Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 12

போதையடி நீ எனக்கு CH 12

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 12

“ஆமா, நான் அவளை பத்தி யோசிச்சு தான் ஆகணும்.” என்று நினைத்த ரிஷி, “Fine, இன்னைக்கு பொழுது விடியறதுக்குள்ள என் லைஃப்ல நான் நெக்ஸ்ட் என்ன பண்ண போறேன்னு கண்டிப்பா டிசைட் பண்ணிடுவேன் ஓகேவா? 

இப்ப நான் உடனே வெளி போகணும். நீ போய் காரை ரெடி பண்ணு.” என்றான். 

“ஓகே பாஸ்” என்று விட்டு அந்த அறையை விட்டு வெளியில் சென்ற திலீப் பார்க்கிங் ஏரியாவிற்கு சென்று காரை ஸ்டார்ட் செய்து கேட்டின் அருகில் கொண்டு சென்று நிறுத்திய திலீப் மீண்டும் வந்து ரிசியை வீழ்ச்சாரில் வைத்து தள்ளிக் கொண்டு சென்று அவனை காரில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான். 

கொஞ்ச தூரம் அவனுடன் எதுவும் பேசாமல் காரில் பயணித்த திலீப், “இப்ப நம்ம எங்க பாஸ் போயிட்டு இருக்கோம்?” என்று சலிப்புடன் கேட்க, “நீ போ நான் ரூட் சொல்றேன்.” என்றான் ரிஷி. 

கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேல் அவர்களுடைய கார் சிட்டிக்கு வெளியில் உள்ள அரவமற்ற தார் சாலையில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. 

அப்போது திடீரென்று எதைப் பற்றியோ யோசித்துக் கொண்டு இருந்த ரிஷி “அந்த பொண்ணு நெஜமாவே விரிஜினாடா?” என்று கேட்க, “எஸ் பாஸ், நான் அந்த மாதிரி பொண்ணு வேணும்னு தான் கேட்டேன். 

உங்களுக்கு டவுட்டே வேண்டாம். அந்த பொண்ணு விர்ஜின் தான்.” என்ற திலீப் தொடர்ந்து காரை ஓட்டி ஒரு தோட்டத்திற்குள் நுழைந்தான். 

அவர்கள் அந்தத் தோட்டத்திற்குள் சிறிது தூரம் பயணித்து சென்றார்கள். அந்த இருட்டான இரவு நேரத்தில் தனியாக அவர்கள் இருவரும் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கி கொஞ்ச தூரம் உள்ளே சென்றார்கள். 

வழக்கம்போல ரிசியை வீல்சேரில் அமர வைத்து அதை தள்ளிக் கொண்டு நடந்து சென்று கொண்டு இருந்தான் திலீப்.  

ஒரு இடத்தில் அவர்கள் இருவரும் நின்றுவிட, அங்கே இருந்த தனது தாய் சத்தியவதியின் சமாதியை பார்த்து மௌனமாக தனக்குள் கண்ணீர் சிந்தினான் ரிஷி. அவனுக்கு இப்போது எது சரி அல்லது தவறு தான் என்ன செய்ய வேண்டும் என்று எதுவும் பிடிப்படவில்லை. 

அதனால் தன் அம்மாவின் சமாதியின் அருகில் சென்று தன் கையில் அதைத் தொட்ட ரிஷி, “நீங்க இறந்து போனப்ப அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம எப்படி நான் தனியா குஷி கூட நின்னுட்டு இருந்தனோ அதே மாதிரி தான் இப்பயும் இருக்கேன். 

அன்னைக்கு ஏதோ ஒரு தைரியத்துல நான் அடுத்து என்னனு பாக்கணும்னு யோசிச்சேன். ஆனா இப்ப நிறைய கடந்து வந்ததுனாலையோ என்னமோ மனசு ரொம்ப பாரமா இருக்குமா. 

ஒரு பக்கம் இதையெல்லாம் எதுக்கு செய்யணும் நடக்கிறது நடக்கட்டும்னு தோணுது. 

இன்னொரு பக்கம் எனக்காக இல்லைன்னாலும், குஷிக்காக இதையெல்லாம் செஞ்சு தானே ஆகணும்னு தோணுது! 

இப்ப நான் என்ன பண்றது நீங்களே சொல்லுங்க! உங்க முன்னாடி நீங்க எனக்கு வழிகாட்டுவீங்கன்ற நம்பிக்கையில் தான் நான் இப்ப வந்து நின்னுட்டு இருக்கேன்.” என்று நினைத்தவன் தன் கண்களை மூடி அவன் அம்மாவை நினைத்து பிரார்த்தித்தான்.. 

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured