Home மூர்கனின் முரட்டு முத்தங்கள்மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 14

மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 14

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 14

ஐஸ்வர்யா வெகு நேரமாக யார் கண்ணிலும் படாமல் இருந்ததால் அவளை தேடிக் கொண்டு இருந்தான் அஸ்வின். அவன் சென்று அனைத்து கெஸ்ட் ரூம்களிலும் பார்க்க, எங்கேயும் ஐஸ்வர்யா இல்லை. “ச்சே… இந்த பைத்தியக்காரி எங்க போய் தொலைஞ்சா? என்னை டென்ஷன் பண்றதுக்கு வேணும்னே அவ இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்காளா? நிஜமாவே அவள காணோமா, இல்லை அவ என்னோட டார்ச்சரை தாங்க முடியாம யாருக்கும் தெரியாம இங்க இருந்து எங்கேயாவது ஓடிப் போயிட்டாளா? Shit.. shit.. shit… ஐஸ்வர்யா.. எங்க டி இருக்க?” என்று தனக்குத் தானே அவளிடம் பேசிக் கொண்டிருந்த அஸ்வின் நடு ஹாலில் நின்று கொண்டு வந்து கோபத்தில் தன் தலை முடியை அழுந்த கோதிக் கொண்டிருந்தான்.  

அவனுக்கு ஐஸ்வர்யாவை காணாமல் பைத்தியம் பிடிப்பது போல இருந்தது. தனது வீட்டின் செக்யூரிட்டி கார்டுக்கு கால் செய்து அவனை வரச் சொன்ன அஸ்வின் “ஐஸ்வர்யா எங்க போனா, எப்ப இருந்து அவளை காணோம்.. அவ வீட்டை விட்டு வெளியே போயிருக்காளா இல்லையான்னு சிசிடிவி கேமரால செக் பண்ணுங்க.” என்று இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தான். 

அஸ்வினை தேடிக் கொண்டு அவனிடம் பேசுவதற்காக அவன் ரூமிற்கு சென்றிருந்த பாலாவும், மனோகரனும் அங்கே அவன் இல்லாததால் லிஃப்டில் கீழே வந்தார்கள். அஸ்வின் பதட்டமான முகத்துடன் நின்று பாதுகாவலர்களுடன் பேசிக் கொண்டிருந்ததால் அவர்கள் இருவரும் அஸ்வின் அருகில் செல்ல, “என்னப்பா ஆச்சு அஸ்வின்? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று அன்புடன் விசாரித்தார் மனோகரன். 

பதட்டத்தில் இருந்த அஸ்வின் “ஐஸ்வர்யாவை காணோம் மாமா. அவ எங்க போனான்னு தெரியல.“ என்று சொல்லிவிட, “அப்ப நிஜமாவே மனிஷா சொன்ன மாதிரி ஐசு இங்க தான் இருக்காளா? அவளுக்கும் அஸ்வினுக்கும் மேரேஜ் ஆயிடுச்சா?” என்று நினைத்து அதிர்ந்தான் பாலா. 

மனோகரின் மனதிலும் அதே கேள்வி தான் ஓடியது. ஆனால் ஏற்கனவே பலவிதமான மன வேதனையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் அஸ்வினிடம் தானும் கேள்வி கேட்டு அவனை இம்சிக்க வேண்டாம் என்று நினைத்து “அந்த பொண்ணை எப்ப இருந்து காணோம்? கடைசியா அவளை யார் பார்த்தது? அப்ப அவ எங்க இருந்தா?” என்று ஐஸ்வர்யாவை கண்டுபிடிக்கும் நோக்கில் அஸ்வினிடம் கேட்டார். 

“அவ லாஸ்ட்டா டெரஸ்ல இருந்தான்னு கீதா அக்கா சொன்னாங்க.” என்று மனோகரனிடம் சொல்லும்போது தான் “நான் இன்னும் அங்க போய் அவ இருக்காளான்னு பாக்கவே இல்ல.” என்று நினைத்த அஸ்வின் பேச்சைப் பாதியில் நிறுத்திவிட்டு அவசர அவசரமாக படிகளில் ஏறி மூச்சு வாங்க மொட்டை மாடியை நோக்கி ஓடினான். 

