Home FREE NOVELSஅன்புள்ள அரக்கனே CH-55

அன்புள்ள அரக்கனே CH-55

by oviyablessy
அன்புள்ள அரக்கனே CH-55

பிற‌ந்த‌திலிருந்தே த‌ங்க‌ கூண்டில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ கிளியாய், த‌ன‌க்கான‌ ராஜ‌குமார‌ன் எப்போது வ‌ருவான், த‌ன்னை தூக்கி செல்வான் என்று அந்த‌ அர‌ண்ம‌னை ஜ‌ன்ன‌லில்  சாய்ந்த‌ம‌ர்ந்திருந்த‌ பெண்ண‌வ‌ளின் க‌ண்ணீர், அவ‌ள் கையிலிருந்த‌ ஒற்றை தாம‌ரை ம‌ல‌ரை ந‌னைத்துக்கொண்டிருக்க‌, அதே ஜ‌ன்ன‌லுக்கு வெளியே முழு க‌ருப்பு நிற‌ குதிரையில் த‌ன் நீண்ட‌ சிகைக‌ள் காற்றில் ப‌ற‌க்க‌ வேக‌மாய் வ‌ந்துக்கொண்டிருந்தான் அவ‌ளின் ராஜ‌குமார‌ன்.

அந்த‌ காட்சி அப்ப‌டியே ஓவிய‌மாய் அவ‌ள் கையில் இருக்க‌, அத‌ன் கீழே ஒன்ற‌ல்ல‌ ஓராயிர‌ம் தாம‌ரை ம‌ல‌ர்க‌ள் அவ‌ளை சுற்றி குவிந்திருந்த‌து.  அத‌ன் மீது ஒரு துளி க‌ண்ணீர் கூட‌ விழாம‌ல் அவ‌ள் க‌ருவிழிக‌ள் விய‌ப்பில் விரிந்திருக்க‌, அந்த‌ விழித்திரையில் அவனின்  உருவம் மட்டுமே நிறைந்திருந்தது.

அந்த‌ விழிக‌ளின் முன்னே  வெள்ளைக்கு ப‌தில் க‌ருப்பு குதிரையில் க‌ரும் புய‌லாய் த‌ன்னை நோக்கி வ‌ந்துக்கொண்டிருந்த‌வ‌னின்  க‌ருப்பு ஆடைக‌ள் அன‌லாய் பின்னால் ப‌ற‌க்க‌, அவ‌னின் நீண்டு வ‌ள‌ராத‌ சிறிய‌ சிகைக‌ள் அலை அலையாய் பின்னால் ப‌ற‌க்க‌, அவ‌ளின் க‌ன‌வு ம‌ன்ன‌னுக்கு எதிர்ம‌றையாக‌தான் இருந்தான் அவ‌ன். ஆனாலும் இந்நொடி அவ‌ள் க‌ன‌வுக‌ள் மொத்த‌மும் உடைந்து சித‌ற‌, முழு ம‌ன‌மும் அழுத்தி கூறிய‌து இவ‌ன்தான் உன் நிஜ‌ உல‌க‌ ராஜ‌குமார‌ன் என்று.

அதில் அவ‌ள் உறைந்த‌ நிலையில் மெதுவாய் எழுந்து நிற்க‌, வேக‌மாய் அந்த‌ குதிரையில் அவ‌ளை நெருங்கி வ‌ந்த‌வ‌னோ தன் கைகளிலிருந்த குதிரை கயிறை இறுக்கி பிடித்து வேக‌மாய் இழுத்தான். அடுத்த நொடி அந்த குதிரை தன் முன்னங்கால்களை தூக்கிக்கொண்டு கனைக்க,  அதில் முழுதாய் அவ‌னுட‌ல் பின்னால் சாய‌, க‌யிறை இறுக்கி பிடித்து அச‌ராது நிதானித்த‌வ‌னோ, மெல்ல‌ அத‌ன் க‌ழுத்தில் த‌டவி கொடுத்தான். அதில் அதுவும் மெல்ல‌ அமைத‌ல‌டைந்து கால்க‌ளை இற‌க்கிவிட்டு மெதுவாய் அவ‌ள் அருகில் செல்ல‌, அதில் ச‌ட்டென்று ப‌ய‌ந்து  பின்னெட்டு வைத்தாள் அவ‌ள். அதில் அவ‌ள் க‌ர‌ம் அந்த‌ ஓவிய‌த்தை விட்டிருக்க‌, அது பொத்தென்று த‌ரையில் விழுந்த‌து. ஆனால் அவ‌ள் பார்வை ச‌ற்றும் அத‌ன் ப‌க்க‌ம் திரும்பாம‌ல்  அவ‌னிட‌மே உறைந்திருக்க‌, அவ‌னோ எந்த‌ பாவ‌னையும் இன்றி மெதுவாய் அந்த‌ ஜ‌ன்ன‌லை நெருங்கி நின்று அவ‌ளிட‌ம் க‌ர‌த்தை நீட்டினான். அவ‌ளோ முழு விய‌ப்பில் இந்த‌ காட்சி நிஜ‌மாக‌வே நிஜ‌ம்தானா என்று புருவ‌ங்க‌ளை விரித்து மெல்ல‌ முன்னால் அடியெடுத்து வைக்க‌, ச‌ரியாக‌ அவ‌ளின் உயிர் ஓவிய‌த்தை அழுத்தி மிதித்த‌து அவ‌ள் அழுக்கு பாத‌ம்.

