அத்தியாயம் 24
வித்யா தன்னை ரூமிற்கு வரக் கூடாது, அஸ்வினையும் கீழே வர விட கூடாது அனைவரும் மொட்டை மாடியிலேயே இன்று தங்குங்கள் என்று விவேக்கிடம் சொன்னதால், கடுப்பில் அந்த அழைப்பை துண்டித்தான் அவன்.
“என்ன இவன்.. நான் பேச பேசவே காலை கட் பண்றான்? அந்த அளவுக்கு ஆயிடுச்சா? இருக்கட்டும், போதை தெளிஞ்சு நாளைக்கு மறுபடியும் கொஞ்சிக்கிட்டு என் கிட்ட தானே வரணும்.. அப்ப பார்த்துகிறேன் இவனை.” என்று நினைத்த வித்யா ஐஸ்வர்யாவிற்கு கால் செய்து “நான் விவேக் கிட்ட பேசிட்டேன். பசங்க எல்லாரும் குடிச்சிட்டு அப்படியே மாடிலயே படுத்து தூங்கட்டும். நீ டோரை லாக் பண்ணிட்டு தூங்கு. நீ வந்திருக்கிறது தெரிஞ்சு வேற யாராவது வந்து உன் கிட்ட பேச ட்ரை பண்ணாங்கன்னா கதவை திறக்காத. எதுவா இருந்தாலும் நாளைக்கு மார்னிங் பேசிக்கலாம். டிராவல் பண்ணி வந்தது எனக்கு டயர்டா இருக்கு. நான் தூங்குறேன், நீயும் தூங்கு பாய்.” என்று சொல்லிவிட்டு இழுத்து போர்த்திக் கொண்டு படுத்தாள்.
தனது ஆடைகளை மாற்றிக் கொண்டு டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரைகளை போட்ட ஐஸ்வர்யா சோர்வாக இருந்ததால் அவளும் தன் கண்களை மூடி அஸ்வினின் அறையில் உறங்கத் தொடங்கினாள்.
லோகேஷ், அஸ்வின், விவேக் மூவரும் இன்னும் தங்களுக்குள் பேசி சிரித்தவாறு குடித்துக் கொண்டு இருந்தார்கள். விவேக் அவன் முதன்முதலில் வித்யாவை எப்படி பார்த்தான், அவர்களுக்குள் எப்படி காதல் வந்தது என்றெல்லாம் ஃபீல் செய்து கதை கதையாக சொல்லிக் கொண்டு இருந்தான்.
“வாவ் சூப்பர் மச்சான்.. பெரிய காவிய காதல் ரேஞ்சுக்கு நீ உருகி உருகி அந்த பொண்ண லவ் பண்ணி இருக்கியே… அதான் அவங்க வீட்லயும் உங்க லவ்வுக்கு ஓகே சொல்லிட்டாங்க போல இருக்கு!” என்று போதை ஏறிய குரலில் லோகேஷ் சொல்ல, “ஆமா ஆமா.. நான் ஒரு காதல் மன்னன் டா.. என் அளவுக்கு என் வித்யாவை வேற யாராலயாவது லவ் பண்ண முடியுமா? அது அவங்க அப்பனுக்கே நல்லா புரிஞ்சிருச்சு. அதான் அவளுக்கு கல்யாணம்னு ஒன்னும் நடந்தா அது என் கூடதான்னு அவர் முடிவு பண்ணிட்டாரு. மாப்ள மாப்ள.. தயவு செஞ்சு என் பொண்ண சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க மாப்பிள்ளைன்னு அவர் அப்பப்ப எனக்கு கால் பண்ணி கெஞ்சுவாரு தெரியுமா? அந்த அளவுக்கு ஐயாவுக்கு இங்க டிமாண்ட் அதிகம் ஆயிடுச்சு.” என்று விவேக் தான் தற்பெருமை பேச தொடங்கி விட்டான்.
