அத்தியாயம் 63
விஜயிடம் ஒட்டிக்கொள்ள முயற்சி செய்து தோற்றுப் போன அனாமிகா “ஒன்னு நீ என் கூட வாழனும். இல்லனா மொத்தமா அழிஞ்சு போகணும். உனக்கு வேற ஆப்ஷன் இல்ல விஜய்.” என்று நினைத்து தனக்குள் வில்லத்தனமாக சிரித்தாள். தான் உதைத்து தள்ளியதில் அவள் இடுப்பைப் பிடித்துக் கொண்டு தலையில் விழுந்து கிடப்பதை எல்லாம் கண்டு கொள்ளாத விஜய் நேராக சென்று பாத்ரூமில் உள்ள சவரை திறந்து அதன் அடியில் நின்றான். அவனுக்கு என்னவோ திடீரென்று கோபம் அதிகரித்து இறுதியில் அவன் அனைத்தையும் நினைத்து பார்க்க, இதயத்தில் பாரம் கூடி ஒரே இறுக்கமாக இருந்தது.
அதனால் தனது இரண்டு கைகளையும் சுவற்றில் ஊன்றியவாறு ஷவருக்கு அடியில் நின்று கொண்டு இருந்த விஜய் தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டிருந்தான். முதலில் அவனுடைய மூடிய கண்களுக்கு பிரியா தெரிய, அடுத்த நொடி அவன் தன் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் சம்பவம் ஒன்று அவன் கண்களுக்கு முன்னே வந்து சென்றது. அதை நினைத்து கூட பார்க்க விரும்பாத விஜய் தட்டென தன் கண்களை திறந்து கொள்ள, இப்போது அவனுடைய திறந்த கண்களுக்கு தண்ணீருக்கு அடியில் நின்று கொண்டிருந்ததால் என்னவோ மங்கலாக அமுதாவின் உருவம் தெரிவதை போல இருந்தது.
அது ஏன் என்று அவனுக்கு புரியவில்லை. அதனால் தன் கண்களை கசக்கி விட்டு மீண்டும் அவன் பார்க்க, கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்த அமுதா “நான் உங்களுக்கு பசிக்கும்ன்னு தான் இங்க சாப்பிட கூட்டிட்டு வந்தேன். மத்தபடி உங்கள இந்த மாதிரி இடத்துக்கு கூட்டிட்டு வந்து அசிங்கப்படுத்தனும்னு நான் நினைக்கல சார். ப்ளீஸ் என்ன தப்பா நினைக்காதீங்க.” என்று அவள் அன்று அவனை கோவிலில் அன்னதானம் சாப்பிட வைக்கும்போது சொன்னது இப்போது அவன் கண் முன்னே நிழல் படம் போல தெரிந்தது.
அதனால் எரிச்சல் அடைந்த விஜய் “ஆஆஆ.. shit.. இந்த பொண்ணுங்க எல்லாரும் சரியான பிசாசுங்களா இருக்கும் போல… ஒருத்தி செத்துப்போனதுக்கு அப்புறம் கூட என் மண்டைக்குள்ள இருந்து என்ன சாகடிக்கிறா.. இன்னொருத்தி என் கூடயே இருந்து என்ன டார்ச்சர் பண்ணி கொள்ள பார்க்குறா.. இப்ப சம்பந்தமே இல்லாம மூணாவதா ஒருத்தி என்ன எழவுக்கு என் மைண்ட்ல வந்து வந்து போறாளோ தெரியல..
பிரியாவுக்கும், அனாமிகாக்கும் எனக்கும் நடுவுலயாவது ஏதாவது ஒரு ரிலேஷன்ஷிப் இருக்கு. இந்த அமுதா யாரு? எங்கயோ ஒரு வில்லேஜ்ல சுத்திட்டு இருக்கிற லோ கிளாஸ் பொண்ணு. Maybe character wise பிரியா அண்ட் அனாமிகாவை விட அவ பெட்டரா இருக்கலாம். மத்த எந்த விஷயத்துலயும் அமுதா கிட்ட சொல்லிக்கிற மாதிரி எதுவும் இல்லையே! அப்புறம் என்ன வெங்காயத்துக்கு என் மூளை அவளை பத்தி யோசிக்குது?” என்று கேட்டு தனக்குள் புலம்பியவன் மீண்டும் தன் கண்களை மூடினான்.