அதைக்கூட‌ உண‌ராம‌ல் அதை மிதித்துக்கொண்டு முன்னால் வ‌ந்த‌வ‌ள் மெதுவாய் அவனின் க‌ர‌த்தை பிடிக்க‌, இப்போதே அவ‌ன் இறுகிய‌ முக‌த்தில் இத‌ழ்க‌ள் அழ‌காய் வ‌ளைந்த‌து. அவ‌ன் பார்வையோ அந்த‌ மிதிப்ப‌ட்ட‌ ஓவிய‌த்தில் ப‌திந்திருக்க‌, அதுவோ இப்போது அவ‌ன் முன் தோற்று கிட‌ப்ப‌துப்போல் அவ‌னுள் ஒரு க‌ர்வ‌ம். ஏனோ சிறு காகித‌மோ அல்ல‌து ஓவிய‌மோ அவ‌ன் இருக்க வேண்டிய‌ ம‌ன‌தில் அவ‌னை த‌விர‌ வேறு எதுவும் இருக்க‌ கூடாது என்ப‌தே அவ‌ன் அழுத்த‌மான‌ எண்ண‌ம்.

அடுத்த‌ நொடியே அவ‌ள் இடையை வ‌ளைத்து பிடித்து வாரி தூக்கிய‌வ‌ன், த‌ன்னோடு குதிரையில் அம‌ர‌ வைத்திருந்தான். அதில் அவ‌ள் திடுக்கிட்டு அவ‌ன் மார்பில் சாய‌, அவ‌ளை அப்ப‌டியே வாரிய‌ணைத்து வேக‌மாய் அந்த‌  குதிரை க‌யிறை உத‌றினான்.

அதில் அது க‌னைத்த‌ப‌டி கால்க‌ளை பாய்ச்சி ஓட‌ ஆர‌ம்பிக்க‌, இவ‌ளோ ப‌ய‌ந்து அவ‌ன் மார்புக்குள் புகுந்துக்கொண்டாள். அதில் அவ‌ளை இறுக்க‌மாய் அணைத்துக்கொண்ட‌வ‌ன் இன்னும் வேக‌மாய் க‌யிறை உத‌ற‌, அவ‌ளோ இறுக்க‌மாய் அவ‌னை க‌ட்டிக்கொண்டாள். அதில் பாய்ந்துக்கொண்டு ப‌ற‌ந்த‌ குதிரை நொடியில் தூர‌மாய் சென்றிருந்த‌து.

அதையே பார்த்த‌ப‌டி பாவ‌மாய் கிட‌ந்த‌ இந்த‌ ஓவிய‌ம் காற்றுக்கு மெல்லிய‌தாய் அசைய‌, மெதுவாய் அத‌ன் மீது ப‌ட‌ர்ந்த‌து ஒரு நிழ‌ல். அதில் அது மெல்ல‌ அசைவை நிறுத்த, அதை மெதுவாய் கையில் எடுத்தான் விராஜ்.

எந்த‌ ஓவிய‌த்தை இத்த‌னை வ‌ருட‌ம் அவ‌ள் நினைவாக‌ பொக்கிஷ‌மாய் பாதுகாத்து  வைத்திருந்தானோ, அந்த‌ ஓவிய‌ம் இப்போது மிதிப்ப‌ட்டு அழுக்காய் அவ‌ன் கையில் இருக்க‌, அவ‌ன் இத‌ய‌ம் வெகுவாய் நொறுங்கிய‌து. அதில் அப்ப‌டியே நிமிர்ந்து ஜ‌ன்ன‌லுக்கு வெளியே பார்த்த‌வ‌னின் விழிக‌ள் வ‌லியில் நிறைய‌, மீண்டும் அந்த‌ ஓவிய‌த்தில் பார்வையை ப‌தித்தான்.

