிக்க‌, ப‌த‌ற்ற‌த்தில் அவ‌ளின் சுவாச‌ குழ‌ல் அடைப்ப‌ட்டு ஏறி இற‌ங்கிய‌து.

“இப்ப‌வே அந்த‌ எட‌த்த‌ க‌டிச்சு வெக்க‌ணும் போல‌ இருக்கு.” என்று அவ‌ன் கூற‌, ச‌ட்டென்று ப‌த‌றி அவள் தொண்டை குழிந்த‌து.

“ச்ச் அங்க‌தான்டி நா டெம்ப்ட் ஆகுறேன்.” என்று இவ‌ன் கிற‌க்க‌மாய் கூற‌, அவ‌ளோ திடுக்கிட்டு ப‌த‌ற்ற‌மாய் படபடவென்று விழிக்க‌, “நா கிஸ் ப‌ண்ண‌தும் மேடாகுற‌ அந்த‌ குழி, அங்கிருந்து நொழைய‌ நொழைய‌ தீராத‌ அந்த‌ டீப் டெப்த்..” என்று மெல்லிய குரலில் கூற‌, இவ‌ளோ  த‌ன் மார்ப‌ருகே இருந்த‌ சேலையை இறுக்கி பிடித்து மெல்லிய‌தாய் குறுகினாள்.

“நீ எவ்ளோ ம‌ற‌ச்சாலும் வெல‌கி தெரியுற‌ உன்..” என்று கூற‌ வ‌ர‌, இவ‌ளோ ப‌த‌றி விழிக்க‌, “உன் ஹிப்.” என்றான். அப்போதே இவ‌ள் ச‌ற்று மூச்சுவிட்டுக்கொள்ள‌, “என் லிப்ஸால‌ முழுசா நொழைய‌ முடியாத‌ ஒரே எட‌ம் அங்க‌ இருக்குற‌ ஒரு ஹோல்.” என்று கூற‌, அதில் இவ‌ள் க‌ர‌ம் த‌ன் நாபிய‌ருகே இருந்த‌ சேலையை சுருட்டி பிடிக்க‌, அவ‌ளுக்குள்ளும் உண‌ர்வுக‌ள் மெல்ல‌ துளிர்விட்ட‌து.

அப்ப‌டியே அவ‌ன் அடுத்து ஒரு இட‌த்தை ப‌ற்றி கூற‌, கூச்ச‌த்தில் அவ‌ள் உள்ள‌ங்கால் த‌ரையில் அழுத்தி புதைந்து குறுகிய‌து. அப்ப‌டியே அவ‌ன் அடுத்த‌டுத்து கூறியபடியே ‌செல்ல, அவ‌ளின் மொத்த‌ உட‌லும் கூச்ச‌த்தில் திளைக்க‌, த‌ன் ம‌டியிலிருந்து சேலையை சுருட்டி பிடித்து, கால் க‌ட்டை விர‌லை த‌ரையில் அழுத்தி கோல‌மிட்டாள்.

“ஓய்!” என்று அவ‌ன் மெல்லிய‌ குர‌லில் கூற‌, இவ‌ளும் அதே உண‌ர்வுக‌ளின் பிடியில் “ம்ம்” என்று த‌ன் சேலை நுனியை சுருட்டினாள். “இந்த ரியேக்ஷன மட்டும் இப்பவே பக்கத்துல வந்து பாக்கணும்னு தோனுது.” என்று அவன் கூற, அவளோ பட்டென்று பார்வையை தாழ்த்தி வெட்கத்தில் புன்னகைத்தாள்.

அதில் புன்ன‌கைத்த‌ப‌டி த‌ன் ம‌ணிக‌ட்டை உய‌ர்த்தி பார்த்த‌வ‌ன், “செரி அம்மு என‌க்கு மீட் இருக்கு. நா அப்ற‌ம் கால் ப‌ண்றேன்.” என்று கூற‌, ச‌ட்டென்று அவ‌ள் முக‌ம் வாடியது. ஏனோ இத்த‌னை நேர‌ம் வெட்க‌மோ, ப‌த‌ற்ற‌மோ, கூச்ச‌மோ ஏதோ ஒன்று  அவ‌னால் அவ‌ள் ம‌ன‌ம் நிறைந்து இருந்த‌து. இப்போது அது ச‌ட்டென்று அறுப‌ட‌வும் அவ‌ள் ம‌ன‌ம் மீண்டும் வெறுமையாக‌, “ஓய்!” என்றான் அவ‌ன்.

“ம்ம்” என்ற‌வ‌ளின் குர‌ல் வாட‌லாய் வெளியில் வ‌ர‌, இச்சென்று ஒரு முத்தமிட்டான். அதில் திடுக்கிட்டு அவ‌ள் விழி விரிக்க‌, “பாய்.” என்றான் ருத‌ன்.

