அத்தியாயம் 26
அங்கே மனிஷா எவனோ ஒரு மரும மனிதனுடன் தனது கட்டிலை பங்கு போட்டு கொண்டு கலவியில் குதுகலித்துக் கொண்டிருக்க, இங்கே அஸ்வின் ஐஸ்வர்யா இருவரும் அவர்களது ரூமில் ஒருவரை ஒருவர் முத்தமிட்டு கொண்டு இருந்தார்கள்.
அவனுக்குள் இருந்த போதை மருந்து நேரம் செல்ல செல்ல அதன் வீரியத்தை அதிகமாக்கிக் கொண்டே சென்றதால், அஸ்வினின் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் ஒரு பெண்ணின் அருகாமைக்காக ஏங்கி தவிக்க தொடங்கியது. அவர்களைச் சுற்றி மழை குளு குளுவென்று கொட்டி தீர்த்தாலும், அஸ்வினின் உடல் மோக தாபத்தில் வெந்து கொண்டு இருந்தது.
அதனால் தன் வெப்பத்தை அவளுக்கும் பாய்ச்சி அவள் பூவுடலை சூடாக்க வேண்டும் என்று துடித்த அஸ்வின் ஐஸ்வர்யாவை தூக்கிக் கொண்டு சென்று அவளுடன் கட்டிலில் விழுந்தான். அவன் தன்னை முத்தமிட்டான் என்பதையே இன்னும் நம்ப முடியாத நிலையில் இருந்த ஐஸ்வர்யா அடுத்தடுத்து அவன் முன்னேறி செல்வதை உணர்ந்து “என்ன ஆச்சு இவனுக்கு? திடீர்னு நம்ம கிட்ட ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறான்? ஒருவேளை குடிச்சிருக்குறதனால போதைல என்ன பண்றோம்னு தெரியாம இப்படி பண்றானா?
ஆனா இவன் உள்ள வரும்போது கூட என்னை பிசாசு என்று சொல்லி திட்டிட்டு தானே இருந்தான்! இந்த வீட்டை விட்டு போக கூட சொன்னானே! அப்புறம் எப்படி திடீர்னு அப்படியே இவன் ஆப்போசிட்டா மாறினான்?” என்று யோசித்து திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவளை அதிகம் யோசிக்க விடாமல் அவள் மீது படர்ந்த அஸ்வின் அவளது மலர் மேனியை ஆக்கிரமிக்க தொடங்க, தனது ஆருயிர் காதலன் கணவனான பிறகு ஏதோ தீண்ட தகாத ஒரு அருவருப்பான பொருளை பார்ப்பது போல ஆத்திரத்துடன் தன்னை பார்த்துக் கொண்டு இருந்தவன், இப்போது கண்களில் காதல் பொங்க ஆசைக் கூட, தன்னுடன் கூடி கழிக்க வேண்டும் என்ற ஆசையுடன் பார்க்கிறானே.. என்று நினைக்கும் போதே ஒருவித பரவச நிலைக்கு சென்று விட்டாள் ஐஸ்வர்யா.
அவளுடன் கட்டிலில் படுத்து பின்னிப் பிணைந்து உருண்டு கொண்டு இருந்த அஸ்வின் ஐசு ஐசு என்று ஆசையாக போதை ஏறிய குரலில் ஒரு வித மோன நிலையில் அவளை ஹஸ்கி வாய்ஸில் அழைக்க, அந்த நேரங்களில் அவனது சூடான மூச்சுக்காற்று அவளது கழுத்து வளைவிலும், இதழ்கள் ஓரத்திலும் பட்டு சென்றுதால் வானத்தில் மிதப்பது போல உணர்ந்த ஐஸ்வர்யாவின் உடல் அவனது ஒவ்வொரு தொடுகைக்கும் சிலிர்த்து அடங்கியது.
அவளும் தனது இரு கைகளை அவனது தோள்களில் மாலையாக போட்டு பதிலுக்கு அவனை உணர்ச்சி பொங்க முத்தமிட, அவள் ஆர்வம் கட்ட தொடங்கியவுடன் அஸ்வினின் ஆர்வம் அதிகமானது. அவளது பின் கழுத்துக்கு அடியில் தன் ஒற்றை கையை வைத்து அவள் தலையை தனக்கு வாகாக தூக்கி பிடித்துக் கொண்ட அஸ்வின் அவளது இதழ் தேனை விரும்பி ரசித்து அவளது உதடுகளை கடித்து இழுத்து சுவைத்தான்.
அதில் கூச்சத்திலும், சுகத்திலும் தன்னை மரந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை அவனிடம் இழந்து கொண்டு இருந்த ஐஸ்வர்யா அவனை தன்னுடன் சேர்த்து இறுக்கமாக அணைத்துக்கொள்ள, அஸ்வின் ஏற்கனவே தனது சட்டையை கழட்டி எரிந்து இருந்ததால் அவனது வெற்று மார்பிலும் முதுகிலும் ஐஸ்வர்யாவின் மென்மையான விரல்கள் விளையாடும் போது நகங்கள் கீரி காயம் ஏற்பட்டது.