அந்த‌ வெள்ளை குதிரை இப்போது க‌ருப்பு நிற‌ம் பூச‌ப்ப‌ட்டிருக்க‌, அவ‌ன் க‌ண்க‌ளில் மெல்ல‌ க‌ண்ணீர் நிற‌ம்பிய‌து. ம‌ன‌மோ இத்த‌னை வ‌ருட‌த்தில் இப்போதுதான் இந்த‌  ஓவிய‌த்தின் அர்த்த‌த்தை உண‌ர்ந்த‌து. அவ‌ள் வ‌ரைந்த‌ அந்த‌ வெள்ளை ராஜ‌குமார‌ன் அவ‌ளுக்கு பொருத்த‌ம‌ற்ற‌வ‌ன் என்று.

அதில் பெருகிய‌ அவ‌ன் க‌ண்ணீர் இமை தாண்டி பொத்தென்று அந்த‌ ஓவிய‌த்தில் விழ‌, அத‌னுள்ளிருந்த‌ ஒற்றை தாம‌ரை நிஜ‌த்தில் ந‌னைந்த‌து.

அதில் க‌ண்ணீருட‌ன் அழுத்தி இமை மூடிய‌வ‌னின் இத‌ய‌ம் இந்த‌ நிஜ‌த்தை ஏற்க‌ முடியாம‌ல் த‌விக்க‌, அவ‌ன் உயிர் மொத்த‌மும் வ‌லியில் நிறைந்திருந்த‌து. அதில் அவ‌ன் அப்ப‌டியே அந்த‌ ஓவிய‌த்தை விட்டிருக்க‌, அதுவோ அந்த‌ தாம‌ரை குவிய‌லில் அழ‌காய் அம‌ர்ந்த‌து.

“எக்கியூஸ் மீ சார்!” என்ற‌ குர‌லில் ச‌ட்டென்று விழியை திற‌ந்தான் விராஜ்.

அவ‌ன் முன் நிழ‌ல் ஆட‌வும் அவ‌ச‌ர‌மாய் த‌ன்  க‌ண்க‌ளை துடைத்த‌ப‌டி திரும்ப‌, அவ‌ன் முன் நின்றிருந்தான் யோகி.

அதில் இவ‌ன் குழ‌ப்ப‌மாய் புருவ‌த்தை சுழிக்க‌, “சாரி சார் எக்ஸ்கியூஸ் மி” என்ற‌ப‌டி அவ‌னை க‌ட‌ந்து அந்த‌ ஓவிய‌த்தை கையில் எடுத்தான் யோகி. அதில் இவ‌னும் புரியாது மெல்ல‌ வில‌கி நிற்க‌, அவ‌னும் அதை எடுத்துக்கொண்டு நிமிர்ந்து, “தேங்க் யூ சார்” என்ற‌ப‌டி அங்கிருந்து ந‌க‌ர்ந்தான்.

அதில் அப்ப‌டியே திரும்பி அவ‌னையே பார்த்த‌ விராஜின் புருவ‌ங்க‌ள் குழ‌ப்ப‌மாய் சுருங்கிய‌து. ச‌ரியாக‌ அவ‌ன் பின்னே அந்த‌ ஜ‌ன்ன‌லுக்கு வெளியே, அந்த‌ அக‌ண்ட‌ வான‌த்தை ஈர‌ மேக‌ங்க‌ள் மெதுவாய் சூழ்ந்து, சூரிய‌னை முழுதாய் மூடியிருந்த‌து. ம‌ழை வ‌ரும் அறிகுறியாய் காற்றின் வேக‌மும் அதிக‌ரித்திருக்க‌, அந்த‌ காற்றை கிழித்துக்கொண்டு புய‌லாய் சென்றுக்கொண்டிருந்த‌து அந்த‌ குதிரை. அத‌ன் வேக‌த்தில் அவ‌னின் க‌ருப்பு கோட் க‌ழ‌ன்று ப‌ற‌க்கும் அள‌விற்கு  அன‌லாய் பின்னால் ப‌ற‌க்க‌, அவ‌ன் மார்புக்குள் இன்னுமே இறுக்கி விழி மூடியிருந்தாள் அமீரா. அவ‌ளை ப‌த்திர‌மாய் த‌ன் மார்புக்குள் க‌ட்டிக்கொண்டிருந்த‌வ‌னின் க‌ர‌த்தையும் தாண்டி, ப‌ல‌மாய் வ‌ரும் எதிர்காற்று அவ‌ள் தேக‌த்தை மோத‌, அவ‌னை இறுக‌ க‌ட்டுக்கொண்டு அவ‌ன் முதுகு ச‌ட்டையை இறுக்கி பிடித்துக்கொண்டாள் அவ‌ள்.