அதில்தான் அவ‌ள் இத‌ழில் மெல்லிய‌தாய் புன்ன‌கை அரும்ப‌, “ம்ம்” என்றாள்.

அதில் அவ‌னும் மொபைலை இற‌க்கி இணைப்பை துண்டித்துவிட‌, இவ‌ளும் முக‌ம் சிவ‌க்க‌ மொபைலை இற‌க்கி பார்த்தாள். அந்த‌ ஸ்கீரினில் அவ‌ன் கொடுத்த‌ முத்த‌ம் அப்ப‌டியே ப‌டிந்திருப்ப‌துப்போல் ஒரு பிர‌ம்மை, அதை இர‌ச‌னையாய் மெல்ல‌ வ‌ருடிய‌து அவ‌ள் விர‌ல்க‌ள்.

நேற்று வ‌ரை அவ‌னை பார்த்தாலே ந‌டுங்கிய‌ உள்ள‌ம், இன்று ஏனோ அவ‌னை எப்போது பார்ப்போம் என்று ஏக்க‌ம் கொண்ட‌து. அதில் மெல்லிய‌தாய் ஒரு ஏக்க‌ மூச்சை வெளியிட்ட‌வ‌ள், அந்த‌ மொபைலை அப்ப‌டியே ஓர‌மாக‌ வைத்துவிட்டு த‌ன் வேலைக‌ளை பார்க்க‌ துவ‌ங்கினாள்.

அப்ப‌டியே நேர‌ம் ந‌க‌ர‌, சாய‌ங்கால‌ நேர‌ம் இருட்ட‌வே ஆர‌ம்பித்திருந்த‌து. கிச்ச‌னில் வேலையாட்க‌ளுக்கு ந‌டுவே ப‌ர‌ப‌ர‌வென்று வேலை பார்த்துக்கொண்டிருந்தார் விம‌லா. அவ‌ர‌ருகே உத‌வி செய்துக்கொண்டிருந்த‌ அமீராவிற்கோ இன்னுமே அவன் ஒருவனின் நினைவுதான்.  பிறகு கால் செய்கிறேன் என்று கூறி கட் செய்தவன், அதன் பிறகு கால் செய்யவே இல்லையே. அந்த யோசனையிலேயே இன்னும் நின்றிருந்தவள், த‌ய‌க்க‌மாய் விமலாவின் ப‌க்க‌ம் திரும்பி பார்த்தாள். அவ‌ரோ அதை உண‌ராது  ச‌மைய‌ல் வேலையில் மூழ்கியிருக்க‌, இவ‌ளோ தயக்க‌மாய் அவ‌ரின் அருகில் வ‌ந்து ஏதோ கேட்க‌ வ‌ர‌, அதற்குள் ச‌ட்டென்று நிமிர்ந்த‌ விமலா, “இத‌ல்லாம் அங்க‌ வெச்சிருமா” என்று அவ‌ள் கையில் சில‌வ‌ற்றை திணித்தார்.

அதில் திடுக்கிட்டு வாங்கிக்கொண்டவ‌ள், த‌ய‌க்க‌மாய் ச‌ரியென்று த‌லைய‌சைத்துவிட்டு அவ‌ர் கூறிய‌ இட‌த்தில் அனைத்தையும் வைத்துவிட்டு மீண்டும் அவ‌ர் ப‌க்க‌ம் திரும்ப‌, அவ‌ரோ விய‌ர்க்க‌ விறுவிறுக்க‌ த‌ன் முந்தாணையால் முக‌த்தை துடைத்துக்கொண்டு வேலையை தொட‌ர்ந்தார்.

அதில் த‌ய‌ங்கி நின்ற‌வ‌ளோ, கேட்க‌ வ‌ந்ததை அப்ப‌டியே நிறுத்திவிட்டு திரும்ப‌ போக‌,  அவ‌ள் க‌ர‌த்தை பிடித்து த‌ன் ப‌க்க‌ம் திருப்பினார் விம‌லா. அதில் அவ‌ள் திடுக்கிட்டு அவ‌ரை பார்க்க‌, “என்ன‌ ஆச்சுமா? எதாவ‌து கேக்க‌ணுமா?” என்று கேட்டார்.

அதில் அவ‌ளோ த‌ய‌க்க‌மாய், “ம்ம்” என்றாள். அதில் புன்ன‌கைத்த‌ப‌டி அவ‌ள் க‌ர‌த்தை அழுத்தி பிடித்து நெருங்கி நின்ற‌வ‌ர், “அதுக்கு ஏ இவ்ளோ த‌ய‌ங்குற‌?” என்ற‌ப‌டி அவ‌ள் க‌ன்ன‌ம் ப‌ற்றி த‌ன்னை பார்க்க‌ வைத்து, “எதுவா இருந்தாலும் த‌ய‌ங்காம‌ சொல்லு.” என்றார்.

