Home FREE NOVELSதீயாய் தித்திக்கிறாய் CH-10

தீயாய் தித்திக்கிறாய் CH-10

by oviyablessy
71 views

த‌ன் அத்தை கூறிய‌துப்போல‌வே வேப்ப‌ இலை ம‌ற்றும் விர‌லி ம‌ஞ்ச‌ளை க‌ல‌ந்து மையாக‌ அரைத்து, குண்டு நெல்லிக்காய் அளவிற்கு உருண்டை செய்து அவ‌ளுக்கு கொடுத்து விழுங்க‌ வைத்தான் அக‌ன்.

அவ‌ளோ ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ சுவை என்ப‌தால் மெல்லிய‌தாய் ம‌ட்டுமே முக‌த்தை சுழித்து, அப்ப‌டியே விழுங்கிவிட்டாள். அது உள்ளே இற‌ங்கிய‌ நொடி அவ‌ள் வாயெல்லாம் க‌ச‌ப்பாய் இருக்க‌, இப்போது அவ‌ள் முக‌ம் அதிக‌ம் சுழிந்த‌து. அத‌ற்குள் வேக‌மாய் அவ‌ன் த‌ண்ணீரை எடுத்து நீட்ட‌, அதையும் மெல்ல‌  குடிக்க‌ ஆர‌ம்பித்தாள்.

அவ‌ள் குடித்து முடித்த‌தும் க்ளாஸை வில‌க்கிய‌வ‌ன், அத்த‌னை ப‌த‌ற்ற‌மாய் அவ‌ளை ஆராய்ந்து, “இப்ப‌ ஓகேவா?” என்று கேட்டான்.

அதில் விழியை நிமிர்த்த‌ முடியாம‌ல் நிமிர்த்தி அவ‌னை பார்த்த‌வ‌ள், “க்..கொஞ்ச‌ம் டைம் ஆகும்.” என்றாள் சோர்ந்த‌ இறுகிய‌ குர‌லில்.

“ச‌..சரி ஓகே. நீ ப‌டுத்துக்கோ.” என்ற‌ப‌டி அவ‌ன் அவ‌ச‌ர‌மாய் க்ளாஸை மேசையில் வைத்துவிட்டு அவ‌ளை மெதுவாய் மெத்தையில் கிட‌த்தினான்.

அதில் அவ‌ளும் முக‌த்தை குறுக்கி வ‌யிற்றை பிடித்து வ‌லியுட‌ன் மெல்ல‌ த‌லைய‌ணையில் சாய்ந்தாள். அதில் அவ‌ள் க‌ர‌த்தை இறுக்கி பிடித்த‌வ‌ன், “கொஞ்ச‌ நேர‌த்துல‌ செரியாயிரும். ம்ம்?” என்று கூற‌, அவ‌ன் விழிக‌ளில் அப்ப‌டியொரு த‌விப்பு.

இவ‌ளுக்கு கூட‌ அந்த‌ள‌வு ப‌ட‌ப‌ட‌ப்பு இல்லை போல‌. அவ‌னுக்கோ முத‌ல் முறையாய் ஒரு பெண்ணின் வேத‌னையை அதுவும் த‌ன்ன‌வ‌ளின் வேத‌னையை இத்த‌னை அருகில் பார்க்க‌வும் உள்ள‌ம் முத‌ல் உட‌ல் வ‌ரை அனைத்துமே ப‌ட‌ப‌ட‌த்த‌து.  அதை க‌வ‌னிக்கும் நிலையிலெல்லாம் அவ‌ள் இல்லை. வ‌லி உயிர் போய்க்கொண்டு இருக்க‌, “ஆ!” என்றப‌டி சுவாச‌த்தை இழுத்து பிடித்தாள்.

அதில் துடித்து எழுந்த‌வ‌ன், “ஒரே ஒரு நிமிஷ‌ம். இப்ப‌ வ‌ந்த‌ர்றேன்.” என்ற‌ப‌டி அவ‌ச‌ர‌மாய் ந‌க‌ர்ந்தான்.

அதில் ஆள் புரியாது அவ‌னை பார்க்க‌, அத‌ற்குள் அடிவ‌யிற்றில் க‌ட‌ப்பாறையே இற‌ங்குவ‌துப்போல் வ‌லிக்க‌, “அம்மா!” என்று துடித்து குறுகினாள்.