அப்ப‌டியே நொடிக‌ள் க‌ட‌ந்து நிமிட‌ங்க‌ள் க‌ட‌ந்து, மெல்ல‌ அந்த‌ குதிரையின் வேக‌ம் குறைந்த‌து. அப்ப‌டியே அந்த‌ எதிர்காற்றின் வேக‌மும் மெல்ல‌ அட‌ங்க‌, அதை உண‌ர்ந்த‌வ‌ளோ அவ‌ன் மார்புக்குள் குழ‌ப்ப‌மாய் புருவ‌ம் சுழித்தாள். அப்போது ஜில்லென்ற‌ தென்ற‌ல் அவ‌ள் தேக‌த்தை த‌ழுவ‌, அதில் க‌ல‌ந்து வ‌ந்த‌ பூ வாச‌னை அவ‌ளுக்கு மிக‌வும் ப‌ரிட்சைய‌மான‌தாக‌ இருந்த‌து. அதில் அவ‌னின் மார்புர‌ச‌ மெல்ல‌ த‌ன் முக‌த்தை திருப்பி பார்க்க‌, ச‌ட்டென்று அவ‌ள் முக‌த்தை உர‌சி சென்ற‌து ஒரு வ‌ண்ண‌த்து பூச்சி.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு இமை மூடி திற‌க்க‌, அத‌ன் க‌ருப்பும் சிவ‌ப்பும் க‌ல‌ந்த‌ சிற‌கை அழ‌காய் விரித்து ப‌ற‌ந்து சென்ற‌து அந்த‌ Crimson rose வ‌ண்ண‌த்து பூச்சி. அது அப்ப‌டியே ப‌ற‌ந்து ம‌ற்ற‌ Crimson வ‌ண்ண‌த்து பூச்சிக‌ளோடு இணைந்து அவ்விட‌த்தை நிர‌ப்ப‌, சுற்றியும் அதே சிவ‌ப்பு ரோஜாக்க‌ள் நிறைந்த‌ தோட்ட‌ம்.

அத‌ன் ந‌டுவே அதே கம்பீரமாய் நின்ற‌ க‌ருப்பு மாளிகை. அதில் அவ‌ள் விழிக‌ள் அக‌ல‌ விரிய‌, “வெல்க‌ம் டூ மை டார்க் வேர்ல்ட்” என்ற‌ அவ‌னின் வார்த்தைக‌ள்  ஆழ‌மாய் அவ‌ளுள் ஒலித்த‌து. அதில் ப‌த‌ற்ற‌மாய் இங்கு எப்ப‌டி என்று அவ‌ள் சுற்றி பார்க்கும் முன், ப‌ட்டென்று கீழே இற‌ங்கியிருந்தான் ருத‌ன். அதில் அவ‌ள் திடுக்கிட்டு திரும்பும் முன் அவ‌ள் இடையை அழுத்தி பிடித்து அவ‌ளையும் ச‌ரித்து இற‌க்கியிருந்தான் அவ‌ன். அதில்  மொத்த‌மாய் அவ‌ன் மீது மோதி சாய்ந்தவ‌ள், அவ‌ச‌ர‌மாய் வில‌க‌ முய‌ல‌, அத‌ற்குள் அவ‌ளை உர‌சிய‌ப‌டி நெருங்கிய‌து அந்த‌ குதிரை. அதில் திடுக்கிட்டு மீண்டும் அவ‌ன் மார்புக்குள் புகுந்துக்கொண்டாள் அவ‌ள். அதில் அழ‌காய் புன்ன‌கை விரித்த‌வ‌ன், நிமிர்ந்து அந்த‌ குதிரையின் க‌ழுத்தை நீவி கொடுக்க‌, அதுவோ பாச‌மாய் குனிந்து அவ‌ன் முக‌த்தோடு முக‌முர‌சிய‌து.

