Home FREE NOVELSஅன்புள்ள அரக்கனே CH-54

அன்புள்ள அரக்கனே CH-54

by oviyablessy
அன்புள்ள அரக்கனே CH-55

வேக‌மாய் அறை வாச‌ல் வ‌ரை வ‌ந்த‌ அமீரா, ப‌டாரென்று உடைந்து சித‌றிய‌ ச‌த்த‌த்தில் திடுக்கிட்டு அதிர்ந்து அப்படியே நின்றாள். அவ‌ள் பின்னே அவ‌ள் உயிர் பொக்கிஷ‌ம் உடைந்து சித‌றி கிடக்க‌, இங்கு இவ‌ள் உயிர் மொத்த‌மும் உறைந்திருந்த‌து. அவ‌ள் செவிக‌ள் உண‌ர்ந்த‌ அந்த‌ ஒரு நொடி அவ‌ள் இத‌ய‌த்தையே உலுக்கியிருக்க‌, அவ‌ள் விழிக‌ள் மெல்ல‌ க‌ண்ணீரை திர‌ட்டி மெதுவாய் திரும்ப துடித்த‌து. அந்த‌ அரை நிமிட‌த்திலேயே அவ‌ள் இத‌ய‌ம் ஆயிர‌ம் முறை துடித்து அட‌ங்கியிருக்க‌, வேக‌மாய் அவ‌ள் திரும்பும் நொடி அவ‌ள் உட‌லை மொத்த‌மாய் உர‌சிய‌ப‌டி நின்றிருந்தான் அவ‌ன். அதில் அவ‌ள் திடுக்கிட்டு பின்னெட்டு வைக்கும் முன், அழுத்த‌மாய் அவள் இதழை சிறை செய்தான் அவ‌ன்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு விழி விரிக்க‌, அவ்விழிக‌ளுள் குறும்பாய் த‌ன் விழிக‌ளை க‌ல‌க்க‌விட்ட‌வ‌ன், இன்னும் வ‌ன்மையாய் அவ‌ள் இத‌ழை சுவைத்து அவ‌ள் உயிர் மொத்த‌த்தையும் உறிஞ்சினான். அதில் அவ‌ள் இறுக்கி விழி மூடி வ‌லியில் நெற்றியை குறுக்க‌, அவ‌ன் வ‌ன்மையில் சிக்கிய‌  இத‌ழ்க‌ளில் ஏற்க‌ன‌வே இருந்த‌ காய‌ம் கிழிந்து இர‌த்த‌ம் க‌சிந்த‌து. அதில் மேலும் அழுத்தி புதைந்த‌வ‌ன், அவ‌ள் இத‌ழ் சுவையோடு அந்த‌ குருதியின் சுவை அவ‌ன் நாவை ந‌னைக்க‌, அதையும் முழுதாய் குடித்து முடித்துவிட்டே மெதுவாய் வில‌கினான். அதில் மெதுவாய் பிரிந்த‌ அவ‌ள் இத‌ழ்க‌ள் மெல்லிய‌தாய் ந‌டுங்க‌, அதில் ஒட்டியிருந்த‌ இர‌த்த‌த்தை த‌ன் க‌ட்டை விர‌லால் மெல்ல‌ துடைத்து த‌ன் இத‌ழுள் புகுத்தினான் அவ‌ன். அதில் அவ‌ள் க‌ல‌ங்கிய‌ விழிக‌ள் ப‌ய‌த்துட‌ன் அவ‌ன் விழிக‌ளை ச‌ந்திக்க‌, அவ்விழிக‌ளையே பார்த்த‌ப‌டி த‌ன் விர‌லை சுவைத்து வெளியில் எடுத்தவ‌னின் இத‌ழ்க‌ள் இப்போது அவ‌ள் இத‌ழ் காய‌த்தை உர‌சி நிற்க‌, அதை மெதுவாய் வ‌ருடிய‌ப‌டி த‌ன் இத‌ழை பிரித்து, “ஜ‌ஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்.” என்றான். அதில் அவ‌ள் காய‌ம் மெல்ல‌ ந‌டுங்க‌, அதில் மெல்லிய‌தாய் ஒரு முத்த‌ம் வைத்து, “இல்ல‌ன்னா காஃபிக்கு ப‌திலா உன்ன‌தா குடிப்பேன்.” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் ப‌த‌றிய‌ப‌டி அவ‌ள் விழிக‌ள் த‌டுமாற‌, அவ்விழிக‌ளையே  பார்த்த‌ அவ‌ன் விழிக‌ளோ செல் என்று க‌ண் அசைத்த‌து. அடுத்த‌ நொடி திடுக்கிட்டு வில‌கிய‌வ‌ள், அவ‌ச‌ர‌மாய் திரும்பி அங்கிருந்து ஓடியிருந்தாள். அதில் புருவ‌த்தை இடுக்கி அவ‌ளையே பார்த்த‌ப‌டி அந்த‌ க‌த‌வில் சாய்ந்த‌வ‌ன், மெதுவாய்  த‌ன் க‌ர‌த்தை உய‌ர்த்தி அதில் பார்வை குவிக்க‌, அதில் ஒரு க‌ண்ணாடி துண்டை அழுத்தி பிடித்திருந்தது அவ‌ன் இரு விர‌ல்க‌ள்.

