தன் தந்தையிடம் பேசிவிட்டு பொத்தென்று மெத்தையில் அமர்ந்துவிட்டவள், மொபைலை இறக்கிவிட்டு சத்தமில்லாமல் கதறி அழுதாள். வெறும் கற்பனையிலேயே தன்னை இவ்வளவு கேவலமாக சித்தரித்து இவர் கொடுக்கும் சித்திரவதைகளை நினைத்து நினைத்து அவள் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்துக்கொண்டிருக்க, திடீரென்று அவள் முகத்தில் கருப்பு டவளை மூடி இழுத்துக்கொண்டது ஒரு கரம்.
அதில் திடுக்கிட்டு அவன் மார்புக்குள் புதைந்தவள், அடுத்த நொடி பதறி விலக போக, அவள் தோள்களை அழுத்தி பிடித்து நகரவிடாமல் செய்தவன், “இன்னும் தலைய தொவட்டாம என்ன பண்ணிட்டிருக்க?” என்றான்.
“அத்.. தொவட்டணும்..” என்றபடி அவள் விலக முயல, அவளை இழுத்து மீண்டும் தன் மார்பில் சாய்த்தவன், “எப்போ? தண்ணியெல்லா உள்ள எறங்குனதுக்கப்றமா?” என்றபடி அவனே துவட்டிவிட ஆரம்பித்தான்.
அதில் அப்படியே அமைந்தலடைந்தவளின் கன்னம் அவன் மார்பில் புதைந்திருக்க, அவளின் கண்ணீர் நிறம்பிய விழிகளில் வந்து நின்றது ஒரு சம்பவம்.
அன்றும் இதேப்போல் ஈர தலையோடு அவள் அழுதுக்கொண்டிருக்க, அவள் முகத்தில் வந்து விழுந்தது ஒரு வெள்ளை டவள். அதில் அவள் திடுக்கிட்டு அதை விலக்கிவிட்டு நிமிர, “தலைய எப்ப தொவட்டுவ? தண்ணியெல்லா உள்ள எறங்கி எனக்கு செலவு வெச்சதுக்கு அப்றமா?” என்று கோபமாய் கேட்டார் லிங்கா.
அதில் பதறி எழுந்து நின்றவள் இல்லையென்று வேகமாய் தலையசைக்க, “இன்னொரு தெடவ மழையில நனஞ்சுட்டு வந்து நின்ன.. கொதிக்கிற தண்ணிலதா குளிக்க வெப்பேன்.” என்று பல்லை கடித்து கூறினார்.
அது இன்னுமே அவள் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்க, அவள் கண்ணீர் வழிந்து அவனின் கருப்பு உள்பனியனை நனைத்தது. அதில் அவளை மெல்லியதாய் விலக்கி, அவளின் முன் பக்க கூந்தலையும் அவன் துவட்ட ஆரம்பிக்க, அவளோ மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தாள். அந்த ஈர முடி கற்றைகளின் இடைவெளியில் அவனின் முகம், அதில் முதல் முறையாய் அக்கறை தெரிய, இவள் கண்ணீர் மெல்ல அடங்கியது.
அப்படியே அவன் கரம் அவள் காதருகில் நுழைந்து துவட்ட, சிலிர்வாய் மூடியது இவளின் விழிகள். அவன் மறுகரம் அப்படியே அவளின் உச்சியில் அழுத்தி துவட்டிவிட, அவள் முகத்தை பட்டும் படாமல் உரசியது அவனின் மார்பு பகுதி.
அதில் அவள் மெதுவாய் விழி திறக்க, அந்த வெற்று மார்பில் இன்னுமே மிச்சமிருந்த வியர்வையின் ஈரம் அவனின் வாசனையை முழுதாய் அவள் நாசிக்குள் நிரப்பியது. அதில் அப்படியே அவள் அவனின் மார்பில் சாய்ந்துக்கொள்ள, இவனும் வாகாய் மிச்சமிருந்த பகுதியை துவட்டினான். அதில் அவனுள் முழுதாய் புகுந்துக்கொண்டவளின் முகத்தில் ஒட்டியிருந்த கண்ணீர் மொத்தமும் அவன் உள்பனியன் உறிந்திருந்தது.
