Home FREE NOVELSஅன்புள்ள அரக்கனே-42

அன்புள்ள அரக்கனே-42

by oviyablessy
அன்புள்ள அரக்கனே CH-53

ஒரு தாவ‌ர‌ ம‌ர‌ப‌ணு ஆராய்ச்சியாளானாய், த‌ன் வாழ்நாளின் அதிக‌ நேர‌த்தை தாவ‌ர‌ங்க‌ளுட‌னே செல‌விட்டு  ப‌ழ‌கிய‌வ‌ன், இன்று த‌ன் ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌வ‌ளையும் அந்த‌ தாவ‌ர‌ங்க‌ளுட‌னே ஒப்பிட்டு அழ‌காய் வ‌ர்ணித்து முடித்திருக்க‌, இறுதியில் அவ‌னுட‌ன் ம‌ஞ்ச‌த்தில் இருந்தாள் அவ‌ள்.

ம‌ஞ்ச‌த்தில் மெதுவாய் அவ‌ள் மீது ப‌ட‌ர்ந்து, த‌ன் தேக‌ உர‌ச‌லிலே அவ‌ளுள் தீ மூட்டிய‌வ‌ன், த‌ன் அன‌ல் சுவாச‌ம் அவ‌ள் முக‌மெங்கும் ப‌ட‌ர‌, “ஓய்!” என்றான் அன‌ல் மூச்சாக‌.

அதில் ப‌த‌ற்ற‌மாய் அந்த‌ த‌லைய‌ணை நுனியை இறுக்கி பிடித்தவள், “ம்ம்” என்று கூற‌, அதில் அவ‌ள் முக‌மெங்கும் அவ‌னின் தாடியை அழுத்தி தேய்த்து அவ‌ள் வாச‌னையை த‌ன‌க்குள் நிர‌ப்பிய‌வ‌ன், “இனி ப்ரேக்ட்டிக்க‌லா எக்ஸ்ப்ளைன் ப‌ண்ண‌வா?” என்று மோக‌ அன‌லாய் கேட்க‌, அந்த‌ அன‌லில் இவ‌ள் உட‌லெங்கும் தாப‌ம் ப‌ர‌வ‌, “ம்ம்” என்று அவ‌ள் இத‌ழ் பிரிக்கும் நொடியே அத‌னுள் த‌ன் நாவை நுழைத்து த‌ன் மொத்த‌ இத‌ழையும் அத‌னுள் புகுத்தியிருந்தான் ருதன். அதில் ச‌ட்டென்று இவ‌ள் விர‌ல்க‌ள் அவ‌ன் ச‌ட்டையை சுருட்டி பிடிக்க‌, அவ‌னோ மேலும் ஆழ‌மாய் நாவை நுழைத்து சுவைக்க‌, இவ‌ளின் மொத்த‌ பெண்மையும் குழைந்து விழிக‌ள் மெல்ல‌ சொருகிய‌து.

அவ‌ளின் இத‌ழ் த‌ந்த‌ அமுத‌த்தில் இவ‌ன் தாக‌ம் இன்னும் இன்னும் அதிக‌ரிக்க‌, முக‌த்தை சாய்த்து மேலும் ஆழ‌மாய் முழு அமுத‌த்தையும் ப‌ருக‌ துணிந்த‌வ‌ன், அவ‌ள் கூந்த‌லுள் விர‌ல்க‌ளை நுழைத்து இறுக்கி பிடித்து மேலும் வ‌ன்மையாய் ப‌ருக‌, அவ‌ள் உட‌லெங்கும் ஏக‌த்திற்கும் ப‌ர‌விய‌து மோக‌ம். அதை அட‌க்க‌ வ‌ழி தெரியாது உட‌லை குறுக்கி நெளிந்த‌வ‌ளின் கால்க‌ள் முழுதாய் நீண்டு விரிய‌, அவள் பாதம் அங்கிருந்த‌ உண‌வு பாத்திர‌த்தில் ப‌ட்டு ச‌டாரென்று விழுந்து சித‌றிய‌து அந்த‌ உண‌வு.

அதில் இவ‌ன் திடுக்கிட்டு வில‌கி திரும்பி பார்க்க‌, அங்கே த‌ரையெங்கும் அந்த‌ ஃப்ரூட் சேல‌ட் சித‌றி கிட‌ந்த‌து. அதில் விழி விரித்த‌ இவ‌ளும் ப‌த‌றி எழ‌ போக‌, அவ‌ன் க‌ன்ன‌த்தில்  அழுத்தி மோதி, அதில் அவ‌னும் அவ‌ள் ப‌க்க‌ம் திரும்பும் நேர‌ம் அவன் முழு முகத்தையும் உர‌சிய‌ப‌டி பொத்தென்று த‌லைய‌ணையில் விழுந்தாள் அவ‌ள். அதில் அவ‌ள் கூந்த‌லுள்ளிருந்த‌ அவ‌ன் க‌ர‌ம் த‌லைய‌ணையுள் புதைய‌ தாங்கி பிடித்த‌வ‌ன், அவ‌ள் மூக்குர‌சும் இடைவெளியில்  அவ‌ள் விழியை ச‌ந்தித்தான்.