இங்கே அவ‌ச‌ர‌மாய் கிச்ச‌னுக்கு வ‌ந்த அக‌ன், வேக‌மாய் ஒரு பாத்திர‌த்தை எடுத்து அடுப்பில் வைத்தான். அதில் த‌ண்ணீரை ஊற்றி சூடாக்கிய‌ப‌டி, வேக‌மாய் சென்று ஒரு க‌ட்ட‌ன் துணியை எடுத்து வ‌ந்தான்.

“இந்த‌ மாதிரி நேர‌த்துல‌, அடி வ‌யித்துல‌ ஒத்த‌ட‌ம் குடுக்க‌ணும். அப்ப‌தா கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா வ‌லி குறையும்.” என்று ஒரு பாட்டி கூறிய‌து அவ‌ன் காதில் ஒலித்த‌து. அவ‌ன் க‌டைக்கு சென்று விர‌லி ம‌ஞ்ச‌ள் வாங்க‌லாம் என்று பார்த்தால், அந்த‌ ம‌ஞ்ச‌ள் அருகில் எங்குமே கிடைக்க‌வில்லை. தூர‌ம் சென்று அலைய‌ நேர‌மும் இல்லை. அத‌னால் த‌ன் அப்பார்ட்ம‌ண்ட்டில் இருக்கும் ஒரு வ‌ய‌தான‌ பாட்டியிட‌ம்தான் சென்று வாங்கி வ‌ந்தான்.

அவ‌ர்தான் ம‌ஞ்ச‌ளோடு சேர்த்து சில‌ ம‌ருத்துவ‌ குறிப்புக‌ளும் கூறி அனுப்பினார்.

அதைதான் அவ‌ன் இப்போது அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாய் த‌யார் செய்துக் கொண்டிருக்க‌, அத‌ற்குள் த‌ண்ணீர் சூடாகி மெல்லிய‌தாய் ப‌ப்பிள் ஆர‌ம்பித்த‌து.

“இத‌மான‌ சூட்டுல‌ இருக்க‌ணும்.” என்று அந்த‌ பாட்டி கூறிய‌து க‌ண்முன் வ‌ர‌, த‌ண்ணீரை தொட்டு பார்த்தான். அவ‌ர் கூறிய‌துப்போல‌ இத‌மான‌ சூடாக‌ இருக்க‌வும் வேக‌மாய் அடுப்பை அணைத்துவிட்டு பாத்திர‌த்தை இற‌க்கினான்.

ஆனாலும் ஒரு ப‌த‌ற்ற‌ம். அதில் மீண்டும் த‌ன் புற‌ங்கையை அத‌னுள் வைத்து ந‌னைத்து பார்க்க‌, மித‌மான‌ சூடாக‌தான் தோன்றிய‌து. ஆனாலுமே ஆண்ம‌க‌னின் க‌ர‌ம் ச‌ற்று சூடு தாங்கும் அல்ல‌வா? அத‌னால் பூவைவிட‌ மென்மையான‌ அவ‌ள் மேனி தாங்குமா என்று அவ‌னுள் ஒரு ப‌த‌ற்ற‌ம்.

அதில் பாத்திர‌த்தை அப்ப‌டியே வைத்துவிட்டு ஒரு ஸ்பூனை எடுத்த‌வ‌ன், அந்த‌ த‌ண்ணீரை அதில் எடுத்து குடித்து பார்த்தான். அது அவ‌னின் மென் நாக்கில் ப‌ட்டு மென்மையான‌ உள் தொண்டையில் இற‌ங்க‌, ச‌ற்று அதிக‌ சூடாக‌வே தோன்றிய‌து இப்போது.

அதில் வேக‌மாய் ஸ்பூனை வீசிவிட்டு நார்ம‌ல் வாட்ட‌ரை எடுத்து அத‌னுள் கொஞ்ச‌ம் க‌ல‌ந்தான். இப்போது குடித்து பார்க்க‌, இதுதான் ச‌ரியான‌ இத‌மாக‌ தோன்றிய‌து. அதில்தான் நிம்ம‌திய‌டைந்த‌வ‌ன், வேக‌மாய் அதை தூக்கிக்கொண்டு அறைக்கு சென்றான்.