அஸ்வின் மட்டும் அமைதியாக எதையோ யோசித்தவாறு குடித்துக் கொண்டிருந்தான். மற்றவர்கள் காதலைப் பற்றி பேசும்போது அவனது மனதிலும் ஒரு பெண்ணின் முகம் வந்து சென்றது. அந்தப் பெண் அவனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவராக இருந்தாள். அவளுக்காக எப்போதும் அவன் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்தான். அதை எல்லாம் நினைத்து பார்த்த அஸ்வினுக்கு இப்போது அவன் ஐஸ்வர்யாவின் கழுத்தில் சில நாட்களுக்கு முன் தாலி கட்டியதை நினைத்து பார்க்கும்போது ஒரே கடுப்பாக இருந்தது. அனைத்தும் இப்படி சென்று முடியும் என்று அவன் துளியும் எதிர்பார்த்து இருக்கவில்லை.
அதனால் அதீத மன விரக்தியில் இருந்த அஸ்வின் அவர்கள் வாங்கி வைத்திருந்த கல் தீர்ந்து விட்டதால் மீண்டும் வேலை ஆட்களை அழைத்து பக்கத்து ஊருக்கு சென்று சில காஸ்ட்லியான மது பாட்டில்களின் பெயரைச் சொல்லி அதை வாங்கி வரும்படி கட்டளையிட்டு சில 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய கட்டை கொடுத்து அனுப்பினான். தன் மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைக்க தன்னையே மறந்து போதையில் இருப்பதை தவிர அவனுக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை.
மெல்ல பூனை போல பதுங்கி பதுங்கி மொட்டை மாடிக்கு சென்ற மனிஷா மறைந்து இருந்து அவர்களுக்கு தெரியாமல் அங்கே நடப்பதை நோட்டமிட தொடங்கினாள். இன்று எப்படியாவது அஸ்வினை தன் வலையில் வீழ்த்தி விட வேண்டும் என்ற திட்டத்தில் இருந்த மனிஷா “சூப்பர் அம்மா பிளான் பண்ண மாதிரி அஸ்வின் மாமா நம்ம ரெடி பண்ண கல்லை மொத்தமா குடிச்சுட்டான். அதுவே அவனை ஒரு வழி பன்னீரும். இதுல எக்ஸ்ட்ரா வேற சரக்கு வேணும்னு கேட்டு வாங்கி அடிக்கிறான்.
இன்னைக்கு அவன் என் கிட்ட மாட்ட போறதை யார் நினைச்சாலும் இதுக்கு மேல தடுக்க முடியாது.” என்று நினைத்து சந்தோஷப்பட்டாள். அவனுடன் சேர்ந்து லோகேஷ், விவேக் இருவரும் பங்கு போட்டு குடிப்பதை பார்த்துவிட்டு “லோகா மாமாவும், இந்த விவேக்கும் வேற அஸ்வின் மாமா கூட சேர்ந்து குடிக்கிறாங்களே.. அப்ப அந்த மருந்து உங்களுக்கும் இன்னும் கொஞ்ச நேரத்துல வேலை செய்யுமே… அப்ப என்ன பண்றது?” என்று யோசிக்க தொடங்கினாள்.
பலத்த யோசனைக்கு பிறகு அவளுக்கு எந்த ஐடியாவும் கிடைக்காததால் இவர்களால் ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என நினைத்து பயந்த மனிஷா தனது ரூமிற்கு சென்று அவள் அம்மாவிற்கு கால் செய்து அவளை வரச் சொல்லி அதை பற்றி கேட்டாள்.