அதில் அவ‌ள் இத‌ய‌ம் துடிப்பை அதிக‌ரிக்க‌, ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் விழிக‌ளை பார்த்தவ‌ள், “நீ..ங்க‌ இன்னும் சாப்ப‌ட‌லையா?” என்று அத்த‌னை த‌ய‌க்க‌மாய் கேட்டாள்.

அதில் மெல்ல‌ இத‌ழ் வ‌ளைத்து,  அவ‌ள் இத‌ழில் பார்வையை குவித்த‌வ‌ன், “முழுசா சாப்ப‌ட‌ல‌” என்ற‌ப‌டி அவ‌ள் இத‌ழை க‌வ்வ‌ போக‌, அவ‌ன் மார்பில் க‌ர‌த்தை ப‌தித்து த‌டுத்தாள் அவள். அதில் அவ‌ன் நிமிர்ந்து அவ‌ள் விழி பார்க்க‌, அவ்விழிக‌ள் ப‌ய‌த்தில் த‌டுமாற‌, “அ..அது உங்க‌ளுக்கு லேட் ஆகுது.” என்றாள் த‌ய‌க்கமாக‌.

அதில் மேலும் இத‌ழ் வ‌ளைத்த‌வ‌ன், ச‌ட்டென்று இடைவெளியை உடைத்து அவ‌ள் இத‌ழை க‌வ்வியிருந்தான். அதில் ப‌ட்டென்று அவ‌ள் இறுக்கி விழி மூட‌, அவ‌ள் இத‌ழை அழுத்தி சுவைத்து, மிச்ச‌மிருந்த‌ அமுத‌த்தையும் வ‌ன்மையாய் ப‌ருகி முடித்துவிட்டே மெல்ல‌ பிரிந்தான். அதில் மெதுவாய் விடுப்ப‌ட்ட‌ அவ‌ளின் இத‌ழ்க‌ளுமே மெல்லிய‌தாய் பிரிந்து மூச்சு வாங்க‌, மெதுவாய் இமைக‌ளை நிமிர்த்தி  அவ‌ன் விழிக‌ளை பார்த்தாள். அவ‌னுமே பார்வையை நிமிர்த்தி அவ‌ள் விழிக‌ளுள் இர‌ச‌னையாய் உள் நுழையும் நொடி, அவ‌னின் கைப்பேசி ஒலித்த‌து.

அப்போதும் பார்வையை வில‌க்காது அவ‌ள் விழிக‌ளையே பார்த்த‌ப‌டி எடுத்து காதில் வைத்த‌வ‌ன், “வ‌ர்றேன் வெயிட் ப‌ண்ணு.” என்று கூறி இணைப்பை துண்டித்தான். அதில் இவ‌ளோ ப‌த‌ற்ற‌மாய் அந்த‌ மொபைலை பார்த்துவிட்டு அவ‌னை பார்க்க‌, ப‌ட்டென்று அவ‌ள் மார்புக்குள் புதைந்திருந்தான் அவ‌ன். அதில்  ஜிவ்வென்று சிலிர்த்து விழி மூடிய‌வ‌ளின் உட‌லெங்கும உண‌ர்வுக‌ள் கிள‌ம்ப‌, அவ‌ன் முதுகு ச‌ட்டையை இறுக்கி பிடித்து, மெதுவாய் அவ‌னை வில‌க்க‌ முய‌லும் முன் அங்கே மெல்லிய‌தாய் ஒரு முத்த‌ம் வைத்தான் அவ‌ன். அதில் அவ‌ன் மீசை கொடுத்த‌ கூச்ச‌த்தில் மெல்லிய‌தாய் குறுகிய‌வ‌ள் அவ‌ன் முதுகு ச‌ட்டையை சுருட்டி பிடித்து நெளிய‌, அந்த‌ நெளிவில் குழிந்த‌ அந்த‌ மார்பு குழிக்குள் மெதுவாய் நுழைந்த‌து அவ‌ன் விர‌ல்க‌ள்.