“அஸ்வின் நில்லு! எங்கப்பா ஓடுற? ஏதாவது பிரச்சனையா? நின்னு என்னன்னு சொல்லிட்டு போ.” என்று மனோகரன் சொல்ல, அதை கண்டு கொள்ளாமல் அசுர வேகத்தில் படிகளில் ஓடிக் கொண்டிருந்தான் அஸ்வின். “அப்ப ஐஸ்வர்யா அங்க தான் இருக்காளா?” என்று நினைத்து பதட்டமடைந்த பாலா தானும் அவசரமாக படிகளில் ஏறி அஸ்வினை பின் தொடர்ந்து ஓடினான்.

அஸ்வின் மொட்டை மாடியை சென்றடையும் போது, அங்கே பலத்த இடி சத்தத்துடன் ஜோராக மழை பொழித்துக் கொண்டிருந்தது. அந்த இடம் காரிருளில் மூழ்கி இருக்க, அவ்வப்போது மின்னல் வெளிச்சத்தில் அங்கே ஒரு வெள்ளை நிற ஒலி பளிச் பளிச் என்று அடித்து மறைந்தது. அந்த வெட்ட வெளியில் அந்த வெளிச்சத்தில் அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்த அஸ்வின், ஆங்காங்கே இருந்த லைட்டுகளை ஆன் செய்துவிட்டு எதைப் பற்றியும் யோசிக்காமல் அப்படியே மழையில் நனைந்த பாருங்க சென்று எங்கேயாவது ஐஸ்வர்யா தன் கண்களுக்கு தென்படுகிறாரா என்று அந்த விசாலமான மொட்டை மாடியில் தேடிக் கொண்டிருந்தான். 

தானும் அவனை பின் தொடர்ந்து மேலே வந்து சேர்ந்த பாலா அவனும் தன் பங்கிற்கு ஐஸ்வர்யாவை தேடினான். அப்போது டமால் என்ற பலத்த சத்தத்துடன் ஒரு இடி இடிக்க, அதில் பளிச்சென்று பிரகாசமான மின்னல் வெட்டியது. அந்த ஒளி கிற்றில் துணி துவைக்கும் இடத்தில் மயங்கி குப்புற விழுந்து கிடந்த ஐஸ்வர்யாவின் உருவம் மங்கலாக பாலாவின் கண்களுக்கு தெரிந்தது. 

இடி இடித்ததால் எப்படியும் இங்கே ஐஸ்வர்யா இருக்க மாட்டாள் என்ற முடிவில் கீழே செல்லலாம் என்று நினைத்து அஸ்வின் வாசலை நோக்கி திரும்ப, “ஐசு!” என தனது அடித்தண்டையில் இருந்து வலி நிறைந்த குரலில் அந்த இடி சத்தத்தை கிழித்துக் கொண்டு கத்திய பாலா வேகமாக ஐஸ்வர்யா இருக்கும் இடத்தை நோக்கி ஓடினான். 

அவன் சத்தம் கேட்டு அஸ்வினும்  திரும்ப, ஏற்கனவே தன் உடல் முழுவதும் ஆங்காங்கே சில காயங்களுடன் இருந்த ஐஸ்வர்யா இப்போது தரையில் அசைவின்றி மயங்கி கிடந்தாள். அந்த கொட்டும் மழைநீரால் கூட பாவம் அவளை மயக்கத்தில் இருந்து எழுப்ப முடியாமல் போய்விட்டது போல. கேட்பாரற்று அவள் எத்தனை மணி நேரங்களாக அந்தத் தொடர் மழையில் நனைந்து கொண்டு சகதிகளுக்கு நடுவில் காய்ந்த சறுகாய் கிடக்கிறாள் என்று அந்த கடவுளுக்கு தான் தெரியும். 

வேகமாக ஓடி சென்றதில் தடுக்கி விழுந்த பாலா அதைக் கூட பொருட்படுத்தாமல் கால் வலியுடன் மீண்டும் எழுந்து அவள் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்து அவள் முகத்தை தன் மடியில் போட்டுக் கொண்டு பதட்டுத்துடன் வேகமாக அவள் கன்னத்தில் “ஐஷு.. ஐஷு.. கண்ண தொறந்து பாரு மா.. ஐஷு..  நான் பேசுறது உனக்கு கேக்குதா?” என்று கேட்டபடி தட்டினான். 