அதில் மெல்ல அவள் மனம் லேசாக துவங்க, நிம்மதியாய் விழி மூடினாள். இதே மார்புக்குள்தான் நேற்று கட்டிலடியில் முதல் முறையாய் நிம்மதியை உணர்ந்தாள். இதற்கு முன்பு நிம்மதி என்பதை அவள் அனுபவித்ததே கிடையாது என்பதே உண்மை. தன் தந்தையிடம் தப்பி தாயின் மார்புக்குள் தஞ்சம் புகும்போதுகூட, தாயையும் இழுத்து வைத்து அடிப்பார் அந்த அரக்கன். என்றுமே தாயிடம்கூட அப்படியொரு நிம்மதி அவளுக்கு கிடைத்ததில்லை, தாயையும் தாண்டிய தஞ்சம் இவனிடம் கிடைத்தது போன்ற ஒரு உணர்வு. என்றுமே ஏதோ ஒரு பயத்தில் படபடத்துக்கொண்டே இருக்கும் அவளின் இதயம், இந்த மார்புக்குள் இருக்கும்போது மட்டும் சீராய் துடிக்கிறது, பாதுகாப்பை உணர்கிறது.
அதில் அனைத்தும் மறந்து நிம்மதியாய் மூச்சை இழுத்துவிட்டவள், அப்படியே அவனை கட்டிக்கொள்ள போக, மெதுவாய் அவளை விலக்கினான் அவன். அதில் அவளும் மெதுவாய் இமையை பிரிக்க, அவளின் முன்பக்க கூந்தலை விலக்கி பின்னால் போட்டவன், அவளின் நெற்றி பகுதியையும் துவட்டிவிட்டான். அதை வாகாய் அவனுக்கு காட்டியபடியே சுகமாய் அவள் விழி மூட, அவள் நெற்றியில் மென்மையாய் பதிந்தது அவன் இதழ்கள். அதில் முகமெங்கும் மென்மையாய் ஒரு இதம் பரவ, சுகமாய் அவள் புருவங்கள் தளர்ந்தது. அந்த புருவத்தில் விழுந்திருந்த ஒற்றை முடியை அவன் ஒற்றை விரல் அழகாய் ஒதுக்கி காதாரோரம் சொருக, அவள் கன்னத்தில் பதிந்தது அவன் இதழ்கள். அதில் ஜில்லென்ற சிலிர்வு அவள் உடலெங்கும் பரவ, அவன் பனியன் நுனியை சுருட்டி பிடித்தது அவள் விரல்கள். அவன் விரல்களோ அவள் காதோரம் மெதுவாய் நுழைய, சிலிர்வாய் புருவத்தை குறுக்கினாள். அந்த புருவத்தின் நடுவே மீசை பதிய முத்தமிட்டவன், “ஓய்!” என்றான் மெல்லிய குரலில்.
அதில் அவள் மெதுவாய் விழி திறக்க, அவ்விழிகளுள் தன் விழியை கலக்கவிட்டவன், “அமீரா ரைட்?” என்று மெல்லமாய் கேட்டான். அதில் அவளும் மெல்லியதாய் ஆம் என்று தலையசைக்க போக, அவள் கூந்தலை இறுக்கி பிடித்து தன் பக்கம் இழுத்தான். அதில் அவள் திடுக்கிட்டு அவன் விழிகளை பார்க்க, அவனோ மிக மெல்லிய குரலில், “அது மத்தவங்களுக்கு. எனக்கு..” என்றபடி அவள் முகமுரச இதழில் பார்வையை குவிக்க, அவ்விதழ்களை உரசி நின்ற அவனின் இதழ்கள் மெல்லியதாய் பிரிந்து மெல்லிய குரலில், “அம்மு” என்று அவ்விதழ்களை அழுத்தி மோதி கூறியது.
