“எனக்கு ஒன்னு வேணும்.” என்று அவள் சோர்ந்த குரலில் கூற, “என்ன வேணும் சொல்லு.” என்று பதறி கேட்டான் அகன்.
அதில் சில நொடிகள் அவன் விழிகளையே பார்த்தவள், அவன் சட்டையை மேலும் சுருட்டி பிடித்தபடி அவன் நாசியை உரச, அவனோ புரியாது அவள் விழிகளையே பார்க்க, அவளின் விழிகளை மெதுவாய் மூடியவள், அப்படியே அவன் நாசியுரச சாய்ந்து அவன் இதழோடு இதழ் சேர்த்தாள் மௌனா.
அடுத்த நொடி “மம்மு!” என்ற அவன் குரலில் திடுக்கிட்டு நிகழ் உலகம் வந்தவள், பதற்றமாய் அவன் விழிகளை பார்க்க, “என்ன வேணுன்னு சொல்லு.” என்றான் அகன்.
அதை கூறுவதற்குள் அவனை முத்தமிடுவதுப்போல் அவள் மனம் கற்பனை செய்திருக்க, தடுமாறி அவன் சட்டையை விட்டாள்.
“என்ன ஆச்சு?” என்று அவன் பதறி கேட்க, “அ..அது..” என்றபடி பார்வையை தாழ்த்தியவள், “ஒன்னும் இல்ல.” என்றாள் தடுமாற்றமாக.
அதில் புரியாது அவள் முகத்தை ஆராய்ந்தவன், “பட் இப்ப என்னமோ வேணுன்னு சொன்னியே.” என்றான்.
அதில் மேலும் தடுமாறியபடி அவனைவிட்டு விலகி படுத்தவள், “இ..இல்ல எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும். இப்ப எதுவும் எடுத்துட்டு வர வேண்டான்னு சொல்ல வந்தேன்.” என்றாள் தடுமாற்றமாக.
“தாராளமா ரெஸ்ட் எடு. பட் நா குடுக்குறத குடிச்சுட்டு படுத்துக்கோ. அப்பதா திரும்ப ஸ்ட்ரெயின் இல்லாம ரிலேக்ஸா இருக்கும்.” என்றான் அகன்.
அதற்கு மேல் எதுவும் கூறாமல் அவளும் சரியென்று தலையசைக்க, அவள் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டான் அகன்.
அதில் அழுத்தி விழி மூடி திறந்தவளின் உடலெங்கும் புதுவித உணர்வுகள் சுரக்க, அதற்குள் விலகி சென்றிருந்தான் அவன். அதில் அப்படியே பார்வையை திருப்பி செல்லும் அவனையே பார்த்தவளுக்கோ, தனக்குள் என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. அவன் நெருக்கமும் முத்தமும் நேற்று வரை கிளப்பிய உணர்வுகள் வேறு இன்று எழும் உணர்வுகள் வேறாக இருந்தது. அதில் அப்படியே அவள் கரம் அவன் முத்தமிட்ட நெற்றியை வருட, மறு கரமோ அவன் கரம் பதிந்திருந்த தன் ஆழிலை வயிற்றை மெல்ல வருடியது.
இங்கே கிச்சனுக்கு வந்த அகன், அடுப்பை ஆன் செய்து அதன் மேல் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றினான்.
“காலையில வலி போயிருச்சுன்னு விட்டுர கூடாது. படுக்கைய விட்டு எழுந்தவொடனேதா தெரியும் வலி எங்க இருக்குன்னு. நா சொல்ற கஷாயத்த வெச்சு குடு. கொஞ்சம் தெம்பு கெடைக்கும்.” என்று அந்த மஞ்சள் கொடுத்த பாட்டி கூறி மருத்துவ குறிப்புகளை வைத்து இப்போது கஷாயம் தயாரித்துக்கொண்டிருந்தான்.
அப்படியே இஞ்சியை எடுப்பதற்காக ஃப்ரிட்ஜை திறக்க, கடீரென்று அவன் கரம் வலித்தது. “ஆ!” என்று முகத்தை குறுக்கி கரத்தை இறக்கியவன், அப்போதே தன் கரத்தை கவனிக்க, அதுவோ நேற்றை விட இன்று அதிகம் வீங்கியிருந்தது.