அவசரமாக அங்கே சென்று நின்ற அஸ்வின் மங்கலான வெளிச்சத்தில் உடம்பில் உள்ள ரத்தம் எல்லாம் முகத்திற்கு வந்ததைப் போல சிவந்து போய் மழையில் வெகு நேரமாக கிடந்ததால் அப்படியே தோல் ஊறிய நிலையில் ஏதோ செத்த பிணம் போல கிடந்த ஐஸ்வர்யாவை கண்டு ஒரு நொடி ஆடிப் போனான். இன்னும் அவனது பெற்றோர்கள் அவனை விட்டு பிரிந்த சோகத்தில் இருந்தே அவனால் மீள முடியவில்லை. 

இதில் அவனது ஐஸ்வர்யாவும் அவனை விட்டு சென்று விட்டாளா? என்று நினைக்கவே அவன் மனம் வலித்தது. அவன் அப்படி நடப்பது புரியாமல் சிலையாக நின்று கொண்டிருக்க, அவள் முகத்தில் தட்டிப் பார்த்தும் அவளுக்கு சுயநினைவு வராததால் அவள் கையை பிடித்து அவளது நாடித்துடிப்பை சோதித்துப் பார்த்த பாலா “ஐயோ கடவுளே பல்சு ரொம்ப கம்மியா இருக்கு.. நீதான் என் ஐசுவை காப்பாத்தணும்.” என்று முனுமுனுத்தவாரு ஐஸ்வர்யாவை தூக்கிக் கொண்டு அவன் கால்களில் அடிபட்டு இருந்ததால் தாங்கி தாங்கி நடந்து படிகளை நோக்கி சென்றான். 

  அஸ்வின் கண்கள் மட்டும் அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருக்க, ஐஸ்வர்யாவின் ஒற்றை கை பாலாவின் தோள்களில் இருந்து கீழே வந்து விழ, அங்கே பலமாக கேட்டுக் கொண்டிருந்த இடி சத்தத்தையும் தாண்டி ஐஸ்வர்யாவின் கண்ணாடி வளையல் ஓசை அஸ்வினுக்கு கேட்டது. 

சென்னையில் இருக்கும் மற்ற பணக்கார பெண்களைப் போல ஐஸ்வர்யாவும் மார்டனாக இருப்பதை விரும்பக் கூடியவள் தான். ஆனால் அவளுக்கு புடவை அணியும் போது மட்டும் கண்ணாடி வளையல் அணிவது மிகவும் பிடிக்கும். அது தெரிந்து அவளுக்கான பொருட்களை வாங்கும் போது வித்யா அவளுக்கு பிடித்த கண்ணாடி வளையல்களையும் ஐஸ்வர்யாவை சந்தோஷப்படுத்துவதற்காக வாங்கி அனுப்பி வைத்திருந்தாள். 

அவளை இன்ஸ்பெக்டர் வரும்போது பார்க்கும்போதே அவள் கையில் இருந்த கண்ணாடி வளையலை கவனித்த அஸ்வின் சில நாட்கள் பின்னோக்கி சென்று இதேபோல் புடவை அணிக்கும்போது அவள் கண்ணாடி வளையல் அணிந்து தேவதை போல நடந்து வரும்போது அவன் அவளைக் கண்டு ரசித்த நாட்களையெல்லாம் தன் மனதிற்குள் ஓட்டி பார்த்தான். 

இப்போது அனைத்தும் அவனுக்கு ஞாபகம் வர, அந்த கண்ணாடி வளையலின் ஓசை அவனை சுயநினைவிற்கு கொண்டு வந்து அவளுக்காக மீண்டும் ஒரு முறை ஏங்க வைத்தது. “ஐஷு..!!” என்று முனுமுனுத்த அஸ்வின் பாலாவை பின் தொடர்ந்து வேகமாக ஓடினான். 

