Home மூர்கனின் முரட்டு முத்தங்கள்மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 25

மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 25

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 25 

வெளியில் மழை பெய்து கொண்டு இருந்ததால் கரண்ட் போயிருந்த நிலையில், தூங்கிக் கொண்டு இருந்த ஐஸ்வர்யா எழுந்து அமர்ந்தாள். சுத்தி இருட்டாக இருந்ததால் “என்ன இவ்வளவு இருட்டா இருக்கு? கரண்ட் போயிடுச்சா? எனக்கு இருட்டை பார்த்தாலே பயமா இருக்கே! பேசாம வித்யாவுக்கு கால் பண்ணி இங்க வர சொல்லலாமா?” என்று யோசித்த ஐஸ்வர்யா தனது மொபைல் ஃபோனில் பிளாஷ் லைட்டை ஆன் செய்துவிட்டு நேரத்தை பார்த்தாள். 

அப்போது நேரம் நள்ளிரவு 2 மணி என்று காட்டியதால், “இவ்வளவு நேரம் ஆயிடுச்சு… அவ நல்லா தூங்கிட்டு இருப்பாளே.. ஏற்கனவே அவ எனக்கு எவ்வளவோ ஹெல்ப் பண்ணிட்டா.. நேத்து ஃபுல்லா என் கூட சேர்ந்து டிராவல் பண்ணி இருக்கா.. இங்க விவேக் வேற இருக்கான். அவங்களோட பர்சனல் டைமை நம்ம கெடுக்க கூடாது.” என்று நினைத்த ஐஸ்வர்யா மெழுகுவர்த்தி மாதிரி ஏதேனும் கிடைக்கிறதா என்று அந்த அறை முழுவதும் தேட தொடங்கினாள். 

அப்போது அவளது அறை கதவு வேகமாக தட்டப்பட்டது. அந்த சத்தத்தை கேட்டு பயந்து போன ஐஸ்வர்யா “இந்த டைம்ல நம்ம ரூம் டோரை யார் தட்டுறது? ஒருவேளை நம்மள மாதிரியே கரண்ட் போனதுனால எல்லாரும் தூங்கிக்கிட்டு இருந்தவங்க   எந்திரிச்சிட்டாங்களா? அதான் நான் இங்க வந்த விஷயம் தெரிஞ்சு ப்ராப்ளம் பண்றதுக்காக டோரை வந்து தட்டுறாங்களா? வித்யா என்னை யார் வந்து கூப்பிட்டாலும் கதவை திறக்க வேண்டாம்னு சொன்னாளே.‌.. இப்ப நான் என்ன பண்றது?” என்று யோசித்தாள். 

அடுத்தடுத்து அவளது வாழ்க்கையில் நடந்த கோர சம்பவங்களால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்த அவளுக்கு அந்த கதவை யாரோ வேகமாக தட்டும் சத்தம் கூட ஏதோ மரண ஓலம் போலத் தான் கேட்டது. அதில் அவள் உடல் தானாக நடுங்க, “ஐயோ விடாம தட்டிட்டு இருக்காங்களே! நம்ம தொறக்காம இருக்கிறதும் தப்பாகிடுமோ!” என்று நினைத்த ஐஸ்வர்யா உயிரை கையில் பிடித்துக் கொண்டு அந்த கதவையே பார்த்தபடி இருந்தாள். 

குடித்துவிட்டு நல்ல போதையில் இருந்த அஸ்வின் மீண்டும் அந்த கதவை வேகமாக தட்டியபடி “ஏய் உள்ள யார் இருக்கிறது? என் ரூம்குள்ள நீங்க என்ன பண்றிங்க? ஒழுங்கா கதவ தொறங்க! எனக்கு தூக்கம் வருது நான் தூங்கணும்.” என்று உளறினான். 