தசைகள் எல்லாம் இறுகி உறைந்த தோலில் ஊசி குத்துவதுப்போல ஆயிரம் ஊசிகள் இறங்கும் வலி இருந்தது. நேற்றிரவு ஓரளவுதான் அவன் அந்த மர செதில்களை சுத்தம் செய்திருக்க, இப்போது மிச்சம் உள்ளேயே தங்கியிருந்த செதில்கள் உயிர் வலியை கொடுத்தது. இனி இதற்குமேல் விட்டால் சரி வராது. இன்று மருத்துவரிடம் காட்டியே ஆக வேண்டும், இல்லென்றால் கரமே அழுகிவிடும் நிலைதான் வரும் என்று தோன்றியது.
அதில் சுவாசத்தை இழுத்து பிடித்து வலியை பொறுத்தவன், சில நொடி அப்படியே அந்த கரத்தை அசையாமல் வைத்தான். அதில் தசைகள் கொஞ்சம் தளர்வடைந்து வலி சற்று குறைய, அதை அப்படியே வைத்தபடி மற்றொரு கரத்தாலே வேலையை தொடர்ந்தான்.
தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு கஷாயத்தை தயார் செய்ய ஆரம்பித்தவன், அடுத்த சில நிமிடங்களில் அதை செய்து முடித்து க்ளாஸில் ஊற்றினான். அதுவோ மிகவும் சூடாக இருக்க, அதை வேறு க்ளாஸில் ஊற்றி ஆற்றவும் ஆரம்பித்தான்.
சில நிமிடங்கள் ஆற்றி ஆற்றி மிதமான சூட்டிற்கு வந்ததும் க்ளாஸை தன் கன்னத்தில் வைத்து சோதித்தவன், சரியாக உள்ளது என்ற பிறகுதான் எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றான்.
அறைக்குள் நுழைந்த அகன் திடுக்கிட்டு நின்று மெத்தையை பார்க்க, அங்கே அவள் இல்லை. அதில் புரியாமல் சுற்றி தேடியவன், “மூனா!” என்றபடி உள்ளே வர, குளியலறையில் தண்ணீர் சத்தம் கேட்டது.
அதில் பதறி கையிலிருப்பவற்றை மேசையில் வைத்தவன், “மம்மு!” என்று குரல் கொடுக்க, அடுத்த நொடி தண்ணீர் சத்தம் நின்றது.
அதில் புரியாமல் அருகில் சென்று கதவில் கை வைத்தவன், “எதுக்கு பெட்ட விட்டு எழுந்த நீ?” என்று கேட்க, அதற்கும் உள்ளிருந்து பதில் வரவில்லை.
கதவோ உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. வலியோடு இருக்கும்போதுதான் எட்டவில்லை. இப்போது எட்டியிருக்க, உள்பக்கம் பூட்டியிருந்தாள் அவள். அதில் கதவை தட்டியவன், “எதாவது பதில் சொல்லு.” என்று பதறினான்.
அதற்கும் பதில் வராது போக, இவன் உள்ளம் பதறியது. அதில் பலமாய் தட்டியவன், “மம்மு என்..” என்று கேட்க வர, சட்டென்று திறக்கப்பட்டது கதவு.
அதில் திடுக்கிட்டு அவன் கரத்தை இறக்க, அவளோ குளித்து முடித்து வெறும் டவளை மார்பு வரை கட்டிக்கொண்டு நின்றிருந்தாள். அதில் அவன் பார்வை பதற்றமாய் அவளை மேலிருந்து கீழ் ஆராய, அவளோ தடுமாற்றமாய் தன் மார்பு டவளை இறுக்கி பிடித்து தன்னை மறைக்க முயன்றாள்.
அப்படியே அவளை முழுதாய் ஆராய்ந்து முகத்திற்கு வந்தவன், “ஆர் யூ ஓகே?” என்று பதறி கேட்க, அவளும் தடுமாற்றத்துடன், “ம்ம்” என்று மெல்ல தலையசைத்தாள்.
“எதுக்கு இப்ப குளிக்க போன நீ? நாந்தா வர்றன்னு சொன்னல்ல?” என்று அவன் கேட்க, அவளோ அத்தனை தயக்கமாய் தன் பார்வையை தாழ்த்தியபடி, “அ..அது அந்த துணி ஃபுல் ஆயிருச்சு அதா..” என்று தயங்கினாள்.