அங்கே அவ‌ளோ வ‌யிற்றை இறுக்கி பிடித்து அசையாம‌ல் குறுகி ப‌டுத்திருக்க‌, முன்பிருந்த‌ போராட்ட‌ம் இப்போது இல்லை. வேம்பு ம‌ருந்து கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் வேலை செய்ய‌ ஆர‌ம்பித்திருந்த‌து போல‌. அதில் அவ‌ன் அப்ப‌டியே அவ‌ள‌ருகே வ‌ந்து அம‌ர‌, அவ‌ளோ திடுக்கிட்டு விழித்தாள்.

“ரிலேக்ஸ். இப்போ எப்பிடி இருக்கு?” என்று அவ‌ன் ப‌த‌ற்ற‌மாய் கேட்க‌, அவ‌ளோ ப‌ர‌வாயில்லை என்று க‌ண்ணை ம‌ட்டும் அசைத்தாள்.

ஆனால் அவ‌ள் முக‌த்திலிருந்த சோர்வும் சுழிவுமே கூறிய‌து, இன்னுமே அவ‌ளுக்கு வ‌லி இருக்க‌தான் செய்கிற‌து என்று. அதில் மெல்ல‌ ஒரு ஸ்டூலை இழுத்து போட்டவ‌ன், அத‌ன் மீது அந்த‌ பாத்திர‌த்தை வைத்துவிட்டு, அந்த‌ துணியை அதில் ந‌னைத்தான்.

அதில் அவ‌ளோ புரியா சோர்வாய் அவ‌ன் செய‌லை பார்க்க‌, அவ‌னோ குறுகி கிட‌ந்த‌ அவ‌ளை நேராய் ப‌டுக்க‌ வைத்து, அவ‌ள் வ‌யிற்றிலிருந்த‌ சேலை திரையை வில‌க்கினான்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு அவ‌ன் க‌ர‌த்தை பிடிக்க‌, “ஒன்னும் இல்ல‌ ரிலேக்ஸ்.” என்ற‌ப‌டி த‌ன் க‌ர‌த்திலிருந்த‌ அவ‌ள் க‌ர‌த்தை வில‌க்கி மெத்தையில் மென்மையாய் வைத்த‌வ‌ன், முழுதாய் அவ‌ள் சேலையை வில‌க்கினான்.

அதில் அவ‌ளின் ம‌ணிவ‌யிறு இப்போது முழுதாய் வெளிப்ப‌ட‌வும், அதிலிருந்த‌ ஹிப் செயினை மெதுவாய் க‌ழ‌ற்றினான் அவ‌ன்.

அதில் அவ‌ள் மெத்தையை இறுக்கி பிடிக்க‌, அவ‌னோ க‌ழ‌ற்ற‌ முடியாம‌ல் த‌டுமாறினான். அவ‌ள்தான் அடிக்க‌டி க‌ழ‌ற்றுகிறான் என்று அதை கொஞ்ச‌ம் டைட் செய்து வைத்திருந்தாள். அத‌னால் அவ‌ன் விர‌ல்க‌ள் த‌டுமாற‌, அதில் முய‌ற்சியைவிட்ட‌வ‌ன் மெதுவாய் அவ‌ள் இடை நோக்கி குனிந்தான்.

அதில் ப‌த‌ற்ற‌மாய் அவ‌ள் இடை குறுக‌, அங்கே அந்த‌ செயினில் வாய் வைத்து மெல்ல‌ க‌டித்து திற‌க்க‌ முய‌ன்றான். அதில் அவ‌னின் முன் சிகை அவ‌ள் திரையில்லா ம‌ணிவ‌யிற்றில் அழுத்தி உர‌ச‌, அவ‌ளுக்கோ வ‌லியையும் தாண்டி ஒருவித‌ சிலிர்ப்பு. அதில் அவ‌ள் இறுக்கி விழி மூட‌, அடுத்த‌ நொடி ஹிப் செயின் க‌ழ‌ன்று ச‌ரிந்த‌து.

அதில் அவ‌ள் இடை ப‌த‌ற்ற‌த்தில் குறுக‌, அப்ப‌டியே அந்த‌ செயினை ம‌ட்டும் மெல்ல‌ உருவி ப‌த்திர‌மாய் ஓர‌ம் வைத்தான். அதில் அவ‌ளோ புரியா ப‌த‌ற்ற‌மாய் அவ‌னை பார்க்க‌, அவ‌னோ மெதுவாய் அவ‌ளின் இடை கீழிருந்த‌ ம‌டிப்புக‌ளையும் உருவினான்.