அதில் அஸ்வின் லேசாக முனக, அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவர்கள் இருவரும் போர்வையை மட்டும் ஆடையாக்கி அதற்குள் தஞ்சம் புகுந்து போகத் தீயில் வெந்து முத்தாடிக் கொண்டு இருந்தார்கள். அவர்களது இனிமையான முனகள் ஒலிகள் காதல் ரிங்காரமாய் மலையோசைக்கு நடுவே காதல் புறாக்களின் சினுங்களாய் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.
ஏற்கனவே உடல் அளவிலும் மனதளவிலும் அவர்கள் இருவருமே சோர்வாக இருந்ததால் அனைத்தும் முடிந்து பலமுறை கூடி கழித்து பிரிந்து இறுதியில் சோர்வாகி ஒருவரை ஒருவர் குளிருக்கு இதமாக அனைத்து கொண்டு அப்படியே உறங்கிப் போனார்கள்.
விடியற்காலை நேரத்தில் சென்னையில் உள்ள அஸ்வினின் பங்களா வீட்டு வாசலில் ஆட்டோவில் சென்று இறங்கிய பெண் அங்கே இருந்த வாட்ச்மேனிடம் ஏதோ பேசிவிட்டு உள்ளே சென்றாள். வரும்போது அவள் மழையில் நனைந்து இருந்ததால் அவளது ஆடைகள் ஈரமாக இருந்தது. “முதல்ல போய் நல்லா சுடுதண்ணி போட்டு குளிக்கணும். இல்லன்னா கண்டிப்பாக காய்ச்சல் வந்துரும்.” என்று தனக்கு தானே சொன்னபடி அவள் அஸ்வினின் பங்களா வீட்டில் உள்ள கெஸ்ட் ரூமை நோக்கி நடக்க தொடங்கினாள்.
அப்போது கையில் ஒரு பாட்டில் பீருடன் மாடியில் உள்ள கெஸ்ட் ரூமில் இருந்து கீழே இறங்கி வந்த ஒரு இளைஞன் அவளது பின் பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு அவன் போதையில் இருந்ததால் அந்த பெண் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் “ஏய் யாரது? ஐஸ்வர்யா நீயா இது? பாத்தா அப்படி தெரியலையே!” என்றபடி அவள் அருகில் சென்றான்.
திரும்பி நின்றிருந்தாலும் அவன் குரலைக் கேட்ட உடனேயே அவன் யார் என்று கண்டுகொண்ட அந்த பெண் அவன் காலடி சத்தம் தன்னை நோக்கி வருவதை கேட்டு பதட்டம் அடைந்தாள். அவளது இதயம் கட்டுப்பாடு இன்றி வேகமாக துடிக்க, அவள் அப்படி அவனை பற்றி யோசித்தபடி சிலை போல நின்று கொண்டிருக்கும் போது அவள் அருகில் நெருங்கி வந்திருந்த அந்த இளைஞன் அவளது தோள்களில் கை வைத்து “யாருன்னு கேட்டுகிட்டே இருக்கேன்.. சொல்ல மாட்டியா நீ?” என்று கேட்டபடி அவளது தோள்களில் கை வைத்து அவளை தன் பக்கம் திருப்பினான்.
அவன் திரும்பியதில் அவளது நீண்ட கூந்தலில் இருந்து அவள் மழையில் நனைந்து இருந்ததால் சில நீர் துளிகள் அவன் முகத்தில் பட்டு தெறித்தது. அவள் தொப்பலாக மழையில் நனைந்து இருந்ததால், தேனில் ஊறவைக்கப்பட்ட ஸ்ட்ராபெரி பழம் போல அவளது சிவந்த இதழ்கள் புதிதாக மலர்ந்த மலர் போல விரிந்து கிடக்க, அவளை அப்படி பார்த்து அவன் மெய் மறந்து நின்றுவிட்டான்.
இதுவரை போதையில் ஏதேதோ பிதற்றிக் கொண்டு இருந்த அவனுக்கு அவளைப் பார்த்தவுடன் பேச்சை வரவில்லை. அடித்த போதை எல்லாம் ஒரே நொடியில் இறங்கி விட்டது போல இருந்தது. முதலில் தன் தேவதை நேரில் கண்ட ஷாக்கில் இருந்த அவன் பின் ஏதோ பேயை கண்டதைப் போல பதட்டமடைந்து “இஇ.. இந்து! நீயா? நீ எங்க டி இங்க?” என்று நம்ப முடியாமல் கேட்டான்.
அவன் மீது இருந்த கோபத்தில் அவனை முறைத்து பார்த்த இந்து “ஏன் நான் இங்க வரக் கூடாதா? நான் ஒன்னும் உன்னை பார்க்க வரல. அஸ்வினை பாக்குறதுக்கு வந்தேன். அவன் ஊர்ல இல்ல எப்ப வருவான்னு தெரியலைன்னு வாட்ச்மேன் சொல்லிட்டாரு. அதான் விடியுற வரைக்கும் இங்க வெயிட் பண்ணலாம். அப்புறமா விடிஞ்சதுக்கப்புறம் கால் பண்ணி அஸ்வின் கிட்ட பேசிக்கலாம்னு வந்தேன்.” என்றாள்.
