Home மூர்கனின் முரட்டு முத்தங்கள்மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 6

மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 6

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 6

டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன்னே நின்று கொண்டிருந்த ஐஸ்வரியா அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டு இருந்த அஸ்வின் கட்டிய தாலியை பார்த்தபடி கடந்த காலத்தில் நடந்துவற்றை எல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளை தேடிக் கொண்டு அந்த ரூமிற்குள் நுழைந்த வித்யா “ஹே ஐசு ஒரு குட் நியூஸ்!” என்றாள் உற்சாகமான குரலில்.  உடனே தன் கண்ணீரை அவசரமாக துடைத்துவிட்டு அவளை திரும்பிப் பார்த்த ஐஸ்வர்யா “என்ன குட் நியூஸ்? என் மேல நெஜமாவே தப்பில்லைன்னு அஸ்வின் புரிஞ்சுகிட்டானா?” என்று ஆர்வமுடன் கேட்டாள். 

அருகில் சென்ற வித்யா அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு “எனக்கும் உன் கிட்ட அப்படி சொல்லணும்னு ஆசையா தான் இருக்கு ஐசு. அதுக்கு எல்லாம் இன்னும் டைம் இருக்கு. நீ வெயிட் பண்ணி தான் ஆகணும். இது வேற. விவேக் கிட்ட இருந்து கால் வந்துச்சு.” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “அக்ஷயாவுக்கு சரியாயிடுச்சா? அவளுக்கு கான்ஷியஸ் வந்திருச்சா?” என்று கண்கள் கலங்க கேட்டாள் ஐஸ்வர்யா.

“ஆமா ஐசு. சீஃப் டாக்டரே வந்து செக் பண்ணி பாத்துட்டு அக்ஷயா உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல. அவளுக்கு கான்ஷியஸ் வந்ததுக்கு அப்புறமா அவளை ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சு ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாரு.” என்று வித்யா சொல்ல, “Thank God, இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு வித்யா.‌ அவளுக்கும் ஏதாவது ஒன்னு ஆகி இருந்தா பாவம் அஸ்வினால அத தாங்கவே முடியாது.” என்றாள் ஐஸ்வர்யா. 

“கரெக்டு தான். பட் சோகமான விஷயம் என்னன்னா, இன்னும் அக்ஷயா முழுசா சரியாகல. அவ முன்ன மாதிரி நார்மல் ஆகி நடக்குறதுக்கு ரொம்ப நாள் ஆகுமாம். நம்ம அவளோட cooperation-ஓட proper treatment கொடுக்கலைன்னா கடைசி வரைக்கும் அவளால நடக்க முடியாமல் கூட போகலாம்ன்னு டாக்டர் சொல்லிட்டாராம்.‌. அதைக் கேட்டு டென்ஷனான அஸ்வின் அவனோட carelessness-னால தான் எல்லாமே நடந்துச்சுன்னு நினைச்சு கில்டி ஃபீலிங்ல ஹாஸ்பிடல்ல இருந்து மறுபடியும் குடிக்கிறேன்னு பாருக்கு கிளம்பி போயிட்டானாம். அவனை ஃபாலோ பண்ணி போயிட்டு இருக்கிறதா விவேக் சொன்னான்.” என்று வித்யா சொன்னதை கேட்டவுடன் ஐஸ்வர்யாவின் முகம் சோகமே உருவாக மாறியது. 

இப்போது அஸ்வினை விட அவள் தான் அதிக குற்ற உணர்ச்சியில் தவிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தாள். ஏனென்றால் நடந்த அனைத்திற்கும் அஸ்வினின் குடும்பம் இந்த நிலை தள்ளப்பட்டதிற்கும் அவளது குடும்பம் தான் காரணம். இப்போது ஒவ்வொரு நொடியும் தான் எப்படியாவது நடந்த அனைத்தையும் ஆட்டி விட வேண்டும் என்று அவள் தரையில் விழுந்த புழுவாய் துடித்து தவித்தாலும் அவளால் எதையும் செய்ய முடியவில்லை என்பதே  அவளுக்கு மரண வலியை கொடுத்தது. 