“யாரு டி இவ முட்டா சிறுக்கி… உன்னோட காரியத்துல கண்ணா இருந்து ஆக வேண்டிய வேலைய பாருடின்னு சொன்னா, அதை விட்டுட்டு அவனுகளுக்கு என்னாகும், அதை எப்படி சமாளிக்கிறதுன்னு தேவை இல்லாம எதுக்கு யோசிச்சிட்டு இருக்க? அவனுங்களுக்கு தேவைப்பட்டா அவனுங்களும் எவ கிட்டயாவது போகட்டும்.. அத பத்தி உனக்கு என்ன? அஸ்வின் கீழ வரும்போது ஏதாவது பேச்சு கொடுத்து நீயும் அவன் கூட அவன் ரூமுக்குள்ள போயிரு. இல்லனா அவன உன் ரூமுக்கு கூட்டிட்டு போயிடு. கண்டதை யோசிச்சுக்கிட்டு காரியத்துல கோட்டை விட்டுராத.” என்று தன் மகளுக்கு ஒரு அட்வைஸை போட்ட திலகா தனது ரூமிற்கு சென்று விட்டாள்.
அம்மா சொன்னதைப்போல அஸ்வினை நெருங்கும் என்னத்துடன் தனது ரூமில் தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு அமர்ந்து இருந்த மனிஷா கதவை திறந்து வைத்துக் கொண்டு “என் ரூமை கிராஸ் பண்ணி தானே அஸ்வின் மாமா அவன் ரூமுக்கு போக முடியும்.. அம்மா சொன்ன மாதிரி நடுவலையே அவனை மடக்கிடனும்.” என்று நினைத்து வழி மீது விழி வைத்து காத்திருந்தாள்.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஒரு வழியாக குடித்து ஓய்ந்த அஸ்வினும் மற்றவர்களும் அப்படியே மொட்டை மாடியில் மல்லாந்து படுத்தார்கள். அவர்களை அங்கே தூங்க விடாமல் திடீரென்று மழை பெய்ய தொடங்கியதால் போதையில் தள்ளாடியபடி மூவரும் மெல்ல படிகளில் இறங்கி கீழே வர தொடங்கினார்கள்.
சில நொடிகளிலேயே மழை வெளுத்து வாங்க தொடங்கி விட்டதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கிராமத்தில் உள்ள அந்த பண்ணை வீட்டில் அடிக்கடி அவர்கள் தங்க போவது இல்லை என்பதால் அஸ்வினின் குடும்பத்தினர்கள் இன்வெர்ட்டர் வசதி எல்லாம் செய்து வைக்கவில்லை. அதனால் அந்த இடம் ஒரே இருட்டாக இருந்தது.
“மச்சான் அஸ்வினு.. திடீர்னு எனக்கு என்னென்னமோ பண்ணுது டா. மைண்டுக்குள்ள கில்மாவா கண்டதெல்லாம் தோணுது டா! ஒருவேளை மூச்சு முட்ட சரக்கடிச்சதுனால இப்படி எல்லாம் இருக்குதோ?” என்று போதை ஏறிய குரலில் விவேக் கேட்க, “கரெக்ட்டு மச்சான்… எனக்கும் அப்படி தான் ஒரே கேரா இருக்குது டா.. இதுவரைக்கும் நான் எத்தனையோ சரக்கு அடிச்சிருக்கேன். ஆனா எதுவும் இந்த அளவுக்கு கிக்கா இருந்ததே இல்ல. இன்னைக்கு என்னமோ மனசுக்குள்ள ஒரே மஜாவா இருக்கு.” என்று போதையில் லோகேஷும் உளறினால்.
“டேய் இருட்டுல எவன் டா என் கால மிதிக்கிறது? முதல்ல ஒழுங்கா நடந்து வாங்க டா.” என்ற அஸ்வின் தனக்கு அருகில் இருந்த அவர்கள் இருவரையும் பிடித்து ஒரு பக்கம் தள்ளிவிட்டு அவன் பாட்டிற்கு இருட்டில் எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் ஒரு பக்கம் சுவற்றைப் பிடித்து தடவியபடி நடந்து சென்றான்.
அது நள்ளிரவு நேரம் என்பதால் அனைவரும் நல்ல தூக்கத்தில் இருந்ததால், யாரும் அவர்கள் மூவரை கவனிக்கவில்லை. தனது ரூமில் இருந்த மனிஷா “அச்சச்சோ.. இந்த நேரம் பாத்து கரண்ட் போயிடுச்சே! இப்ப நான் என்ன பண்றது? பேசாம மொபைல் பிளாஷ் லைட்டை ஆன் பண்ணி நம்மளே போய் அஸ்வின் மாமாவை கூட்டிகிட்டு இங்க வந்துடலாமா?
