Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 6

போதையடி நீ எனக்கு CH 6

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 6

இப்போது நீசப்த்தமான அந்த அறையில் மயக்கத்தில் கிடைக்கும் அந்த பெண்ணும், ரிஷியும் மட்டுமே இருந்தார்கள். 

ஏதோ தீண்ட தகாத ஒன்றை பார்ப்பது போல தன் அருகில் இருந்தவளை பார்த்த ரிஷி அவள் முகத்தில் விழுந்து கிடந்த கூந்தலை தனது ஒற்றை விரலால் அவளுடைய காதுக்கு பின்னே தள்ளினான். 

அவள் முகத்தில் மேக்கப் போடப்பட்டு இருந்தது. ஆனால் அவளுடைய அந்த சிறிய முகத்தில் இருந்த அப்பாவித்தனம் அவளை தனித்துவமாக காட்ட, “இவளுக்கு மேக்கப்பே தேவையில்லை. நேச்சுரலாவே அழகா இருப்பா.” என்று நினைத்த ரிஷி ‌ தனது பார்வையை அவள் உடல் முழுவதும் மேய விட்டான். 

அவளுக்கு எப்படியும் 24 இருந்து 26 வயது வரை இருக்கலாம் என்று அவன் மூளை அவனிடம் சொல்ல, 

அவள் முகத்தில் தெரிந்த அப்பாவித்தனத்தை பார்த்த அவனுக்கு என்னவோ இந்த இடத்திற்கு இவள் பொருந்தாதவளை போல அவன் மனதிற்கு தோன்றியது. 

அவள் பெயர் என்னவென்று யோசித்தான். ஒருவேளை அவள் மயக்கத்தில் இல்லாமல் இருந்தால் கேட்டிருக்கலாம். 

இல்லை என்றால் இவளை இங்கே அழைத்து வந்தவர்களிடம் தான் விசாரிக்க வேண்டும். 

என்று ரஷியின் மனதில் ஆயிரம் கேள்விகள் ஓடிக் கொண்டே இருக்க, என்னவோ அவளை நெருங்கி செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவனுக்குள் வரவே இல்லை. 

இருப்பினும் என்னவோ அவள் அவனுக்கு இன்ட்ரஸ்டிங்காக தெரிந்ததால், தனது சூழ்நிலையை மனதில் வைத்து அவளை நெருங்கி சென்றான் ரிஷி. 

அவளது உடலில் இருந்து ஹெவியான பர்ஃபியூம் ஸ்மில் வருவதை அவனால் உணர முடிந்தது.

ஆனால் அதையும் தாண்டி அவள் முகத்தை அவன் குளோசப்பில் சென்று பார்க்கும் போது அவளது இயற்கையான நறுமணம் அந்த செயற்கை வாசனை திரவியத்தையும் தாண்டி வெளிவருவதை உணர்ந்த தன்னையும் அறியாமல் அவள் பால் ஈர்க்கப்பட்டான். 

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured