இங்கே வெடித்த இடத்திற்கு அருகில் வந்த பாம் ஸ்குவாட்களின் விழிகள் அகல விரிய, அங்கே முழு சிவப்பாய் எரிந்துக் கொண்டிருந்த நெருப்பிலிருந்து கிளம்பிய புகையுமே சிவப்பு நிறமாய் தான் வந்துக் கொண்டிருந்தது.
“திஸ் இஸ் ஸ்ட்ரோண்டியம் நைட்ரேட்.” என்றார் ஒருவர் வியப்பாக.
“பட் இது எப்பிடி இங்க வந்திருக்கும்?” என்று மற்றொருவன் கேட்க,
“அவன் வந்துட்டான்.” என்று இங்கே விக்ரமனின் மனம் கூறியது. அதிர்ச்சியில் அகல விரிந்திருந்த அவரின் விரிந்த விழியில் செந்தீயாய் எரிந்துக் கொண்டிருந்த அந்த R இங்கே கருப்பு டாலர் செயினாய் இந்த மெத்தையில் கிடக்க, அதை மெத்தை விரிப்போடு கசக்கி பிடித்தது அவள் கரம்.
அவள் மீது படர்ந்திருந்தவனோ அவள் இதழ்களை அத்தனை வன்மையாய் சுவைத்துக் கொண்டிருக்க, அதில் இறுக்கி மூடியிருந்த அவளின் விழிகளில் கண்ணீர் நிற்காமல் வந்துக் கொண்டிருந்தது.
அவளின் தொண்டை குழி மூச்சடைத்து ஏறி இறங்கிக் கொண்டிருக்க, அதனருகே படர்ந்த அவனின் விரல்கள் அவள் கூந்தலுள் நுழைந்து பிடிக்க, மெதுவாய் அவளிதழிலிருந்து பிரிந்து அவள் கழுத்தில் புதைந்தான்.
அதில் கண்ணீருடன் விழியை இறுக்கி மூடியவளின் பின்னந்தலை மெத்தைக்குள் புதைய, அவள் கழுத்தோரம் பூத்த வியர்வையெல்லாம் இதழ் கொண்டு துடைத்தபடியே ஈரம் செய்தவனின் நாசி அதை அழுத்தி துடைக்க, அவளோ மெத்தையை மேலும் இறுக்கி பிடிக்க, அவனின் மறு கரம் அவளின் ஆழிலை வயிற்றை அளந்தபடியே மெதுவாய் அந்த மடிப்புகளுக்குள் நுழைய, அதில் அவள் சட்டென்று அவனை விலக்க முயல, நறுக்கென்று அவள் கழுத்தை கடித்தான் அவன்.
“ஆ!” என்று கத்த வந்தவளின் இதழை சிறை செய்து வேகமாய் சுவைத்தவன், மெதுவாய் அவள் மடிப்புகளுள் இருந்த கரத்தை உருவ, அவளின் இடை மெல்ல நடுங்கியது.
அதை ஒற்றை விரலால் அழுத்தி நிறுத்தியவன், அதில் அதிகமாய் ஏறி இறங்கிய அவளின் மார்பில் மொத்தமாய் தன் மார்பை புதைத்து, மெதுவாய் அவள் இதழிலிருந்து விலக, அவளோ அத்தனை பயத்துடன் மூச்சு வாங்க அவனை பார்க்க, பதற்றத்தில் நடுங்கிய அவள் கீழ் இதழில் மெல்லியதாய் கசிந்த இரத்தத்தை மெதுவாய் தன் கட்டை விரலால் துடைத்து அவளை பார்த்தபடியே தன் இதழுக்குள் புகுத்தியவன், இரசனையாய் அவற்றை சுவைத்தபடியே விரலை மெல்ல வெளியில் எடுக்க, அதில் இவளின் மேல் இதழும் சேர்ந்து நடுங்கியது.
உடனே அதை அவள் பதற்றமாய் உள்ளிழுத்து மறைக்க, அதில் மெல்லியதாய் இதழ் வளைத்தவன், தன் எச்சில் விரலாலே மெதுவாய் அதை விடுவித்து, சட்டென்று கடிக்க வர, பட்டென்று இறுக்கி விழி மூடினாள் அவள்.
அதில் முழுதாய் இதழ் வளைத்தவன், கடிக்காமல் மிக மென்மையாய் முத்தமிட்டு மெதுவாய் தன் மீசையுரசி, “இன்னும் கொஞ்ச நேரம் இப்பிடியே இருந்தன்னு வை. உன்ன முழுசா கடிச்சு திண்ணுருவேன் டார்லு.” என்றான் மெல்லிய குரலில்.