அதில் திடுக்கிட்டு அவ‌ள் எழ‌ முய‌ல‌, அவ‌ள் ஆழிலை வ‌யிற்றில் அழுத்த‌மாய் பதிந்த‌து அவ‌ன் இத‌ழ்க‌ள்.

அதில் அப்ப‌டியே ப‌டுத்துவிட்ட‌வ‌ள் ப‌த‌ற்ற‌மாய் அவ‌னை பார்க்க‌, அவ‌னோ அப்ப‌டியே த‌லையை நிமிர்த்தி அவ‌ளை பார்த்து, “ட்ர‌ஸ்ட் மீ” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அவ‌ன் க‌ண்ணில் மோக‌மின்றி ச‌ல‌மின்றி தெரிந்த‌ ஏதோ ஒன்று அவ‌ளை அப்ப‌டியே த‌ள‌ர‌ வைக்க‌, அவ‌னோ ம‌டிப்புக‌ளை மெல்ல‌ உருவி சேலையை ந‌ன்றாய் கீழே இற‌க்கிவிட்டான்.

அதில் அவ‌ளின் இத‌ய‌ம் ப‌ல‌மாய் துடிக்க‌, அவ‌னோ அப்படியே திரும்பி அந்த‌ சுடு நீரில் நனைத்த‌ துணியை கொஞ்ச‌மாய் பிழிந்து எடுத்து மென்மையாய் அவ‌ள் அடிவ‌யிற்றில் ஒத்தினான்.

அதில் இத‌மாய் விழி மூடிய‌வ‌ளின் இத‌ய‌ம் மெல்ல‌ வேக‌த்தை குறைக்க‌, நெருப்பாய் கொதித்த‌ அவ‌ள் வ‌யிற்று ப‌குதி இப்போது மெல்ல‌ இத‌த்தை உண‌ர்ந்த‌து.

அவ‌னோ மிக‌ மென்மையாய் மிக‌ க‌வ‌ன‌மாய் அவ‌ள் வ‌யிற்றில் ஒற்றி எடுக்க‌, அப்ப‌டியே மெல்ல‌ மெல்ல‌ துடிப்பு அட‌க்கி சுக‌மாய் இருந்த‌து அவ‌ளுக்கு.

அவ‌னோ அப்ப‌டியே அவ‌ளின்  வ‌யிறு மொத்த‌மும் மெல்ல‌ ஒற்றி எடுக்க‌, அவ‌ள் உட‌லெங்கும் ப‌ர‌விய‌ இத‌ம், அவ‌ள் வலியை அப்ப‌டியே குறைத்த‌து. இந்த‌ புதுவித‌மான‌ முறையை யாருமே அவ‌ளுக்கு செய்த‌தில்லை போலும், அவ‌ள் இடை சுக‌மாய் விரிந்து கொடுக்க‌, அவ‌ள் வேத‌னை மெல்ல‌ அட‌ங்க ஆர‌ம்பித்த‌து.

அப்ப‌டியே அவ‌ன் திரும்ப‌ திரும்ப‌ ந‌னைத்து மென்மையாய் அவ‌ள் இடையில் ஒற்றி எடுக்க‌, அந்த‌ இத‌த்தில் சுக‌மாய் அவ‌ள் இமைக‌ள் சுருள‌, அப்ப‌டியே உற‌க்க‌ம் த‌ழுவிய‌து அவ‌ளுள்.

அப்ப‌டியே வ‌லி சுத்த‌மாய் குறைந்து அவ‌ள் ஆழ்ந்த‌ உற‌க்கத்திற்கு சென்றிருக்க‌, அவ‌ள் வ‌யிறு மெதுவாய் ஏறி இற‌ங்கிய‌து. அப்போதே அவ‌ன் அவ‌ள் முக‌த்தை க‌வ‌னிக்க‌, அவ‌ளோ ஆழ்ந்த‌ உற‌க்க‌த்திற்கு சென்றிருந்தாள்.