அதில்தான் அவ‌ளின் த‌ய‌க்க‌ம் அதிக‌ரிக்க‌, “அது.. அவ‌ரு.. எப்ப‌வுமே இப்பிடித்தா லேட்டா வ‌ருவாரா?” என்று கேட்டாள்.

அதில் புருவ‌த்தை சுழித்து, “யாரு உன் மாமாவா? இல்ல‌ம்மா அவ‌ரு இப்ப‌ வ‌ந்திருவாரு. அவ‌ருக்கு நா ச‌ம‌ச்சா ம‌ட்டும்தா புடிக்கும். அதா இவ்ளோ அவ‌ச‌ர‌மா ச‌மைக்குறேன்.” என்ற‌ப‌டி த‌ன் முந்தாணையை இழுத்து சொருகி மீண்டும் வேலையை பார்க்க‌ போக‌, அவ‌ரின் க‌ர‌த்தை பிடித்து த‌டுத்தாள் அமீரா.

அதில் மெல்ல‌ இத‌ழ் வ‌ளைத்த‌ விம‌லா, வேண்டுமென்றே அதை ம‌றைத்து சாதார‌ண‌மாய் திரும்பி அவ‌ளை பார்க்க‌, அவ‌ளோ த‌ய‌க்க‌மாய் பார்வையை தாழ்த்தி, “நா கேட்ட‌து அவ‌ர‌ இல்ல‌.” என்றாள்.

“அப்ற‌ம் எவ‌ர‌?” என்று அவ‌ர் சிறு முறுவ‌லுட‌னே அவ‌ள் முக‌த்தை உற்று நோக்க‌, “உங்..க‌.. ப்..பைய‌ன்.” என்றாள் த‌ய‌க்க‌மாக‌.

அதில் மெல்லிய‌தாய் சிரித்துவிட்டு அவ‌ள் தாடையை பிடித்து நிமிர்த்திய‌வ‌ர், “ஏ உன‌க்கு புருஷ‌ன் இல்லையா?” என்று கேட்க‌, அவ‌ளோ ச‌ட்டென்று இமையை தாழ்த்தி த‌டுமாறினாள்.

அதில் புன்ன‌கைத்த‌ப‌டி அவ‌ள் க‌ன்ன‌ம் ப‌ற்றிய‌வ‌ர், “அவ‌னும் வ‌ர்ற‌ நேர‌ம்தா. இப்ப‌ வ‌ந்திருவா க‌வ‌ல‌ப்ப‌டாத‌.” என்று கூற‌, அவ‌ளோ வெளிவ‌ர‌ துடித்த‌ வெட்க‌ புன்ன‌கையை இத‌ழுள் அட‌க்கி ச‌ரியென்று மெல்ல‌ த‌லைய‌சைத்தாள்.

அதில் புன்ன‌கையாய் அவ‌ள் க‌ன்ன‌த்தை த‌ட்டிவிட்டு அவ‌ர் திரும்பி வேலையை பார்க்க‌ ஆர‌ம்பிக்க‌, ச‌ட்டென்று க‌ர‌ண்ட் க‌ட் ஆகி மொத்த‌மாய் இருள் சூழ்ந்த‌து. அதில் அமீரா திடுக்கிட்டு சுற்றி பார்க்க‌, விம‌லாவும் புரியாது சுற்றி பார்த்து, “திடீர்னு என்ன‌ ஆச்சு?” என்ற‌ப‌டி திரும்பி, “ல‌தா போய் என்ன‌ன்னு பாரு.” என்று வேலையாளிட‌ம் கூறினார்.

ஆனால் அவ‌ர்க‌ளிட‌மிருந்து எந்த‌ ப‌திலும் வ‌ர‌வில்லை. அதில் குழ‌ப்ப‌மாய் சுற்றி பார்த்த‌வ‌ர், “ல‌தா!” என்று மீண்டும் அழைத்த‌ப‌டி, “ஹேய் ப்ரேமா! எல்லாரும் எங்க‌ போனீங்க‌?” என்று தேடி பார்க்க‌, அங்கே யாருமே இருப்ப‌துப்போல் தெரிய‌வில்லை. அதில் திரும்பி அமீராவின் க‌ர‌த்தை பிடித்து, “நீ அடுப்ப‌ பாத்துக்கோம்மா. நா இப்ப‌ வ‌ந்த‌ர்றேன்.” என்ற‌ப‌டி ந‌க‌ர்ந்தார்.

