அத்தியாயம் 15
அஸ்வின் ஐஸ்வர்யாவை தூக்கி தனது தோள்களில் போட்டுக் கொண்டு வாசலை நோக்கி நடக்க தொடங்கினான். “அஸ்வின்.. இரு நானும் வரேன்.” என்ற பாலா அவனைப் பின் தொடர்ந்து கார் பார்க்கிங் வரையிலும் சென்றான். தனது கார்க் கதவை ஓப்பன் செய்த அஸ்வின் ஐஸ்வர்யாவை பின் சீட்டில் படுக்க வைத்துவிட்டு முன் சீட்டில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்ய சென்றான்.
அவசரமாக கார்க் கதவை திறந்த பாலா “நானும் உன் கூட வரேண்டா. அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம என்னால இங்க நிம்மதியா இருக்க முடியாது. ஐசுவுக்கு பல்ஸ் வேற குறைச்சுக்கிட்டே இருக்கு. எனக்கு பயமா இருக்கு.” என்று பதட்டத்துடன் சொல்ல, தன்னையும் மீறி இன்னொருவன் தனது மனைவியின் மீது அக்கறை காட்டுவது அஸ்வினுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அதனால் அந்த எமர்ஜென்சி சுச்சுவேஷனிலும் கூட “என் பொண்டாட்டிய எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும். நீ போய் உன் வேலைய பாரு.” என்று விட்டு அவன் முகத்தில் அறைவதைப் போல வேகமாக கார்க கதவை இழுத்து சாத்திவிட்டு அசுரவேகத்தில் தன் காரில் ஹாஸ்பிடல்லை நோக்கி பறந்தான் அஸ்வின்.
“இவன் எதுக்கு நம்ம கிட்ட இப்படி பேசுறான்? ஐஸ்வர்யாவோட குடும்பமே சேர்ந்து இவனுக்கு துரோகம் பண்ணி இருக்காங்க. கண்டிப்பா அதுக்கும் என் ஐசுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காதுன்னு நான் நம்புறேன். அதே நம்பிக்கை அஸ்வினுக்கு இவ மேல இருக்கா? அப்படி இருந்திருந்தா இவ்ளோ நேரம் அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம இவன் ஏன் அவளை கண்டுக்காம இருக்கணும்?
உனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நடுவுல இப்ப என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியல அஸ்வின். பட் எது எப்படி இருந்தாலும், அவளுக்காக எப்பையும் நான் இருப்பேன். நீ மட்டும் இல்ல, வேற யார் அவளை கஷ்டப்படுத்தணும்னு நினைச்சாலும் நான் விட மாட்டேன்.” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்ட பாலா அவனது ஜிப்பை எடுத்துக் கொண்டு அஸ்வினின் காரை பின் தொடர்ந்து சென்றான்.
“என்ன மா நடக்குது இங்க? அந்த அஸ்வின் தான் நம்ம இங்க இருக்கிறதை கூட கண்டுக்காம ஐஸ்வர்யாவை தூக்கிட்டு அப்படியே பறந்து ஓடுறான்னு பார்த்தா.. நம்ம பாலாவுக்கு என்ன? இவனும் போட்டி போட்டுட்டு அவளுக்காக அவன் பின்னாடி ஓடிட்டு இருக்கான்!
அஸ்வின் மாமா பிசினஸ்ல இருக்குற பிரச்சனையை எல்லாம் கொஞ்சம் சரி பண்ணட்டும். நம்ப முன்னாடி போய் நின்னு அவனை டென்ஷன் பண்ணிக்கிட்டு இருக்க வேண்டாம்ன்னு தானே நம்ம ஒரு ரெண்டு நாள் இங்கே வராம இருந்தோம்.. அதுக்குள்ள எல்லாமே டோட்டலா மாறிப் போயிருச்சு! எனக்கு அஸ்வின் மாமா ஐஸ்வர்யா பின்னாடி சுத்துறத பார்த்தாலே பத்திகிட்டு வருது.” என்று கோபமாக மனிஷா சொல்லிக் கொண்டிருக்க,
“உனக்கு எல்லாம் அறிவு இருக்கா இல்லையா? அந்த பொண்ணுக்கு உடம்பு சரியில்ல. அதான் அவங்க ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறாங்க. இதுல நீ என்ன குத்தத்த கண்டுபிடிச்ச? அந்த பொண்ணு கழுத்துல தாலி இருந்துச்சு. அதைப் பாத்தியா இல்லையா?