அதில் சட்டென்று அவள் விழி திறக்க, மெதுவாய் அவள் கன்னத்தில் தன் தாடி உரசியவன், மென்மையாய் அங்கு முத்தமிட்டு, “கெட் அப்.” என்றான் மெல்லிய குரலில்.
அதில் அவள் புரியா பதற்றமாய் அவன் விழிகளை பார்க்க சட்டென்று அவளை தூக்கி அமர வைத்தான் அவன். அதில் அவள் திடுக்கிட்டு பயந்து தன்னை மறைக்க முயல, அதற்குள் அவளின் சேலையை அவள் தோளில் போர்த்தினான் அவன். அதில் திடுக்கிட்டு அதை இறுக பற்றிக் கொண்டவள், புரியாது கீழே பார்க்க அவளின் சேலை முழுதாய் கட்டி முடிந்திருந்து. அதில் வியப்பாய் விழி விரித்தவளுக்கு அப்போதே சற்று முன் அவன் தன் மடிப்புகளுக்குள் விரல் நுழைத்தது ஏன் என்று புரிந்து நிமிர்ந்து அவனை பார்க்க, அவள் முன் உணவை நீட்டினான் அவன்.
அதில் அவள் திடுக்கிட்டு பயந்து அவனை பார்க்க, அவனோ மெதுவாய் அவளை நெருங்கி அமர்ந்து, “நீ காலையில இருந்து எதுவுமே சாப்படலல்ல?” என்று மென்மையாய் புருவங்களை நெளிக்க, அதில் சட்டென்று புருவம் விரித்து பதறியவளோ சுற்றியும் சுவரை பார்த்தாள்.
அங்கே ஒரு கடிகாரம் தொங்கிக் கொண்டிருக்க, மணி ஐந்து என்று காட்டியது. அதில் வியந்தவள், அங்கே தன் மண அறையில் தயாராகும்போதும் கடிகாரத்தில் மணி ஐந்து என்று காட்டியது நினைவிற்கு வந்து பதறி அவன் பக்கம் திரும்ப, சரியாக அவன் உள்ளங்கையில் புகுந்தது அவள் கன்னம்.
அதில் திடுக்கிட்டு அவள் விலகும் முன், அவள் கன்னத்தை அழுத்தி பிடித்து அவள் விழி பார்த்தவன், “அது காலையில அஞ்சு மணி. இது சாயங்காலம் அஞ்சு மணி.” என்றான் மென்மையாக.
அதில் அதிர்வாய் விழி விரித்தவளோ அப்படியென்றால் எவ்ளவு தூரம் வந்திருக்கிறோம் என்று பதறி சுற்றி பார்க்க, “ஒரு நாள் ஃபுல்லா ட்ரேவல் பண்ணி, டயர்டா இருப்ப. சோ சாப்புடு.” என்றான் இவன்.
அதில் இவள் அதிர்ந்து அவனை பார்க்கும் நேரம் அவள் வாயிக்குள் உணவை திணித்திருந்தான் அவன். அதில் திடுக்கிட்டு இருமியபடி வாயில் கை வைத்து நிதானித்தவள், பிறகு மெதுவாய் உணவை மெல்ல ஆரம்பிக்க, திடீரென்று வியப்பாய் விழி விரித்து உடனே குனிந்து தட்டை பார்த்தாள். சப்பாத்தியோடு தயிர் காம்பினேஷன். உலகிலேயே சப்பாத்தியில் தயிர் வைத்து சாப்பிடும் ஒரே அபூர்வ பிறவி இவள்தான். அது இவனுக்கு எவ்வாறு தெரியும் என்று அவள் வியப்பாய் அவனை பார்க்க, அடுத்த வாயையும் திணித்திருந்தான் அவன்.
அதில் திடுக்கிட்டு முன்னால் மென்றதை அவசரமாய் விழுங்கியவள், இதை மெதுவாய் மெல்ல ஆரம்பித்தபடி அவனையே அதிர்வாய் பார்க்க, அடுத்தடுத்து அவளுக்கு ஊட்டினான் அவன்.
அதையும் அத்தனை வியப்பாய் வாங்கி உண்டபடியே இருந்த இவளுக்கோ, மனதில் ஓடுவதெல்லாம் யார் இவன் என்ற வியப்பு மட்டும்தான்.
தனக்கு பிடித்த பிங்க் நிற சேலையை எடுத்து வைக்கிறான், தனக்கு பிடித்த உணவையே எடுத்து வந்து ஊட்டிவிடுகிறான், அதைவிட இந்த அறை. அவளுக்கு கடல் தாமரை என்றால் கொள்ளை பிரியம். ஆனால் கடலையே தரையாக மாற்றி அதன் நடுவே ஒரு தாமரை மெத்தையை வைத்து, அதன் மீது தன்னை அழகாய் அமர வைத்திருப்பவனை பார்க்க அத்தனை வியப்பாய் இருக்க, இவளுக்குள் தோன்றியதெல்லாம் யார்தான் இவன் என்ற கேள்வி மட்டுமே.
“யாரு சார் அவன்?” என்று இங்கே அந்த பாம் ஸ்குவாட் கேட்க, விக்ரமனோ அதிர்ச்சியில் அசையாது தரையில் அமர்ந்திருந்தார்.
“பாம எப்பிடியும் மரமில்லாத க்ரவுண்டுலதா வீசுவோம்னு க்ளெவரா திங்க் பண்ணி, வேணுமின்னே அந்த ஸ்பாட்டுக்கு பக்கத்துலையே உங்கள லாக் பண்ண லேன்ட் மைல்ஸ் வெச்சிருக்கான். அத தோண்டும்போது ஆக்ட்டிவ் ஆகுற மாதிரி ஒரு டைம் பாமையும் செட் பண்ணி, வெறும் த்ரீ செக்கண்ட்ஸ்ல அவன் நெனச்ச எடத்துல வீசவும் வெச்சு, அவன் காட்ட வேண்டியதையும் தெளிவா நமக்கு காட்டிருக்கான்.” என்று அத்தனை வியப்பாய் கூற,
“பட் அந்த எடம் மட்டும் எப்பிடி சார் ரெட் கலர்ல எரிய முடியும்?” என்று விக்ரமனின் ஆள் ஒருவன் கேட்க,
“ஸ்ட்ரோண்டியம் நைட்ரேட். அது ஒரு கெமிக்கல் பவுடர். பட் பாம்ல யூஸ் பண்ற கெமிக்கல் கெடையாது. முன்னாடியே அந்த மண்ல கொட்டி வெச்சிருக்கணும். பட் எதுக்காகன்னுதா புரியல. எதுக்காக அவன் ரெட் ஃபயர சூஸ் பண்ணான்” என்று அவர் கேட்க, “இரத்தம்.” என்றார் விக்ரமன்.
அதில் இருவருமே திரும்பி அவரை பார்க்க, அவரோ இன்னுமே அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் தரையையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருக்க, அவரின் இதழ்கள் மட்டுமே மெல்லியதாய் பிரிந்து, ஏதேதோ உளறிக் கொண்டிருந்தது.
அதே நேரம் இங்கு இவன் கடைசி வாயை ஊட்ட, அதை வாங்கி மெல்ல ஆரம்பித்தவளின் இதழோரம் வழிந்து வந்தது ஒரு தயிர் துளி.
அதை அவள் விரல் துடைக்க வர, பட்டென்று அந்த விரலை பிடித்து தடுத்தவன், அதில் திடுக்கிட்டு அவனை பார்த்த அவள் விழிகளை இரசித்தபடியே மெதுவாய் நெருங்கி, அவள் இதழோரம் மெதுவாய் தன் இதழ் வைத்து, அதை அழகாய் சுவைத்து எடுத்தான். அதில் அவள் வேகமாய் விலக முயல, பட்டென்று அவள் இதழ்களை கவ்வினான் அவன்.
அதில் அவள் திடுக்கிட்டு புருவம் விரிக்கும் முன் மெதுவாய் விலகி, அவள் இதழில் தண்ணீரை புகட்டினான்.
அதில் பதற்றமாய் அவனையே பார்த்தவள், மெதுவாய் இதழ் பிரித்து மெல்ல சிறிதளவு குடித்துவிட்டு விலக்க, அவள் கன்னத்தில் மென்மையாய் முத்தமிட்டு கட்டிலைவிட்டு இறங்கினான்.
அதில் புரியா வியப்பாய் அவனையே பார்த்தவளுக்கோ, இவனின் மென்மையான இந்த பக்கம் ஒரு புறம், வன்மையான அந்த பக்கம் மறு புறம் என்று எது உண்மை எப்போது மாறும் என்று சுத்தமாக புரியவில்லை. எதற்காக அவ்வாறு அத்து மீறுகிறான்? எதற்காக இவ்வாறு அன்பு காட்டுகிறான்? நொடிக்கு நொடி ஏன் மாறுகிறான் என்ற யோசனையில் இருக்கும்போதே மெதுவாய் அவள் கண்கள் சொருக, புரியாது தன் நெற்றியை பிடித்தாள். அப்போது மெதுவாய் பிரிக்க முயன்ற இமைகளின் நடுவே பார்வை மங்கலாக தெரிய, சட்டென்று உலுக்கிவிட்டு பார்த்தவளின் கண்கள் அப்படியே மூடி உடல் பின்னால் சாய, அவள் தலை மெத்தையை அடையும் முன், அழகாய் தாங்கி பிடித்தவனின் முகம் அவள் முகத்தை உரசியது.