“ம்ம்” என்று த‌லைய‌சைத்துவிட்டு அவ‌ள் சுற்றி பார்க்க‌, அந்த‌ மை இருட்டில் அவ‌ள் உட‌ல் மெல்லிய‌தாய் ந‌டுங்கிய‌து.

ச‌ட்டென்று அதை உள்ளிழுத்துக்கொண்டு அடுப்பின் ப‌க்க‌ம் திரும்பிய‌வ‌ள், அத‌ன் வெளிச்ச‌த்தில் மெல்லிய‌தாய் தைரிய‌த்தை வ‌ர‌வ‌ழைத்து வேலையை பார்க்க‌ ஆர‌ம்பிக்க‌, திடீரென்று அடுப்பும் அணைந்த‌து. அதில் திடுக்கிட்டு ப‌ய‌ந்த‌வ‌ள், சுற்றி பார்த்துவிட்டு வேக‌மாய் அதை மீண்டும் ஆன் செய்ய‌ போக‌, அவ‌ள் க‌ர‌த்தை உர‌சி பிடித்த‌து ஒரு க‌ர‌ம். அதில் அர‌ண்டு க‌ர‌த்தை உருவிக்கொண்ட‌வ‌ளின்  முதுகுர‌ச‌ நின்ற‌து ஒரு உருவ‌ம்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு ப‌ய‌ந்து திரும்ப‌, ச‌ட்டென்று ஒரு மெழுகுவ‌ர்த்தியின் ஒளி. அதில்  திடுக்கிட்டு அவ‌ள் பின்னிருந்த‌ மேசையில் சாய‌, அந்த‌ மெழுகு ஒளியில் திடீரென்று தெரிந்த‌ ஒரு ப‌ய‌ங்க‌ர‌ உருவ‌ம், “ஹாஹ‌ஹா” என்று கோர‌மாய் சிரித்த‌து.

அதில் அர‌ண்டு “அ…!” என்று ச‌த்த‌மாய் அல‌றிய‌வ‌ள் வேக‌மாய் அங்கிருந்து ஓடினாள். இருட்டில் முட்டி மோதி கிச்ச‌ன் வாச‌லை தாண்டி வெளியில் ஓடி வ‌ந்தவ‌ள், எதிரில் வ‌ந்த‌வ‌ன் மீது அழுத்த‌மாய் மோதினாள்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு விழ‌ போக‌, அவ‌ளை தாங்கி பிடித்து, “அம்மு!” என்றான் அவன். அந்த‌ அழைப்பில் மொத்த‌ ஆர்பாட்ட‌மும் அட‌ங்க‌, நிமிர்ந்துக்கூட‌ பார்க்காம‌ல் வேக‌மாய் அவ‌ன் மார்புக்குள் புகுந்தாள் அவள்.

அதில் ப‌த‌ற்ற‌மாய் அவ‌ள் உட‌லை ஆராய்ந்தவ‌ன், “என்ன‌ ஆச்சு?” என்று கேட்க‌, அவ‌ளோ அவ‌ன் மார்புக்குள் ந‌டுங்கிய‌ப‌டி மெல்ல‌ க‌ர‌த்தை உய‌ர்த்தி கிச்ச‌னுக்குள் கை காட்டினாள்.

அதில் அவ‌னும் புரியாது நிமிர‌, நுழைவாயிலில் தொங்கிய ஸ்க்ரீனுக்கு பின்னால் நின்ற‌து ஒரு நிழ‌ல் உருவ‌ம். அதில் இவ‌ன் வேக‌மாய் அந்த‌ ஸ்கீரினை பிடித்து வில‌க்க, அது பட்டு அருகிலிருந்த‌ க‌ண்ணாடி ஜார்  விழுந்து நொறுங்கிய‌து.

அதில் இவ‌ள் திடுக்கிட்டு ப‌ய‌ந்து த‌ரையை பார்க்க‌, அங்கே சித‌றி கிட‌ந்த‌ க‌ண்ணாடி துண்டுக‌ளினுள் முழுதாய் தெரிந்த‌து விராஜ் முக‌ம்.

அதில் ச‌ட்டென்று இவ‌ள் விழிக‌ள் விரிய‌, அன்று ஃபோட்டோவில் பார்த்த‌ அதே முக‌ம் என்று விய‌ப்பாய் பார்வையை நிமிர்த்த‌, அவ‌னோ முழுதாய் வெளியில் வ‌ந்து, “ச‌ர்ப்ரைஸ்!” என்று த‌ன் க‌ர‌ங்க‌ளை விரித்தான்.  

      – நொடிக‌ள் தொட‌ரும்…

You may also like

1 comment

Leave a Reply to அன்புள்ள அரக்கனே [ON GOING NOVEL] – Thenaruvi Tamil Novels Cancel Reply

About Me

Featured