அவ‌ள் வ‌லிக‌ள் முழுதாய் ம‌றைந்து இப்ப‌டி உற‌ங்க‌ ஆர‌ம்பித்திருக்க‌வும் தான் அவ‌ன் இத‌ய‌ம் சீராகவே துவ‌ங்கியிருக்க‌, நிறைவாய் மெல்ல‌ புன்ன‌கைத்த‌வ‌ன், அப்ப‌டியே திரும்பி அந்த‌ ஈர‌ துணியை முழுதாய் ஒரு முறை பிழிந்துவிட்டு, வெறும் துணியால் அவ‌ள் ஈர‌ வ‌யிற்றை முழுதாய் துடைத்துவிட்டான்.

அப்படியே ஈர‌ம் மொத்த‌த்தையும் சுத்த‌மாய் துடைத்து முடித்த‌வ‌ன், அவ‌ள் அடிவ‌யிற்றை மெல்ல‌ நெருங்கி அங்கே மென்மையாய் த‌ன் க‌ன்ன‌த்தை ப‌தித்தான். அன‌லாய் இருந்த‌ இட‌ம் இப்போது ச‌ற்று இத‌மாய் மாறியிருக்க‌, இப்போதே அவ‌ன் ம‌ன‌ம் முழு நிம்ம‌திய‌டைந்த‌து.

அதில் வில‌கி அவ‌ள் சேலை ச‌ரி செய்து மூடிவிட்ட‌வ‌ன், அவ‌ள் ம‌டிப்புக‌ளையும் ச‌ரியாய் எடுத்து உள்ளே சொருகிவிட்டான். அதில் ச‌ட்டென்று அவ‌ள் உட‌ல் சிலிர்த்து அட‌ங்க‌, அவ‌னோ ப‌த‌ற்ற‌மாய் க‌ர‌த்தை வில‌க்கினான். அவ‌ளோ அப்ப‌டியே உற‌க்க‌த்தை தொட‌ர‌, இவ‌னுமே த‌டுமாறி அவ‌ள் சேலையை ச‌ரி செய்துவிட்டு வில‌கி எழுந்தான்.

இப்போதே அவ‌ன் கர‌த்திலிருந்த‌ காய‌ம் வ‌லியை உண‌ர்த்த‌, “ஸ்ஸ்” என்று முக‌த்தை‌ சுழித்த‌ப‌டி க‌ர‌த்தை திருப்பி பார்த்தான்.

வாழ்நாளில் இன்று வ‌ரை ம‌ர‌மே ஏற‌ தெரியாம‌ல், முத‌ல் முறையாய் இன்று ஏறியிருக்கிறான். அதுவும் பாதி காய்ந்த‌ ப‌ட்டை ம‌ர‌ம், அதுவும் வேப்ப‌ மர‌ம், கொஞ்ச‌ம் ந‌ழுவிய‌த‌ற்கே மரம் உடைந்து க‌ர‌த்தில் இறங்கி, சதை மொத்தமும் சிதைத்து கிழிந்திருந்த‌து.

அதை பார்த்த‌வ‌னின் வ‌லி இன்னும் அதிக‌மாக‌, வேக‌மாய் க‌ர‌த்தை உத‌றிக்கொண்ட‌வ‌ன், நேராய் குளிய‌ல‌றைக்குள் சென்றான்.

எரிச்ச‌ல் வேறு அதிக‌மாய் இருக்க‌, டேபை திற‌ந்து முத‌லில் த‌ண்ணீரில் ந‌னைத்தான். அடுத்த‌ நொடி எரிச்ச‌ல் அதிக‌மாகி தீயாய் எரிய‌ ஆர‌ம்பிக்க‌, அதில் இறுக்கி விழி மூடி தாங்கிக்கொண்ட‌வ‌ன், காய‌த்தை முழுதாய் க‌ழுவி முடித்தான்.

முடித்த‌தும் டேபை ஆஃப் செய்துவிட்டவ‌ன், அப்போதே ச‌ற்று மூச்சுவிட்டுக்கொண்ட‌ப‌டி திரும்பி அங்கிருந்த‌ ட‌வ‌ளில் த‌ன் க‌ர‌த்தை துடைக்க‌ முய‌ன்றான்.

துணி ப‌ட்ட‌தும் எச்சாய் எரிய‌, “ஸ்ஸ்!” என்று முக‌த்தை இறுக்கிய‌வ‌ன், இது ச‌ரி வ‌ராது என்றப‌டி ட‌வ‌ளை வீசிவிட்டு குளிய‌ல‌றையைவிட்டு வெளி வ‌ந்தான்.

