அத்தியாயம் 68
கீர்த்தனாவின் குடும்பத்தினர்கள் ரிஷியை பின்தொடர்ந்து அவள் நிரஞ்சனா உடன் வருவதைப் பார்த்து அதிர்ச்சியில் நின்று கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் தனது புடவை தொந்தரவாக இருந்ததால் அதை கட்டிக் கொண்டு எப்படி நடப்பது என தெரியாமல் புடவையை இழுத்துப் பிடித்தபடி தரையை பார்த்து நடந்து சென்று கொண்டு இருந்தாள் கீர்த்தனா.
ரிஷியை உள்ளே அழைத்து சென்ற திலீப் அவன் அருகில் நின்று கொண்டு “பாஸ் எதுவா இருந்தாலும் தாத்தாவே பேசட்டும். நீங்க பேசுற மாதிரி சுச்சுவேஷன் வரவரைக்கும் சைலண்டாவே இருந்திடுங்க. நம்ம எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்.” என்று அவன் காதுகளில் கிசுகிசுத்தான். வெளியில் சாதாரணமாக இருந்தாலும் உள்ளுக்குள் பதட்டத்துடன் இருந்த ரிஷியின் இதயம் நொடிக்கு நொடி வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது.
நிரஞ்சனா கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு உள்ளே வர, அவளை கண்டவுடன் எமோஷனல் ஆன அவள் அம்மா அமுதா “அம்மு!” என்றபடி ஓடி சென்று தன் மகளை ஆரழு தழுவி கண்ணீரில் இத்தனை நாள் அவளை பிரிந்து இருந்த சோகத்தை கரைக்க தொடங்கினாள்.
அதனால் பயந்து போன கீர்த்தனா அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் அவளும் அமுதாவை பார்த்து அழ தொடங்கி விட்டாள். ஒரு பக்கம் அவள் தலையில் காயம் பட்டிருக்க, இன்னொரு பக்கம் பார்ப்பதற்கு அவள் திருமணம் ஆன பெண் போல இருந்ததால் என்ன நடந்திருக்கும் என புரியாமல் குழப்பத்தில் தவித்துக் கொண்டு இருந்த சுரேந்தர் “ஆமாடி கீர்த்தனா.. என்னமா ஆச்சு உனக்கு? இத்தனை நாளா எங்க இருந்த?” என்று கேட்க, அவருக்கு பதில் சொல்லாமல் அமுதா தன்னை பிடித்துக் கொண்டு இன்னும் அடுத்தபடி இருந்ததால் அவளும் பயத்தில் அழுது கொண்டே இருந்தாள்.
அவள் அழுவதை பொறுக்க முடியாமல் ரிஷி கீர்த்தனா பக்கம் திரும்பி “அழாத அம்மு. இங்க வா!” என்று அழைத்தான். உடனே அமுதாவை தன்னை விட்டு விலக்கி நிறுத்திய கீர்த்தனா “டிம்பிள்!” என்று அழுதபடி அவன் அருகில் சென்று உரிமையாக அவன் மடியில் அமர்ந்து அவனை கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
இப்போது அந்த காட்சியை மீண்டும் கீர்த்தனாவின் குடும்பத்தினர்கள் ஷாக் ஆகி பார்க்க, தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்த ஹேண்ட் கர்ச்சீப் ஒன்றை எடுத்த ரிஷி அவளை தன் மடியில் நன்றாக அமர வைத்து அவள் கண்ணீரை துடைத்தபடி “இப்ப எதுக்கு இப்படி அழுகிற?” என்று கேட்க, “எனக்கு தெரியல! அந்த ஆன்ட்டி எதுக்காக என்ன பார்த்த உடனே அழுதாங்க? அவங்க அழுத உடனே அவங்கள பாத்து எனக்கு அழுக அழுகையா வந்துருச்சு டிம்பிள்! நீ முதல்ல அவங்கள அழவேண்டாம்னு சொல்லு.” என்ற கீர்த்தனா அழுததில் லேசாக அவள் மூக்கு புறுப்புறுவென்று இருந்ததால் ரிஷியின் சட்டை காலரில் தன் மூக்கை வைத்து தேய்த்தாள்.
அவள் என்ன செய்தாலும் அதை ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக இருந்த ரிஷி “இங்க திரும்பு.. என்ன ஆச்சு?” என்று பொறுமையாக அன்புடன் அவளிடம் விசாரித்தான். தன் முகத்தை உடனே அவன் பக்கம் திரும்பிய கீர்த்தனா “எனக்கு மறுபடியும் சளி புடிச்சிருச்சு.” என்று தன் மூக்கை உறிந்தபடி சொன்னாள்.