உடைந்து சித‌றிய‌ அந்த‌ ஓவிய‌த்தின் ஒரு ப‌குதிதான் அது. அத‌னுள் குரோத‌மாய் பார்வையை குவித்த‌வ‌னுக்கோ, இந்த‌ ஓவிய‌ம் ச‌ற்றுமுன் த‌ன்ன‌வ‌ளின் மார்புக்குள் இருந்த‌துதான் க‌ண்முன் வ‌ர, அந்த‌ க‌ண்க‌ளில் அனல் நிரம்பியது.

அடுத்த‌ சில‌ நிமிட‌ங்க‌ளில் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாய் அவ‌னுடைய‌ ப்ளேக் காஃபியுட‌ன் அறைக்குள் நுழைந்தாள் அமீரா. ஆனால் அறையே காலியாக‌ இருக்க‌, அவ‌ள் பார்வை முத‌லில் தேடிய‌தோ அவ‌ளின் ஓவிய‌த்தைதான். த‌ரையில் உடைந்து சித‌றிய‌ ச‌த்த‌ம் அவ‌ள் உயிரையே உலுக்கியிருக்க‌, ப‌த‌றிய‌ப‌டி த‌ரையெங்கும் பார்வையை அல‌சினாள்.

ஆனால் அந்த‌ த‌ரையிலோ  அப்ப‌டியொரு ஓவிய‌ம் உடைந்த‌ சுவ‌டே இல்லாம‌ல் சுத்த‌மாய் இருக்க‌, புரியாது முன்னால் வ‌ந்தவ‌ள், சுற்றியிருந்த‌ மெத்தை மேசை எல்லாம் தேடினாள். அப்போதே அங்கு க‌ண்ணாடி முன்னிருந்த‌ மேசையில் அவ‌ளின் கைப்பேசி ஒலித்த‌து.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு திரும்ப, அந்த‌ க‌ண்ணாடியில் ஹ‌ஸ்ப‌ன்ட் என்ற‌ பெய‌ர் பிம்ப‌ம் பெரிதாய் தெரிந்த‌து. அதில் இவ‌ள் விழிக‌ளும் பெரிதாய் விரிய‌, வேக‌மாய் கையிலிருந்த‌ காஃபியை பார்த்த‌வ‌ள்,  இப்போதே நிமிர்ந்து அவ‌னையும் தேடினாள்.

அவ‌னுமே அறையில் இல்லாதிருக்க‌, அதில் அவ‌ள் ப‌த‌றி குழ‌ம்பும் முன் அவ‌ள் கைப்பேசி  ச‌த்த‌மாய் ஒலித்த‌து. அதில் திடுக்கிட்டு திரும்பிய‌வ‌ள், வேக‌மாய் அத‌ன‌ருகில் சென்று  மொபைலை கையில் எடுத்தாள்.

