Home மூர்கனின் முரட்டு முத்தங்கள்மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 16

மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 16

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 16

முதலில் இருந்தே அஸ்வின் தன்னை ஐஸ்வர்யாவின் அருகில் நெருங்க விடாததால் அவனிடம் பர்மிஷன் எல்லாம் கேட்டுக் கொண்டு நிற்க கூடாது என நினைத்த பாலா அவனை தாண்டி கொண்டு உள்ளே சென்று ஐஸ்வர்யாவை கண்டான். அவளை அப்படி பாதி உசுராக பார்க்கவே அவன் மனம் வலித்தது. அஸ்வின் ஏதோ பிரம்மை பிடித்தவனை போல ஐஸ்வர்யாவை பார்த்தபடி நிற்க, அவனைக் கடந்து ஐஸ்வர்யாவின் அருகில் சென்ற பாலா வாஞ்சையுடன் அவளை பார்த்துவிட்டு அங்கே இருந்த நர்ஸுடம் “இவங்களுக்கு எப்ப கான்ஷியஸ் வரும்?” என்று விசாரித்தான். 

“ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு சார். இவங்க ரொம்ப வீக்கா இருக்குறதுனால இன்னும் சில மெடிசின்ஸ் எல்லாம் இவங்களுக்கு கான்ஷியஸ் வந்ததுக்கு அப்புறமா குடுத்துக்கலாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அதனால எப்படியும் இவங்களுக்கு மயக்கம் தெளியறதுக்கு ரெண்டு மூணு மணி நேரம் ஆகும். நீங்க வெளிய போய் வெயிட் பண்ணுங்க. இவங்களுக்கு கான்ஷியஸ் வந்தவுடனே நாங்களே இன்ஃபார்ம் பண்றோம்.” என்று நர்ஸ் சொல்ல, அஸ்வினை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான் பாலா. 

அஸ்வினின் நடவடிக்கைகளை வைத்தே அவனுக்கு ஐஸ்வர்யாவின் மீது ஒரு இனம் புரியாத அன்பு இருக்கிறது என்று பாலாவால் உணர முடிந்தது. உண்மையாகவே இவனும் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்களா? என அவன் தெரிந்துகொள்ள வேண்டி இருந்ததால் அஸ்வினை அழைத்து சென்று வெயிட்டிங் ஏரியாவில் அமர்ந்த பாலா “அஸ்வின்.. நான் உன் கிட்ட கொஞ்சம் பேசலாமா? யாரோ ஒருத்தங்க உனக்கு துரோகம் பண்ணிட்டாங்கன்னு நீ இவ்ளோ இறுக்கமா இருக்கணும்னு அவசியம் இல்ல அஸ்வின். 

நம்ம எல்லாரும் ஒரே ஃபேமிலி. உனக்கு ஒரு கஷ்டம்னா அது எங்களுக்கும் தான்.  ப்ளீஸ் எதுவா இருந்தாலும் நீ மனசு விட்டு என் கிட்ட பேசு. சுச்சுவேஷன் இன்னும் worse-ஆனா கூட உனக்கு சப்போர்ட்டிவா நாங்க எல்லாரும் கூடவே இருப்போம். நீ நெஜமாவே ஐஸ்வர்யாவ லவ் பண்றியா? அதனால‌ தான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டியா? 

நீ நடந்துக்கிறதை பார்த்தா அப்படி தான் தெரியுது. அவளுக்கு இப்படி ஆனதை உன்னால தாங்க முடியல தானே! எங்க அம்மா ஐஸ்வர்யா மேலையும் அவளோட குடும்பத்து மேலையும் கோபமா இருக்குற மாதிரி உன்னால இருக்க முடியல தானே!” என்ன மெல்லிய குரலில் கேட்டான். 