அதில் திடுக்கிட்டு மெல்ல அவள் இமைகள் பிரிய முயல, அவள் இதழில் மென்மையாய் முத்தமிட்டவன், “இப்போ தூங்கு. பட் பீ ரெடி ஃபார் டுனைட்.” என்றான் மெல்லிய குரலில்.
அதில் புருவங்களை விரிக்க முயன்றும் முடியாமல், மெதுவாய் அவள் விழிகள் மூடிவிட, அப்படியே அவளை மெல்ல இறக்கி தலையணையை இழுத்து அதில் படுக்க வைத்தான். அவள் தலையும் அந்த தலையணையில் புதைந்துவிட, மெதுவாய் தன் கரத்தை விலக்கியவன், அப்படியே அவள் மீது படர்ந்து, இரசனையாய் தன் ஒற்றை விரலை அவள் மார்பின் நடுவே வைத்து, மெதுவாய் அங்கிருந்த சேலையை விலக்கினான்.
அங்கே அவள் ஜேக்கெட்டில் திறந்திருந்த முதல் ஹூக்கில் அழகாய் தெரிந்த அந்த மார்பு குழியில் இரசனையாய் இதழ் பதித்தவன், பிறகு மெல்ல விலகி அவற்றை பூட்டினான். அப்போது சட்டென்று அந்த ஹூக்கில் ஒரு துளி நீர் விழுந்து குளிக்க, மெதுவாய் நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவனின் விழிகள் ஏக்கமாய் கலங்கியது.
அந்த கண்ணீர் அவள் கன்னத்தில் விழ, மெதுவாய் அவள் கன்னம் பிடித்தவன், அதை தன் கட்டை விரலால் மெல்ல துடைக்க, அடுத்தடுத்து துளிகள் அங்கே விழுந்தது. அதை கண்ணீருடன் நெருங்கி தன் இதழால் அழுத்தி சுத்தம் செய்தவன், மெதுவாய் நிமிர்ந்து அவள் புருவங்களின் நடுவே முத்தமிட்டு, அப்படியே அவள் நெற்றி முட்டி, “இனி யாராலையும் நம்பள பிரிக்க முடியாது.” என்றவனின் கண்ணீர் அவள் மூக்கில் விழுந்து வழிந்து செல்ல, “பிரிக்கவும் விட மாட்டேன்.” என்று அழுத்தி கூறியபடியே நிமிர்ந்த அவன் கலங்கிய விழிகள் கோவத்தில் சிவந்தது.
ஆனால் இங்கே அதிர்ச்சியில் சிவந்திருந்தது விக்ரமனின் கண்கள். அவரோ இன்னுமே அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருக்க, திடீரென்று அவரின் கைப்பேசி ஒலித்தது.
அதில் திடுக்கிட்டு அவர் கீழே பார்க்க, தரையில் கிடந்தபடி ஒலித்துக் கொண்டிருந்தது அவரின் மொபைல். அதில் இன்ஸ்பெக்டர் என்ற பெயர் வரவும் மெதுவாய் எடுத்து காதில் வைக்க, “சார் என்ன ஆச்சு? பாம் பிளாஸ்ட்டுன்னு கேள்வி பட்டேன்?” என்று பதறி கேட்டார் இன்ஸ்பெக்டர்.
“ம்ம்” என்றவரின் இதழில் வேறு எதுவும் வரவில்லை.
“சார் என்ன ஆச்சு? ஏ ஒரு மாதிரி பேசுறீங்க?” என்று பதறி கேட்க, “அவன தேட வேண்டா.” என்றார் விக்ரமன்.
“வாட்? தேட வேண்டான்னா என்ன அர்த்தம்?” என்று இவர் கேட்க, “அவனே என்ன தேடி வர போறான்.” என்றார் விக்ரமன்.
“வருவேன். சீக்கிரமே வருவேன்.” என்று இங்கே கூறிக் கொண்டிருந்தவனின் கண்கள் இரத்தமாய் சிவந்திருக்க, “காயம்பட்ட புலி, திரும்பி பாயும்போது எப்பிடி இருக்கும்னு காட்டுறேன்.” என்று அழுத்தி கூறியபடியே தன்னவளை தன் மார்புக்குள் பத்திரமாய் புதைத்துக் கொண்டு மேலும் கண்கள் சிவந்தான் ருதன்.
– நொடிகள் தொடரும்…