முதல் முறை அவன் அவளை பார்க்கும்போது மழையில் மயில் போல ஆடிக் கொண்டிருந்த அமுதா அவள் உடலை இறுக்கி பிடித்து இருந்த ஈரமான தாவணி பாவாடையில் எத்தனை கவர்ச்சியாகவும் அழகாகவும் இருந்தாள் என்று திடீரென அவன் மூளை யோசித்துப் பார்க்க, அவளது அழகான அங்க வளைவுகள் அவன் கண் முன்னே வந்து சென்றது. உடனே அவனது மூளை கண்ணா பின்னாவென்று அவளது அங்கங்களை அளவெடுக்க தொடங்கி இருக்க, அவனுடைய முடி இருந்த கண்கள் கூட அமுதாவை அங்குலம் அங்குலமாக ரசித்தது.
ஒரு நொடி தன்னையும் மறந்து அமுதாவை பற்றிய சிந்தனைகளில் மூழ்கிய விஜய் சட்டென சவரை ஆப் செய்துவிட்டு மூச்சு வாங்க ஒரு ஓரமாக சென்று நின்றான். “சப்பா.. எப்பயாவது stress-ல இருந்தா ஜில்லு ஜில்லுன்னு கொட்டற தண்ணியில குளிச்சா சரியா போயிடுமுன்னு சொல்லுவாங்க. பட் இன்னைக்கு என்ன எனக்கு குளிக்கும்போதே ஸ்ரெஸ் ஆகுது! அந்த அனாமிகா பிசாசு மூஞ்சில காலையில் முளிக்கும்போதே இன்னைக்கு ஒன்னும் விளங்காதுன்னு நெனச்சேன். சூனியக்காரி மார்னிங் கரெக்டா அவ வேலையை பார்க்க ஆரம்பிச்சிட்டானு நினைக்கிறேன். அதான் எனக்கு எல்லாம் தப்பு தப்பா நடக்குது.” என்று புலம்பிய விஜய் அரைகுறையாக குளித்துவிட்டு தனது ரூமிற்கு சென்றான்.
அங்கே ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு கட்டிலில் கவுந்து படுத்து கிடந்த அனாமிகா முதலை கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, வழக்கம்போல் அவளை பொருட்படுத்தாமல் ஆபீஸுற்க்கு செல்ல வேண்டி இருந்ததால் கோட் சூட்டெல்லாம் அணிந்து தயாரான விஜய் அந்த ரூமை விட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வெளியேறி சென்றான்.
உடனே வனிதாவிற்கு கால் செய்த அனாமிகா நடந்ததை அவளிடம் சொல்லி “நான் என்ன பண்ணாலும் விஜய் கொஞ்சம் கூட மனசு இறங்கவே மாட்டேங்குறான் ஆன்ட்டி. இந்த விஷயத்துல உங்களால மட்டும் தான் எனக்கு ஹெல்ப் பண்ண முடியும். ப்ளீஸ் ஆன்ட்டி எனக்கு ஏதாவது ஐடியா கொடுங்க. விஜய் என்னை லவ் பண்ணலனா கூட பரவால்ல. அவன் என இந்த அளவுக்கு வெறுக்க கூடாது. முக்கியமா என்னை அவன் ஹர்ட் பண்ணனும்னு நினைக்கவே கூடாது. அதுக்கு நான் என்ன பண்றதுன்னு நீங்க தான் சொல்லணும்.” என்று சொல்லி புலம்பினாள்.
“ஓகே ஓகே காலங்காத்தாலயே புலம்பாத.. நம்ம அடிக்கடி விஜயை இழுத்து பிடிக்கணும்னு நினைச்சு ஏதாவது பண்ணிக்கிட்டே இருந்தாலும் அவனுக்கு நம்ம மேல டவுட் வந்துரும். உன்னை இப்ப வரைக்கும் அவன் நம்பவே இல்ல. அதனால உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நான் அவன் விஷயத்துல ஒரு அளவுக்கு மேல இன்வாழ்வு ஆனா, அவன் எப்படி வேணாலும் மாறுவான் அனாமிகா. விஜயை பத்தி உனக்கு இன்னும் முழுசா தெரியல. அவன் விஷயத்துல பொறுமையா அவசரப்படாம எது பண்ணாலும் பண்ணனும்.