நமக்கு வந்த நியூஸ் உண்மை தான். நம்ம அஸ்வினுக்கும் அந்த பொண்ணு ஐஸ்வர்யாவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. இப்ப அவங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி. அவன் பொண்டாட்டிக்கு ஏதாவது ஒன்னுனா அவன் தானே பாக்கணும்.. நீ எதுக்கு நடுவுல வந்து ஆடிகிட்டு இருக்க?
கூடிய சீக்கிரம் நான் உனக்கு ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ற ஐடியா தான் இருக்கேன். அதுவரைக்கும் அமைதியா இருக்கிற இடம் தெரியாமல் இருந்துக்கோ மனி. அது தான் உனக்கு நல்லது.” என்று மனோகரன் தன் மகளை அதட்டினார்.
“அவளோட குடும்பத்தில இருக்கிறவங்க மொத்தமா எல்லாரும் சேர்ந்து எங்க அண்ணன் குடும்பத்தையே சாகடிச்சுப்புட்டாங்க. எங்க அண்ணன் மவ அக்ஷயா இன்னும் அரை உசுரா ஹாஸ்பிடல்ல போராடிகிட்டு இருக்கா. நான் தூக்கி வளர்த்த பிள்ளைங்க ரெண்டும் இப்படி பாடாப்படுதுங்களேன்னு நான் மனசு தாங்காம இங்க கதறிக்கிட்டு இருக்கேன்.
உங்களுக்கு அந்த கழுத்தறுத்தவங்க குடும்பத்துல பிறந்தவ தான் ரெம்ப முக்கியமா தெரியுறாளா? என்ன மனுஷன் நீங்க? இப்ப என் பொண்ணு கேட்டதுல என்ன தப்புங்குறேன்? கண்டவளுக்காக நம்ம மனிஷாவை நீங்க திட்டுவீங்களா? அப்புறம் இந்த கல்யாண பேச்செல்லாம் அதுக்குள்ள எங்க இருந்து வந்துச்சு?
என்ன நடந்தாலும் சரி. எப்படியாச்சும் என் பொண்ணை எங்க அண்ணன் மவனுக்கு தான் நான் கட்டி வப்பேன். தூக்கி வளர்த்த அத்தை பேச்சை அஸ்வின் கேட்காம போயிடுறானானு நானும் பார்க்கிறேன். அவனுக்கு நாங்க முக்கியமா, இல்ல அந்த ஏமாத்துக்கார பொண்ணு முக்கியமான்னு அவனை சொல்லட்டும்.” என்று திலகவதி தன் பங்கிற்கு பேச தொடங்கி விட்டாள்.
இப்படி லிவிங் ஏரியாவில் ஒரே சலசலப்பாக இருந்ததால் அஸ்வினின் சித்தப்பா வாசுதேவன் அவரது மனைவி இந்திராணி மகள் அணு மற்றும் மகன் லோகேஷ் என அனைவரும் அங்கு என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக வந்து சேர்ந்தார்கள்.
திலகா அஸ்வின் அஸ்வின் என்று சொல்லி கத்திக் கொண்டிருந்ததால் “என்னாச்சி மா திலகா? இப்ப அஸ்வினுக்கு என்ன? அவன் பேர சொல்லி எதுக்கு எழம் விட்டுட்டு இருக்க?” என்று வாசுதேவன் கேட்க, “வாங்க சின்ன அண்ணா… வந்து நீங்களே இது எல்லாம் நியாயமான்னு கேளுங்க. நம்ம அஸ்வின் இந்த உலகத்தில் அவன கட்டிக்கிறதுக்கு என்னமோ பொண்ணே கிடைக்காத மாதிரி அந்த பாலா போல குடும்பத்துல பொருந்த ஐஸ்வர்யாவை கல்யாணமே பண்ணிக்கிட்டானாம்!