மீண்டும் இடிந்து போனதைப் போல அமைதியாக சென்று கட்டலில் அமர்ந்து கொண்ட ஐஸ்வர்யாவை பார்த்த வித்யாவிற்கு அவளிடம் ஏதாவது பேசலாம் என்று தோன்றியது. இருப்பினும் “நாம என்ன தான் கூட இருந்தாலும், ஐசு இது எல்லாத்தையும் தனியா பேஸ் பண்ணி வெளிய வந்து ஆகணும். இனிமே அவளை அவளே பாத்து கேட்க கத்துக்கணும். அதான் அவளுக்கு நல்லது.” என்று நினைத்து அவளை தனியாக விட்டுவிட்டு வெளியில் சென்று விட்டாள்.

தலைக்கு குளித்துவிட்டு வந்திருந்த ஐஸ்வர்யா ஈர கூந்தலுடன் அப்படியே அருகில் இருந்த தலைகனையை கட்டிப்பிடித்துக் கொண்டு கட்டிலில் விழுந்தாள். அவளது கண்ணீர் அருவி அந்த தலையணையை நனைக்க, அதில் தனது மன பாரத்தையும் கரைக்கும் முயற்சியில் இறங்கினாள் அவள். அதில் தன்னையும் அறியாமல் ஒரு கட்டத்திற்கு மேல் தூக்கியும் போயிருந்தாள் ஐஸ்வர்யா. 

அவள் எவ்வளவு மணி நேரங்கள் அப்படி தன்னை மறந்து உறங்கிக் கொண்டு இருந்தாளோ அவளுக்கே தெரியவில்லை. காலை 11 மணியளவில் ஹாஸ்பிடலில் இருந்து காரில் தனது பிரம்மாண்ட மாளிகையின் வாசலில் வந்து இறங்கினான் அஸ்வின் கர்ணா. குடித்திருந்ததினால இல்லை போதையில் இருந்ததினாலா என்று தெரியவில்லை. வழக்கத்திற்கு மாறாக அவனுடைய அழகிய பூனை கண்கள் இன்று சிவந்து போய் இருக்க, வேக எட்டுக்கள் வைத்து படிகளில் ஏறி அவன் நேராக தனது ரூமிற்கு சென்றான். 

அந்த விசாலமான மாஸ்டர் பெட்ரூமில் அவனுடைய கூர்மையான கண்கள் இப்போது அவன் மனைவி என்ற பெயரில் தனது அடிமையாக அங்கே வைத்திருக்கும் ஐஸ்வர்யாவை தான் தேடியது.  அங்கே அவள் இல்லாததால் அந்த வெறுமையான அறையை தன் புருவங்களை சுருக்கி பார்த்த அஸ்வின் “அதுக்குள்ள அவ இங்க இருந்து தப்பிச்சு போயிட்டாளா? அவ எங்க போனாலும் நான் அவளை சும்மா விடமாட்டேன்.” என்று நினைத்து வந்த கோபத்தில் தன் பற்களை கடித்துக் கொண்டு வெளியில் சென்று “கீதா அக்கா.. கீதா அக்கா.. எங்க இருக்கீங்க?” என்று தனது அறையின் வாசலில் நின்று கொண்டு கத்தினான். 

அவன் குரலைக் கேட்டு பதற்றத்துடன் அங்கே ஓடி வந்த அவன் வீட்டில் வேலை பார்க்கும் பெண் கீதா “சொல்லுங்க தம்பி! உங்களுக்கு ஏதாவது வேணுமா? சாப்பாடு ரெடியா இருக்கு. நான் உங்க ரூம்லயே கொண்டு வந்து கொடுக்கட்டுமா?” என்று மரியாதையுடன் கேட்க, “அவ எங்க!” என்று தனது அடி தொண்டையில் இருந்து கத்தினான் அஸ்வின். 