அதில் சட்டென்று புருவம் விரித்தவன், வேகமாய் திரும்பி கடிகாரத்தை பார்த்தான். புதிய நேப்கின் வைத்து பத்து மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்க, அவன்தான் அதை மறந்திருந்தான். அதில் வேகமாய் அவள் பக்கம் திரும்பி, “கரைக்ட்டா சேஞ்ச் பண்ணிட்டதான?” என்று கேட்டான்.
அதில் அவளும் தயக்கத்துடனே பார்வையை நிமிர்த்தாமல், “ம்ம் பண்ணிட்டேன். ஆனா..” என்று தயங்க, “என்ன ஆச்சு?” என்றான் பதற்றமாக.
அதில் இரு கரங்களால் தன்னை மறைத்துக்கொண்டபடி, “என் சேரி மட்டும்..” என்றபடி மெத்தையை பார்த்தாள்.
அதில் அவனும் திரும்பி பார்க்க, அங்கேதான் அவளின் மாற்று சேலை இருந்தது. அதில்தான் புரிந்து வேகமாய் அதை எடுத்து வந்து அவள் கையில் கொடுத்தவன், “இந்தா கட்டிக்கோ.” என்றான்.
அதை தயக்கமாய் வாங்கிக்கொண்டவள் தன் மார்போடு இறுக்கிக்கொண்டு, “உ..உள்ள ஒரே ஈரமா இருக்கு..” என்றாள் தடுமாற்றமாக.
அதில்தான் அவள் தயக்கம் புரிய, “சரி ஓகே இங்க ரூம்லயே சேஞ் பண்ணிக்கோ வா.” என்று வழிவிட, அவளோ வராமல் தயக்கமாய் தன் மார்புக்குள் சேலையை இறுக்கி பிடித்தாள்.
“என்ன ஆச்சு?” என்று அவன் புரியாமல் கேட்க, அவளோ அத்தனை தயக்கமாய் பார்வையை நிமிர்த்தாமலே விழியை உருட்டினாள்.
அதில் பட்டென்று சிரித்தவன், “சரி நா வெளிய இருக்கேன். வந்து சேஞ்ச் பண்ணிக்கோ.” என்றான்.
அப்போதும் பார்வையை நிமிர்த்தாமல் சரியென்று மெல்ல தலையசைத்தவள், தயக்கமாய் அப்படியே நின்றிருக்க, அவனும் அங்கிருந்து நகர்ந்து வெளியில் சென்றான்.
அவன் பாதங்கள் வெளியே சென்ற பிறகுதான் பார்வையை நிமிர்த்தியவள், அவன் கதவை அடைத்தவுடன்தான் குளியலறையைவிட்டு வெளியே வந்தாள்.
அப்படியே மெத்தையை நோக்கி வரும் நேர, திடீரென்று அவள் கால்கள் தடுமாற, திடுக்கிட்டு சுவரில் சாய்ந்து நிதானித்தாள். ஏற்கனவே உடலில் சக்தியில்லாதிருக்க, வேதனை கண்ட உடல் வெகு நேரம் குளியலறையில் நின்றிருந்ததால் தலை சுற்றுவதுப்போல் இருந்தது.
அதில் நெற்றியை பிடித்தவள், விழிகளை உலுக்கிவிட்டு பார்க்க அடுத்த சில நிமிடங்களில் அனைத்தும் தெளிவாகியது. அதில் மீண்டும் தலையை உலுக்கிவிட்டு முன்னால் நடக்க போக, கால்கள் தடுமாறி கையிலிருந்த சேலை நழுவி கீழே விழுந்தது. அவளோ பொத்தென்று அங்கிருந்த மேசையில் சாய, அந்த சத்ததில் பதறியபடி உள்ளே வந்தான் அகன்.
அவளோ தலையை அழுத்தி பிடித்து தடுமாற, வேகமாய் வந்து அவளை தாங்கி பிடித்தான் அகன்.
“என்ன ஆச்சு ம்மு?” என்று அவளின் கன்னத்தை பிடிக்க, அவளோ தன்னை நிதானித்துக்கொண்டு மெல்ல நிமிர்ந்து நேராய் நின்றாள்.
“ஒன்னும் இல்ல விடுங்க.” என்று அவள் விலக முயல, “இரு இரு” என்று அவளை அப்படியே நிற்க வைத்தான்.