அடுத்த‌ நொடியே முழு ரிங் முடிந்து க‌ட் ஆக‌ போக‌, அதில் அவ‌ள் ப‌த‌றி ஆன் செய்யும் முன் கையிலிருந்த‌ காஃபி க‌ப் த‌டுமாற‌, அவ‌ச‌ர‌மாய் அதை கீழே வைத்துவிட்டு, காலை அட்ட‌ன் செய்து காதில் வைத்தாள்.

ஒரு நொடி அவ‌ளுக்கு மூச்சே நின்று திரும்பியிருக்க‌, “மொத‌ல் ரிங்குலையே நீ எடுத்தாக‌ணும்.”  என்ற‌ அவ‌னின் அழுத்த‌மான‌ வார்த்தைக‌ள் தான் ச‌த்த‌மாய் அவ‌ள் காதில் ஒலித்த‌து. அதில் அத்த‌னை ப‌ல‌மாய் அவ‌ள் இதய‌ம் துடிக்க‌, “ஹ‌..ஹ‌ல்..” என்று கூற‌ வர‌, “தேடுறியா?” என்று கேட்டான் அவ‌ன்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு விழிக்க‌, இவ‌னோ கூலாய் புருவ‌ம் நெளித்து, “என்ன‌ தேடுறியா இல்ல‌ உன் பெயிண்டிங்கையா?” என்று  கேட்டான்.

அதில் த‌டுமாறிய‌வ‌ளின் பார்வை மீண்டும் அவ‌ளின் பெயிண்டிங்கை தேட‌, “என்னையா?” என்று அவ‌ன் ஒற்றை புருவ‌த்தை உய‌ர்த்த, “அ..அத்” என்ற‌வ‌ளின் விழிக‌ள் த‌விப்பாய் சுற்றி தேடிய‌ப‌டியே இருக்க‌, “பெயிண்டிங்கையா?” என்று ம‌ற்றொரு புருவ‌த்தை உய‌ர்த்தினான். அதில் ப‌த‌ற்ற‌த்தை கூட்டிய‌ இவ‌ளின்  ம‌ன‌மோ அதை என்ன‌ செய்திருப்பானோ என்று ப‌த‌றி துடிக்க‌, இங்கே உய‌ர்ந்த‌ இரு புருவ‌ங்க‌ளையும் இடுக்கி இறுக்கிய‌வ‌ன், “சொல்லுடி.” என்று ப‌ல்லை க‌டித்து அழுத்தி கேட்டான்.

அதில் திடுக்கிட்டு தேட‌லை நிறுத்திய‌ அவ‌ள் விழிக‌ள் மெதுவாய் விரிய‌, அவ்விழிகளுள் உருவான பயம் இந்த‌ குர‌லுக்கு பின்னிருந்த‌ அர‌க்கனை தெளிவாய் உணர்ந்தது. அதில் அவள் இதயமும் பதற்றத்தை கடந்து பயத்தில் பலமாய் துடிக்க, “சொல்லுன்னு சொன்னேன்.” என்று உருமலாய் வந்தது அவன் குரல்.

அந்த உருமலில் அவளுள் பெரும் திகில் கிளம்ப, பதற்றத்தில் குழிந்த தொண்டையில் எச்சிலை கூட்டி விழுங்கி, “உ..உங்க‌ள‌..தா” என்று திண‌றி கூற, அதில் தான் அவனின் புருவங்கள் அழகாய் தளர முழுதாய் இதழ் வளைத்தவன், “குட்.” என்றான்.

அதில் பதற்றத்தை விழுங்கிய  இவளிதழ் மெல்லியதாய் பிரிந்து நடுங்க, “நா இருக்கும்போது உன் கவனம் எங்கிட்ட மட்டுந்தா இருக்கணும் புரியுதா?” என்று அழுத்தமாய் கேட்டான் ருதன்.