அவனது குரலைக் கேட்டவுடன் வந்திருப்பது அஸ்வின் தான் என்று அடையாளம் கண்டுபிடித்த ஐஸ்வர்யா “சப்பா.. இவன் தானா.. இன்னிக்கி வித்யா அஸ்வினை கீழே வர விடாம பார்த்துக்கிறேன்னு சொன்னா.. ஒருவேளை மழை  பெய்ரதுனால எல்லாரும் கீழ வந்துட்டாங்க போல இருக்கு.” என்று நினைத்து சென்று கதவை திறந்தாள். 

கதவை தட்டி தட்டி பார்த்து கடுப்பாகி தடுமாறி கதவின் மீது விழுந்து அதில் சாய்ந்தபடி இருந்த அஸ்வின் திடீரென்று அவள் கதவை திறந்ததால் அப்படியே அவள் மீது உள்ளே விழுந்தான். ஏற்கனவே பலவீனமாக இருந்த ஐஸ்வர்யா திடீரென்று அவன் தன் மீது வந்து விழுந்ததால் நிலை தடுமாறி தரையில் விழ, அவன் அவள் மீது கிடந்தான்.

அந்நேரம் விடாமல் கொட்டிக் கொண்டு இருந்த மழை வேகம் பிடித்து இடியும் மின்னலும் என தன் பங்கிற்கு அது ஒரு பக்கம் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்க, அந்த சத்தத்தில் பயந்து போன ஐஸ்வர்யா சட்டென்று அவனை அணைத்துக் கொண்டாள். 

ஏற்கனவே ஒருவித கிரக்கத்தில் இருந்த அஸ்வின் ஒரு பெண்ணின் மிருதுவான உடல் தன் உடலோடு உரசுவதை உணர்ந்து தடுமாறினான். அந்த போதையிலும் அவளுக்குள் ஏதோ ஒரு விழிப்புணர்வு இருந்ததால் தன்னுடன் இருப்பது யார் என்று பார்க்கும் உந்துதலில் ஐஸ்வர்யாவின் மீது கிடந்த அஸ்வின் கீழே விழுந்து கிடந்த ஐஸ்வர்யாவின் மொபைல் ஃபோனை தட்டு தடுமாறி கையில் எடுத்து அவளது முகத்தின் மீது அடித்துப் பார்த்தான். 

அதில் கண்கள் கூசியதால் ஐஸ்வர்யா தன் கண்களை மூடிக் கொண்டு “என்ன பண்ற அஸ்வின்? இப்ப எதுக்கு லைட்டை முகத்தில அடிக்கிற? எனக்கு கண்ணு கூசுது. முதல்ல என் மேல இருந்து எந்திரி. என்னால உன் வெயிட்டை  தாங்க முடியல. எனக்கு மூச்சு வாங்குது.” என்று சொல்லிவிட்டு அவன் நெஞ்சில் கை வைத்து தன்னை விட்டு அவனை விலக்கி தள்ள முயற்சி செய்தாள். 

அதில் கடுப்பான அஸ்வின் “ஏய் ஐஸ்வர்யா பிசாசு.. நீ வந்திட்டியா? எதுக்கு டி இங்க வந்த? உன் மூஞ்சிய கொண்டு வந்து என் கிட்ட காட்டலைன்னா உனக்கு நிம்மதியா இருக்காதா? உன்ன பாக்காம கொஞ்ச நாளாவது எல்லாத்தையும் மறந்துட்டு இருக்கலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன் .

அது உனக்கு புடிக்கலையா? உன்னை யார் இங்க வர சொன்னா? நீ எதுக்கு இங்க வந்த? எனக்கு உன்ன பாக்கவே புடிக்கல போ.. இங்க இருந்து போ!” என்று சொல்லி அவள் மீது படுத்திக் கொண்டு அவளது தோள்களை பிடித்து தள்ளினான். 

