அத்தியாயம் 46
மீட்டிங் ஹாலில் உள்ள அனைவரும் ஷாக்காகி பார்க்க, 80 வயது மதிக்கத்தக்க ஒருவர் கையில் ஒரு தடியை ஊனிக் கொண்டு உள்ளே வந்து கொண்டிருக்க, அவருக்கு பின்னே நான்கு ஐந்து கருப்பு உடை அணிந்து இருந்த பாடிகார்டுகள் இருந்தார்கள்.
வயதான போதிலும் அந்த நபர் கம்பீரமாகவும், வலிமை மிக்கவராகவும் இருக்க, அவரை கண்டவுடன் “வெல்கம் சேர்மன்!” என்றபடி அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
அந்த இடத்தில் அவர் அமர்வதற்கு என்று சிம்மாசனம் போல இருந்த ஒரு சேரை நால்வர் கொண்டு வந்து போட்டுவிட்டு செல்ல, அதில் கம்பீரமாக சென்று கால் மேல் கால் போட்டு அமர்ந்தார் சேர்மன் வீர சேதுபதி. இதுவரை அங்கே ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது வாயடைத்து போய் அமர்ந்து இருந்தார்கள்.
சேர்மனின் முன்னிலையில் வாயை திறக்கக் கூட யாருக்கும் தைரியம் வரவில்லை. இவ்வளவு வயதானாலும் தன்னை கண்டு அனைவரும் மரியாதை மற்றும் பயத்துடன் இருக்கும் அளவிற்கு ஒரு அச்சுறுத்தலான ஆளாக இருந்தார் ச?தாத்தா.
தனது வீழ்ச்சேரை இயக்கிக் கொண்டு அவரை நோக்கி சென்ற ரிஷி அவரது காலை தொட்டு குனிந்து ஆசிர்வாதம் வாங்கினான். “என் ஆசீர்வாதம் உனக்கு எப்பயுமே இருக்குப்பா ரிஷி. முக்கியமா உன்ன பாக்குறதுக்கு தான் இங்கே நான் வந்தேன்.” என்று அவனை ஆசீர்வதித்துவிட்டு சொன்னார் தாத்தா.
“ரொம்ப சந்தோஷம் தாத்தா, நீங்க இங்க எனக்காக வருவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. நானே உங்க கிட்ட இங்க நடக்குறத பத்தி பேசலாம்னு தான் இருந்தேன்.
அம்மா இறந்து போனதுக்கப்புறம் மொத்தமா நீங்க பிசினஸ் எதுவுமே வேண்டாம்னு யாரும் உங்கள தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டு காசி போயிட்டீங்க!
நானே உங்க கிட்ட பேசணும்னு நினைச்சா கூட என்னால உங்களை ரீச் பண்ண முடியல. இந்த டைம்ல கரெக்டா நீங்க வந்தது எனக்கு ஆச்சரியமா இருக்கு.” என்று ரிஷி சொல்ல,
“நான் எங்க இருந்தாலும், என் கண்ணு இங்க தான் இருக்கும். என் பொண்ணு கலா என்ன விட்டுப் போனதையே இன்னும் என்னால ஏத்துக்க முடியல.
என் பேரன் நீ இந்த நிலைமையில இருக்க. உனக்கு ஒரு பிரச்சனைன்னா இந்த தாத்தா வர மாட்டேனா ரிஷி?
உன்னை யார் என்ன பண்ணனும் நினைச்சாலும் அதை அவங்க என்ன தாண்டி தான் பண்ணனும். என் பொண்ணு விஷயத்துல நான் கோட்டை விட்டுட்டேன்.
உங்க விஷயத்துல அப்படி இருக்க மாட்டேன். இனிமே தாத்தா உயிரோட இருக்கிற வரைக்கும் உங்க கூட தான் இருப்பேன். உங்கள பத்திரமா பாத்துக்குவேன்.” என்ற சேர்மன் தாத்தா ஓரக் கண்ணால் ஆனந்தகுமாரை பார்த்தார்.
“இந்த பெருசு இப்ப எதுக்கு இங்க வந்துச்சு? நம்ம பிளானை எல்லாம் இவன் கெடுத்துருவான் போல இருக்கு!
ஏற்கனவே ரிஷியை சமாளிக்கிறது பெரிய பிரச்சினையா இருந்துச்சு. இப்ப இந்த ஆளையும் சேர்த்து சமாளிக்கணுமா?” என்று நினைத்து ரிஷியின் அப்பா, அவரது இரண்டாவது மனைவியின் குடும்பம் என அனைவரும் ஏதோ பேயை பார்ப்பது போல தாத்தாவை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“நீங்க இப்ப எப்படி இருக்கீங்க மாமா? நீங்க வர்றத பத்தி முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, நான் எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சிருப்பேனே!” என்று நல்லவன் போல ஆனந்தகுமார் கேட்க,
“நீங்க எனக்காக எதையும் பண்ணி கஷ்டப்பட வேண்டாம்னு தான் நான் எதுவும் சொல்லாம வந்தேன் மாப்ள.
அந்த காலத்திலேயே வெளிநாட்டுக்கு டன் கணக்குல பொருட்களை உற்பத்தி பண்ணி நான் எக்ஸ்போர்ட் பண்ணி இருக்கேன். காசியில இருந்து இங்க வர்றது எல்லாம் எனக்கு ஒரு பெரிய விஷயமா?
இங்க மீட்டிங் நடந்துட்டு இருக்கும்போது நான் பாதியில வந்து உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். நீங்க கண்டின்யூ பண்ணுங்க.
இந்த கம்பெனியோட chair பர்ஸ்னா இங்க இருக்க வேண்டியது என்னோட கடமை.” என்றார் தாத்தா.
தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)