அந்த வார்த்தை சட்டென்று அவள் இதயத்தில் எதிரொளியாய் ஒலிக்க, புருவம் விரித்து அவனை பார்த்தாள். அவனோ மெதுவாய் பார்வையை நிமிர்த்தி அவள் விழி பார்த்து, “மை அம்மு” என்றான் அதே மெல்லிய குரலில்.
அதில் அவள் விழிகள் வியப்பாய் அவன் விழிகளை ஆராய, அவனோ மெல்ல இதழ் விரித்து புன்னகைத்தபடியே அவளைவிட்டு பிரிந்து எழுந்தான். அதில் அவள் அவனையே விழி அகலாது பார்க்க, அவனோ அதே டவளை தன் கழுத்தில் போட்டுக்கொண்டு திரும்பி குளியலறைக்குள் புகுந்தான்.
அவன் உள்ளே நுழையும் வரையிலும் அவனையே பார்த்தபடி இருந்தவளின் மனதில் அம்மு என்ற அவனின் குரல் ஆழமாய் ஒலித்தது. இதுவரை தந்தை முதல் தோழிகள் வரை மீரா, அமீரா என்பதை தாண்டி வேறு பெயர் அவளுக்கு இருந்ததில்லை. அவளின் தாய்கூட குட்டிம்மா என்றுதான் அழைப்பார். எனவே இந்த அம்மு என்ற அழைப்பு இவளுள் புதுவித உணர்வை கிளப்ப, அவள் அடி மனதில் இனம் புரியா சிலிர்வு மெதுவாய் படர்ந்தது. அதில் அவளையும் மீறி அவளின் இதழ்கள் மெதுவாய் வளைய, அப்படியே பார்வையை தாழ்த்தி புன்னகைக்கவும், அவள் முகத்தில் விழுந்தது அவளின் கூந்தல். அதில்தான் நிமிர்ந்து தன் கூந்தலை தொட்டு பார்த்தவள், இப்போது நன்றாய் காய்ந்திருக்கவும் அதனிடையில் தெரிந்த அவனின் முகம்தான் கண்முன் வந்தது. அதில் மேலும் அவள் இதழில் வெட்க புன்னகை விரிய, அப்படியே எழுந்து சென்று தலைவாரினாள்.
இங்கே கிச்சனில் அவசர அவசரமாய் சமைத்துக்கொண்டிருந்தார் விமலா. அப்போதே அமீரா தயக்கமாய் சுற்றி பார்த்தபடி உள்ளே நுழைய, அன்னிச்சையாய் அவளை கவனித்தவர், “அட வாம்மா. உள்ள வா.” என்றார் புன்னகையுடன்.
அதில் அவளும் தயக்கமாய் அவர் அருகில் வந்து, “நா எதாவது ஹெல்ப் பண்ணவா?” என்று கேட்க, “தாராளமா. செரி ருதன் என்ன பண்றான்? கெளம்பிட்டானா?” என்று கேட்டார்.
“ஆங்.. அவரு குளிச்சிட்டு இருக்காரு.” என்று அவள் கூற, “ஓ செரிம்மா. அவனோட ப்ரேக் ஃபாஸ்ட் ரெடியாதா இருக்கு, நீ போய் குடுத்திட்டு வந்திரு.” என்றார் அவசரமாக.
அதில் சட்டென்று அவளுள் பூகம்பமே கிளம்ப, திரும்பவுமா என்று விழி விரித்தாள். “என்ன ஆச்சு?” என்று அவர் புரியாது கேட்க, “ஆங் ஒன்னும் இல்ல.” என்றாடி தயக்கமாய் பார்வையை தாழ்த்தினாள்.
