Home FREE NOVELSமூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 56

மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 56

by Thenaruvi Tamil Novels
10 views

அத்தியாயம் 56

அக்ஷயா அனைவரின் முன்னிலையிலும் எதுவும் ரெகார்ட் செய்துவிடக் கூடாது என்பதற்காக பாலா அவளை தனியாக அழைத்து சென்றான். கோபமாக அவனைப் பார்த்த அக்ஷயா “என்ன மாமா நீங்க எப்படி இருக்கீங்க? அவ ஒரு ஆளுன்னு நான் அவளை பாத்து பயப்படனுமா? உங்களுக்கு அவ ஃபிரண்டு தானே.. அதான் என்னை கன்வின்ஸ் பண்ற மாதிரி எதை எதையோ சொல்லி அவளை என் கிட்ட இருந்து காப்பாத்த பாக்கறீங்களா!” என்று கோபமாக கேட்டாள்.

“அடடா அக்ஷு.. ஒரு விளம்பரத்துல பசி வந்தா நீ நீயா இருக்க மாட்டேன்னு சொல்லுவாங்களே.. அந்த மாதிரி பேசிட்டு இருக்க நீ!   ஐஸ்வர்யா என் ஃபிரண்டுங்கறதுனால அவ எனக்கு இம்பார்டன்ட்னா, அப்ப நீ மட்டும் எனக்கு இம்பார்ட்டன்ட் இல்லையா? நீ, அஸ்வின், ஐசு எல்லாருமே எனக்கு இம்போர்டன்ட் தான்.

நீ ஐஸ்வர்யா ஃபேமிலி பத்தி சொல்றது எல்லாமே கரெக்டு தான். பட் நீ புரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா, அவங்க யாருமே இப்ப உயிரோட இல்ல அக்ஷயா. அவங்க பண்ண தப்புக்கு அவங்களுக்கு பனிஷ்மென்ட் கிடைச்சிருச்சு. அந்த கேஸ்ல அஸ்வின் இன்னும் சஸ்பெக்ட்டா இருக்கான். ஐஸ்வர்யா அவனுக்கு சப்போர்ட் பண்றதுனால தான் அவன் மேல டைரக்ட்டா போலீஸ் எந்த ஆக்சன் எடுக்காம இருக்காங்க. லூசு தனமா இப்ப போய் நீ இத்தனை பேர் முன்னாடி ஐஸ்வர்யா கிட்ட சண்டை போட்டா அதனால அவளுக்கு ஒன்னும் ஆக போறது இல்ல. உங்க அண்ணன் அஸ்வினுக்கு தான் பிராப்ளம் வரும்.

எல்லாரும் அஸ்வினுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நடுவுல எல்லாம் ஸ்மூத்தா போயிட்டு இருக்குன்னு நம்பிட்டு இருக்காங்க. அப்படி போகுற வரைக்கும் தான் அஸ்வினுக்கு நல்லதும் கூட.. ஐசுவோட அப்பா கம்பெனியை அஸ்வின் டோட்டலா டேக் பண்ணி இருக்கான். சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம அவசரப்பட்டு எதுவும் பண்ணிடாத அக்ஷயா ப்ளீஸ்!” என்று பொறுமையாக அக்ஷயாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னான் பாலா.

அவன் சொன்னதைக் கேட்டவுடன் அக்ஷயா வாய் அடைத்து போய் விட்டாள். நடந்த அனைத்தும்  அவளுக்கு ஓரளவிற்கு தெரியும் தான். இருப்பினும் பாலா சொன்னதை கேட்ட பின்பு தான் நிலைமையின் தீவிரம் அவளுக்கு புரிந்தது. அஸ்வின் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டதால் இன்னும் அக்ஷயாவிற்கு அவன் மீது கோபம் இருக்கிறது.

ஆனால் அதற்காக தனக்கென தன் குடும்பத்தின் ஒரே உறுப்பினராக இப்போது இருக்கும் தன் அண்ணனையும் அவள் இழக்க தயாராக இல்லை.  அதனால் இப்போது சாந்தமான முகத்துடன் பாலாவை பார்த்த அக்ஷயா “சரி அத விடுங்க. எனக்கு பசிக்குது மாமா. இந்த ஊர்ல எல்லா சாப்பாடும் செமையா இருக்கு. எனக்கு இருந்த பசில ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் கொஞ்சம் நல்லா சாப்பிடலாம்ன்னு நெனச்சேன். அந்த ஐஸ்வர்யா என் மூடையே ஸ்பாயில் பண்ணிட்டா.” என்று சொல்லிவிட்டு தன் உதட்டை பிதுக்கினாள்.