“நம்ம வீட்டுக்கு போன உடனே டாக்டர் கிட்ட உனக்கு மெடிசன் வாங்கி குடுக்கிறேன். அத போட்டா சீக்கிரம் கோல்டு சரி ஆயிடும். இந்தா.. இந்த கர்சிப்பை வச்சுக்கோ. சளி வந்தா இதுல தான் துடைக்கணும். டிரஸ்ல துடைக்க கூடாதுன்னு நான் சொல்லி இருக்கேன் இல்ல!” என்ற ஏதோ குழந்தைகளிடம் பேசுவதைப் போல ரிஷி நிதானமாக பேச,
அவனிடம் இருந்து கர்சிப்பைப் பெற்றுக் கொண்டு அதை வைத்து நன்றாக தன் மூக்கை துடைத்த கீர்த்தனா “சாரி டிம்பிள்! நீ சொன்னதை நான் மறந்துட்டேன். என்னால உன் டிரஸ் அழுக்காயிடுச்சா? நான் வேணா அதை துடைக்கவா?” என்று கேட்டபடி தன் கையில் இருந்த கர்சிப்பை அவன் சட்டையை நோக்கி கொண்டு சென்றாள்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீ சும்மா இரு.” என்ற ரிஷி அவள் கையைப் பிடித்துக் கொண்டான். சுரேந்தரும், அமுதாவும் நடப்பதை புரிந்துக்கொள்ள முடியாமல் குழப்பத்துடன் எப்படி ரியாக்ட் செய்வது என தெரியாமல் நின்று கொண்டிருந்தார்கள். இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாது என நினைத்த பாஸ்கர் தன் மகளை கீழே இறக்கி விட்டுவிட்டு அவர்கள் அருகில் சென்று “இங்க என்ன நடக்குதுன்னு யாராவது கொஞ்சம் சொல்றீங்களா? வீட்ல எல்லாரும் இருக்கும்போது கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம என்ன பண்ணிட்டு இருக்க கீர்த்தனா?
நீயெல்லாம் ஒரு டாக்டரா? படிச்ச பொண்ணு மாதிரியா நடந்துக்குற நீ? உனக்கு என்ன ஆச்சு.. இத்தனை நாளா நீ எங்க இருந்தன்னு அப்பா கேட்டுட்டு இருக்காரு.. அதுக்கு ஆன்சர் பண்ணாம என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என்று கோபமாக கேட்டுவிட்டு கீர்த்தனாவின் கையை பிடித்து இழுத்தான்.
அவன் தன்னை பார்த்து சத்தமாக பேசியதிலேயே பயத்தில் நடுங்கிய கீர்த்தனா இப்போது அவன் தன் கையை வேறு பிடித்து இழுத்ததால் இன்னும் நடுங்கி போய்விட்டாள். இதற்கு முன் அவள் விபச்சார விடுதியில் இருந்தபோது அவளை இப்படி எல்லாம் கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்று அடித்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் என்பதால் அது அவளுக்கு ஞாபகம் வந்துவிட,
தன் கையை பிடித்திருப்பவன் தனது சொந்த அண்ணன் என்று அவளால் அறிந்து கொள்ள முடியாததால் “என்ன விடு! யார் நீ? என்ன எங்கயும் கூட்டிட்டு போயிடாத. எனக்கு உன்ன பாத்தாலே பயமா இருக்கு என்ன விடு. எனக்கு கை வலிக்குது விடு.” என்று அழுது கதறிய கீர்த்தனா ரிஷியை பார்த்து “டிம்பிள்.. டிம்பிள்.. இவனை என்ன விட சொல்லு. நான் உன் கூட தான் இருப்பேன். வேற யார் கிட்டயும் போக மாட்டேன். எனக்கு கை வலிக்குது. இவன் என்ன விட மாட்டேங்கிறான்.” என்று பரிதாபமாக சொன்னாள்.
அவள் அப்படி அழுது கதறுவதை பார்த்து ரிஷியின் கண்களில் இருந்தும் கண்ணீர் வர தொடங்கிவிட்டது. “ஏய் என்ன பண்ணிட்டு இருக்க கீர்த்தனா? உனக்கு என்ன பைத்தியம் புடிச்சிருக்கா? எதுக்கு இப்படி லூசுத் தனமா உளறிட்டு இருக்க? யார் இவன்?
நீயும் இவனும் லவ் பண்றீங்களா? யார் கிட்டயும் சொல்லாம இவன் கூடத்தான் நீ ஓடி போனியா? வாய தொறந்து முதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லி தொலைடி.” என்று கோபம் குறையாமல் பாஸ்கர் ஒரு பக்கம் கத்திக் கொண்டிருக்க, அவனிடம் தன்னை விடச் சொல்லி அழுது கொண்டிருந்தாள் கீர்த்தனா.
தன் அம்முவை தன்னுடனே வைத்துக்கொள்ள என்ன செய்வான் ரிஷி?
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)