அதில் புன்னகைத்து அவள் அருகில் வந்தவர், அவள் கன்னம் பற்றி தன்னை பார்க்க செய்து, “உன் தயக்கம் புரியுதும்மா. பட் ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன். கல்யாணமே வேண்டான்னு இருந்தவன், எந்த பொண்ணையுமே திரும்பிக்கூட பாக்காதவன், உன்ன பாத்ததுமே ஓகேன்னு சொல்லிருக்கான்னா..” என்றபடி அவள் தாடையை பிடித்து அவள் விழி பார்த்து, “உன்ன அவனுக்கு எந்த அளவு பிடிச்சிருக்கும்னு புரிஞ்சுக்கோ.” என்று கூற, சிறு வியப்பாய் அவர் விழிகளை பார்த்தாள் அமீரா.
“அவனுக்கு பிடிக்குறதுக்கு ரீசன் எதுவா வேணுன்னாலும் இருக்கலாம். ஆனா ஒன்ஸ் பிடிச்சிருச்சுன்னா, அது எதுவா இருந்தாலும் அவனோட உயிருக்கு சமமா நெனப்பான்.” என்றார் சிறு அழுத்தத்துடன்.
அதில் அவளுக்கோ மீண்டும் அன்றிரவு அவனின் காரை தொட்டவர்கள் உயிரை உருகுழைத்ததுதான் கண்முன் வர, இம்முறை அடிவாங்கியவர்கள் அல்ல அடித்தவனின் முகமே கண்முன் நின்றது. அந்நிமிடம் அவன் கண்ணிலிருந்த வெறி, அந்த ஆக்ரோஷம், அனல் அதுவே கூறியது அந்த கார் அவனுக்கு எந்த அளவு முக்கியம் என்று.
அந்த யோசனையில் உறைந்து நின்றிருந்தவளை, “அம்மாடி!” என்ற விமலாவின் குரல் நிகழ் உலகிற்கு இழுத்து வர, திடுக்கிட்டு அவரை பார்த்தாள்.
“இந்தாம்மா.” என்று அவள் கையில் உணவை கொடுத்தார் விமலா.
அதில் அவள் திடுக்கிட்டு அந்த உணவை பார்க்க, அதில் வெறும் ஃப்ரூட் சேலட்டில் ஃபோர்க் வைத்து கொடுத்திருந்தார். அதில் அவள் நிமிர்ந்து அவரை பார்க்க, அவள் பார்வை புரிந்த அவரும் மெல்லியதாய் புன்னகைத்து, “அவன் எப்பவும் காலையில லைட்டாதா சாப்புடுவான். ஆஃபிஸ்க்கு லேட் ஆனா அவனுக்கு பிடிக்காது.” என்றார்.
“ஓ” என்றபடி அவள் தயக்கமாய் அந்த உணவை பார்க்க, “அதோட லேட்டா கொண்டு போனா சாப்படாமலே கெளம்பிருவான்.” என்றார் விமலா.
அதில் அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து அவரை பார்க்க, “சீக்கிரமா போய் குடும்மா. இந்நேரம் கெளம்பிருப்பான்.” என்றார் அவசரமாக. அவரின் பதற்றத்தில் இவளும் பதறி அங்கிருந்து நகர்ந்திருக்க, படிகள் ஏறி தங்கள் அறைக்கு வந்த பின்தான் சட்டென்று அப்படியே நின்றிருந்தாள்.
இப்போதே அவள் மனம் பதற்றத்தை தாண்டிய பயத்தை உணர, அவள் உள்ளங்கால் நடுங்கியது. அதில் அப்படியே குனிந்த கையிலிருந்த உணவை பார்த்தவளின் இதயம் பலமாய் துடிக்க, காஃபிக்கே அப்பிடி உணவுக்கு என்னவெல்லாம் செய்ய போகிறானோ என்று அவள் மனம் வெகுவாய் பதறியது. அதில் மெதுவாய் உள்ளே அடியெடுத்து வைத்தவள், சட்டென்று அப்படியே உறைந்து நின்றாள்.