அவன் பேச பேச அஸ்வினின் கோபம் அதன்‌ எல்லையை கடந்து கொண்டு இருக்க, விருட்டென்று எழுந்து நின்ற அஸ்வின் ‌“நான் சொன்னனா? அப்படியே எனக்கு அவ மேல லவ் பொங்குது. அவ இல்லாமல் என்னால வாழ முடியாது. அவ குடும்பத்துல இருக்கிறவங்க எனக்கு எவ்வளவு பெரிய துரோகம் பண்ணாலும், அதனால என்ன பெத்தவங்க செத்தே போனாலும், என் ஃபேமிலி ஒன்னும் இல்லாம ஆனாலும் கூட, நான் அவளை லவ் பண்ணுவேன்னு உன் கிட்ட சொன்னனா?” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு பாலாவின் சட்டையை பிடித்து கேட்டான். 

அவன் கையை எடுத்துவிட்ட பாலா “அதான் உனக்கு அவளை பிடிக்கலையே.. அவளும் அவ குடும்பத்துல இருக்குறவங்க கூட சேர்ந்துகிட்டு தான் உனக்கு துரோகம் பண்ணி இருப்பான்னு நீ நம்புறேனா.. அப்புறம் எதுக்கு டா அவளை கல்யாணம் பண்ணிக்கிட்ட? அவ ஃபேமிலில இருக்கிறவங்களை காணோம்ன்னு வேற சொல்றாங்க. இங்க என்ன தான் நடக்குது?” என்று தன் குரலை உயர்த்தி கேட்க, “ம்ம்.‌.. அவளை பழிவாங்க.” என்று ஒற்றை வரியில் பதில் சொன்ன அஸ்வின் ஒரு ஓரமாக சென்று வித்யாவிற்கு கால் செய்தான். 

தனது வீட்டில் இருந்த வித்யா ‌ அஸ்வின் வீட்டில் தங்கி இருக்கும் விவேக்குடன் ரொமான்டிக்காக  அரைகுறை ஆடையில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தாள். இப்படி அவர்கள் இருவரும் தங்களது உலகில் பிஸியாக இருந்ததால், ஐஸ்வர்யாவிற்கு நடந்தது பற்றி இப்போது வரையிலும் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. 

“ஏய் அஸ்வின் கால் பண்றான். நீவை நான் உன் கிட்ட அப்புறமா பேசறேன்.” என்ற வித்யா விவேக்கின் காலை துண்டிக்க முயல, “ச்ச்.. அவன் இப்ப எதுக்கு டி உனக்கு கால் பண்றான்? நானே இப்ப அவன் வீட்ல தான் இருக்கேன். ஏதாவது வேணும்னா அவன் என்ன கேட்க வேண்டியது தானே.. நீ அவன் காலை எடுக்காத. சாப்பிடறதுக்கு கீழ போவேன். அப்ப நானே அவன் கிட்ட என்ன எதுன்னு கேட்டுக்குறேன். 

நான் இப்ப வேற மூட்ல இருக்கேன் டி. நீ இப்படி என்னை பாதியில விட்டுட்டுகாட்டுறேன்னு காட்டுறேன்னு சொன்னியே.. அது எப்ப காட்டுவ? நான் அதுக்கு தான் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.‌ ப்ளீஸ் பேபி சீக்கிரம்! ம்ம்.‌.!!” என்று ஒரு கிரகத்துடன் சொன்னான் விவேக். 

“டேய் இடியட்.. அங்க என்ன சிச்சுவேஷன்னு தெரியும்ல..  ஏதோ எமர்ஜென்சின்னு நினைக்கிறேன். அஸ்வின் விடாம எனக்கு கால் பண்ணிக்கிட்டே இருக்கான். நான் முதல்ல அவன் கிட்ட என்னன்னு கேட்கிறேன்.” என்று வித்யா விவேக்கிடம் சொல்லிக் கொண்டிருக்க, “இந்த நேரத்துல நான் இத்தனை தடவை கால் பண்ணியும் அதை அட்டென்ட் பண்ணாம இவ யார் கிட்ட பேசிட்டு இருக்கா? இந்த விவேக்கா தான் இருக்கும். அந்த அறிவு கெட்டவனுக்கு ரொமான்ஸ் பண்றதுக்கு வேற டைமே கிடைக்கலையா? நைட் ஆன போதும் இந்த லவர் தொல்லை தாங்க முடியல.” என்று நினைத்த அஸ்வின் வித்யாவை விட்டுவிட்டு இப்போது விவேக்கிற்க்கு கால் செய்தான். 