அறைக்கு வ‌ந்த‌வ‌ன் முத‌லில் மெத்தையைதான் பார்க்க‌, அவ‌ளோ நிம்ம‌தியாய் ஆழ்ந்த‌ உற‌க்க‌த்தில் இருந்தாள்.

அதில் ச‌த்த‌மில்லாம‌ல் சென்று அங்கிருந்த‌ ஒரு ட்ராய‌ரை திற‌ந்து ம‌ருந்து பெட்டியை கையில் எடுத்தான். அத‌ன் பிற‌கு அங்கிருந்த‌ சோஃபாவில் சென்று அம‌ர்ந்த‌வ‌னின் கை வ‌லி அதிக‌மாகியிருக்க‌, க‌ர‌த்தை தூக்க‌ முய‌ன்றான். ஆனால் த‌சையெங்கும் அசைக்க‌ முடியா அளவு இப்போது இழுத்து இறுகிய‌து.

அதில் முக‌த்தை இறுக்கி வ‌லியை பொறுத்த‌வ‌ன், க‌டின‌ப்ப‌ட்டு அந்த‌ க‌ர‌த்தை தூக்க‌ முய‌ல‌, சில‌ நொடிக‌ளிலேயே அது பார‌ங்க‌ல்லுக்கு ச‌ம‌மாக‌ தெரிந்த‌து அவ‌னுக்கு. வ‌லி வேறு ந‌ர‌ம்பு ம‌ண்ட‌ல‌ம் வ‌ரை பாய‌, அப்ப‌டியே அந்த‌ க‌ர‌த்தை திருப்பி வைத்த‌வ‌ன், அந்த‌ நிலையிலேயே காய‌த்தில் ம‌ருந்து போட‌ முய‌ன்று,  ச‌ட்டென்று அப்படியே நிறுத்தினான். அங்கே காய‌ம் ம‌ட்டும‌ல்ல‌ ஏக‌த்திற்கும் ம‌ர‌ செதில்க‌ள் குத்தி இற‌ங்கியிருந்த‌து.

அதில் அவன் அகல விழி விரிக்க, அது காய்ந்த‌ ம‌ர‌மாயிற்றே ச‌ர‌மாறியாய் உடைந்து ச‌தைக‌ளை துளைத்து இற‌ங்கியிருக்க‌, அதில் ஒரு நுண்ணிய‌ செதிலை தொட்டாலே உயிர் போன‌து அவ‌னுக்கு. ஆனால் க‌ர‌ம் முழுக்க‌ அத்த‌னை துக‌ள்க‌ள் இர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இற‌ங்கி இருக்க‌, இந்த‌ ஒவ்வொரு துக‌ளையும் பிடுங்கி எடுக்க‌ வேண்டும் என்று நினைக்கும்போதே உள்ள‌ம்  ந‌டுங்கிய‌து. ஆனால் எடுத்தால் ம‌ட்டும்தான் ம‌ருந்து போட‌ முடியும் வேறு. இப்போதே அவ‌ன் க‌ர‌ம் அசைக்க‌ முடியா அள‌விற்கு ஆகியிருக்க‌, வேறு வ‌லியின்றி ப‌ல்லை க‌டித்து அனைத்தையும் பொறுத்த‌வ‌ன், ம‌ருந்து பெட்டியினுள்ளிருந்த‌ ஒரு இடுக்கியை எடுத்து, முத‌ல் செதில் ஒன்றை இடுக்கியில் அழுத்தி பிடித்தான். அத‌ற்கே அவ‌ன் உயிர் வ‌ரை துடிக்க, இறுக்கி விழி மூடி ச‌ட்டென்று அதை பிடுங்கினான். அடுத்த‌ நொடியே “ஆ!” என்று அவ‌ன் ச‌த்த‌மாய் க‌த்திவிட‌, திடுக்கிட்டு எழுந்தாள் மௌனா.

       – காய‌ தீ தொட‌ரும்…

எனதுகதைகளைகாட்சிகளாககாணபின்தொடருங்கள்👇
insta id : oviya_blessy
FB id : Oviya Blessy Novels

You may also like

Leave a Comment

About Me

Featured