அங்கே கண்ணாடி முன்பு நின்று, கருப்பு கோட் சூட்டில் தயாராகி தலை வாரிக்கொண்டிருந்தான் ருதன். அதில் இவளின் அஸ்த்திபாரமே ஆட்டம்காண தயக்கமாய் பின்னால் அடியெடுத்து வைக்க போக, “உள்ளா வா.” என்றான் அதிகார குரலில்.
அதில் அவள் திடுக்கிட்டு அவனை பார்க்க, அவனோ அவள் பக்கம் திரும்பக்கூட இல்லை. தலைவாரிய சீப்பை கீழே வைத்துவிட்டு தன் கருப்பு வாட்சை எடுத்து கட்ட ஆரம்பித்தான். இவளோ தயக்கமாய் முன்னால் அடியெடுத்து வைத்து உள்ளே வர, “அங்க வெச்சிரு.” என்றான் வாட்சை கட்டியபடியே.
அதில் திடுக்கிட்ட அவளும் தயக்கமாய் குனிந்து அந்த ஃப்ரூட் சேலட்டை அந்த மெத்தையிலேயே வைத்துவிட்டு, வேகமாய் திரும்பி நகர போக, “நில்லு.” என்றான் ருதன்.
அதில் திடுக்கிட்டு நின்றவளின் இதயம் அத்தனை பலமாய் துடிக்க, மெதுவாய் திரும்பி அவனை பார்த்தாள். அவனோ அப்போதும் அவளை பாராமல் கண்ணாடியில் தன் காலரை சரி செய்தபடியே, “அந்த டவள பல்கனியில காய போட்டிரு.” என்றான்.
அதில் அவளும் குழப்பமாய் கீழே தேட, அங்கே அவளருகேவே கிடந்தது அந்த ஈர டவள். அதை வேகமாய் கையில் எடுத்தவள், உடனே பால்கனி பக்கம் சென்றாள். அதில் இவனின் இதழ்கள் அழகாய் வளைய, அங்கே பால்கனிக்கு வந்தவளோ சட்டென்று திகைத்து நின்றிருந்தாள்.
அவள் விழிகள் பிரம்மிப்பில் அகல விரிய, உள்ளிருந்த அவள் விழி திரையினுள் அந்த ஒரு நாள் கண்முன் வந்து நின்றது.
அன்று அந்த பூங்காவில் இருவருக்கும் இடையே நின்ற பூவேலிக்குள் இவளின் பிஞ்சு விரல்கள் நுழைத்து ஒரு அழகிய பூவை பறிக்க முயல, உடனே முள் கிழித்து கரத்தை உருவிக்கொண்டாளே. அதே அழகிய பூதான் இன்று இந்த பால்கனி முழுக்க நிறைந்து இருந்தது. அதில் அத்தனை வியப்பாய் முன்னால் சென்று சுற்றியும் பார்க்க, அவள் முகம் உரசும் அளவிற்கும் அந்த பூங்கொடிகள் தொங்கி கிடந்தது. அதில் அவள் முகம் இரசனையாய் புன்னகை விரிக்க, அப்படியே கரத்தை விரித்து மீண்டும் சுற்றியும் பார்த்தாள்.
அங்கே அழகாய் படர்ந்த தென்றலின் நடுவே மிதமாய் அசைந்தாடிய அந்த பூக்களின் அழகில் அந்த இடமே பார்க்க அத்தனை அழகாய் காட்சியளிக்க, கையருகே இருந்த பூவொன்றை தொட்டு மெல்லியதாய் அதில் இதழ் பதித்தாள். அதில் அமர்ந்திருந்த பனிதுளி அவள் இதழில் பட்டு கரைய, அழகாய் வளைந்தது அவளிதழ்கள். அப்படியே அவள் அடுத்த பூவிலும் முத்தமிட, அவளின் முதுகில் மொத்தமாய் புதைந்து அவளை பின்னிருந்து அணைத்தான் ருதன். அதில் அவள் திடுக்கிட்டு திரும்ப முயலும் முன், அவளை முழுதாய் தனக்குள் சுருட்டிக்கொண்டவன், “டூ யூ லைக் திஸ்?” என்றான் மெல்லிய குரலில்.