“ம்..ம்ம்” என்று தடுமாறி கூறியவளின்  தொண்டை குழி மெல்ல மேடாகி ஏறி இறங்க, “சோ அந்த பெயிண்டிங் இருக்க‌ வேண்டிய‌ எட‌த்துலதா இருக்கணும்‌.” என்று அழுத்தமாய் கூறியவனின் விழிகள் மெதுவாய் கீழிறங்கி தன் விரலில் பதிய, அவ்விரல்கள் மெல்ல அந்த கண்ணாடி துண்டை சுழற்றிக் கொண்டிருந்து.

இவளோ பதற்றமாய் மீண்டும் இந்த அறையெங்கும் பார்வையை அலச ஆரம்பித்திருக்க, “அங்க இல்ல.” என்றான் இவன். அதில் இவள் திடுக்கிட்டு தேடலை நிறுத்தி விழிக்க, “கிச்ச‌னுக்கு ப‌க்க‌த்துல‌ ஒரு வேஸ்ட் ரூம் இருக்கும். அங்கதா கெடக்கும்” என்றான்.

இவளோ அதிர்வாய் விழி விரிக்க, இவனோ அனலாய் அந்த கண்ணாடியில் பார்வை திணித்து, “அதுதா அதுக்கான‌ எட‌ம்.” என்று அழுத்தி கூற, அடுத்த நொடி இவளின் மொபைல் மெத்தையில் விழுந்தது.

அவளோ வேகமாய் அறையைவிட்டு வெளியே ஓடியிருக்க, அதை பார்த்தபடியே அந்த மெத்தையில் கிடந்த அந்த மொபைல் ஸ்கிரீனில் ஹஸ்பன்ட் என்ற பெய‌ர் மறையாமல் மின்னியது.

இங்கே வேக‌ வேக‌மாய்  ப‌டிக‌ள் இற‌ங்கி கீழே வ‌ந்த‌ அமீரா, கிச்ச‌னுக்கு அருகே உள்ள‌ அறையை தேடி வேகமாய் உள்ளே நுழைய, அடுத்த‌ நொடி திடுக்கிட்டு அப்படியே நின்றாள். அவள் விழிகளோ புரியா குழப்பமாய் அந்த அறை முழுக்க கேள்வியாய் தழுவ, இது பார்ப்பதற்கு வேஸ்ட் ரூம் போலவே அல்ல, அறையே காலியாக அத்தனை சுத்தமாய் இருந்தது. அதில் குழப்பமாய் புருவத்தை சுழித்தவள், அப்படியே பார்வையை பரப்பி தன் ஓவியத்தை தேடினாள்.

அந்த காலி அறையில் அவள் ஓவியம் எங்குமே கண்ணில் படாதிருக்க, அதை தேடியபடியே அவள் மெல்ல திரும்ப  சட்டென்று அவ‌ள் முக‌த்தில் அடித்தது தென்றல். அதில் திடுக்கிட்டு விழி மூடியவளின் குறுமுடிகள் முகத்தை  வந்து உரச, தொந்தரவாய் விழியை குறுக்கி இமையை பிரித்தாள்.

அந்த பிரிந்த இமைகளின் நடுவே வெளிச்சமாய் ஒரு பெரிய ஜன்னல் திறந்திருக்க, அந்த‌ ஜ‌ன்ன‌ல் திண்ணையில் ஒரு க‌டித‌ம், அதன் மீது ஒரு பூவும் இருந்தது. அதில் குழப்பமாய் நெற்றியை குறுக்கியவள் புரியாது அருகே செல்ல, அந்த‌ கடிதத்தின் மீதிருந்ததோ அவளின் பிங்க் தாம‌ரை பூ. அதில் வியப்பாய் புருவ‌ம் விரித்த‌வ‌ள், உட‌னே அதை கையில் எடுக்க‌, ச‌ட்டென்று அந்த‌ காகித‌ம் ப‌ற‌ந்து ஜ‌ன்ன‌ல் க‌த‌வில் சென்று ஒட்டிய‌து. அதில் ப‌த‌றி அந்த‌ ஜ‌ன்ன‌ல் திண்ணையில் க‌ர‌த்தை ஊண்றி எட்டி அதை எடுத்த‌வ‌ள், அப்ப‌டியே அந்த‌ திண்ணையில் அம‌ர்ந்து அந்த காகிதத்தை திருப்பி பார்க்க‌ போக‌, மேலிருந்து ப‌ல‌ பிங்க் தாம‌ரைக‌ள் அவ‌ள் மீது விழுந்த‌து. அதில் திடுக்கிட்டு மேலே பார்த்தவள், அந்த பூக்களின் வேகத்தில் முகத்தை உதறியபடி விழி மூட, அனைத்து பூக்களும் விழுந்து முடிந்தது. அதில் அவள் முகத்தில் விழுந்த கூந்தலை மொத்தமாய் விலக்கி ஒதுக்கியபடி  கீழே பார்க்க, அந்த‌ கடிதத்தை முழுதாய் அந்த‌ தாம‌ரைகள் விழுந்து மூடியிருந்தது. அதில் புருவத்தை சுழித்தவள், மெதுவாய் அந்த‌ பூக்களை வில‌க்க, அடுத்த‌ நொடி அவ‌ள் விழிக‌ள் அக‌ல‌ விரிந்த‌து.