அவன் செல்வதற்குள் ஐஸ்வர்யாவை தன் கைகளில் ஏந்தி கொண்டு லிஃப்டிற்குள் ‌ நுழைந்தான் பாலா. அதனால் எரிச்சல் அடைந்த அஸ்வின் லிஃப்ட் கீழே செல்வதற்குள் தானும் கீழே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஈரமாக இருந்ததால் அவனது shoe கால்கள் வழுக்குவதை கூட பொருட்படுத்தாமல்  படிகளில் அவசர அவசரமாக இறங்கி கீழே சென்றான். 

ஐஸ்வர்யாவை அதற்குள் கீழே தூக்கிக் கொண்டு சென்றிருந்த பாலா அவளை ஹாலில் உள்ள சோஃபாவில் கிடத்தி “அப்பா நமக்கு தெரிஞ்ச டாக்டர் யாராவது இருந்தா கால் பண்ணி உடனே வந்து இவளுக்கு என்ன ஆச்சுன்னு பார்க்க சொல்லுங்க.” என்று குரல் நடுங்க சொன்னான். அவன் முகத்தில் அப்பட்டமாக பதட்டம் தெரிய, அதை கவனித்தாலும் இப்போது அதைப்பற்றி தன் மகனிடம் கேட்கும் நேரம் இல்லை என்பதால் “இதோ.. இரு இப்பவே கால் பண்ணி வர சொல்றேன்.” என்ற மனோகரன் தனது மொபைல் ஃபோனை எடுப்பதற்காக அவரது ரூமிற்க்கு சென்றார். 

அப்போது சரியாக அவர்களுக்கு எதிரில் அஸ்வினிடம் பேசப்போன மனோகரனும் பாலாவும் இன்னும் வரவில்லையே என நினைத்து திலகாவும், மனிஷாவும் நிலவரம் என்னவென்று தெரிந்து கொள்வதற்காக அங்கே வந்து கொண்டு இருந்தார்கள். சோஃபாவில் மயங்கிய நிலையில் கிடந்த ஐஸ்வர்யாவை பார்த்து அதிர்ந்த மனிஷா “அம்மா அங்க பாருங்க.. இது ஐஸ்வர்யா தானே! இவளுக்கு என்ன ஆச்சு? ஏன் இங்க இப்படி கிடைக்கிற?” என்று ஷாக் ஆகி கேட்டாள். 

“என்னை கேட்டா எனக்கு என்ன டி தெரியும்? வா போய் பாக்கலாம்.‌” என்று திலகா சொல்ல, தாயும் மகளும் குறுகுறுவென்று ஐஸ்வர்யாவை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி அவளை நோக்கி சென்றார்கள். 

பாலாவை போலவே தானும் தொப்பலாக மழையில் நன்றாக நினைத்திருந்த அஸ்வின் கீழே ஓடி வந்து சோஃபாவில் கிடந்த ஐஸ்வர்யாவை வாஞ்சையுடன் பார்த்தான். அவளை அப்படி வாடிய சருகாய் பார்க்க பார்க்க அஸ்வினின் இதயம் ஆயிரம் துண்டுகளாக உடைந்து சிதறியது. சத்தம் இன்றி அவன் தனக்குள் அவளுக்காக வேதனை பட்டு அழுதான்.  

ஐஸ்வர்யா இன்னும் அவள் காலையில் அணிந்திருந்த அதே புடவையில் இருக்க, அவள் மொத்தமாக மழையில் நனைந்து இருந்ததால் ஏற்கனவே மெல்லியதாக இருந்த அந்த புடவை இப்போது ஈரமாக இருந்ததால் அவளது சிறிய உடலை கச்சிதமாக இறுக்கிப்பிடித்து அவளது அங்க வளைவுகளை கவர்ச்சியாக காட்டிக் கொண்டிருந்தது. 

அவள் அருகில் பாலா நின்று கொண்டு இருப்பதை பார்க்கவே அஸ்வினுக்கு எரிச்சலாக இருந்தது. உடனே வேகமாக அவர்கள் அருகில் சென்று மயக்கத்தில் கிடந்த ஐஸ்வர்யாவை தூக்கி தனது தோள்களில் போட்டுக் கொண்டான் அஸ்வின். 

– முத்தங்கள் தொடரும்.. 

You may also like

Leave a Comment

About Me

Featured