அதில் அவள் மெல்லியதாய் அவன் பக்கம் திரும்பி, “இ.து.. எனக்காகதா..” என்று கேட்க வர, “நெவர்.” என்றான்.
அதில் அவள் புரியாது அவன் விழிகளையே பார்க்க, மேலும் அவளுள் புதைந்து அவள் கன்னத்தில் தன் தாடியை புதைத்தவன், “எனக்காக.” என்றான் அத்தனை மென்மையாக.
அதில் அவள் புரியாது விழித்தபடி அந்த பூக்களையே பார்க்க, “உன்னோட பரசன்ஸ் என்கூடவே இருக்கனும்னுதா அந்த ஒரு ஃப்லவர இத்தன ஃப்லவரா மாத்துனேன்.” என்றான். அன்று அவள் பறிக்காமல் விட்ட பூவை இவன் மெதுவாய் பறித்து பத்திரமாய் எடுத்து சென்றிருந்தானே. அந்த ஒரு பூதான் இன்று இத்தனை பூவாய் மாறியிருந்தது.
அதே பூக்களை இவள் குழப்பமாய் பார்த்தபடி நிற்க, அவள் காதோரம் மீசையை நுழைத்து, “யுவர் ஃபேவ்ரட் கலர் இஸ் பிங்க் ரைட்?” என்றான் மெல்லிய குரலில்.
அதில் அவள் திடுக்கிட்டு திகைத்து அவனை பார்க்க, அவனோ கேள்வியாய் புருவத்தை நெளிக்க, “உங்..களுக்கு எப்டி..” என்று அவள் தடுமாற, அதில் மெல்ல இதழ் வளைத்தவன், மெதுவாய் அவள் இடைக்குள் கரத்தை நுழைக்க, அவளோ திடுக்கிட்டு உடலை குறுக்க, அவள் இடையுரச அப்படியே கரத்தை வளைத்து அங்கிருந்த பூ ஒன்றை பறித்தான். அதில் தான் அவள் சுவாசம் சீராக, அப்பூவை மெதுவாய் உயர்த்தி அவள் முன் நீட்டியது அவன் கரம்.
அதில் அவளின் பார்வை கேள்வியாய் அதில் குவிய, அன்று அந்த புல்வேலியில் அத்தனை பூக்கள் இருந்தும், அனைத்தையும் கடந்து நடந்து வந்து ஒரு இடத்தில் நின்றவள், அப்போதும் அவள் பக்கமே நிறைய வண்ணங்கள் இருந்தும் அவள் பறிக்க முயன்றது என்னவோ உள்பக்கம் இருந்த இந்த பிங்க் நிற பூவைதான். அந்த பிங்க் நிற பூதான் இன்று இந்த இடம் முழுக்க நிறைந்திருந்தது.
ஆனால் அதை வைத்தே முடிவு செய்துவிட்டானா என்பதுப்போல் ஆச்சரியமாய் அவள் அவனை பார்க்க, அவனின் பார்வையோ இப்போது அவளின் புடவையை அழுத்தி காட்டியது. அதில் புருவம் விரித்தவள் வேகமாய் குனிந்து தன் புடவையை பார்க்க, காலையில் கப்போர்டை திறந்த போது உள்ளே வெறும் புடவையாக நிறைந்து இருக்கவும் வாடலாய் முகம் சுருங்கினாள். இனி இவர்களுக்கு பிடித்த மாதிரிதானே இருக்க வேண்டும் என்று தன்னை சமாதானம் செய்துக்கொண்டாலும் அவள் கரம் எடுத்தது என்னவோ அவளுக்கு பிடித்த பிங்க் நிற புடவையைதான். அதைதான் அவள் இப்போது கட்டியிருக்க, வியப்பாய் நிமிர்ந்து அவனை பார்க்கும் முன் அவளின் காதோரம் அழகாய் அந்த பூவை சொருகிவிட்டான் ருதன்.