“என்ன இவன் இப்ப நம்ம லைனுக்கு வர்றான்!” என்று நினைத்த விவேக் “ஓகே ஓகே நீ வை, அஸ்வின் இப்ப எனக்கு கால் பண்றான். நான் என்னன்னு கேட்கிறேன்.” என்று சொல்லிவிட்டு வித்யாவின் அழைப்பை துண்டித்து விட்டு அஸ்வினுக்கு “என்ன மச்சான்?” என்று சாதாரணமாக கேட்டான்.

“ம்ம்.‌.. மயிறு.. ###தா.. கால் பண்ணா எடுக்க மாட்டியா டா? இவ்ளோ நேரம் நீ வித்யா கிட்ட தானே கடலை போட்டுட்டு இருந்த.. அவ இப்ப ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்கா. ஒழுங்கா வித்யாவுக்கு கால் பண்ணி அவளை நான் சொல்ற ஹாஸ்பிடலுக்கு வந்து அவளை பார்த்துக்க சொல்லு.” என்று அதட்டலாக அஸ்வின் சொல்ல, “எவ டா.. யார் இப்ப ஹாஸ்பிடல் அட்மிட் ஆயிருக்காங்க?” என்று கன்பியூஸ் ஆகி கேட்டான் விவேக். 

“ச்ச்.. அதாண்டா அவ.‌.. ஐஸ்வர்யாவுக்கு தான் உடம்பு சரியில்ல. உனக்கு சும்மா எல்லாத்தையும் என்னால எக்ஸ்பிளைன் பண்ணிட்டு இருக்க முடியாது.. மரியாதையா வித்யாவை கூட்டிட்டு வந்து இங்க ஹாஸ்பிடல்ல விடு. நீங்க வந்ததுக்கப்புறம் தான் நான் இங்க இருந்து கிளம்ப முடியும். நான் சொல்றது உனக்கு புரியுதா இல்லையா?”  என்று பொறுமை இல்லாமல் கேட்டான் அஸ்வின். 

அப்போதும் வரேன் என்று சொல்லாமல் ஐஸ்வர்யாவிற்கு என்ன ஆனது என்று விவேக் அவனிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்ததால் கடுப்பான அஸ்வின் அவனது அழைப்பை துண்டித்து விட்டு இறுக்கமான முகத்துடன் சென்று வெயிட்டிங் ஏரியாவில் உள்ள சேரில் அமர்ந்தான். 

ஐஸ்வர்யாவின் உண்மையான குணத்தை புரிந்து கொள்ளாமல் இப்படி அவளை திருமணம் செய்து அவளுக்கு அநியாயம் செய்து கொண்டிருக்கிறானே அஸ்வின் இவனை என்ன செய்து திருத்துவது? என்று புரியாமல் யோசனையுடன் அவன் அருகில் சென்று பாலா அமர, அவனை கவனித்த அஸ்வின் “உனக்கு என்‌ கிட்ட ஏதாவது கேட்கணும்னு தோணுச்சுன்னா, தயவு செஞ்சு கேட்காத. அதுக்கு எல்லாம் ஆன்சர் பண்ற மூட்ல நான் இல்ல.” என்றான். 

“அஸ்வின் இப்ப ரொம்ப மாறிட்டான். அதை அப்படி சொல்றதை விட நடந்த எல்லாம் சேர்ந்து அவனை மொத்தமா மாத்திடுச்சு. எப்படியாவது அஸ்வின் கிட்ட இருந்து ஐஸ்வர்யாவை காப்பாத்தணும். இல்லனா அவன் மனச மாத்தணும்.” என்று தனக்குள் யோசித்துக் கொண்டிருந்த பாலா அஸ்வினை டிஸ்டர்ப் செய்யாமல் அங்கேயே அமைதியாக அமர்ந்திருந்தான். 