அதில் அவள் தடுமாறி அவன் புஜத்தை பிடிக்க, அவனோ கீழிருந்த அந்த புடவையை கையில் எடுத்து, “வா நா கட்டிவிடுறேன்” என்றான்.
அதில் வேகமாய் தன்னை மறைத்தவள், “இ..இல்ல வேண்டா” என்று தயங்க, அவனோ எதுவும் பேசாமல் அவள் ஜேக்கெட்டை எடுத்து அவளுக்கு அணிவிக்க வந்தான்.
அதில் கூச்சமாய் தன்னை குறுக்கி கொண்டவள், “இல்ல நா..” என்று கூற வர, “ஷ்ஷ்” என்றபடி அவள் இரு கரங்களையும் இறக்கிவிட்டவன், அவளின் மார்புக்கு நடுவே இருந்த டவளை மெல்ல அவிழ்த்தான்.
அதில் அவளின் மார்பு குழியில் அவன் விரல்கள் உரச, அவள் உடல் சிலிர்த்து குறுகியது. அடுத்த நொடி அந்த டவள் சரிந்து விழுந்திருக்க, அவள் அங்கத்தை காற்று தீண்டும் முன்பே அவன் கரம் தீண்டியது. அதில் அவள் உள்ளங்கால் குறுக, கூச்சத்தில் மார்பு மொட்டுக்கள் சிலிர்த்தது. அதை அவளின் கருப்பு உள்ளாடையால் மூடி மறைத்தவன், அந்த மார்புகளில் மொத்தமாய் தன் நெஞ்சை புதைத்தான். அதில் அவள் திடுக்கிட்டு விழி திறக்க, அவனோ அவளை தன் தேகத்தில் புதைத்தபடி அணைத்து, பின்னிருந்த அவள் உள்ளாடை ஹூக்குகளை மாட்டினான்.
அவன் விரல்கள் அவளின் வெற்று முதுகில் கோலமிடவும் இவள் விழிகள் கூச்சத்தில் சொருக முயல, கடினப்பட்டு இமைகளை பிரித்தாள்.
அதற்குள் பூட்டிவிட்டு விலகியவன், அவளுக்கு ஜேக்கெட்டை மாட்ட ஆரம்பித்தான். அதில் தன் கரங்களை அவன் அணிவிக்க ஏதுவாய் காட்டியவளின் விழிகள் மட்டும் அவனிடம் இருந்தது. அவன் முகத்தில் எந்த உணர்வும் தெரியவில்லை. கடமையே கண்ணாய் அவன் மாட்டிக்கொண்டிருக்க, அவளுக்குதான் அவன் தீண்டல் ஒவ்வொன்றும் உயிர் வரை சிலிர்த்தது.
அப்படியே அவன் கொக்கிகளையும் மாட்டி முடித்து கீழாடைகளையும் அணிவித்து, சேலையை எடுக்க, அவள் தேகத்தின் ஒவ்வொரு மூலையும் அவன் தீண்டும் முன்பே சிலிர்த்து நின்றது.
அதை கவனிக்காதவன் சேலையை எடுத்து அவள் இடையில் சொருக, அதில் சிலிர்த்து விரிந்த அவள் நாபியை உரசியபடி சுற்றி சேலையை கட்ட ஆரம்பித்தான் அவன். அதில் அவளின் சுவாச வேகம் மெல்லியதாய் அதிகரிக்க, அவன் கரத்தின் ஒவ்வொரு உரசலும் அவள் பெண்மையின் உதிரத்தை மறக்க வைத்தது.
அவன் மடிப்புகளை எடுக்க துவங்கும்போதும் அவன் விரல்கள் வெகுவாய் அவள் அடிவயிற்றை உரச, அங்கிருந்த வலி அவன் தீண்டலில் சுகமாய் தான் அவள் தேகத்தில் படர்ந்தது. அவனோ இரண்டு நொடியில் மொத்த மடிப்புகளையும் எடுத்து முடித்து மொத்தமாய் சொருக, அதில் திடுக்கிட்டு சிலிர்த்தவளின் கடைசி மூச்சும் வெப்பமாய் வெளி வந்தது.
அப்படியே அவன் வேக வேகமாய் கட்டி முடித்து அவள் தோளில் சேலையை போட, முந்தாணை அவள் முகத்தை உரசியபடி தோளை கடந்து விழுந்தது. அதில் திடுக்கிட்டு தன்னிலை பெற்றவள், அப்போதே தன் சேலையை கவனிக்க, அதற்குள் கட்டி முடித்திருந்தான்.