அதில் சிலிர்வாய் அவ‌ள் மார்பு விரிய‌, அங்கே அழுத்த‌மாய் ஒரு முத்த‌ம் வைத்தவ‌ன், அங்கிருந்த‌ திற‌ந்த‌ ஹூக்குக‌ளை மெல்ல‌ பூட்ட‌ ஆர‌ம்பித்தான். அதில்  புருவ‌த்தை குறுக்கிய‌வ‌ள், மெதுவாய் இமையை பிரிக்க‌ முய‌ல‌, அத‌ற்குள் அடுத்த‌ ஹூக்கின் ஆழ‌த்தில் நுழைந்த‌ அவ‌ன் விர‌ல் உர‌சலில் மீண்டும் சிலிர்த்து சொருகிய‌து அவ‌ள் இமைக‌ள். அதில் முழுதாய் த‌லைய‌ணையுள்  புதைந்தவ‌ளின் கூந்த‌ல் க‌லைந்து, அங்கிருந்த‌ பூ மெதுவாய் சரிய, அவ‌னோ மிச்ச‌ ஹூக்கையும் முழுதாய் மூடிவிட்டு அத‌ன் மீதும் அழுத்த‌மாய் ஒரு முத்த‌மிட்டான். அதில் மீண்டும் சிலிர்த்து அட‌ங்கிய‌வ‌ளின் க‌ர‌ம் அவ‌ன் ச‌ட்டையிலிருந்து ந‌க‌ர்ந்து அவ‌ன் பின்ப‌க்க‌  கால‌ரை சுருட்டி பிடிக்க‌, அவள் கழுத்தெங்கும் இதழை ப‌ட‌ர‌விட்டு, மிக மெல்லியதாய் முத்தங்கள் வைத்தான். அதில் அவ‌ன் மீசையும் எச்சிலும் தொட்டு க‌ரைய‌, அவளோ சிலிர்வாய் கழுத்தை விரிக்க, அங்கே ப‌டிந்த‌ ஈர‌த்தை நாசி நுனியால் அழுத்தி துடைத்த‌ப‌டியே மேலேறி அவ‌ள் இத‌ழிலும் மெல்லிய‌தாய் ஒரு முத்த‌ம் வைத்த‌வ‌ன், “பாய்!” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில்தான் அவ‌ளுள் மெல்ல‌ உண‌ர்வுக‌ள் தெளிய‌, மெதுவாய் இமை பிரித்தவ‌ள் ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் விழிக‌ளை பார்த்தாள். அவ‌னோ மெதுவாய் அவ‌ள் கூந்த‌லுள் விர‌ல் நுழைத்து அங்கிருந்த‌ பூவை மீண்டும் காதோர‌ம் சொருக‌, அதில் மீண்டும் சொருக‌ முய‌ன்ற‌ இமைக‌ளை க‌டின‌ப்ப‌ட்டு பிரித்தவ‌ளின் க‌ண்ணில் ஒருவித‌ ம‌ய‌க்க‌ம் இன்னுமே மிச்ச‌மிருக்க‌, அப்ப‌டியே அவ‌ன் காதோர‌ம் ப‌ட‌ர்ந்த‌து அவ‌னின் அன‌ல் சுவாச‌ம்.

அதில் மீண்டும் அவள் இமைக‌ள் சுருண்டு விரிய‌ மெல்லியதாய் அவ‌ன் ப‌க்க‌ம் திரும்ப‌ முய‌ல‌, அந்த‌ க‌ன்ன‌த்தில் அவ‌ன் தாடி புதைய‌ அழுத்தி முத்த‌மிட்டான். அதில் அவ‌ளும் அழுத்தி விழி மூட, அவ‌ள் இமையிலும் மென்மையாய் முத்த‌மிட்டு வில‌கினான். அவ‌ன் வில‌க‌லில் அவ‌ள் மெதுவாய் விழி திற‌க்க‌, அவ‌ள் நாசியை உர‌சிய‌ப‌டி வில‌கி எழுந்தான் அவ‌ன்.

அதில் ச‌ட்டென்று உண‌ர்வு தெளிந்த‌ அவ‌ளும் அவ‌ச‌ர‌மாய் எழுந்த‌ம‌ர‌, அவ‌ள் புட‌வை ச‌ரிந்து விழுந்த‌து. அதில் திடுக்கிட்டு அவற்றை பிடித்து, அவ‌ச‌ர‌மாய் இழுத்து தோளில் போட்ட‌வ‌ள், ப‌த‌ற்ற‌மாய் நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ அதை கவனிக்காமல் அங்கிருந்த‌ த‌ன் கோட்டை எடுத்து மாட்டினான்.

அதில் ச‌ற்று மூச்சுவிட்ட‌ப‌டி த‌ன் சேலையை இறுக்கி பிடித்த‌வ‌ளின் பார்வை மீண்டும் த‌ரையில் சிந்திய உண‌வை த‌ழுவ‌, த‌ய‌க்க‌மாய் நிமிர்ந்து அவ‌னை பார்த்த‌வ‌ள், “நா.. வேணுன்..னா  போய் வேற‌ எடுத்..துட்டு வ‌ர‌வா?” என்று அத்த‌னை த‌ய‌க்க‌மாய் கேட்டு முடித்தாள்.

அதில் அவ‌னோ குனிந்து த‌ன் கை ச‌ட்டையை ச‌ரி செய்த‌ப‌டியே, “இட்ஸ் ஓகே டைம் ஆயிருச்சு. நா கெள‌ம்புறேன்.” என்று ந‌க‌ர‌ போக‌, “இல்ல‌ சாப்புட்..” என்று இவ‌ள் கூற‌ வ‌ர‌, அவ‌னோ நின்று அவ‌ளை பார்த்தான்.

அதில் அவ‌ள் அப்ப‌டியே அமைதியாகிவிட‌, அவ‌னோ புருவ‌த்தை உய‌ர்த்தி என்ன‌வென்று கேட்டான். அதில் அவ‌ளோ வேக‌மாய் ஒன்றுமில்லையென்று த‌லையாட்ட‌, அதில் அழ‌காய் இத‌ழ் வ‌ளைத்தவ‌ன், அப்ப‌டியே அங்கிருந்து ந‌க‌ர்ந்தான்.