அவளது க்யூட்டான எக்ஸ்பிரஷன்களை பார்த்து சிரித்த பாலா “5 மினிட்ஸ் வெயிட் பண்ணு. நான் போய் உனக்கு பிலைட்ல சாப்பாடு போட்டு கொண்டு வரேன். இங்க ரூம்ல உட்கார்ந்து சாப்பிட்டுக்கோ.” என்று அவளிடம் சொல்லிவிட்டு அவளுக்கு சாப்பாடு கொண்டு வருவதற்காக சென்று விட்டான்.

அஸ்வினின் அருகில் அமர்ந்து திருப்தியாக சாப்பிட்டு முடித்த ஐஸ்வர்யா எழுந்து கை கழுவுவதற்காக சென்றாள். உடனே தானும் எழுந்த அஸ்வின் அவள் பின்னே சென்றான். அவள் கை கழுவி விட்டு அஸ்வினுக்காக அங்கேயே ஒரு ஓரமாக நின்று காத்திருந்தாள்.

நேராக சென்று தண்ணீரில் கை கழுவிய அஸ்வின் ஈரமாக இருந்த தன் கையை எங்கே சென்று துடைப்பது என தெரியாமல் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டு இருந்தான். அப்போது ஐஸ்வர்யா தன் புடவை முந்தானையை அவன் முன்னே நீட்ட, என்ன என்று புரியாமல் அவளை குழப்பத்துடன் பார்த்தான் அஸ்வின்.

அதனால் தானே தனது பட்டு புடவையின் முந்தானையால் அவனது ஈரமான கையை துடைத்தாள் ஐஸ்வர்யா. அவளை ஆச்சரியமாக பார்த்த அஸ்வின் “லூசா நீ? யாராவது  சில்க் சாரில கை தொடப்பாங்களா?” என்று கேட்க, அவன் கைகளைப் பிடித்தவாறு நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்த ஐஸ்வர்யா  “நீதான் ஒன்னும் தெரியாத மக்கா இருக்க அஸ்வின். நீ இதையெல்லாம் பார்த்ததில்லையா? ஹஸ்பண்டு சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் அவர் பக்கத்திலயே இருந்து அவருக்கு சாப்பாட்டு போட்டுட்டு அவர் சாப்பிட்டு முடிச்ச உடனே வைஃப் அவர் பின்னாடியே வந்து அவர் கை கழுவன உடனே தொடைக்கிறதுக்கு இப்படி சாரியை குடுப்பாங்களே.. நான் தானே உன் வைஃப்.. அப்ப உனக்கு இதெல்லாம் நான் தான் பண்ணனும்.” என்றாள்.

“எது நான் மக்கா இருக்கேனா? சரிதாண்டி! உன்ன கல்யாணம் பண்ணதுக்கு இன்னும் என்னென்ன சொல்லனுமோ சொல்லு.”  என்ற ரீதியில் அஸ்வின் அவளை பார்த்துக் கொண்டு இருக்க, “சூப்பர் நீங்க ரெண்டு பேரும் இங்க தான் இருக்கீங்களா? நான் உங்களை தான் தேடிட்டு இருந்தேன். வாங்க நாம எல்லாரும் சேர்ந்து ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாம்.” என்றபடி அங்கே வந்த இந்து அஸ்வின் ஐஸ்வர்யா இருவரின் கைகளையும் பிடித்து அவர்களை அங்கே இருந்து இழுத்துக் கொண்டு சென்றாள்.‌

மேடையில் மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் மாணிக் இந்து இருவரும் நிற்க, அவர்களுக்கு அருகில் அஸ்வின் ஐஸ்வர்யா, வித்யா விவேக் நால்வரும் நின்று விதவிதமாக போட்டோக்கள் எடுத்தார்கள். பின் அஸ்வினின் குடும்பத்தினர்களும் மேடையில் வந்து நிற்க, இந்து மானிக் இருவரும் மாறி மாறி போஸ் கொடுப்பதில் பிஸியானார்கள்.

முத்தங்கள் தொடரும் 💋

You may also like

Leave a Comment

About Me

Featured