நம்ம அண்ணன், அண்ணி ரெண்டு பேரும் செத்துப்போய் இன்னும் அவங்களுக்கு சடங்கு பண்ணி அவங்கள முறைப்படி சொர்க்கத்துக்கு கூட அனுப்பி வைக்கல. பெத்தவங்களுக்கு கொள்ளி கூட வைக்காம இந்த குடும்பத்தை அழிச்சவங்க வீட்ல பொறந்தவளுக்கு அஸ்வின் அவன் கையால தாலி கட்டி இருக்கான். இது எல்லாம் நியாயமா நீங்களே சொல்லுங்க? நம்ம அண்ணனும், அண்ணியும் மேல இருந்து இதையெல்லாம் பார்த்துட்டு தான் இருப்பாங்க.. அவங்க ஆத்மா அஸ்வின் இப்படி பண்றதெல்லாம் பார்க்கும்போது எவ்வளவு வருத்தப்படும்? நான் சொன்னா அதை இங்க யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க.” என்ற திலகா ஒப்பாரி வைக்க தொடங்கினாள்.
அங்கே விடாமல் மழை கொட்டிக் கொண்டிருந்த போதிலும் சாலைகளில் வெள்ளம் போல மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல ஓடுவதை எல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் மின்னல் வேகத்தில் காரில் சென்று கொண்டிருந்த அஸ்வின் அருகில் இருந்த ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் அவசர சிகிச்சை பிரிவில் ஐஸ்வர்யாவை அட்மிட் செய்தான்.
அவளது பல்ஸ் கவுண்ட் ட்ராப் ஆகிக் கொண்டே இருந்ததால், கொஞ்சம் கொஞ்சமாக இந்த உலகை விட்டு சென்று கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா. அவளை மீண்டும் இந்த உலகிற்கு மீட்டுக் கொண்டு வர மருத்துவர்கள் அவள் முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க்கை மாற்றிவிட்டு தங்களது ட்ரீட்மென்டை ஸ்டார்ட் செய்து இருந்தார்கள்.
அவள் இருந்த ரூமிற்கு வெளியே உயிரை தன் கையில் பிடித்துக் கொண்டு இதயம் படபடக்க சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்த அஸ்வின் “நீயும் என்னை தனியா தவிக்க விட்டுட்டு போயிடாத டி.” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அவன் தன் கண்களை இறுக்கமாக மூடி அவனது தலையை சுவற்றில் லேசாக தட்டிக் கொண்டிருக்க, அவனுக்குள் இருக்கும் பாரம் தாங்காமல் அவன் கண்கள் கண்ணீரை சிந்தியது.
கடந்த ஒரு வாரத்தில் அவனது வாழ்க்கை இப்படி தலைகீழாக மாறிவிடும் என அவன் கனவிலும் கூட நினைக்கவில்லை. “ஏன்.. ஏன்.. ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கணும்?” என்ற ஒற்றை கேள்வி மட்டும் தான் அவன் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டிருந்தது.
எப்படியோ அவன் காரை பின் தொடர்ந்து அந்த ஹாஸ்பிடலிற்க்குள் நுழைந்த பாலா ரிசப்ஷனில் விசாரித்துவிட்டு ஐஸ்வர்யா இருக்கும் அறையை கண்டுபிடித்து வந்தான். அங்கே அஸ்வின் சோகமே உருவாக உடைந்த இதயத்துடன் ஏதோ தனித்து விடப்பட்டவனை போல பாவமாக நிற்க, அவனைப் பார்க்க பாலாவிற்கு கஷ்டமாக இருந்தது.