அப்போது அவ‌ன் மார்பு ச‌ட்டைக்குள்ளிருந்து  மெல்லிய‌தாய் நிமிர்ந்து அதை பார்த்த‌வ‌ளின்  புருவ‌ங்க‌ள் விய‌ப்பாய் விரிய‌, அது ச‌ட்டென்று அவ‌ளை பார்க்க‌வும் ப‌ட்டென்று அவ‌ன் மார்புக்குள் ஒளிந்தாள் அவ‌ள். அதில்  குனிந்து அவ‌ளை பார்த்த‌வ‌ன், இர‌ச‌னையாய் இத‌ழ் வ‌ளைத்து, “ஓய்!” என்றான் மெல்லமாக.

அவ‌ளோ நிமிராது அவ‌ன் மார்பு ச‌ட்டையை இறுக்கி பிடித்து, “ம்ம்” என்று கூற‌, ப‌த‌ற்ற‌த்தில் சுழிந்த அவ‌ள் நெற்றியில் மென்மையாய் முத்த‌மிட்டான் அவ‌ன். அதில் மெல்ல அவள் நெற்றி தளர, அந்த நெற்றியில் இதழை உரசிய‌ப‌டி, “என்ன‌ பாரு.” என்றான்.

அதில் அவ‌ள் மெல்ல‌ நிமிர்ந்து மெதுவாய் இமையை நிமிர்த்தி அவ‌ன் விழி ச‌ந்திக்க‌, அந்த‌ இமையில் மென்மையாய் இத‌ழை வைத்து எடுத்த‌வ‌ன், “என் அம்முவ‌ இது ஒன்னும் ப‌ண்ணாது.” என்றான் மென்மையாக‌. அவ‌ன் குர‌லிலிருந்த‌ மென்மையில் அவ‌ள் ப‌த‌ற்ற‌ம் மெல்ல‌ த‌ள‌ர‌, மெதுவாய் திரும்பி அந்த‌ குதிரையை பார்த்தாள். அதுவோ சோர்வாய் அவ‌ன் தோளில் முக‌த்தை வைத்து ச‌த்த‌மான‌ மூச்சுக‌ளை வெளியேற்ற‌, மெதுவாய் அத‌ன் க‌ழுத்தை க‌ட்டிக்கொண்டு அதன் த‌லையை வ‌ருடிக்கொடுத்த‌வ‌ன், “ச‌ரி போய் ரெஸ்ட் எடுத்துக்கோ. அப்ற‌ம் வ‌ந்து பாக்குறேன்.” என்றான். அதில் அதுவுமே உர‌ச‌லாய் வில‌கி அவ‌ன் முக‌த்தில் மெல்லிய‌தாய் ந‌க்கி அத‌ன் பாஷையில் முத்த‌மிட‌, அவ‌னும் அத‌ன் க‌ன்ன‌த்தை நீவி கொடுத்து அத‌ன் முக‌த்தில் அழுத்தி முத்த‌மிட்டான்.

அதில் ஏனோ இவ‌ள் ம‌ன‌ம் மெல்லிய‌ பொறாமையை உண‌ர‌,  அவ‌ன் புஜ‌த்தை இறுக்கி பிடித்து அவ‌னுட‌ன் ஒன்றினாள். அப்போது குதிரை அவ‌ள் ப‌க்க‌ம் திரும்ப‌, அவ‌ளோ ப‌ய‌ந்து அவ‌னுள் புதைந்து நிற்க‌, அதுவோ அதன் முக‌த்தை குனித்து பாச‌மாய் அவ‌ள் க‌ன்ன‌த்தோடு உர‌ச‌ வ‌ர‌, “டேய்” என்று அழுத்த‌ம் கொடுத்தான் ருத‌ன். அதில் அது திரும்பி அவ‌னை பார்க்க‌, அவ‌னோ விழியில் அழுத்த‌ம் கொடுத்து அது என‌க்கு சொந்த‌மான‌து என்று விழியில் அனலை கக்கினான்.

அந்த அனல் அழுத்தத்தில் அப்படியே அடங்கிய குதிரை,  மெதுவாய் பின் வாங்கி அவளை விட்டு விலக, அவளோ வியப்பாய் நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவனோ மேலும் அழுத்தமாய் செல் என்று அதனிடம் கண்ணசைக்க, அதுவும் அட‌க்க‌மாய் பின்னால் ந‌க‌ர்ந்து, அப்ப‌டியே திரும்பி அங்கிருந்த‌ த‌ன் இருப்பிட‌ம் நோக்கி ஓடிய‌து.