அதில் அவள் சிலிர்வாய் விழி மூட, அப்படியே விரல்களை விலக்கி, “பெர்பெக்ட் மேட்ச்” என்றவன் அவளின் முகத்தில் விழுந்த கூந்தலையும் ஓரம் ஒதுக்கி அங்கே மென்மையாய் முத்தமிட்டான்.
அதில் மெதுவாய் விழி திறந்தவளின் பார்வை வியப்பாய் அவனை தழுவியது. இத்தனை வருடம் அவளின் தந்தைக்கு கூட தெரியாத ஒன்றை, வந்த முதல் நாளே இவன் கண்டுபிடித்திருக்க, கீழே விமலா கூறியவைகள்தான் அவள் கண்முன் வந்தது.
“கல்யாணமே வேண்டான்னு இருந்தவன், எந்த பொண்ணையுமே திரும்பிக்கூட பாக்காதவன், உன்ன பாத்ததுமே ஓகேன்னு சொல்லிருக்கான்னா.. உன்ன அவனுக்கு எந்த அளவு பிடிச்சிருக்கும்னு புரிஞ்சுக்கோ.” என்ற வார்த்தைகள் அவள் காதில் ஒலிக்க, அந்த காதருகே பள்ளத்தில் படர்ந்தது அவனின் இதழ்கள்.
அதில் அவள் விழிகள் கூச்சத்தில் சொருக, அப்படியே அவன் தோள் வளைவில் புதைந்து அவளின் தலை. அதில் வாகாய் அவன் இதழ்கள் அவள் மார்புக்குழிக்குள் பயணிக்க, கூச்சமாய் மார்பை குறுக்கியவள் மெதுவாய் அவன் சிகைக்குள் விரல்களை நுழைத்து முழுதாய் அவன் பக்கம் திரும்பினாள். அதில் அவன் வாகாய் அவளின் முன் கழுத்தில் புதைய, அதில் அவளின் தொண்டை பதற்றமாய் ஏறி இறங்கியது. அதை மெல்லியதாய் அவன் கடிக்க, “ஸ்ஸ்” என்று முகத்தை குறுக்கியவள், அவன் தோள்சட்டையை சுருட்டி பிடித்தாள்.
அதில் கடித்த இடத்தை மீசையால் அவன் அழுத்தி துடைக்க, புருவத்தை குறுக்கி மெதுவாய் தாடையை இறக்கினாள். அதில் அவனின் இதழ்களும் மெல்ல அவள் தாடை வழியே படர்ந்து அவள் இதழுக்கு வந்து நிற்க, அதில் பதற்றமாய் தன் இதழ்களை பிரித்து, “உங்க..கிட்ட ஒன்னு கேக்கட்டுமா?” என்று அவள் கேட்க, அந்த இதழில் பட்டும் படாமல் ஒரு முத்தம் வைத்தவன், “ம்ம்” என்றான் மெல்லமாக.
அதில் தடுமாற்றமாய் பிரிந்த அவளின் இதழ்கள் அவன் மீசை நுனியை உரசி நிற்க, “எ..என்ன ஏ புடிச்சிருக்கு?” என்று கேட்டாள்.
அதில் அவன் நிமிர்ந்து அவள் விழி பார்க்க, அவளோ தடுமாற்றமாய் அவன் விழிகளை சந்திக்க, மீண்டும் அவள் இதழ்களில் பார்வையை குவித்து, மெதுவாய் அதை ஈரம் செய்தவன், “அவசியம் தெரிஞ்சுக்கணுமா?” என்று மெல்லிய குரலில் கேட்டான். அதில் அவள் இதழ்கள் தடுமாற, “ம்ம்” என்றாள்.
– நொடிகள் தொடரும்…