பின்ன‌ அவ‌ன் எதை சாப்பிடுவான் என்றுதான் அவ‌ளுக்கு தெரியுமே. அதில் அப்ப‌டியே அமைதியாகிவிட்ட‌வ‌ள், அவ‌ன் ந‌க‌ர்ந்த‌ நொடிதான் நிம்ம‌தியாய் மூச்சுவிட்டாள்.

அப்போதே அன்னிச்சையாய் மீண்டும் அவ‌ள் பார்வை சிந்தி கிட‌ந்த‌ உண‌வை த‌ழுவ‌, முத‌லில் இதை சுத்த‌ம் செய்ய‌லாம் என்று புட‌வையை ச‌ரி செய்து கீழே இற‌ங்கிய‌வ‌ள், அதை குனிந்து எடுக்க‌ போக, ப‌ட்டென்று அவ‌ளை இழுத்து  இத‌ழை க‌வ்வினான் ருத‌ன்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு விழியை விரிக்க‌, அவ‌னோ மிக‌ மேலோட்ட‌மாய் அவ‌ள் இத‌ழ் சுழையை ம‌ட்டும் சுவைத்துவிட்டு மெதுவாய் பிரிந்தான். அதில் மெதுவாய் இமை குடையை நிமிர்த்தி அவ‌ன் விழி பார்த்த‌வ‌ளின் விழியில் ப‌த‌ற்ற‌ம் த‌ழும்ப‌, அவ்விழிய‌ருகே மெதுவாய் அவ‌ன் ஒற்றை விர‌ல் உர‌சி கோடிழுக்க‌, அதில் சுக‌மாய் சொருகி விரிந்த‌ அவ‌ளின் இமையில் மெல்லிய‌தாய் இத‌ழ் ப‌தித்தான். அதில் அவ‌ள் இமை முழுதாய் மூடி திற‌க்க‌, அவ‌ள் இமைய‌ருகே கன்னத்திலும் ப‌திந்த‌து அவ‌ன் இத‌ழ். அதில் அவ‌ள் அழுத்தி விழி மூடி சிலிர்க்க‌, அவ‌ள் விர‌ல் அவ‌ன் ச‌ட்டை நுனியை இறுக்கி பிடித்த‌து. அப்ப‌டியே அவ‌ன் இத‌ழ் அவ‌ள் நாசி நுனியில் ப‌திய‌, அவ‌ளோ அவ‌ன் புஜ‌ ச‌ட்டையை சுருட்டி பிடித்து குறுகினாள். அதில் அப்ப‌டியே அவ‌ன் இத‌ழ் அவ‌ள் நாசியின் கீழ் உள்ள‌ ப‌ள்ள‌த்தில் ப‌திய‌, அவ‌ன் சுவாச‌ம் அன‌லாய் அவ‌ள் நாசி துவார‌த்தில் புகுந்து உட‌லெங்கும் வெப்ப‌த்தை க‌ட‌த்திய‌து. அதில் அவ‌ள் உட‌லெங்கும் உஷ்ண‌த்தில் த‌கிக்க‌, அவ‌ள் முக‌மெங்கும் ப‌ட‌ர்ந்த‌து அவ‌னின் ஈர‌ இத‌ழ்க‌ள். அதில் இத‌மாய் உட‌லை த‌ள‌ர்த்திய‌வ‌ளின் தேக‌ம் அவ‌ன் மார்போடு புதைந்து நிற்க‌, அவ‌ள் இத‌ழ் மெல்லிய‌தாய் பிரிந்து வெப்ப‌த்தை வெளியேற்றிய‌து. அது அவ‌ன் மெல்லிய‌ மீசையில் ப‌ட‌ர்ந்து சூடாக்க‌, மெதுவாய் அவ‌ள் இத‌ழில் மீசையை உர‌சி, “ஓய்!” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் அவன் மிசையுர‌ச‌வே மெல்லிய‌தாய் இத‌ழை அசைத்து, “ம்ம்” என்று அவ‌ள் கூற‌, அந்த‌ இத‌ழில் மெல்லிய‌தாய் ஒரு முத்த‌ம் வைத்து, “நா போற‌ வ‌ரைக்கும் என் க‌ண்ணுல‌ ப‌டாத‌.” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் அவ‌ள் கேள்வியாய் இமையை நிமிர்த்தி அவ‌ன் விழிக‌ளை பார்க்க‌, அவ‌னுமே அவ‌ள் விழிக‌ளுள் இர‌ச‌னையாய் ஊடுருவி, “இல்ல‌ன்னா இங்கிருந்து போக‌வே மா‌ட்டேன்னு தோனுது.” என்றான் மெல்ல‌மாக‌. அதில் மெல்ல‌ இவ‌ள் இத‌ய‌ம் ப‌த‌ற்ற‌த்தை கூட்ட‌, இமைக‌ள் ப‌ட‌ப‌ட‌வென்று விழித்தன‌.

அந்த‌ விழியிலும் மென்மையாய் ஒரு முத்த‌ம் வைத்த‌வ‌ன், “பாய்” என்று மெல்லிய‌ குர‌லில் கூறி வில‌கினான். அதில் மெதுவாய் அவ‌ள் தேக‌ம் அவ‌ன் உட‌ல் சூடைவிட்டு பிரிந்து செல்ல‌, அவ‌னையே பார்த்த‌ப‌டி நின்றாள்.