அதையே குழ‌ம்பிய‌ விய‌ப்பாய் பார்த்த‌ப‌டி  நின்றிருந்த‌வ‌ளின் முக‌த்தில் ம‌ழை சார‌ல் விழுக, திடுக்கிட்டு அவ‌னைவிட்டு வில‌கி த‌ன் முக‌த்தை தொட்டு பார்த்த‌வ‌ள், நிமிர்ந்து வானத்தை பார்க்க‌, அவ‌ள் விழி மீது விழுந்த‌து ஒரு பெரிய‌ துளி.

அதில் ச‌ட்டென்று அவ‌ள் இமை மூட‌, அந்த‌ இமை முடிக‌ளுள் அழ‌காய் நுழைந்து கீழே வ‌ழிந்த‌து அந்த‌ துளி. அதை மெதுவாய் அவ‌ன் இத‌ழ் வைத்து துடைக்க‌, அவ‌ளோ திடுக்கிட்டு இமையை பிரிக்க‌, அவ‌ள் இமைக‌ளை உர‌சிய‌ப‌டி இருந்த‌து அவ‌ன் இமைக‌ள்.

அதில் அவ‌ள் இமைக‌ள் த‌டுமாறி அவ‌ன் விழிக‌ளை ச‌ந்திக்க‌, அவ‌னோ  மெதுவாய் த‌ன் முக‌த்தை சாய்த்து அவ‌ள் க‌ன்ன‌த்தில் விழுந்திருந்த‌ ஒரு துளியில் மென்மையாய் இத‌ழை வைத்து துடைத்தான். அதில் அவ‌ள் சிலிர்வாய் விழி மூட‌, அவ‌ள் ஈர‌ இமையை மெல்லிய‌தாய் உர‌சி வில‌கிய‌து அவ‌ன் நாசி.

அதில் அவ‌ன் தோள் ச‌ட்டையை  இறுக்கி பிடித்த‌வ‌ளின் புருவ‌ங்க‌ள் சுருங்க‌, அதில் அழ‌காய் வ‌ழிந்து அவ‌ள் மூக்கின் வ‌ழி இற‌ங்கிய‌து ஒரு துளி. அதை மெதுவாய் அவ‌ன் இத‌ழ்க‌ள் ப‌திந்து எடுக்க‌, அவ‌ன் தோள் ச‌ட்டையோடு தோளையும் இறுக்கி பிடித்து குறுகினாள் அவ‌ள். அவ‌னோ அப்ப‌டியே  இத‌ழை ந‌க‌ர்த்தி, அவ‌ள் நாசி நுனியில் அம‌ர்ந்திருந்த‌ ஒரு துளியை துடைக்க‌ வ‌ர‌, அது பொத்தென்று ச‌ரிந்து அவ‌ள் கீழ் இத‌ழில் விழுந்த‌து. அதில் மெல்லிய‌தாய் பிரிந்த‌ அவ‌ள் இத‌ழ் ப‌த‌ற்ற‌த்தை வெளியேற்ற‌, மெதுவாய் அவ‌ள் நாசியுர‌ச‌ சாய்த்த‌வ‌னின் சுவாச‌ம் அவ‌ள் நாசி இத‌ழ் ப‌ள்ள‌த்தில் சூடாய் ப‌ட‌ர்ந்த‌து. அதில் அவ‌ள் சுவாச‌மும் மெல்ல‌ சூடேற‌, மெதுவாய் அவ‌ள் இத‌ழ் மேல் இருந்த‌ துளியை அவ‌ன் இத‌ழ் வைத்து மெல்ல‌ துடைத்தான்.

அதில் அவ‌ன் மீசை அவ‌ள் மேல் இத‌ழை மொத்த‌மாய் உர‌சி வில‌க‌, இவ‌ள் தேக‌மெங்கும் கூசியெழும்பிய‌து. அந்த‌ தேக‌த்தில் மொத்த‌மாய் உரசி நின்ற‌வ‌ன், அவ‌ள் க‌ன்ன‌த்தின் கீழ் விர‌ல்க‌ளை ப‌ட‌ர‌விட‌, அவ‌ளோ சிலிர்வாய் க‌ழுத்தை விரித்தாள். அந்த‌ விரிந்த‌ க‌ழுத்தில் மெல்லிய‌தாய் விழுந்த‌ சார‌லை மெதுவாய் அவ‌ன் மீசை துடைத்தெடுக்க‌, அவ‌ள் மார்பு சேலை வில‌கும் அள‌விற்கு குறுகிய‌து அவ‌ள் மார்பு குழி. அத‌னுள் அவ‌னின் க‌ருப்பு கால‌ர் அழுத்த‌மாய் உர‌ச‌, அவ‌ன் பின் தோளிலிருந்த‌ க‌ர‌ம் அவ‌ன் பின் ச‌ட்டை கால‌ரை சுருட்டி பிடித்த‌து. அதில் மேலும் த‌லையை சாய்த்து அவ‌ள் க‌ழுத்தில் புதைந்த‌வ‌ன், அங்கே குழிந்த‌ அவ‌ள் தொண்டையில் அழுத்தி இத‌ழ் ப‌தித்தான்.