அவள் பேசும்போது அவளது உதடு அசைவதை ஏதோ ஒரு அழகான ரொமான்டிக் காட்சி போல தன்னையும் மறந்து பார்த்துக் கொண்டு இருந்த அந்த இளைஞன் அப்படியே அவளது இதழ்களில் இருந்து தன் பார்வையை கீழே இறக்கி அவளது கழுத்து பகுதிக்கு வந்தான். அவள் ஒரே ஒரு டிரான்ஸ்பரென்ட் பெண்டன்ட் மட்டும் அணிந்திருக்க, அவளது கழுத்து வளைவின் அழகை கண்டு ஒரு நொடி ஸ்தம்பித்து நின்ற அவனுக்கு சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தது.
அதனால் ஜெர்க் ஆகி “ஏய் தாலி எங்க டி? அதுக்குள்ள தாலி வேணாம்னு கழட்டி போட்டுட்டு வந்துட்டியா? நீ எல்லாம் தமிழ்நாட்டு பொண்ணா?” என்று அவன் நம்ப முடியாமல் கேட்க, “நீ தேவை இல்லாம என் கிட்ட பேசிட்டு இருக்க மணி. நான் என்ன பண்ணா உனக்கு என்ன? நீ எதுக்கு என் வழியில குறுக்க வர்ற? இது ஒன்னும் உன் வீடு இல்ல. நான் உன்ன பாக்க வரவும் இல்ல. சோ இப்படி தேவை இல்லாம என் கிட்ட கொஸ்டின் கேட்டு என்னை டென்ஷன் பண்ற வேலை வச்சுக்காத.” என்று சொல்லி தன் ஆள் காட்டி விரலை அவன் முகத்திற்கு முன்னே நீட்டி அவனை எச்சரித்த இந்து அங்கே இருந்து நடக்க தொடங்கினாள்.
அவசரமாக அவளை பின் தொடர்ந்து சென்ற அந்த இளைஞன் அவள் கையைப் பிடித்து இழுத்து அவள் தன் பக்கம் வந்தவுடன் தனது கை வளைவிற்குள் அவளை கொண்டு வந்து “I am Manik not மணி. என்னை அப்படி கூப்பிடாத டின்னு சொன்னா கேக்க மாட்டியா?” என்று கோபமாக கேட்க, ” உனக்கு இது பிடிக்கலல.. அப்ப இனிமே எப்பயும் அப்படித் தான் கூப்பிடுவேன். உன்னால என்ன டா பண்ண முடியும்? நீ என்னை டி போட்டு பேசுறது எனக்கும் தான் பிடிக்கல. நான் சொன்னா நீ மட்டும் கேக்குறியா?” என்று பதிலுக்கு சிவந்த கண்களுடன் இந்துவும் கோபமாக அவனை பார்த்து கேட்டாள்.
அவள் எக்ஸ்பிரஷன்களுடன் பேசும்போது அவளது மூக்கு நுனியில் இருந்து ஒரு துளி நீர் கீழே விழ, அத்தனை குளோசப்பில் அவளது அழகிய முகத்தை பார்த்துக் கொண்டு இருந்த மாணிக்கிற்கு அந்த நீர் துளி போல தனது உலகமும் அவளது காலடியில் விழுந்து கிடப்பதாக தோன்றுகிறது.
இப்போது அவள் கழுத்தில் ஏன் தாலி இல்லை என்று தெரிந்து கொள்வது அவனுக்கு முக்கியமான விஷயமாக இருந்ததால் அவளிடம் சண்டை போடுவதற்கு பதிலாக சமாதானமாக பேசினால் தான் உண்மை என்னவென்று தெரியவரும் என்று நினைத்து “உன் மேல இருக்கிற அக்கறையில்ல தானே கேட்கிறேன்.. உண்மையை சொல்லு தாலி என்ன ஆச்சு?” என்று நல்ல எண்ணத்தில் கேட்கத் தொடங்கிய மாணிக் இறுதியில் பழக்க தோஷத்தில் “என்ன உன் புருஷன் ஒரு நாள் கூட உன் டார்ச்சர் தாங்க முடியாம உன்ன போடி உங்க அப்பன் வீட்டுக்குன்னு தாலியை புடிங்கிட்டு துரத்தி விட்டுட்டானா?” என்று நக்கலாக கேட்டு முடித்தான்.
அவன் தனது திருமணத்தைப் பற்றி பேசியதால் இந்துவின் இதயம் கனத்தது. அதுவரை அவனை கோபமாக பார்த்துக் கொண்டு இருந்த இந்து இப்போது விரத்தியுடன் கண்கள் கலங்க அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஏதாவது தெரிகிறதா? என்ற ஆர்வத்தில் மாணிக் அவளை பார்த்துக் கொண்டிருக்க, அவனது குறுகுறு பார்வை மீண்டும் அவளுக்கு கோபத்தை வரவழைத்ததால் பளார் என்று அவன் கன்னத்தில் ஒன்று விட்டாள் இந்து.
முத்தங்கள் தொடரும்