சும்மா சும்மா போய் அவன் முன்னாடி நின்னு அவனை கடுப்பேத்தீட்டு இருக்காம, கொஞ்சம் தூரமா விலகி நின்னு அவனை உன்ன பத்தி யோசிக்க வைக்கிற மாதிரி ஏதாவது பண்ணு. நீ பண்ற பர்பாமனஸ்ல நெஜமாவே உனக்கு அவன் மேல லவ் இருக்குன்னு அவன் நம்பனும். அது உன் கையில தான் இருக்கு. எல்லாத்தையும் நானே உனக்கு சொல்லிக் கொடுத்துட்டு இருக்க முடியாது.” என்று வனிதா சொல்ல, “ஓகே ஆன்ட்டி, நான் என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன்.” என்று சலிப்புடன் சொன்ன அனாமிகா அந்த அழைப்பை துண்டித்து விட்டாள்.
தினேஷ் தன்னை அழைத்து செல்வதற்காக வருவதற்குள் கீழே சென்று சாப்பிட்டுவிட்டு கிளம்பலாம் என்று நினைத்த விஜய் தனது ரூமில் இருந்து லிஃப்ட் மூலமாக கிரவுண்ட் ப்ளோருக்கு வந்தான். அவன் டைனிங் ஏரியாவை நோக்கி சென்று கொண்டு இருக்கும் போது, வெளியில் இருந்து பூட்டப்பட்டு இருந்த ஒரு ரூம் அவன் கண்களில் தென்பட்டது. அதை பார்த்தவுடன் அவன் கால்கள் அசைய மறுத்து ஒரு நொடி நின்று விட, வலி நிறைந்த கண்களுடன் இத்தனை வருடங்கள் கடந்தும் ஏக்கம் குறையாமல் அந்த ரூமை உற்றுப் பார்த்த விஜய் திரும்பி மூன்றாவது மாடியில் உள்ள இன்னொரு அறையைப் பார்த்தான்.
அவனுக்கு இப்போதே அங்கே செல்ல வேண்டும் என்று தோன்றியது. அவனுக்குள் இருந்த ஏதோ ஒரு உணர்வு அவனை அங்கே செல்ல விடாமல் தடுக்க, சட்டென திரும்பி டைனிங் ஏரியாவிற்கு சென்றான் விஜய். அப்போது சஞ்சய் உடன் பேசியபடி அங்கே வந்தாள் வனிதா. அவர்களைப் பார்த்தவுடன் அன்புடன் புன்னகைத்த விஜய் “ஹாய் மாம் குட் மார்னிங்.. இப்ப எப்படி இருக்கீங்க? உங்க ஹெல்த் கண்டிஷன்ல இம்ப்ரூவ்மென்ட் இருக்கா?” என்று விசாரிக்க, “நீங்க அவங்களுக்காக மறுபடியும் அனாமிகா அண்ணி கூட சேர்ந்து வாழ்ரேன்னு சொன்னவுடனே அம்மா டோட்டலா க்யூர் ஆகிட்டாங்க அண்ணா.
இப்ப நாங்க வரும்போது கூட அம்மா உங்கள பத்தி தான் பேசிட்டு இருந்தாங்க. சீக்கிரமா உங்களுக்கும் அண்ணிக்கும் ஒரு குழந்தை பிறந்தா நல்லா இருக்கும்னு சொல்லிட்டு இருந்தாங்க. எங்களுக்கும் குட்டி விஜய பாக்கணும்னு ஆச இருக்கும்ல!” என்று பெரிய பிட்டாக போட்டான் சஞ்சய்.
உடனே வந்த கடுப்பில் விஜய்க்கு தெரியாமல் சஞ்சையின் கால்களை மிதித்த வனிதா “சும்மா இருக்கிறவனை ஏண்டா ஏத்தி விடுற? அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்காம உங்கப்பன் ஓய மாட்டேங்குறான். அதான் போனா போகுதுன்னு மறுபடியும் அவனை நான் அனாமிகா கூட சேர்த்து வச்சிருக்கேன். இதுல அவன குழந்தை பெத்துக்க சொல்லி அவனுக்குன்னு ஒரு வாரிசை உருவாக்கணும்னு பாக்குறியா? அது இந்த வனிதா இருக்கிற வரைக்கும் நடக்காது. கடைசி வரைக்கும் இந்த சொத்துக்கு நீயும் சஞ்சனாவும் மட்டும் தான் வாரிசு. ராப்பகலா கஷ்டப்பட்டு விஜய் சம்பாரிச்சு போடறதும் உங்களுக்குத் தான் அதை மைண்ட்ல வச்சுக்கோ.” என்று அவன் காதுகளில் கிசுகிசுத்தாள்.