அங்கே அறை வாச‌ல் வ‌ரை சென்ற‌வ‌ன், மீண்டும் திரும்பி அவ‌ளை பார்த்தான். அங்கே அவ‌ள் இல்லை. அதில் புரியாது சுற்றி தேடியவன்,  பிற‌கு மெதுவாய் இத‌ழ் விரித்து புன்ன‌கைத்தான். “நா போற‌ வ‌ரைக்கும் என் க‌ண்ணுல‌ ப‌டாத‌.” என்ற‌ அவ‌ன் வார்த்தை க‌ண்முன் வ‌ர‌, அழகாய் இத‌ழ் வ‌ளைத்த‌ப‌டியே திரும்பி அறையை தாண்டி வெளியில் சென்றிருந்தான்.

அப்போதே அந்த‌ ஜ‌ன்ன‌ல் திரையினுள்ளிருந்து மெதுவாய் எட்டி பார்த்த‌வ‌ள், அவ‌ன் சென்றுவிட்டான் என்று உண‌ர்ந்த‌ நொடியே நிம்ம‌தியாய் பின்னிருந்த‌ ஜ‌ன்ன‌லில் சாய்ந்தாள்.

சில‌ நொடி அப்ப‌டியே விழி மூடி இத‌ய‌த்தை சீராக்க‌ முய‌ன்ற‌வ‌ள், மூச்சை இழுத்துவிட்டு சுவாச‌த்தையும் மெல்ல‌ சீராக்கினாள். ஏனோ நேற்று வ‌ரை அவ‌ன் தொட்டாலே ந‌டுங்கி உத‌றிய‌ அவ‌ள் உட‌ல், இன்று அவ‌ன் உர‌சினாலே உருகி குழைகிற‌து. அவ‌ன் தேக‌ம் அவ‌ளுள் புதுவித‌ உண‌ர்வுக‌ளை கிள‌ப்ப‌, அவ‌ன் தொடுகையில் வெளி வ‌ர‌ துடித்த‌ அந்த‌ உண‌ர்வுக‌ள், அவ‌ன் நெருக்க‌த்தில் அட‌க்க‌ முடியா அணை வெள்ள‌மாய் பொங்க‌ முய‌ன்ற‌து. சிலிர்ப்பூட்டம் அவன் முத்தம், உடலை சூடாக்கும் அவன் சுவாசம், குறுகுறுக்கும் அந்த மீசை, அதையெல்லாம் நினைத்தாலே இப்போதும் உட‌ம்பெல்லாம் ஒருவித‌ உஷ்ண‌ம் ப‌ர‌வ‌, தன் இரு க‌ன்ன‌ங்க‌ளையும் அழுத்தி பிடித்து மொத்த‌ உணர்வையும் அடக்கினாள். ஒரே நாளில் த‌ன‌க்குள் என்ன‌வெல்லாம் செய்துவிட்டான் என்று முக‌த்தை உலுக்கிவிட்டு இழுத்து மூச்சுவிட்டு விழி திற‌ந்தவ‌ள், இனி இவ‌னைவிட்டு த‌ள்ளியே இருக்க‌ வேண்டும் என்று ஆழ‌மான‌ ஒரு முடிவை எடுத்தாள்.

இங்கே கார் அருகே நின்றிருந்த‌ யோகியோ, நொடிக்கு நொடி த‌ன் ம‌ணிக்க‌ட்டை தூக்கி நேர‌த்தை பார்த்த‌ப‌டி, “பாஸ் என்ன‌ என்னிக்குமே இல்லாம‌ இன்னிக்கு இவ்ளோ லேட் ப‌ண்றாரு..” என்று யோசித்துக்கொண்டிருக்க‌,  “கெள‌ம்ப‌லாம்.” என்றான் ருத‌ன்.

அதில் அவ‌ன் திடுக்கிட்டு திரும்ப‌, கூலருட‌ன் அவ‌ன் முன் வ‌ந்த‌வ‌ன், “குயிக்.” என்ற‌ப‌டி அவ‌னை க‌ட‌ந்து காருக்கு சென்றான் ருத‌ன். அதில் இவ‌னும் அவ‌ச‌ர‌மாய் சென்று அவ‌னுக்கான‌ பின் ப‌க்க‌ க‌த‌வை திற‌க்க‌ போக‌, அதில் க‌ர‌த்தை அழுத்தி ப‌தித்து த‌டுத்தான் ருத‌ன்.

அதில் அவ‌ன் திடுக்கிட்டு நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ விய‌ப்பாய் த‌ன் கூல‌ரை மெல்ல‌ க‌ழ‌ற்றிவிட்டு, அந்த‌ கார் ஜ‌ன்ன‌லை உற்று பார்த்தான். அந்த‌ க‌ருப்பு க‌ண்ணாடியில் தெரிந்த‌தோ அவ‌ன் அறை பால்க‌னியில் நின்றிருந்த‌ த‌ன் தேவ‌தையின் உருவ‌ம்.