வேகமாக அவன் அருகில் சென்று அவனது தோள்களில் கை வைத்த பாலா “ஐசுக்கு என்ன டா ஆச்சு? ஏன் நீ இப்படி நின்னுட்டு இருக்க? டாக்டர் அவளை செக் பண்ணிட்டு ஏதாவது சொன்னாங்களா?” என்று பதட்டத்துடன் கேட்டான். மீண்டும் மீண்டும் தனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நடுவில் பாலா வருவது அஸ்வினுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அவள் மீது அன்பு காட்டுவதாக இருந்தாலும், அவளை வதைப்பது என எதுவாக இருந்தாலும் சரி அதை அவன் மட்டுமே செய்ய வேண்டும் என்ற எண்ணம் அஸ்வினுக்கு. அதனால் பாலாவை பார்த்தவுடன் உள்ளுக்குள் இருந்த சோகத்தை மறந்து விரைப்பாக நின்று கொண்ட அஸ்வின் “இப்ப நீ எதுக்கு இங்க வந்த ? நான் தான் அவளை நான் பார்த்துக்கிறேன். நீ வராதன்னு சொன்னேன்ல இல்ல!” என தன் பற்களை கடித்துக் கொண்டு கேட்டான்.
“ஏன் நான் வரக் கூடாதா? என்னமோ யாரோ ஒரு தேர்ட் பர்சன் கிட்ட பேசுற மாதிரி நீ பேசிட்டு இருக்க அஸ்வின். நீ சொல்ற மாதிரி ஐஸ்வர்யா உனக்கு பொண்டாட்டியாகவே இருக்கட்டும். உனக்கு தான் எல்லா உரிமையும் இருக்குன்னு கூட வச்சுக்கலாம். ஆனா நானும் அவ கூட ஃபிரிண்ட்டா பழகிருக்கேன் தானே.. அவ இப்படி உயிருக்கு போராடிட்டு இருக்கும்போது என்னால எப்படி அங்க நிம்மதியா இருக்க முடியும்? அவளுக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு எனக்கு மட்டும் பயமா இருக்காதா?” என்று பாலா கேட்க, அவனது நியாயமான கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிருவென்று விழித்த அஸ்வின் தன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு வழக்கம் போல தனது கோபத்தை கேடயமாக பயன்படுத்தி பாலாவை புறக்கணித்தான்.
அரை மணி நேரத்திற்கு பிறகு அவளது அறையில் இருந்து வெளியில் வந்த டாக்டர் “இப்ப அவங்க நார்மலா தான் இருக்காங்க. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல. நீங்க பயப்படாதீங்க. ரொம்ப நேரமா மழையில நினைச்சிட்டு இருந்திருப்பாங்க நினைக்கிறேன். அதான் அவங்களுக்கு இப்படி ஆயிருக்கு. ஆல்ரெடி ரொம்ப வீக்கா இருந்திருக்காங்க.
இனிமே தான் நீங்க அவங்கள பத்திரமா பாத்துக்கணும். அவங்களுக்கு காய்ச்சல் அதிகமா இருக்கு. குறையறதுக்கு நாங்க ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கோம். நீங்க தானே அவங்களோட ஹஸ்பண்ட்.. பக்கத்துல இருந்து அவங்கள நல்லா பாத்துக்கோங்க. அவங்களுக்கு ஃபீவர் குறைஞ்சிடுச்சுன்னா, நீங்க அவங்களை டிஸ்டாச் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்.” என்று அஸ்வினிடம் சொல்லிவிட்டு சென்றார்.
டாக்டர் சென்ற பிறகு கதவை திறந்து கொண்டு ஐஸ்வர்யாவை காண உள்ளே சென்றான் அஸ்வின். அங்கே ஆக்சிஜன் மாட்டிக் கொண்டு கைகளில் குளுக்கோஸ் டிரிப்ஸ் ஏறிய நிலையில் வெளிரிய முகத்துடன் அவளது உடம்பில் உள்ள சக்தி எல்லாம் பறி போன நிலையில் வாடிய மலராய் கிடந்தாள் அவள்.
வலி நிறைந்த கண்களுடன் அவளை பார்த்த அஸ்வின் மெல்ல நடந்து அவள் அருகில் சென்றான்.
– முத்தங்கள் தொடரும்