அவர்களை பார்த்தபடி நின்று இருந்த விஜய் “என்ன மாம் சஞ்சய் கிட்ட சீக்ரெட்டா என்ன சொல்லிட்டு இருக்கீங்க? அந்த அனாமிகா அதுக்குள்ள உங்களுக்கு பிடிக்காத மாதிரி ஏதாவது பண்ணிட்டாளா? அப்படி ஏதாவது இருந்தா கொஞ்சம் கூட எதைப்பத்தியும் யோசிக்காமல் டைரக்டா என்கிட்ட சொல்லிருங்க. எனக்கு கோர்ட் ஆர்டரை பத்தி எல்லாம் கவலையே இல்ல. இப்பவே அவளை கழுத்தை புடிச்சு இந்த வீட்டை விட்டு வெளியே தள்ளுறேன்.” என்று ஆத்திரம் பொங்க சொல்ல, “இவன் என்ன அவ விஷயத்துல மட்டும் இவ்ளோ ஸ்பீடா இருக்கான்!” என்று நினைத்த வனிதா “சேச்சே.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லப்பா விஜய். இவன் நீ இன்னும் அனாமிகா மேல கோவமா இருக்கிறத பத்தி யோசிக்காம உடனே வாரிசு வரணும்னு எல்லாம் காலங்காத்தால உன்னை கடுப்பேத்துற மாதிரி பேசிட்டு இருந்தான்.
அதான் உன் மூட ஸ்பாயில் பண்ண வேண்டாம். நாங்க என்ன தான் நீ அனாமிகா கூட சேர்ந்து வாழணும்னு ஆசைப்பட்டாலும், உன்னோட தனிப்பட்ட வாழ்க்கையில நீ சந்தோஷமா இருக்கிறது தான் எங்களுக்கு முக்கியம். அதான் உன் விஷயத்துல ஓவரா interfere ஆக கூடாதுன்னு அவன் கிட்ட சொல்லிட்டு இருந்தேன். நீ ஒன்னும் தப்பா எடுத்துக்காத.” என்றாள்.
உடனே தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சஞ்சய் “சாரி அண்ணா. நான் கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்னு நினைக்கிறேன்.” என்று தன் நடிப்பை கொட்ட, “பரவால்ல பரவால்ல விடு டா.. இதுக்கெல்லாம் எதுக்கு சாரி கேக்குற? லேட்டாயிடுச்சு.. வாங்க எல்லாரும் முதல்ல பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்.” என்ற விஜய் அவர்களுடன் சாப்பிடுவதற்காக அமர்ந்தான்.
அப்போது தினேஷ் அங்கே வர, விஜயின் மனதின் ஓரத்தில் அவனுக்கு என்னவோ மீண்டும் மீண்டும் அமுதாவின் ஞாபகம் வந்து கொண்டே இருந்ததால் அவளை பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து “ஸ்ரீகாந்துக்கு கால் பண்ணி இன்னிக்கி ஷூட்டிங் ஷெட்யூல் பண்ண சொல்லு.” என்றான். “பட் பாஸ்.. இன்னிக்கு நம்ம ஆபீஸ் போக போறோமே! லஞ்ச் வரைக்குமே அடுத்தடுத்து மீட்டிங் இருக்குன்னு உங்க கிட்ட ஆல்ரெடி நான் சொல்லி இருந்தனே.. மறந்துட்டீங்களா? ஆல்ரெடி பெண்டிங் ஒர்க் நிறைய இருக்கு பாஸ். நீங்க இன்னைக்கு ஆபீஸ் போயே ஆகணும்.” என்று தினேஷ் சொல்ல, “அது எல்லாத்தையும் ஓரளவுக்கு முடிச்சு வச்சுட்டா, நான் டைம் கிடைக்கும்போது ஷூட்டிங் ஸ்பாட் போய் அங்க என்ன நடக்குதுன்னு பாக்குறதுக்கு ஒரு சான்ஸ் இருக்கும்.” என்று நினைத்த விஜய், “ச்ச்.. நான் தானே பிஸியா இருக்கேன்.. என் படத்துல நடிக்கிறதுக்கு கமிட் பண்ணவங்க எல்லாருக்கும் அதை செய்யறத விட வேற என்ன வேலை? நான் இல்லாம வர்ற சீன்ஸ் எல்லாத்தையும் அந்த ஆள எடுக்க ஸ்டார்ட் பண்ண சொல்லு. இன்னும் ஆறு மாசத்துல இந்த படம் மொத்தமா ஷூட் பண்ணி முடியனும். இந்த மூவி என்னோட தீபாவளி ரிலீஸ். அது உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கா இல்லையா?” என்று தினேஷை பார்த்து கோபமாக கத்தி கேட்டான்.
– காதல் மலரும் 🌹