அவ‌ளுமே அவ‌னை பார்க்க‌தான் அவ‌ச‌ர‌மாய் வ‌ந்து நின்றிருந்தாள். அதில் இவ‌ன் இத‌ழ்க‌ள் அழ‌காய் வ‌ளைய‌,  அப்ப‌டியே திரும்பி அவ‌ளை பார்க்க‌, அங்கே அவ‌ள் இல்லை. அதில் புருவ‌த்தை சுழித்து தேடிய‌வ‌ன், பிறகு மெல்ல இத‌ழ் வ‌ளைத்து மீண்டும் கூல‌ரை மாட்டினான்.

இங்கே அந்த‌ ப‌ால்க‌னி தடுப்பின் பின்னால் ஒளிந்து அம‌ர்ந்திருந்த‌வ‌ள், ப‌ட‌ர்ந்திருந்த‌ அந்த‌ இலை கொடிக‌ளை மெல்ல‌ வில‌க்கி பார்க்க‌, அங்கே அவ‌ன் கார் அப்ப‌டியே கேட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்த‌து. அதில் மெல்ல‌ இவ‌ள் முக‌ம் ஏமாற்ற‌ம் பூச‌, வாட‌லாய் அந்த‌ காரையே பார்த்திருந்தாள்.

ஏனோ அவனிடமிருந்து த‌ள்ளி இருக்க‌ வேண்டும் என்று நினைக்கும் த‌ன் ம‌ன‌து, அவ‌ன் த‌ள்ளி செல்வ‌தை ம‌ட்டும் ஏற்க‌ ம‌றுக்கிற‌து. அவ‌ன் அருகாமையில் ம‌ட்டுமே கிடைக்கும் புதுவித‌ இத‌ம், அந்த‌ நிம்ம‌தி அனைத்தும் இப்போது அவ‌னுட‌னே சேர்ந்து தூர‌மாய் செல்வ‌து போன்ற‌ உண‌ர்வு. அப்படியே அவனின் கார் அந்த கேட்டை தாண்டி மறைந்துவிட, மெதுவாய் திரும்பி அந்த‌ தடுப்பில் சாய்ந்த‌ம‌ர்ந்தாள். அடுத்த நொடி அவள் தலையிலிருந்த பூ சரிந்து அவள் மடியில் விழ, அதை மெதுவாய் உயர்த்தி பார்த்தவளின் பார்வை, அதை வைத்துவிட்ட‌வ‌னை எண்ணி ஏக்கமாய் அதன் மீது குவிந்தது.

அப்ப‌டியே நேர‌ம் நக‌ர‌, அறை மெத்தையில் துணிம‌ணிக‌ளை ம‌டித்துக்கொண்டிருந்தாள் அமீரா. இன்னுமே அவ‌ள் முக‌ம் முற்றிலுமாய் வாடிதான் இருந்த‌து. வாட‌ல் ஒன்றும் அவ‌ளுக்கு புதித‌ல்ல‌. ஆனால் இது ஏனோ இன‌ம் புரியா வெறுமை, அவ‌ள் உள்ள‌ம் முழுக்க‌ நிறைந்து, மொத்த‌ உட‌லையும் ம‌ந்த‌மாக்கிய‌துபோல் இருந்த‌து.

அதில் வெறுமையாய் த‌ன் துணிக‌ளை ம‌டித்து வைத்துக் கொண்டிருந்த‌வ‌ளின் ம‌ன‌ம் எதையோ கிடைத்த‌வுட‌ன் இழ‌ந்துவிட்ட‌துப்போல் நொந்து கிட‌க்க‌, “அம்மாடி!” என்ற‌ குர‌லில் அவ‌ள் திடுக்கிட்டு திரும்பினாள்.

“ந‌ல்ல‌வேள‌ இங்க‌தா இருக்கியா?” என்று கையில் மொபைலுட‌ன் உள்ளே வ‌ந்தார் விமலா.

அதில் ச‌ட்டென்று எழுந்து நின்ற‌வ‌ளின் விழிக‌ள் அகல‌ விரிய‌, “நா திரும்ப‌ கால் ப‌ண்ணும்போது ஒட‌னே வாங்கி பேசுற‌. நீ என்ன‌ கிழிச்சுட்டு இருந்தாலும் ப‌ர‌வால்ல‌.” என்ற‌ த‌ன் த‌ந்தையின் வார்த்தைக‌ள் அழுத்த‌மாய் காதில் ஒலிக்க, உடல் நடுங்கியது அவளுக்கு.

அதில் அவ‌ள் வேக‌மாய் முன்னெட்டு வைக்க‌, “இந்தாம்மா நீ பேசிட்டிரு, என‌க்கு கிச்ச‌ன்ல‌ வேல‌ இருக்கு பிடி.” என்று அவ‌ச‌ர‌மாய் கொடுத்துவிட்டு அவ‌ர் ந‌க‌ர‌, அதை வாங்கி அவ‌ச‌ர‌மாய் காதில் வைத்த‌வ‌ள், “ஹ‌லோ அப்..” என்று கூற‌ வ‌ர‌, “அம்மு!” என்ற‌து அவ‌ன் குர‌ல்.

அதில் ச‌ப்த்த‌ நாடியும் அட‌ங்க‌, மொத்த‌மாய் உறைந்து நின்ற‌வ‌ளின் உள்ளே ஆர்ப்ப‌ரித்துக்கொண்டிருந்த‌ பெருங்க‌ட‌ல் அப்ப‌டியே அட‌ங்கிய‌து அந்த‌ குர‌லில்.