அவன் அவள் என்று எவளை குறிப்பிடுகிறான் என்று புரியாததால் தன் மண்டையை சொரிந்து கொண்டு அவனைப் பார்த்த கீதா “நீங்க யார கேக்குறீங்க தம்பி?” என்று கேட்க, ஐஸ்வர்யாவின் பெயரைக் கூட தன் வாயால் சொல்லக் கூடாது என்று நினைத்த அஸ்வின் “அவ தான், எங்க வாழ்க்கையை கெடுத்தவ. அந்த சூனியக்காரிய தான் எங்கன்னு கேட்கிறேன். நான் வீட்ல இல்லாத நேரம் இதுதான் சாக்குனு நைட்டோட நைட்டா இங்க இருந்து தப்பிச்சு ஓடி போயிட்டாளா?” என்று ஆத்திரம் பொங்க கேட்டான். 

அவனது அனல் பக்கம் பார்வையை தாங்க முடியாமல் தன் தலையை கீழே குனிந்த கீதா ருத்ரமூர்த்தியாக தன் முன்னே நின்று கொண்டிருந்த அஸ்வினிடம் மெல்லிய குரலில் “ஐஸ்வர்யா அம்மா கெஸ்ட் ரூம்ல தூங்கிட்டு இருக்காங்க தம்பி. நான் இப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போய் அவங்கள பாத்துட்டு வந்தேன். அவங்க இன்னும் தூங்கிட்டு இருக்காங்கன்னு தான் நினைக்கிறேன்.” என்று பயத்துடனே சொன்னாள். 

“என்னது ஐஸ்வர்யா அம்மாவா? ஓஹோ..  நீங்க அம்மான்னு கூப்பிடுற அளவுக்கு அதுக்குள்ள அவ பெரிய ஆள் ஆயிட்டாளா? அவ எங்கயும் தப்பிச்சு ஓடிட கூடாதுன்னு தான் நான் அவளை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கேனே தவிர, அவ கூட சேர்ந்து வாழறதுக்காக இல்ல. எங்க அம்மாவ அம்மானு மரியாதையா கூப்பிட்ட நீங்க, அதே வாயால அந்த பீடையை அப்படி கூப்பிடாதீங்க.” என்ற அஸ்வின் டக் டக் டக் என்று தனது பூட்ஸ் கால்கள் சத்தம் எழுப்ப வேகமாக கெஸ்ட் ரூமின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான். 

அங்கே வெறும் வெள்ளை நிற bathrobe-ஐ மட்டும் அணிந்து கொண்டு போர்வை கூட பொருத்தாததால் குளிரில் நடுங்கி கொண்டு தலையணையை கட்டிப்பிடித்தபடி படுத்திருந்தாள் ஐஸ்வர்யா. வெகுநேரமாக அவள் அதே பொசிஷனில் அப்படியே இருப்பதால், அவளுடைய நன்றாக சேவ் செய்யப்பட்டு இருந்த வலுவலுப்பான வாழைத் தண்டு கால்கள் குளிரில் பிங்க் நிறத்தில் கொஞ்சம் சிவந்து போயிருந்தது. 

அவளது நீண்ட கூந்தல் மயில் தோகை போல பெட்டில் விரிந்து கிடக்க,  அவள் தலையணையை தன்னுடன் சேர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததில் மென்மையின் வீ ஷேப் அவள் கழுத்து வரை சென்று அவளுடைய பிங்க் நிற சிவந்த முகத்தோடு அவளை அத்தனை கவர்ச்சியாக காட்டியது. அவனது ப்ளூ நிற பூனை கண்கள் அந்த உடலை எத்தனை முறை ரசித்தாலும், அவனது ஐஸ்வர்யா இத்தனை வருடங்களில் ஒருபோதும் அவனுக்கு சலித்து போனதில்லை. 