“ஐயோ குடிச்சா எல்லாருக்கும் பைத்தியம் பிடிச்சுரும் போல இருக்கே! இந்த ஹாபிட்டை எல்லாம் புதுசா பழகிக்கிட்டு இவன் பண்ற அலம்பளை தாங்க முடியல. இவனே வர சொல்லிட்டு, இப்ப நல்லா எருமை மாடு மாதிரி என் மேல ஏறி படுத்துகிட்டு போ போனு என்னை பிடிச்சு தள்ளினா  நான் எங்க போறது?” என்று நினைத்து பெருமூச்சு விட்ட ஐஸ்வர்யா, 

“டேய் லூசு.. நீ நகர்ந்து போனா தான் என்னால மூச்சு விடவே முடியும். போ போனா எப்படி போறது நானு?” என்று கேட்டு கடுப்பாகி தனது உடலில் இருந்த மிச்சம் மிதி பலத்தை ஒன்று திரட்டி அஸ்வினின் தோள்களில் கை வைத்து அவனை தன்னை விட்டு விலக்கி தள்ளினான். 

அப்போதும் அவளால் முழுவதாக அஸ்வினிடம் இருந்து விலக முடியவில்லை. இருப்பினும் கொஞ்சம் கேப் கிடைத்ததால் மெல்ல நகர்ந்து அவனை விட்டு விலகிய ஐஸ்வர்யா எழுந்து சென்று முதல் வேலையாக கதவை லாக் செய்தாள். 

“ஏய் ஐஸ்வர்யா.. என்னையே கீழ தள்ளி விட்டுட்டு போறியா நீ? இரு டி வரேன்! வந்து உன்னை என்ன பண்ண போறேன்னு பாரு!” என்ற அஸ்வின் தட்டு தடுமாறி எழுந்து அவளை நோக்கி நடக்க தொடங்கினான். சுற்றி இருட்டாக இருந்ததால் அவனுக்கு சரியாக எதுவும் தெரியாததால் அவன் இஷ்டத்திற்கு அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்க, “ஏ அஸ்வின் அங்க எங்க போற.. போய் மறுபடியும் கீழே விழுந்துடாத.” என்ற ஐஸ்வர்யா தனது மொபைல் ஃபோனை ஃப்ளாஷ் லைட்டை ஆன் செய்து ஒரு பக்கமாக வைத்துவிட்டு அவன் அருகில் சென்று அவனை கீழே விழ விடாமல் தாங்கி பிடித்தாள். 

அவள் கை பட்டவுடன் ஏதோ கரண்ட் ஷாக் அடித்ததை போல உணர்ந்த அஸ்வின் ஸ்லோ மோஷனினில் அவள் பக்கம் திரும்பினான். அவள் வீட்டில் அணியும் சாதாரண நைட்டி ஒன்றை தான் அணிந்திருந்தாள். அவளது நீண்ட கூந்தல் சரியாக சீவப்படாமல் இப்போதைக்கு போனி டைலுக்குள் அடக்கி வைக்கப்பட்டு இருக்க, அதைத் தாண்டி சிறுசிறு முடி கற்றைகள் லேசாக ஜன்னல் வழியாக வந்த காற்றில் பறந்து அவளது முகத்தில் அவ்வப்போது வந்து விழுந்து சென்றது. 

திலகா செய்த வேளையில் தன் தலை முதல் கால் வரை ஏற்கனவே மோக தாபத்தில் வெந்து கொண்டு இருந்த அஸ்வின் ஐஸ்வர்யாவை அப்படி நெருக்கமாக கண்டதில் தடுமாறினான். அவன் இதுவரை தன்னை வெறுப்புடன் பார்த்துக் கொண்டு இருந்ததால் அந்த பார்வை ஐஸ்வர்யாவின் இதயத்தில் ஒரு வடுவாக பதிந்திருக்க, இப்போது அவள் புதிதாக தன்னை ஆசையுடன் பார்ப்பதை கண்டு அதிர்ந்த ஐஸ்வர்யா தங்கள் இருவருக்கும் நடுவில் நடந்த அனைத்தையும் மறந்து விட்டு காதலுடன் “அஸ்வின்!” என்று அவனை மெல்லிய குரலில் அழைத்தாள். 