அதில் அவ‌ள் சிலிர்வாய் முக‌த்தை நிமிர்த்த‌, அந்த‌ முக‌த்தில் சின்ன‌ சின்ன‌தாய் விழுந்த‌து சார‌ல்க‌ள். அதில் முக‌த்தை குறுக்க‌ முய‌ன்ற‌வ‌ளின் க‌ன்ன‌த்தில் அழுத்தி உர‌சிய‌து அவ‌ன் தாடி. அதில் அவ‌ள் தேகம் மொத்த‌மும் சிலிர்த்து அட‌ங்க‌, அவ‌ன் இடையிலிருந்த‌ ச‌ட்டையை இறுக்கி பிடித்த‌து அவ‌ள் ம‌று க‌ர‌ம். 

அதில் மெதுவாய் அவ‌ள் முக‌மெங்கும் த‌ன் முக‌த்தை உர‌சி துடைத்த‌வ‌னின் அன‌ல் சுவாச‌ம், அவ‌ள் ஈர‌ முக‌த்தில் வெப்ப‌மாய் ப‌ட‌ர‌, அவ‌ள் தேக‌மெங்கும் மெல்ல‌ சூடேறிய‌து. அதில் அவ‌ள் ஈர‌ இத‌ழ்க‌ள் மெல்லிய‌தாய் பிரிந்து அன‌ல் சுவாச‌த்தை வெளியேற்ற‌, அத‌னுள் அவ‌ன் சுவாச‌த்தை குவித்து உர‌சிய‌து  அவ‌ன் இத‌ழ்க‌ள்.

அதில் ப‌த‌ற்ற‌மாய் அவ‌ள் இத‌ழ்க‌ள் மூடி சுவாச‌த்தை விழுங்க‌ முய‌ல‌, அத‌ற்குள் அழுத்த‌மாய் புதைந்த‌து அவ‌ன் இத‌ழ்க‌ள். அதில் திடுக்கிட்டு மொத்த‌ சுவாச‌மும் அவ‌ள் தொண்டையில் அடைக்க‌, அவ‌ன் கால‌ரிலிருந்த‌ கர‌த்தை அவ‌ன் பின் சிகைக்குள் நுழைத்து பிடித்தாள். அதில் முக‌த்தை சாய்த்து இன்னும் ஆழ‌மாய் புதைந்த‌வ‌ன், அவ‌ள் இரு இத‌ழ்க‌ளையும் நாவால் பிரித்து உள்ளே நுழைந்து அவ‌ள் உயிர் வ‌ரை இற‌ங்கி சுவைத்தான். அதில் இறுக்கி விழி மூடிய‌வ‌ளின் ம‌று க‌ர‌ம் அவ‌ன் முதுகு ச‌ட்டையை இறுக்கி பிடிக்க‌, அவ‌ள் உட‌லை வ‌ளைத்து பிடித்து வேக‌மாய் சுவைத்தான் அவ‌ன். அதில் மொத்தமாய் அவ‌ன் தேக‌த்தில் புதைந்து நின்ற‌வ‌ள், அவ‌ன் பின் சிகையை சுருட்டி பிடித்து அவ‌ன் வேக‌த்தை தாங்க‌ முய‌ல‌, அவ‌னோ இன்னும் வ‌ன்மையாய் அவ‌ள் இத‌ழ் வ‌ழியே அவ‌ள் பெண்மைக்குள் நுழைந்து தூண்ட‌, அவ‌ள் உட‌லெங்கும் மோக‌ உண‌ர்வுக‌ள் விறைத்து எழும்பிய‌து.