ஆனா சுத்தி இருட்டா
இருக்கிறதுனால நம்ம அப்படி பண்றத யாராவது பாத்துட்டாங்கனா, அஸ்வின் மாமா தானா நம்ம ரூமுக்கு வரல. நம்ம பிளான் பண்ணி வேணும்னு அவனை உள்ள வர வச்சி இருக்கோம்னு நம்மள தப்பா நினைச்சுப்பாங்களே! இப்ப என்ன பண்றது?” என்று யோசித்தபடி தனது ரூம் வாசலில் நின்று லேசாக தன் தலையை வெளியில் நீட்டி எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
சுத்தி இருட்டாக இருந்ததால் அவளுக்கு எதுவும் தெரியவில்லை. இருப்பினும் அஸ்வினை எதிர்பார்த்து அவள் காத்திருக்க, யாரோ ஒருவன் தள்ளாடியபடி அவளது ரூமிற்குள் நுழைந்தான். சில நொடிகளுக்கு முன்பு தான் அவளுக்கு அஸ்வினின் குரல் கேட்டதால் வந்திருப்பது அஸ்வினாக தான் இருக்கும் என்று முடிவே செய்துவிட்ட மனிஷா மெல்ல நகர்ந்து சென்று டோரை லாக் செய்தாள்.
பின் அவள் தன் அறைக்குள் இருந்தவனின் அருகில் செல்ல, அவன் மீது இருந்து வந்த பழக்கப்பட்ட perfume வாசனை சந்தேகத்திற்கு இடம் இன்றி வந்திருப்பது அஸ்வின் தான் என்று அவளை நம்ப வைத்தது. அதனால் அவள் “ஐ லவ் யூ மாமா!” என்றபடி சென்று உரிமையுடன் அவனை அணைத்துக் கொண்டாள்.
அவனுக்கும் அவளது குரல் பழக்கப்பட்டதாக தான் இருந்தது. இப்போது அவன் உடலுக்குள் சென்றிருந்த ஆல்கஹால் அதனுடன் திலகா செய்த வேலையால் இணைந்த போதை மருந்தின் விளைவு என்றதாலும் அவளுடைய அணைப்பினாலும் தூண்டப்பட்டு தன் தலை முதல் கால் வரை சூடாகிப் போய் ஒரு பெண்ணின் அருகாமைக்காக தவித்துக் கொண்டு இருந்த அவனும் பதிலுக்கு அவளை உரிமையாக அணைத்துக் கொண்டான்.
அதை உணர்ந்து பேரானந்தத்தில் துள்ளி குதித்த மனிஷா அஸ்வின் தனது வழிக்கு வந்துவிட்டான். இனி ஒரு நொடி கூட தாமதிக்க கூடாது என நினைத்து மெல்ல அவனை நகர்த்தியவாறு தட்டு தடுமாறி அவனுடன் சேர்ந்து கட்டிலில் விழுந்தாள். அங்கே இருட்டாக இருந்ததால் அவர்கள் இருவருக்கும் தன்னுடன் இருப்பவர் யார் என்று தெரியவில்லை. அதனால் தான் அஸ்வின் , தன்னுடன் இப்போது இருப்பதாக அவளும் . ஒரு பெண் என்று மட்டும் அவனுக்கு ஒரு உணர்வு தோன்ற, காமத் தீயில் வெந்து கொண்டு இருந்த அவனது உடலுக்கு அதை தாண்டி இப்போது வேறு எதுவும் முக்கியமாக தெரியவில்லை. அதனால் அவன் தன் கண்களுக்கு தெரியாத அவளத மிருதுவான உடலை தனது கைகளால் அளவெடுக்க தொடங்கினான்.
முத்தங்கள் தொடரும்