அவளே எதிர்பார்க்காத விதமாக பதிலுக்கு அவளை “ஐசு!” என்று காதல் பொங்க அழைத்த அஸ்வின் அவளை ஆசையுடன் திரும்பி பார்த்து அவள் சுதாரித்துக் கொள்வதற்குள் அவளை தனது கை வளைவிற்குள் கொண்டு வந்து தனது இதழ்களை அவசரமாக அவளது இதழ்களின் மீது பொருத்தினான். 

இது அஸ்வின் தானா? என்று நம்ப முடியாமல் விழிகள் விரிய ஐஸ்வர்யா அவனைப் பார்க்க, அவன் என்னவோ இன்று விட்டால் மீண்டும் தன்னால் இன்னொரு நாளில் இவளுடன் சேர்ந்து வாழவே முடியாது என்பதைப்போல பசை போட்டு ஒட்டாத குறையாக அவளது இதழ்களை தனது முரட்டு இதழ்களால் விடாமல் இழுத்து பிடித்து வைத்து தன் விருப்பம் போல் ஆசை தீர சுவைத்து இன்புற்றான். 

இத்தனை நாட்களுக்கு பிறகு அன்புடன் முதல் முறையாக அஸ்வின் தன்னிடம் நடந்து கொள்வதால் அதில் உறுகி கரைந்து போன ஐஸ்வர்யா இப்போது தானம் அவனை இறுக்கமாக அணைந்துக் கொண்டு அவன் உடலோடு உடலை இணைத்து பின்னி பிணைந்து அவளுக்கு இசைந்து கொடுக்க தொடங்கினாள்‌. 

வெளியில் டமால் டுமீல் என்ற இடி சத்தத்துடன் வெளுத்து வாங்கும் மழைக்கு ஈடாக அவர்கள் நடத்தும் அந்த முத்த யுத்தத்தின் ஸ்ரீகாரங்கள் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது. அந்த இசை தேனிசை ராகம் போல அவர்களின் காதுகளுக்குள் நுழைந்து, இன்னும் இன்னும் இந்த சுகத்தில் மூழ்கி திழைக்க வேண்டும் என்று அவளை அவர்கள் இருவருக்குள்ளும் நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே இருந்தது. 

அங்கே மனிஷா கட்டிலில் கிடக்க, அவள் மீது கிடந்த ஆறடி இளைஞன் ஒருவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு அவளது இதழ் தேனை ஆசை தீர பருக்கிக் கொண்டு இருந்தான். தன்னுடன் இருப்பது யார் என்று கூட தெரியாமல் அது அஸ்வின் தான் என்ற நம்பிக்கையில் இதுவரை அனுபவிக்காத பேர் ஆனந்தத்தில் ஒருவித பரவச நிலையில் வானத்தில் மிதந்து கொண்டு இருந்த மனிஷா அவளை விடாமல் தன்னுடன் சேர்த்து இறுக்கிக் கொண்டு அவனுடன் முத்தாட தொடங்கினாள். 

நேரம் செல்ல செல்ல அவளது உடலில் இருந்த மருந்தின் தாக்கம் அதிகப்படியாக வேலை செய்து அவனது ஒவ்வொரு அணுக்களையும் அவளுக்காக ஏங்க வைத்து துடித்தது. தனது உடல் இஷ்டத்தை அவளை வைத்து தனித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருந்த அந்த இளைஞன் மெல்ல அவளிடம் அத்து மீற தொடங்கினான். முதலில் அவளது லாவண்யங்கள் அவன் கைகளுக்கு கிடைக்க, முழுமையாக இன்று அவளை அனுபவித்து தீர வேண்டும் என்ற வெறியில் இருந்த அந்த இளைஞன் தங்கள் இருவரின் ஆடைகளையும் அவசரமாக அகற்ற தொடங்கினான். 

முத்தங்கள் தொடரும் 

You may also like

Leave a Comment

About Me

Featured