அது க‌டித‌மும் அல்ல‌ காகித‌மும் அல்ல‌, அவ‌ள் தேடி வந்த அதே ஓவிய‌ம்தான். சற்று முன் அவ‌ன் உடைத்த‌ போது நொறுங்கி சிதறியது அதன் ஃப்ரேமும் க‌ண்ணாடியும்தான். உள்ளிருந்த‌ ஓவிய காகிதத்தை அழ‌காய் அவன் பிரித்து எடுத்திருந்தான். அதுதான் இப்போது முழுதாய் அவள் கையிலிருக்க, மெதுவாய் அதை உயர்த்தி பார்த்தாள். அதில் மிச்ச மீதி பூக்களும் முழுதாய் சரிந்து விழுக, இப்போதே தெரிந்தது முழு ஓவியம். அந்த‌ ஓவிய‌த்திலிருந்த வெள்ளை குதிரை இப்போது முழு க‌ருப்பு நிற‌த்தில் இருந்த‌து. அதில் அவள் விழிகளை விரித்து பதறி ஆராய, இது நிச்சயம் அவ‌ள் வ‌ரைந்த‌ ஓவிய‌மேதான். அதில் எந்த‌ ச‌ந்தேக‌மும் இல்லை. ஆனால் அவ‌ள் வ‌ரைந்த‌ குதிரையின் நிற‌ம் ம‌ட்டும் மாறியிருக்க‌, அவ‌ளோ புரியாது  விழிக‌ருவை வேகமாய் அசைக்க‌, திடீரென்று ஒரு குதிரையின் கனைப்பு ச‌த்த‌ம். அதில் திடுக்கிட்டு அவள் திரும்ப, அந்த‌ ஜ‌ன்ன‌லுக்கு வெளியே  காற்றை கிழித்துக்கொண்டு அதே கருப்பு குதிரையில் வ‌ந்துக்கொண்டிருந்தான் அவ‌ளின் நிஜ உலக ராஜ‌குமார‌ன்.

அதில் அவ‌ள் இமைக‌ள் முழுதாய் விரிந்து விழிகருக்கள் அப்படியே உறைய, அந்த‌ விழிக‌ளுள் க‌ன‌வாக‌ ம‌ட்டுமே இருந்த அந்த ஓவிய‌ காட்சி  உயிர் பெற்று முழு நிஜ‌மாக‌ இந்நொடி அவ‌ள் க‌ண்முன் இருந்த‌து.

அதில் அப்படியே அந்த ஜன்னலில் சாய்ந்துவிட்டவள் முழு வியப்பாய் கரு இமைகளை மூடி விரிக்க, க‌ரும் புய‌லாய் வந்துக் கொண்டிருந்த அவனின் உருவம் மட்டுமே அவள் விழித்திரையில் நிறைந்தது.

அன்றுதான்என்ம‌ன‌ம்அழுத்திகூறிய‌து
அவ‌ன்தான்உன்ராஜ‌குமார‌ன்என்று

     – நொடிக‌ள் தொட‌ரும்…

You may also like

Leave a Comment

About Me

Featured