அதில் அவள் விழிகள் வியக்க, இதற்கு முன்பும் அவன்தானே கட்டிவிட்டான் என்ற நினைவு இப்போதே வந்தது. அவனோ சிறு தடுமாற்றமும் இன்றி அத்தனை எளிதாய் சேலை மடிப்புகளை எடுத்து, சொருக குத்த என்று அனைத்தையும் வேக வேகமாய் செய்திருந்தான். என்னவோ பல முறை செய்த அனுபவசாளி போல.
இந்த சேலைக்கூட பரவாயில்லை. நேற்றிரவு அவன் நேப்கின் மாற்றும்போதும் அப்படித்தானே. அவன்தானே தனக்கே கற்று கொடுத்தான். அதில் கூட அவன் தடுமாறவில்லை அத்தனை சாதாரணமாய் செய்தான்.
அதில் அவள் கேள்வியாய் அவன் முகம் பார்க்க, அவனோ கடைசி ஹூக்கை குத்திவிட்டு, “அவ்ளோதா வா.” என்றபடி அவளை கை தாங்கலாய் அழைத்து வந்தான்.
அதில் தடுமாறி பார்வையை திருப்பிவிட்டு மெல்ல மெத்தையில் வந்து அமர்ந்தவள், அப்போதும் பதற்றமாய் அவனையே பார்த்தாள். அவள் உள்ளத்தில் புதிதாய் ஒரு நெருடல்.
இது என்ன உணர்வு என்று புரியவில்லை. ஆனால் அவன் மீது புதிதாய் முளைத்த உரிமை கொடுத்த உணர்வோ என்னவோ. உள்ளுக்குள் சிறு அச்சம். தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டிய உரிமை வேறு ஒருவருக்கு கிடைத்திருக்குமோ என்று மனம் எக்குத்தப்பாய்தான் யோசித்தது. அதற்குள் அவளை சாய்த்து அமர வைத்தவன், கொண்டு வந்த கஷாயத்தை நீட்டி, “இத குடி. செரியாயிரும்.” என்று ஊட்ட வர, வேகமாய் அவன் கரத்தை பிடித்து தடுத்தாள் மௌனா.
அதில் அவன் நிமிர்ந்து அவளை பார்க்க, அவளோ விழிகளில் சிறு பதற்றத்துடன், “உங்ககிட்ட ஒன்னு கேட்டா தப்பா..” என்று கூறும் முன், “கேளு ம்மு.” என்றான் வேகமாக.
“அ..அது அம்மா சொன்னாங்க.. உங்களுக்கு அக்கா தங்கச்சி யாரும் இல்லன்னு. அப்றம் எப்படி உங்களுக்கு இதல்லாம்..” என்று தயங்க, சட்டென்று புருவம் விரித்தான் அகன்.
“இ..இல்ல நா அந்த அர்த்தத்துல..” என்று அவள் கூற வர, அவள் வாயில் கரம் வைதது தடுத்தான் அகன்.
அதில் அவள் திடுக்கிட்டு அவன் விழி பார்க்க, “யூ ஆர் மை வைஃப். நீ எந்த அர்த்ததுல கேக்கவும் உனக்கு உரிம இருக்கு.” என்றான்.
அதில் அவளோ சிறு வியப்போடு அவன் விழிகளை சந்திக்க, அவன் விழிகளிலோ இப்போது மெல்லியதாய் கண்ணீர் துளித்தது.
அதில் அவள் பதற்றமாய் அவன் விழிகளை ஆராய, அவனோ அவள் கரத்தை எடுத்து அழுத்தி பிடித்து அவள் விழி பார்த்து, “உனக்கு தெரிஞ்சுக்க உரிம இருக்கு.” என்றான்.
அதில் அவளுக்கோ ஏனென்றே தெரியாமல் இதயம் பலமாய் துடிக்க, “நா இதெல்லா உனக்கு முன்னாலயே ஒருத்தருக்கு பல தெடவ செஞ்சிருக்கேன்.” என்றான்.
அடுத்த நொடி அவள் இதயம் நின்று துடிக்க, அவன் விழிகளிலோ கண்ணீர் நிறைந்தது.
– காதல் தீ தொடரும்…