சில நிமிடங்களுக்கு பிறகு வித்யாவுடன் அங்கே விவேக் வர,  வித்யாவிடம் ஐஸ்வர்யாவை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு விவேக்கை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான் அஸ்வின். அங்கே பாலா மட்டும் இன்னும் இருக்க, “நீ வீட்டுக்கு போகலையா? அதான் ஐஸ்வர்யா கூட நான் இங்க இருக்கேனே.. நான் அவளை பார்த்துக்கிறேன் நீ கிளம்பு.” என்றாள் வித்யா. 

ஐஸ்வர்யா அட்மிட் ஆகி இருக்கும் அறையை ஒருமுறை திரும்பி பார்த்த பாலா “என்னால அவளை தனியா விட்டுட்டு போக முடியாது.” என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்ல, “நீ அவளை லவ் பண்றியா?” என்று சந்தேகமாக கேட்டாள் வித்யா. அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் ஒரு புன்னகையை மட்டுமே பரிசாக கொடுத்தான் பாலா. 

அஸ்வின் விவேக்குடன் வீட்டிற்குள் நுழைய, அவன் எப்போது வருவான் என்று வாசலை பார்த்தபடி மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்து காத்திருந்தார்கள். அதை பார்த்தும் பார்க்காதவனை போல தலையை கீழே குனிந்து கொண்ட அஸ்வின் “டேய் எல்லாரும் ஒன்னு கூடி நம்ம கிட்ட என்கொயரி பண்றதுக்கு ரெடியா இருக்காங்க. சிக்கிட்டா… விடிய விடிய பேசியே கொல்லுவாங்க. நாளைக்கு நமக்கு நிறைய இம்பார்டன்ட் ஒர்க் இருக்கு. வா அப்படியே சைலண்டா போய் நம்ம ரூம்ல செட்டில் ஆயிரலாம்.” என்று விவேக்கிடம் கிசுகிசுத்தபடி அப்படியே அவனுடன் லிஃப்டை நோக்கி நடக்க தொடங்கினான். 

அவர்கள் நடந்து செல்வதை பார்த்தபடி மற்றவர்கள் அமைதியாக இருக்க, அவனது சித்தப்பா வாசுதேவன் மட்டும் ‌“எப்ப அவள டிவர்ஸ் பண்ண போற?” என்று கேட்டார். அமைதியாக இருந்த அந்த இடத்தில் அவரது குரல் நாலா பக்கமும் எதிரொலித்தது. விவேக் அஸ்வின் இருவரும் ஷாக் ஆகி வாசுதேவனை திரும்பி பார்க்க, ” என்ன மாமா அப்படி பாக்குற? அத்தையையும் மாமாவையும் இன்னிக்கு நம்ம இழந்துட்டு நிக்கிறதுக்கு அவங்க குடும்பம் தானே காரணம்.. நீ எதுக்காக அந்த ஐஸ்வர்யாவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு எங்களுக்கு தெரியாது. ஆனா அவ இந்த வீட்ல உன் கூட வாழ்றதுல எங்களுக்கு சுத்தமா விருப்பம் இல்ல. அதனால எவ்ளோ சீக்கிரம் முடியுமோ நீ அவ்வளவு சீக்கிரம் அவள டிவர்ஸ் பண்ணனும்னு நாங்க எல்லாரும் சேர்ந்து டிசைட் பண்ணி இருக்கோம்.” என்றாள் மனிஷா. 

“நான் தான் ஆல்ரெடி என் விஷயத்துல யாரும் தலையிடக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல.. நான் என்ன பண்றேன்னு எனக்கு தெரியும். நீங்க இத பத்தி பேசாம இருக்கறது தான் எல்லாருக்கும் நல்லது.” என்று அஸ்வின் திமிராக சொல்ல, “அப்படியெல்லாம் நீ சொல்ல முடியாது அஸ்வின்.” என்று வாசுதேவனும் பதிலுக்கு தன் குரலை உயர்த்தி சொன்னார். 

– முத்தங்கள் தொடரும் 

You may also like

Leave a Comment

About Me

Featured