இங்கே மொபைலை காதில் வைத்த‌ப‌டி இருக்கையில் ந‌ன்றாய் சாய்ந்தம‌ர்ந்த‌வ‌னின் ம‌று க‌ர‌ம்,  எதையோ விரலிடையில் வைத்து  சுழற்றிக்கொண்டிருந்தது. அத‌ன‌ருகே அப்ப‌டியே மேலே அந்த‌ க‌ருப்பு சுவ‌ரில் இருந்த‌ க‌ருப்பு கடிகாரத்தில் ம‌ணி ச‌ரியாக‌ ஒன்ப‌து என்று காட்டிய‌து. இன்றும் நேர‌ம் த‌வ‌றாம‌ல் ச‌ரியாக‌ ஒன்ப‌து ம‌ணிக்கு இருக்கையில் இருந்த‌வ‌னின் க‌ண்ணில் இப்போது இர‌ச‌னை மின்ன‌, அவன் விரலிடையில் அழ‌காய் தொங்கிக்கொண்டிருந்த‌து அவளின் தங்க ஜிமிக்கி கம்மல்.

அன்று நலங்கு குளத்தில் காணாமல் போனதே அதே கம்மல்தான். அதை இர‌ச‌னையாய் உற்று நோக்கிய‌ப‌டியே வ‌ருடிய‌வ‌ன், “ஓய்!” என்றான் அத்த‌னை மென்மையாக‌.

அந்த‌ குர‌லில் இவ‌ளின் மொத்த‌ ஏக்க‌மும் அட‌ங்க‌, மெல்ல இத‌ழ் வ‌ளைத்து இமையை தாழ்த்திய‌வ‌ள், “ம்ம்” என்றாள் மெல்ல‌மாக‌.

“இப்பிடி அமைதியா இருந்தா என்ன‌ அர்த்த‌ம்?” என்று அவ‌ன் கேட்க‌, அதில் மேலும் புன்ன‌கை விரித்து மெத்தை ஓர‌த்தை  சுர‌ண்டியவ‌ள், “சொல்லுங்க‌.” என்றாள்.

அதில் ந‌ன்றாய் இருக்கையில் சாய்ந்த‌ம‌ர்ந்தவ‌ன், “உங்கிட்ட‌ ஃபோன் இல்ல‌ன்னு கேள்விப்ப‌ட்டேன்? ஏ உன் அப்ப‌ன்  அத‌க்கூட‌ வாங்கி த‌ர‌லயா?” என்று கேட்டான்.

அதில் ச‌ட்டென்று அவ‌ள் உள்ள‌ம் அதிர‌, அவ‌ள் க‌ண்முன் வ‌ந்து நின்ற‌து ஒரு ச‌ம்ப‌வ‌ம்.

அன்றும் வ‌ழ‌க்க‌ம்போல் அவ‌ளின் தோழி த‌ன் த‌ந்தைக்கு அழைத்திருக்க‌, அவ‌ரும் இவ‌ளிட‌ம் வ‌ந்து நீட்டி ஸ்பீக்க‌ரில் போட்டிருந்தார்.

“ஹ‌லோ மீரா!” என்று அவ‌ள் கூற‌, அதில் த‌ய‌க்க‌மாய் த‌ன் த‌ந்தையை பார்த்துவிட்டு மொபைலை பார்த்து, “சொல்லு புவி.” என்றாள் அத்த‌னை த‌ய‌க்க‌மாக‌.

“ச்ச் என்ன‌டி நீ? இண்டியாவோட‌ மிக‌ப்பெரிய‌ பிஸ்ன‌ஸ்மேனோட‌ பொண்ணு.  இப்போ காலேஜ் வ‌ந்தாச்சு. எப்ப‌தா உன‌க்குன்னு ஒரு ஃபோன் வாங்க‌ போற‌?” என்று கேட்க‌, அதில் திடுக்கிட்ட‌ இவ‌ளோ ப‌த‌ற்ற‌மாய் நிமிர்ந்து த‌ன் த‌ந்தையை பார்த்தாள்.

அவ‌ரோ அதே இறுக்க‌மாய் பேசு என்று அழுத்த‌ம் கொடுக்க‌, “இல்ல‌ அது..” என்று இவ‌ள் த‌ய‌ங்க‌, “செரி அத‌ அப்ற‌ம் பேசிக்க‌லாம். நாளைக்குதா ப்ராஜ‌க்ட் ச‌ப்மிஷ‌னுக்கு லாஸ்ட் டேட்டு. அத‌ சொல்ல‌தா கால் ப‌ண்ணேன், ம‌ற‌ந்திராத‌.” என்றாள்.

“ம்ம் ச‌ரி.” என்று இவ‌ள் கூறி முடிக்கும் முன்பே, இணைப்பை க‌ட் செய்தார் லிங்கா. அதில் அவ‌ள் திடுக்கிட்டு நிமிர‌, ப‌ளாரென்று அவ‌ள் க‌ன்ன‌த்தில் அடித்திருந்தார்.