அதில் அவ‌ள் விழிக‌ள் சொருகி விர‌ல்க‌ள் அவ‌ன் பின் சிகையை சுருட்டி பிடித்து த‌ன‌க்குள் அழுத்த‌, அதில் அவ‌ன் மோக‌ம் அதிக‌ரித்து இன்னும் வன்மையாய் சுவைத்தான். அவ‌ன் வ‌ன்மையில் அவளின் இதழ் காயம் மீண்டும் கிழிந்து இரத்தம் கசிய, முழு வேக‌மாய் அமுத‌த்தை ப‌ருகிக்கொண்டிருந்த‌வ‌னின் நாவில் குருதியின் சுவை க‌ல‌க்க‌வும் புருவ‌த்தை சுழித்தவன், மெதுவாய் இதழை பிரித்தான்.

அதில் மெல்ல விடுப்ப‌ட்ட‌ அவ‌ளின் இத‌ழ்க‌ள் வலியில் மெல்லியதாய் நடுங்க, அத‌ன் மீதிருந்த‌ இரத்தத்தை த‌ன் இத‌ழ் வைத்து மென்மையாய் துடைத்தெடுத்த‌வ‌ன், “வ‌லிக்குதா?” என்றான் மெல்லிய‌ குர‌லில். அதில் அவ‌ன் இத‌ழ் அவ‌ள் காய‌த்தை மெல்ல உர‌ச‌, அதில் சிலிர்வாய் விரிந்த‌ அவ‌ள் கால் விர‌ல்க‌ளை த‌ரையில் அழுத்தி, அப்படியே குதி காலை தூக்கி எக்கி அவன் இதழோடு மீண்டும் தன் இதழை சேர்த்தாள் அவள்.

அடுத்த‌ நொடி இரு மேக‌ங்கள் இணைந்து ப‌ல‌மாய் இடி இடிக்க‌,  ச‌ட‌ச‌ட‌வென்று பெரிய ம‌ழை பொழிந்து இருவ‌ரையும் ந‌னைத்த‌து. அதில் இறுக்கி விழி மூடி மேலும் முக‌த்தை நிமிர்த்தி  அவ‌ன் இத‌ழுள் புதைந்தவ‌ள், மீண்டும் முத்த‌மிட‌ தெரியாம‌ல் அவ‌ன் இரு இத‌ழ்க‌ளோடு முட்டி மோதி திண‌ற ஆர‌ம்பிக்க‌, அதில் அவ‌னின் நீர் ஒழுகும் முக‌ம் மெல்லிய‌தாய் புன்னகை பூசியது. அதில் அப்ப‌டியே அவ‌ள் ஈர கூந்த‌லுள் விர‌ல்க‌ளை நுழைத்து இறுக்கி பிடித்தவன், முழு வ‌ன்மையாய் அந்த‌ முத்த‌த்தை த‌ன‌தாக்க துவங்கினான். 

அதில் அவள் அவனி‌ன் பின் சிகையை இறுக்கி பிடித்து அவ‌னுள் புதைந்து நிற்க, அவள் இத‌ழ்க‌ளை அவ‌ன் இத‌ழ்க‌ள் பிரித்து சுவைக்கும் வேக‌த்தில், ம‌ழை நீர் மொத்த‌மும் அவ‌ள் தொண்டையில் இறங்கி, அவ‌ள் மூச்சுக்குழல் மொத்தமும் காற்றுக்கு பதில் மழை நீரே நிறம்பியது. அதில் அவள் சுவாச‌ம் அடைத்து தொண்டை ஏறி இறங்க, அப்போதும் பிரிய முயலாமல் இன்னும் ஆழமாய் அவன் இதழுள் புதைந்தாள் அவள். அதில் அவள் ஈர கூந்தலோடு அவ‌ள் பின் த‌லையையும் அழுத்தி தன்னுடன் இழுத்து பற்றியவன், அந்த மழை நீரோடு அவள் இதழ் நீரையும் வன்மையாய் உறிஞ்சி குடித்தபடியே, அவளை அள்ளி தூக்கியிருந்தான். அதில் ச‌ட்டென்று அவ‌ன் க‌ர‌ங்க‌ளில் வ‌ந்திருந்த‌வ‌ள், அப்படியே அவ‌ன் கழுத்தை கட்டிக்கொண்டு முழுதாய் அவன் இத‌ழுள் மூழ்க, அவ்வித‌ழ்க‌ளை வன்மையாய் ஆழமாய் சுவைத்தபடியே அவளை தூக்கிக்கொண்டு அந்த கருப்பு மாளிகையை நோக்கி நடந்தான் அவ‌ன்.

      – நொடிகள் தொடரும்….

You may also like

Leave a Comment

About Me

Featured