ஆனால் இப்போது அவனது கண்கள் அவளைப் பார்த்து கோப கனலை உதிர்த்து கொண்டிருக்க, அவளது பன்னீர் போன்ற வெண்ணிற மலர் மேனியை தன் பார்வையாலேயே அவனுக்கு பொசிக்கி எரிக்க வேண்டும் போலத்தான் இருந்தது. “எங்க வாழ்க்கையை மொத்தமா அழிச்சிட்டு உனக்கு நிம்மதியா தூக்கம் வேண்டி கிடக்குதா? விட மாட்டேண்டி. உன்ன ஒரு செகண்ட் கூட நான் நிம்மதியா வாழ விட மாட்டேன். நம்ம எதுக்கு உயிரோட இருக்கணும்னு நீ நினைச்சு நினைச்சு சாகணும். ஆனா உனக்கு சாவு வராது. அதான் நான் உனக்கு கொடுக்கப் போற பனிஷ்மென்ட்.” என்று தனக்கு தானே சொல்லி தான் செய்ய வேண்டியதை ஒருமுறை ஞாபகப்படுத்திக் கொண்ட அஸ்வின் வேகமாக அந்த ரூமில் இருந்த ரெஸ்ட் ரூமிற்கு சென்றான். 

ஒரு பக்கெட் நிறைய குளிர்ந்த நீரை பிடித்துக் கொண்டு வந்து அதை அவன் அவள் மீது ஊற்ற, அதில் பயந்து போன ஐஸ்வர்யா தன்னையும் அறியாமல் “மம்மி!” என்று பழக்க தோஷத்தில் கத்திக் கொண்டு எழுந்து அமர்ந்தாள். அவள் அம்மா என்று சொன்னவுடன் அவளுடைய அம்மா சாரதா கணவன் தினகரனுடன் சேர்ந்து கொண்டு எப்படி எல்லாம் தன்னையும் தன் குடும்பத்தையும் நடிப்பு ஏமாற்றினாள்‌ என்று நினைத்துப் பார்த்த அஸ்வின் வந்த ஆத்திரத்தில் அப்படியே தன் கையில் இருந்த பெரிய ஸ்டில் பாக்கெட்டை எதைப் பற்றியும் யோசிக்காமல் ‌ அவள் மீது விட்டெறிந்தான்.  

தண்ணீரில் இணைந்த பலி ஆட்டை போல அவனையே ஒரு மிரட்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்த ஐஸ்வர்யா தன்னை நோக்கி அந்த ஹெவியான ஸ்டீல் பாக்கெட் வருவதை கவனித்து சுதாரித்துக் கொண்டு சட்டென்று அப்படியே உருண்டு கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டாள். அப்படி ஏடாகூடமாக விழுந்ததில் அவளுக்கு இடுப்பில் அடிப்பட, அவள் ஒரு பக்கம் தன் இடுப்பை பிடித்துக் கொண்டு “ஆஆஆ!!” என்று முனக, அஸ்வின் தூக்கி எறிந்த ஸ்டீல் பக்கெட் பெட்டில் விழுந்து உருண்டு அவள் மீது விழுந்தது. 

நல்லவேளையாக நேரடியாக அது அவள் மீது விழாததால் இப்போது அவளுக்கு சேதாரம் கொஞ்சம் குறைவு தான். இருப்பினும் ஏற்கனவே பலவீனமாகவும் சோர்வாகவும் இருந்த அவளுக்கு ஏற்கனவே இருந்த இடுப்பு வலியுடன் இதுவும் சேர்ந்து  ஒரு கூர்மையான வலியை ஏற்படுத்த, மீண்டும் தன்னை அறியாமல் “ஆஆஆ.. மம்மி!” என்று முனகினாள் ஐஸ்வர்யா. 

ஏதேனும் காயப்பட்டாளோ, வலியை உணர்ந்தாலோ மனிதர்கள் சாதாரணமாகவே அம்மா என்று கத்துவது வழக்கம் தான். அதேபோலத் தான் அவளும் செய்தாள். ஆனால் அவளுடைய குடும்பத்தினரை தன் கைகளால் கொன்ற பிறகும் கூட இன்னும் அவர்களின் மீது இருந்த கொலை வெறி தீறாமல் இருக்கும் அஸ்வினுக்கு அவள் என்னவோ தன் அம்மாவின் மீது இருக்கும் பாசத்தில் தான் இப்படி மம்மி மம்மி என்று கத்திக் கொண்டிருக்கிறாள் என்று நினைக்கவே அவள் மீது ஆத்திர ஆத்திரமாக வந்தது. 

– முத்தங்கள் தொடரும் 

You may also like

Leave a Comment

About Me

Featured