அதில் பொத்தென்று அவ‌ள் மெத்தையில் புதைய‌, அவ‌ள் பிட‌ரியை பிடித்து நிமிர்த்தி, “ஃபோன் வேணுமா உன‌க்கு? ஹ‌?” என்று க‌ண்க‌ளை விரித்து கோப‌மாய் கேட்க‌, அவ‌ளோ வ‌லியில் இறுக்கி விழி மூடி, “ஆ!” என்று பின் ம‌ண்டையை பிடிக்க‌, அதை மேலும் இறுக்கி பிடித்து, “ஆள் வெச்சு கேக்குற‌ அள‌வு வ‌ந்துட்டியா நீ?” என்று க‌த்தி கேட்க‌, அவ‌ளோ அவ‌ச‌ர‌மாய் இல்லை என்று த‌லைய‌சைக்க‌, ப‌ளாரென்று ம‌று க‌ன்ன‌த்திலும் அடித்திருந்தார்.

அதில் பொத்தென்று த‌ரையில் வ‌ந்து விழுந்த‌வ‌ள், அப்ப‌டியே த‌ரையை பிடித்து க‌த‌றி அழ‌, மீண்டும் அவ‌ள் பிடரியை இறுக்கி பிடித்து தூக்கி நிறுத்தி, “எவ‌ன் உங்கிட்ட‌ ந‌ம்ப‌ர் கேட்டான் சொல்லு.” என்று கூற‌, அவளோ க‌ண்ணீருட‌ன் இல்லை என்று த‌லைய‌சைக்க‌, “எவ‌ன்கூட‌ பேசிற‌துக்காக‌ ஃபோன் உன‌க்கு? ஹ‌?” என்று மீண்டும் ப‌ளாரென்று அரைந்தார். அதில்  பொத்தென்று த‌ரையில் விழுந்தவ‌ள், க‌த‌றி அழுத‌ப‌டியே நிமிர்ந்து அவ‌ரை பார்த்து,  வேண்டாம் என்று த‌லைய‌சைத்த‌ப‌டியே பின்னால் ந‌க‌ர்ந்தாள்.

“அவ்ளோ தைரிய‌ம் ஆயிருச்சா உன‌க்கு?” என்று அவ‌ர் கோப‌மாய் முன்னால் அடியெடுத்து வைக்க‌, இவ‌ளோ வேக‌மாய் அங்கிருந்து ஓட‌ போக‌, அவ‌ள் முடியை கொத்தாய் பிடித்து மீண்டும் த‌ரையில் த‌ள்ளிய‌வ‌ர், அறை க‌த‌வை இழுத்து தாழிட்டார்.

அதில் அதிர்ந்த‌ இவ‌ளோ ந‌டுங்கிய‌ப‌டி பின்னால் ந‌க‌ர‌, அவ‌ளின் முன்பு நீள‌மாய் தொங்கிய‌து அவ‌ரின் லெத‌ர் பெல்ட்டு. அதில் அதிர்ந்து உட‌ல் விரைக்க‌ வாயில் கை வைத்து அழுகையை விழுங்கிய‌வ‌ள், அத்த‌னை ந‌டுக்க‌மாய் பின்னால் ந‌க‌ர, ச‌ட்டாரென்று ஒரு ச‌த்த‌ம்.

“அ…!” என்று அவ‌ள் அல‌ற‌, வெளியே வேலையாட்க‌ள் அனைவ‌ரும் திரும்பி அந்த‌ ஒரு அறையைதான் பார்த்த‌ன‌ர். அங்கே அடுத்த‌டுத்து அவ‌ளின் அல‌ற‌ல் ச‌த்த‌ம் ம‌ட்டுமே அந்த‌ வீடெங்கும் எதிரொளித்த‌து.

அதை நினைத்து பார்த்த‌வ‌ளின் உட‌ல் இன்னுமே ந‌டுக்க‌த்தை உண‌ர‌, “ஓய்!” என்ற அவ‌னின் குர‌லில்தான் மீண்டும் ந‌ட‌ப்புக்கு வ‌ந்தாள்.

“நா கேட்ட‌துக்கு இன்னும் ப‌தில் வ‌ர‌லையே.” என்றான்.

“அ..அத் நா..” என்று த‌டுமாறிய‌வ‌ளின் க‌ர‌ங்க‌ள் ந‌டுங்க‌, த‌ன் முக‌த்திலிருந்த‌ விய‌ர்வையை அழுத்தி துடைத்தாள்.

“ச‌ரி அத‌ விடு. இப்ப எனக்கு வேற ஒரு பதில்தா அவசரமா வேணும்.” என்றான்.

அதில் பதற்றமாய் புருவத்தை நெளித்து, “எ..என்ன பதில்?” என்று இவ‌ள் கேட்க, அவனோ மொபைலை  தன் இதழருகே கொண்டு வந்து மெல்லிய குரலில் எதோ கூறினான். அடுத்த நொடி அவள்  மொத்த உடலும் அதிர்வை உணர, அகல விழி விரித்தாள். இவனோ குறும்பாய் இதழ் வளைந்தான்.

        – நொடிக‌ள் தொட‌ரும்….

You may also like

Leave a Comment

About Me

Featured